Announcement

Collapse
No announcement yet.

Muruga, Brahma & Ravana - why so many heads?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Muruga, Brahma & Ravana - why so many heads?

    Courtesy:Sri.GS.Dattatreyan


    முருகன், பிரம்மா போன்ற ஒரு சில இந்து தெய்வங்களுக்கு
    பல தலைகள் கொடுத்திருப்பதன் உண்மையான ஆன்மீக ரகசியம் என்ன?
    பல தலைகள் பல மடங்கு சக்தியை கொண்டவர்கள்
    என்று நிரூபிக்கிறதா என்று கேட்டால்,
    அப்பொழுது பல தலைகள் கொண்ட பிரம்மாவிற்கு
    தனியாக கோவில் பெரும்பாலும் இல்லையே ?
    ராவணன் என்று சொல்ல படுகிற அசுரனுக்கும்
    10 தலைகள் காட்டப்பட்டுள்ளதே.
    அப்படிஎன்றால் உண்மையில் பல தலைகள்
    எந்த ஆன்மீக ரகசியத்தை உணர்த்துகிறது ?
    -----------------------
    Answer - பதில் -^-}-*
    -----------------------
    முருகனுக்கு ஆறு முகம் ஏன் ?...எப்படி ??
    --------------------------------------------------------
    ஆறு முகங்களைப் பெற்றதால் இவர்
    ஆறுமுகன் என்று அழைக்கப் படுகிறார்.
    -------------------------------------------------------
    முருகனின் ஆறு முகங்கள் எதற்காக?
    முருகனின் ஒரு முகம்.
    இதை நாம் சூரியன் என்றோ சந்திரன் என்றோ பார்க்கலாம். அவற்றுக்கு ஒளியை வழங்குவதே முருகன்தான் என்று அர்த்தம் சொல்லலாம்!
    அடுத்த முகம்,
    பக்தர்களுக்கு வரம் கொடுக்கிறது. அவர்கள் முருகனைச் சுற்றி நின்றபடி அவனைப் புகழ்ந்து பாடுகிறார்கள், அவர்களைப் பார்த்து இனிமையாகச் சிரிக்கிறது இந்த முகம்!
    இன்னொரு பக்கம்,
    அந்தணர்கள் சிரத்தையாக அமர்ந்து வேதங்களை முழங்கி பல யாகங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஏற்றுக்கொள்கிறது முருகனின் இன்னொரு முகம்.
    அடுத்த முகமோ, யாராலும், எந்த நூலாலும் ஆராய்ந்து உணர்த்தமுடியாத உண்மைகளை விளக்குகிறது.
    அந்த முகம் ஞானப் பிரகாசத்தில் ஒளிர்கிறது!
    இப்படி முருகன் அருளில் உலகத்தில் எல்லாம் நல்லதாக நடந்துகொண்டிருக்கும்போது, நடுவே சில தீய சக்திகள் மட்டும் கொஞ்சம் வம்பு பண் ணுகின்றன. அவர்களோடு போர் செய்து வெல்கிறது முருகனின் இன்னொரு முகம், தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டுகிறது! நிறைவாக,
    ஆறாவது முகம்,
    பூங்கொடி போன்ற இடையைக் கொண்ட குறத்தி வள்ளியுடன் புன்னகையோடு நமக்குக் காட்சி தருகிறது.
    இப்படிப் பன்முகத்த ன்மையோடு இயங்கும் முருகனுக்கு, நிஜமாகவே பன்முகங்கள் இருப்பதில் ஆச்சர்யம் என்ன?
    ஆறு (Aaru) இந்த எண் மிகவும் புனிதமானது.
    முருகனுடன் சம்பந்தப்பட்டது. சஷ்டி;; ஆறுபடை வீடு;;
    முருக புராணம் : தோற்றம்
    புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. புராணங்களின்படி, சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது.
    இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.
    கார்த்திகைப் பெண்கள் அறுவர்,
    இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர்.
    பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி
    இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார்.
    சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று
    கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து
    மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.
