Announcement

Collapse
No announcement yet.

கனுபண்டிகை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கனுபண்டிகை

    கனுபண்டிகை
    காக்கா பிடியும் கனுப் பிடியும்
    கனிவாக நானும் வெச்சேன்

    மஞ்சள் இலையில் விரிச்சு வெச்சேன்
    மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்
    காக்கை குருவிக்கெல்லாம்
    கல்யாணம்னு சொல்லி வெச்சேன்
    கலர் கலரா சாதம் வெச்சேன்
    கண்டிப்பா கரும்பும் வெச்சேன்
    இனிப்பு புளிப்பு கலந்த சாதம்
    இதயத்தோட எடுத்து வெச்சேன்
    கூட்டு வெச்சேன் கூவி வெச்சேன்
    கூட்டு குடும்பம் கேட்டு வெச்சேன்
    அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
    வாழையடி வாழையாக
    வாழணும்னு வேண்டி வெச்சேன்
    வாழைப்பழமும் சேர்த்து வெச்சேன்
    பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்
    பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்
    கல்பூரம் ஏத்தி வெச்சேன்
    கடவுளை நான் வணங்கி வெச்சேன்
    ஆரத்தி எடுத்து வெச்சேன்
    ஆண்டவனை துதித்து வெச்சேன்.
    டி ஜெ ரகுவீரன்




Working...
X