Announcement

Collapse
No announcement yet.

Temple for Bharatha

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Temple for Bharatha

    Temple for Bharatha


    Courtesy: Smt.Sudha Susri


    Sri Bharathan temple/அருள்மிகு பரதன் திருக்கோயில்
    இரிஞ்ஞாலக்குடா,திருச்சூர்,கேரளா
    நம் தேசத்திற்கு பரத கண்டம் என்றும், பாரததேசம் என்றும் பெயருண்டு. இதற்கு காரணமாக இருந்தவர் பரதர். இந்த பரதருக்கான கோயில் இது என்பதே தனிச்சிறப்பு.
    ராமசகோதரர்களுக்கு கேரளாவில் தனித்தனிக் கோயில்கள் உண்டு. இவர்களில் பரதருக்கு திருச்சூர் அருகிலுள்ள இரிஞ்ஞாலக்குடாவில் கோயில் இருக்கிறது. ராமபிரான் காட்டுக்குச் சென்ற காலத்தில், தனது தாய் கைகேயியிடம் கோபித்தது மட்டுமல்லாமல், ராமனின் பாதுகையை வாங்கிவந்து சிம்மாசனத்தில் அமர்த்தி, ராமனின் ஆட்சியை நடத்திக்காட்டியவர் பரதன். சுயநலம் கருதாமல் ஒரு துறவிபோல எளிமையாக வாழ்ந்தவர். அண்ணனின் வரவை எதிர்நோக்கி 14 ஆண்டுகளும் ராமபாதுகையை பூஜித்து வந்த தியாகசீலர்.
    ராஜாவின் மாணிக்க கல்: இரிஞ்ஞாலக்குடா கோயில் மூலவருக்கு பரதர் என்னும் பெயரை விட கூடல்மாணிக்கம் என்ற பெயரே பிரபலமாக உள்ளது. நாட்டுப்புற இலக்கியம் மட்டுமில்லாமல் மற்ற மலையாள இலக்கியங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் நிறைய உண்டு. அதிர்ஷ்டவசமாக, ஒருநாள் மூலவர் பரதரின் முன் நெற்றியில் இருந்து பேரொளி ஒன்று கிளம்பியது. அது எங்கிருந்து வருகிறது என்று பலரும் தேடினர். ஒருவராலும் முடியவில்லை. இதையடுத்து ஒரு பக்தர், காயங்குளம் ராஜாவுக்குச் சொந்தமான மாணிக்கக் கல் ஒன்றை கோயிலுக்கு கொண்டு வந்தார். சிலையில் இருந்து வரும் ஒளியோடு, மாணிக்கக்கல்லின் ஒளியை ஒப்பிடும் நோக்கத்தில் மூலவர் அருகில் சென்றார். அப்போது, ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அவர் கையில் இருந்த மாணிக்க கல் அப்படியே பரதரின் நெற்றிக்குள் மறைந்துவிட்டது. அன்றுமுதல், பரதருக்கு மாணிக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் உள்ள பகுதி கூடல் என்பதால் கூடல் மாணிக்கம் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
    இங்குள்ள குளம் குலிபினி தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. மீன்கள் மட்டுமே இக்குளத்தில் காணப்படுகின்றன. தவளை, பாம்பு இல்லை. மீன்களுக்கு பொரியிட்டு பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். இதற்குமீனூட்டு என்று பெயர். மூலவருக்கு வாசனை திரவியம் ஏதும் சாத்துவது கிடையாது. தாமரை, துளசி, தெச்சிப்பூக்கள் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
    விஷ்ணுபக்தரான வக்கே கைமால் என்பவர் கிராமத்தலைவராக இருந்தார். ஒருநாள், அவருடைய கனவில் இந்திரலோக தேவர் ஒருவர் தோன்றினார். திடுக்கிட்டு கண்விழித்த போது, அந்த தேவர் கண்ணெதிரில் நின்றிருந்தார். கைமால் என்னுடன் உடனே வாருங்கள். கடற்கரையில் புதையல் ஒன்று இருக்கிறது, என்று கூறி அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர் காட்டிய இடத்தில் தோண்டியபோது, நான்கு சிலைகள் இருந்தன. பார்ப்பதற்கு ஒன்று போல தோற்றம் தரும் இச்சிலைகள் தசரத சக்கரவர்த்தியின் பிள்ளைகளான ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்கனர் ஆகியோரின் விக்ரகங்கள் என்பது தெரியவந்தது. கருணை ததும்பும் விழிகளும், அருள்ஒளி வீசும் முகங்களும் கொண்ட அச்சிலைகளை அவர் எடுத்து வந்தார். திரிப்பறையார் என்னுமிடத்தில் ராமரையும், இரிஞ்ஞாலக்குடாவில் பரதரையும், மொழிக்குளத்தில் லட்சுமணரையும், பாயம்மாளில் சத்ருக்கனரையும் மூலவராக வைத்து கோயில்கள் அமைக்கப்பட்டன.
    ஒரே நாளில் தரிசனம்: ராமர், பரதர், லட்சுமணர், சத்ருக்கனர் ஆகிய நான்கு சிலைகளும் பார்ப்பதற்கு ஒரே தோற்றம் கொண்டவை. விஷ்ணுவின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதாயுதம், ஜபமாலை ஏந்திய நிலையில் நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றனர். நால்வரும் அருள்புரியும் தலங்களுக்கு ஒரேநாளில் சென்று வரலாம். அனைத்தும் இரிஞ்ஞாலக்குடாவைச் சுற்றி போக்குவரத்து வசதியுடன் இருப்பது சிறப்பாகும்.
    ரிஷிகள் வாழ்ந்த தவபூமி: பழங்காலத்தில் இரிஞ்ஞாலக்குடா, அடர்ந்த வனமாக இருந்தது. அங்கு கபிலினி என்னும் மகரிஷி மகாவிஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். அவரது தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது. மகரிஷியின் பக்தியை மெச்சி பெருமாள் நேரில் காட்சி அளித்து, கபிலினி! உன் தவத்தால் மகிழ்ந்தேன்! என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அவரோ, சுவாமி! உம் அருளால் எனக்கு குறையொன்றுமில்லை. எனக்கென எதுவும் வேண்டாம். என்றென்றும் உம்மை வணங்கும் பாக்கியம் இருந்தால் போதும் என்றார். பெருமாள் அவரை ஏதேனும் கேட்கும்படி வற்புறுத்தவே, வரம் அருள்வதாக இருந்தால் ஆன்மிகத்தில் ஈடுபடும் தவசீலர்களுக்கு என்றென்றும் இவ்விடத்தில் இருந்து அருள்புரியுங்கள், என்று கேட்டுக் கொண்டார். மகரிஷியின் வேண்டுதல்படி பெருமாளும் அக்காட்டிலேயே தங்குவதாக சம்மதித்தார். சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை இப்பகுதியில் தவசிகளே வாழ்ந்து வந்தனர்.
Working...
X