    -------------------------------------------------------------------------------------
    நக்கீரர் போற்றும் முருகனின் ஆறு திருமுகங்கள் இவை:
    -------------------------------------------------------------------------------------
    மாஇருள் ஞாலம் மறு இன்றி விளங்கப்
    பல்கதிர் விரித்தன்று ஒருமுகம்!
    ஒருமுகம்
    ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக்
    காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே!
    ஒருமுகம்
    மந்திர விதியின் மரபுளி வழாஅ
    அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே!
    ஒருமுகம்
    எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
    திங்கள்போலத் திசை விளக்கும்மே!
    ஒருமுகம்
    செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கிக்
    கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே!
    ஒருமுகம்
    குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
    மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே!
    ஆங்கு அம் மூ இரு முகனும் முறை நவின்று
    ஒழுகலின்!
    ஆறு குணங்கள் மனிதனின் வாழ்க்கையை குறைக்கும்;;
    காய்ந்த மாமிசம்,
    தயிர் இரவில் உண்ணுதல்,
    விடியற்காலை தூக்கம்,
    அசுத்த நீர் குடிப்பது,
    காலையில் சூர்ய ஒளி மேலே படுதல்,
    இறந்த உடலின் ஆவிடை முகர்தல்.
    ஆறு தெய்வீக குணங்கள்;;
    எங்குமிருத்தல், எதையும் அறிதல், எதையும் காத்தல்,ஸர்வகாரணத்வம், ஸர்வநித்யத்வம், ஸர்வேஸ்வரத்வம்;;
    ஆறு நல்ல குணங்கள்;;
    உண்மை, அறிவு, மன்னித்தல்,நேர்மை, வருத்தத்தில் சாந்தம், கோபமின்மை;;
    ஆறு ரிஷிகளின் குணங்கள்;;
    ப்ரம்மசரியம், நேர்மை, ஜப, ஞான, நியமம், நீதி;;
    ஆறு நல்ல மனைவிகளன் குணங்கள்;;
    தொழிலில் மந்திரியாக, காரியத்தில் வேலைக்காரியாக, பார்க்கையில் லக்ஷ்மியாக, பொறுமையில் பூமி போல், அன்பான தாயாக, படுக்கையில் தாசியாக;;
    ஆறு வேத அங்கங்கள்;;
    சிக்க்ஷா, கல்ப,வ்யாகரண, நிர்குடம், ஜ்யோதிஷம், சந்தஸ்.
    ---------------------------------------------------------------
    பல தலைகள் கொண்ட பிரம்மாவிற்கு
    தனியாக கோவில் இல்லையே. ஏன் ?
    உண்மையான ஆன்மீக ரகசியம் என்ன ?
    பிரம்மாவின் 5 தலைகள் 4 ஆன கதை !
    ---------------------------------------------------------------
    பிரும்மாவிற்கு ஐந்து தலை வந்தது ஏன்? அவர் அதில் ஒன்றை இழந்தது ஏன்? இதைக் குறித்த ஒரு புராணக் கதை உண்டு. உலகைப் படைக்கத் துவங்கிய பிரும்மாவிற்கு முதலில் ஒரே ஒரு தலைதான் இருந்தது. ஆனால் உலகைப் படைக்கத் துவங்கியதும் அவர் ஒரு அழகிய பெண்ணையும் படைக்க விரும்பினார். தனது உடலில் இருந்தே சிறிது பகுதியை எடுத்து அதற்கு ஒரு தேவலோகப் பெண் உருவைக் கொடுத்தார். ஆனால் அவரே படைத்த அந்தப் தேவலோகப் பெண்ணின் அழகில் மயங்கிய அவர் அவள் சென்ற இடங்களில் எல்லாம் அவளையே திரும்பிப் பார்த்தபடி இருந்து அவளது அழகை ரசிக்கலானார். அவளோ நான்கு திக்குக்களில் எங்கு ஓடி ஒளிந்தாலும் அவளை தொடர்ந்து சென்று அவளது அழகை ரசிக்கத் துவங்கியவருக்கு ஒவ்வொரு திசையில் திரும்பியபோதும் ஒவ்வொரு தலை முளைத்தது. இவாறாக நான்கு திசைகளிலும் திரும்பியதினால் நான்கு புதிய முகங்கள் தோன்றின.
    ஆகவே இனி செல்வதற்கு வேறு திசை இல்லை என்பதினால் அவரது பார்வையில் இருந்து தப்புவதற்காக அந்தப் பெண்ணும் தேவ லோகத்தை நோக்கி ஓடத் துவங்க அவரும் தன்னுடைய உண்மையான முதல் முகத்தினால் மேலே பார்க்க அது ஐந்தாம் தலை ஆயிற்று அதைக் கண்ட அந்த பெண் பிரும்மனைப் படைத்தது உலகை உருவாக்கவே எனும்போது, அதை மறந்து அவரே பெண் மீது மோகம் கொண்டு அலைகிறாரே என கோபமுற்றவள் பிரும்மனுக்கு சாபம் கொடுத்தாள். 'இனி உன்னுடைய நான்கு முகமும் நான்கு பக்கங்களைப் பார்த்தபடியே இருக்கும். எந்த ஐந்தாவது தலையினால் நீ தேவலோகத்தை நோக்கியும் என்னைப் பார்த்தவாறு தவறு செய்தாயோ அது மீண்டும் தேவலோகத்துக்கே திரும்பட்டும். எந்த பராசக்தி உன்னைப் படைத்தாளோ அவள் மூலமே நீயும் உன் ஐந்தாவது தலையை இழப்பாய். உலக மக்களைப் படைத்த கடவுளான நீயே மோகத்தினால் நீ ஒரு பெண்ணான என்னை நோக்கி உன் மனத்தால் காமத்தை செலுத்தியதினால் தனித் தன்மை வாய்ந்த கடவுளாக உன்னை மனிதர்கள் மதிக்க மாட்டார்கள். எந்த ஒரு பெண்ணின் நிலையை தவிப்புக்கு உள்ளாக்கினாயோ, அதே பெண் இனம் இன்னுடன் இருந்தால் மட்டுமே உனக்கு பெருமையும் கிடைக்கும். உனக்கென இனி தனித் தன்மை இருக்காது ' என்று சபித்து விட , பிரும்மா தன் தவறை உணர்ந்தார். அதற்குப் பிராயசித்தமாகவே தான் சாப விமோசனம் பெற வேண்டும் என்பதற்காக அவர் பூலோகத்துக்கு வந்து பராசக்தியை துதித்து வேண்டலானார்.
    ---------------------------------------------------
    அசுரனான ராவணனுக்கு மட்டும் 10
    தலைகள் காட்டப்பட்டுள்ளதே ஏன் ? :
    ---------------------------------------------------
    பத்து X 10 = 100 மடங்கு உற்றோரிலும் மற்றோரிலும்
    மிக்க பரமசிவனின் கைலாயத்தையே ஆட்டியவன் !
    கீழுள்ளவை பத்திலும் கரைகண்டு, தலைமேல் கொண்ட
    மஹா பராக்ரமசாலியான சிவனருள் பெற்ற பண்டிதன் !
    1.பத்து அலங்கார க்ரந்தங்கள் :
    விஸ்வநாதரின் "சாகித்ய தர்பண",
    தண்டியின் "காவ்யதர்ஷ",
    மம்மதனின் "காவ்யப்ரகாசா",
    தனஞ்ச்யனின் "தசரூபகா",
    வாமனனின் "காவ்யாலங்காரஸுத்ரவ்ருத்தி",
    போஜனின் " ஸரஸ்வதீகந்தாபரண",
    பாமஹனின்"அலங்காரசர்வஸ்வ" ,
    கவிகர்ணபூரகனின் "அலங்காரகௌஸ்துபம்",
    அப்பைய தீக்ஷதரின் "குவலையாநந்த",
    ஜயதேவனின் "சந்திராலோக".
    2.காம அவஸ்தைகள்' :
    அபிலாஷ, சிந்தன, ஸ்ம்ருதி, குணகதன,
    உத்யோக, ப்ரலாப, உன்மத, வ்யாதி, ஜடத, மரண.
    3. கோத்ரங்கள்;;
    பாரத்வாஜ, கௌசிக, வத்ஸ்ய,கௌண்டின்ய, கஸ்யப, வசிஷ்ட, ஜமதக்னிய, விஸ்வாமித்ர, கௌதம, ஆத்ரேய. பரசுராமரால் தெற்கே கொண்டு வந்த கோத்திரங்கள்.
    4.சித் அவஸ்தைகள் :
    காமம், ஸங்கல்பம், விசிக்த்ஸா(சந்தேகம்), ஸ்ரத்தா, அஸ்ரத்தா, த்ருதி(தீர்மானம்), அத்ருதி, த்தீ(முனைவு), பீதி.
    5. ப்ரஜாபதிகள் :
    மரீசீ, ஆங்கிரஸ், அத்ரி, புலஹ, புலஸ்திய,
    க்ரது, வசிஷ்ட, தக்ஷ, ப்ருகு, நாரத.
    6. ப்ராணங்கள் :
    பரான, அபான, வ்யான, சமான, உதான,
    நாக, கூர்ம, க்ருகர, தேவதத்த, தனஞ்சய.
    7. பலம் :
    ஞானம், ப்ரஞானம், வீர்யம், க்ஷமா, சீலம்,
    தானம், பலம், உபாயம், த்யானம், ப்ரநிதி.
    8. உபசாரங்கள் :
    அர்க்யம், பாத்யம், ஆச்மனம், மதுபர்க்கம்,
    புனராசமனம்,கந்தம், புஷ்பம், தூபம், தீபம்,நிவேதம்.
    9.உபநிஷத்துகள் :
    ஈசாவாஸ்ய, கேன, கதா, ப்ரஸ்ன, முண்ட,மௌண்டூக, சாண்டோக்ய, தைத்தர்ய, ஐத்தரேய, ப்ரஹதாரண்யக.
    10.அரசனின் அங்கங்கள் :
    நாடு,மலை, நதி, ஊர், அரண்மனை, குதிரை,
    யானை, முரசு, கொடி, செங்கோல்.
    -----------------------------------------------------------------------------
    ராவணன் (Ravanan) : பத்து தலைகளுடன் அவன் பட்ட பாடு !
    -----------------------------------------------------------------------------
    வம்சம்:- விஷ்ணு--ப்ரம்மா--புலஸ்தியர்--விஸ்ரவஸ்--ராவணன். விஸ்ரவஸ் ஸுமாலியின் மகள், கைகேஸியை மணந்து, அவள் ஜாமத்திற்கு ஒன்றாக ராவணன், கும்பகரணன், விபீஷண, மகள்--சூர்பனகா என பெற்றாள். குபேரன், தேவவர்நிக்கும் விஸ்ரவஸிற்கும் பிறந்தவன்.குபேரனின் புஷ்பக விமானம்,செல்வம் கண்டு, பொறாமை அடைந்து, கைகேஸி மூவரையும் தவமிருந்து, ப்ரம்மவிடம் வரம் பெற சொன்னாள். அவ்வாறே மூவரும் 10000 ஆண்டுகள் தவமிருந்தனர். ராவணன்1000 ஆண்டுக்கு ஒரு முறை தன் தலையை துண்டித்து யாகம் செய்ய கடைசியில் ப்ரம்மா தோன்றினார். ராவணன் தான் மனிதனை தவிர யாராலும் சாகக் கூடாது என வரம் பெற்றான். வரம் பெற்ற உடனேயே, இவன் குபேரனை விரட்டி எல்லாவற்ரையும் கவர்ந்து ஆட்சி புரிய ஆரம்பித்தான்;தனக்கு மஹாவிஷ்ணு ஒருவரே எதிரி என்றான்;; இவன் மாயாசுரனின் வளர்ப்பு மகள் மண்டோதரியை மணந்தான். மேகநாதன், அதிகாயன், அக்ஷகுமார என மூன்று மகன்கள் உண்டு.இவர்களின் துணை கொண்டு எல்லோரையயும் வென்றான்;; இந்திரனுடன் போரிட, அவன் ராவணனை சிறை வைத்தான்;; மேகநாதன் தனது தந்திர போர் திறமையால் இந்திரனை வென்று தந்தையை மீட்டான்;;அன்றிலிருந்து அவனை "இந்திரஜித" என அழைத்தனர்;;
    இவனின் கொடூர ஆட்சியை கண்டு பலர் சபித்தனர்.
    ஆக இவனுக்கு 18 பெரிய சாபங்கள் உண்டு.. அவை;;
    1).நள கூபரனின்;; நள கூபரனின் வருங்கால மனைவியை(ரம்பா) கெடுக்க அவன் "நீ உன் பத்து தலை சிதறி சாவாய்" என்றான்.
    2)வேதவதீயின்;; முனிவர் குஸத்வஜனின் மகள் வேதவதி;; இவள் மாதவனை அடைய தவமிருக்க, அச்சமயம் ராவணன் அவளை கெடுக்க அவளும் " நாரயணனால் உன் குடும்பமே அழியும் "என்றாள்.
    3) பிராமணனின்;; ராவணன் திருபுரசுந்தரியின்(சிவன் கொடுத்த) சிலையை ப்ரதிஷ்டை செய்ய நேரங்கழித்து வந்த அந்தணனை 7 நாட்கள் சிறையில் அடைத்தான். அவன் " நீ ஒரு மனிதனால் 7 மாதம் சிறை வாசம் செய்வாய்"என்றான்.
    4)நந்திகேஸனின் ;; நந்திகேஸரை குரங்கு என்று இவன் கூற அவர்" உன் குலமே குரங்கால் அழியும் "என்றார்.
    5) வசிஷ்டரின்;; வசிஷ்டர் இவனுக்கு வேதம் சொல்லி தர மறுக்க அவரை சிறையில் வைத்தான். சூர்ய வம்சத்து அரசன் குவலயாஸ்வானால் காப்பாற்றபட இவர் ''உன் குலம் சூர்ய வம்சத்தால் அழியும்"என்றார்.
    6). அஷ்டாவக்ரனின்;; ஸ்லேசமாதகத்தில் அஷ்டவக்ரனை பின்னால் உதைத்து உன்னுடைய அஷ்ட கோணல்களை போக்குகிறேன் என்றான். அஷ்டவக்ரன் "நீ என்னை போன்ற ஏழை முனிவரை துன்புறுத்தினாய், அது போல் உன்னை குரங்குகள் தலையிலிருந்து கால் வரை குதித்து விளையாடும்" என்றார்.
    7) தத்தாத்ரேயரின்;;; தத்தாத்ரேயர், தன் குருவிற்கு அபிஷேகம் செய்ய, வைத்திருந்த மந்திரித்த நீரை, இவன் தன் தலையில் ஊற்றீக் கொள்ள அவர்" உன்தலை குரங்குகளின் காலால் அசுத்தபடும்" என்றார்.
    8) த்வைபாயனரின்;;; இவன் த்வைபாயனரின் முன்னிலையில், அவரின் தங்கையை களங்கபடுத்த அவர் "உன் தங்கைக்கும் இது போன்ற அவமானம் நிகழும்"என்றார்.
    9) மாண்டவ்யரின்;;;;மண்டோதரியுடன் இவன் சென்று கொண்டிருக்கும் போது, வழியில் மாண்டவ்ய முனிவரை கோடூரமாக உதைக்க, அவர்" நீ குரங்குகளால் அவமானப்படுவாய்" என்றார்.
    10) அத்ரியின்;;இவன் அவரின் மனைவியின், முடியை பிடித்து இழுக்க, அவர்" உன் மனைவியை இவ்வாறு குரங்குகள் செய்யும் "என்றார்.
    11) நாரதரின்:- "ஓம்" என்னும் ப்ரணவத்தின் பொருளை, இவன் கேட்க அவர் மறுக்க, இவன் அவரின் நாக்கை துண்டிக்க முற்பட, அவர்" உன் பத்து தலைகளையும் ஒரு மனிதன் வெட்டுவான்" என சபித்தார்.
    12) ருதுவர்மனின்;;;; ராவணன், இவனின் மனைவி மதனமஞ்சரியை கெடுக்க, அவன்" உனக்கு சாவு என் போன்ற மனிதனால் தான்"என்றான்.
    13) மௌட்கல்யரின்;;; மஹரிஷி, தன் தண்டம் கொண்டு ஸ்வஸ்திக ஆசனத்தில் தவமிருக்க, இவன் தன் சந்த்ரஹாச வாளால் அவரின் தண்டத்தை இரண்டாக்க, அவர் விழுந்து எலும்பு முறிய, அவர்" உனக்கு இந்த சந்த்ரஹாச வாள் தக்க சமயத்தில் பயன்படாது"என்றார்.
    14) ப்ராம்மணஜனனிகளின்:- குளிக்க வந்த அந்தணப் பெண்களை, அவர்களின் தாயின் முன்பே, இவன் கெடுக்க அவர்கள்" உன் மனைவியை இவ்வாறு குரங்குகள் உன்
    முன்னிலையில் செய்யும்"என சபித்தனர்.
    15) அக்னியின்;;; இவன் அக்னியின் மனைவி, ஸ்வாஹாதேவியை அவர் முன் கெடுக்க அவர்" உன் மனைவியை குரங்குகள் கெடுக்கும்" என்றார்.
    16) அநாராயணரின்;;;;; சூர்ய வம்சத்து அரசன் அநாராயணரை, மாரில் உதைத்து கொல்ல அவர்" உன் தலைகளை சூர்ய வம்சத்து அரசன் துண்டிப்பான்" என சபித்தார்.
    17) ப்ரஹஸ்பதியின்;;;; முனிவரின் மகள் ஸுலேகா தேவியை கெடுக்க நினைத்த, இவனை அவர்" ராமனின் அம்புகளால் நீ இறப்பாய்"என சபித்தார்.
    18) ப்ரம்மாவின்;;;; ப்ரம்மாவின் மகள் புஞ்சிகாதேவியை கெடுக்க, நினைத்த அவனை ப்ரம்மா" உன்னை விரும்பாத பெண்களை, நீ தொட்டால் உன் பத்து தலைகளும்
    சிதறும்" என்றார்.
    மற்றவைகள்:-
    அ)அரசன் மரூத்தன் மஹேஸ்வர யாகம் செய்ய, தேவர்கள் தங்களின் பாகத்தை வாங்க வந்திருந்தனர். அச்சமயம் ராவணன் அங்கு வர, தேவர்கள் பறவைகள் போல் ரூபமெடுத்து, ஓட அரசன் ராவணனுடன், போரிட தயாரானான். மஹரிஷிகள் தடுக்க, ராவணன் தான் வெற்றி பெற்றதாக நினைத்து சென்றான்.
    ஆ) நாரதர் இவனிடன் காலன் உனை விட பலவான் எனக் கூற, இவன் அவனுடன் போர் தொடுத்தான். ப்ரம்மா இருவருக்குமே வரங்கள் கொடுத்ததால்,ப்ரம்மா பயந்து காலனிடம் சென்று தோற்றதாக கூறி கொள் என்றார்.
    இ) பாதாளத்தில் தக்ஷகனை வென்று, நிவாடகவசர்களை அழிக்க நினைக்க, போர் மிகவும் மும்மரமாக நடக்க, ப்ரம்மா மறுபடியும் தடுத்து சமாதானம் செய்தார்;
    ஈ) வருணனின் மாளிகையில் ஸுரபியை எதிர்க்க அவளின் உடலிலிருந்து வந்த ராக்ஷஸர்கள் அவனை விரட்டின. இவன் கடைசியில் ராமனால் கொல்லப்பட்டான்..
Working...
X