Announcement

Collapse
No announcement yet.

அக்ரஹாரத்துக் கோயில்கள் - 1- தேப்பெருமாள்Ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அக்ரஹாரத்துக் கோயில்கள் - 1- தேப்பெருமாள்Ī

    அக்ரஹாரத்துக் கோயில்கள் - 1- தேப்பெருமாள்நல்லூர்

    அக்ரஹாரத்துக் கோவில்கள் - 1










    “அக்ரம்” என்னும் சொல்லுக்கு “நுனி” என்று பொருள். தெருவின் இரு நுனிகளிலும் ஹரி,ஹரன் இருவருக்கும் சன்னதிகள் இருப்பதால் அக்ரஹாரம். பொதுவாக அக்ரஹாரத்தின் மேற்கே ஹரியான ஸ்ரீ விஷ்ணுவின் சன்னதியும், கிழக்குபுறத்தின் வெளிபுறம் ஹரனாகிய சிவன் சன்னதியும் இருக்கும்.


    பிராஹ்மத்தை ஏற்று நடப்பவர்கள் (ஸ்மரிப்பதால்) என்பதால் பிராஹ்மணர்களை ஸ்மார்த்தர்கள் என்றும் அழைப்பதுண்டு, ஸ்ம்ருதிகளின் கட்டளைகளை ஸ்மரிப்பவர்களை“ஸ்மார்த்தர்கள்” என்பது வழக்கம். இது ஐயர், ஐயங்கார் எனும் இரு பிரிவிற்கும் பொருந்தும். ஐயர் எனும் பதத்துடன் ”காரு“ எனும் தெலுங்குச்சொல் சேர்ந்து ஐயங்கார் ஆனது. பின்னாட்களில் ஐயர், ஐயங்கார் என்னும் பதங்கள் குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே குறிக்கும் சொல்லானது.


    ஸ்மார்த்த பிராஹ்மணர்களின் ஒரு பிரிவான அஷ்டசாஸ்த்ர பிராஹ்மணர்கள் அதிகம் வசிக்கும் அக்ரஹாரமாகிய தேப்பெருமாள்நல்லூர் அக்ரஹாரத்தில் உள்ள பெருமாள் சன்னதி பற்றி இனி காண்போம்.


    லக்ஷ்மிநாராயணபுரம் என்றும், பின்பு தேவராஜபுரம் என்றும் இருந்தது இவ்வூரின் பெயர்கள். இவ்வூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலக்ஷ்மிநாராயணரின் பெயரிலேயே இவ்வூர் பெயர் வழங்கப்பட்டு வந்ததும், தேவர்களின் தலைவன் விஷ்ணு என்பதால் தேவராஜன் என்ற சிறப்புப்பெயரோடு தேவராஜபுரம் என்றும் வழங்கப்படுகிறது.

    பிராஹ்மணர்களுக்கு அரசர்களால் தானம் கொடுக்கப்பட்ட ஊர்களின் பின்புறம், மங்கலம் அல்லது நல்லூர் என்று வருவது மரபு. அப்படியே தேப்பெருமாள்’நல்லூர்” எனும் பெயரால் வழங்குவதால் இவ்வூர் பிராஹ்மணர்களுக்கு தானம் கொடுக்கப்பட்ட ஊர், என்று தெரிகிறது. லக்ஷ்மிநாராயணபுரம், தேவராஜபுரமாகி பின்பு ஆதிசங்கரரின் சிஷ்யரும் கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமே மோட்ச சாதனம் என்பதால் நாமசங்கீர்த்தனத்தை பரப்பிய“ஸ்ரீபகவன்நாமபோதேந்திராள்” தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த ஸ்ரீவரதராஜரை பிரதிஷ்டை செய்தார். காஞ்சி வரதருக்கு தேப்பெருமாள் என்னும் ஒரு பெயர் உள்ளது, அதன் அடிப்படையில், ஸ்ரீவரதராஜனின் வரவால் தேப்பெருமாள்நல்லூர் என்றானது.
    தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் வெளியான திருநாகேஸ்வரம் நூல் (ஆசிரியர் நா.ரெங்கசாமி) மூன்றாம் ராஜராஜசோழனின் 19வது ஆட்சியாண்டில் அதாவது கி.பி.1234இல் இந்த புதிய கிராமம் / ஊர் நிர்மாணிக்கப்பட்டது என கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அப்போது இந்த கிராமத்துக்கு இட்டப்பெயர் “தூய பெருமாள் நல்லூர்” என்பதாகும். பின்னாளில் பெயர் மாற்றம் பல அடைந்து “தேப்பெருமாள்நல்லூர்” என மாறிற்று, என ஆதாரத்துடன் விளக்குகிறது.



    காஞ்சியிலிருந்து ஸ்ரீ வரதனை பிரதிஷ்டை செய்ததால் தக்ஷிணகாஞ்சி என்றும் காரணப் பெயர் உண்டானது. இச்சன்னதியில் ப்ராசீனமான நரசிம்ஹர் திருமுகம் உள்ளது. இதுவே ப்ரகலாத சரித்திர நாடகத்தின் பொழுது நரஸிம்ஹர் வேஷமிடும் பாகவதர் சூட்டிக்கொள்வார். இவ்வூர் பாகவதமேளா நாட்டிய நாடகத்திலும் தக்ஷிணக்காஞ்சி என்னும் குறிப்பு வருகிறது. இச்சன்னதி தென்னாச்சார்ய சம்ப்ரதயம், வைகானஸ ஆகமத்தினை கொண்டது

    மெலட்டூர், சூலமங்கலம், அச்சுதமங்கலம் என்னும் சாலியமங்கலம், ஊத்துக்காடு,தேப்பெருமாள்நல்லூர், ஆகிய ஐந்து ஊர்களில் பாகவதமேளா நாட்டிய நாடகங்கள் நடைபெறுவது வழக்கம், (தற்போதைய) ஆந்திர மாநிலம் குச்சிப்புடியிலிருந்து வந்த ஸ்ரீ வேங்கடராமசாஸ்திரி என்பவரால் உருவாக்கப்பட்ட பிராசீன ஸம்ப்ரதாய நாட்டிய நாடகங்கள் 5 கிராமங்களிலும் சுமார் 366 வருடங்களுக்கு முன் துவக்கப்பட்டது. பக்தி இயக்கத்தின் முக்கிய பங்கு இது. இன்று ஊத்துக்காடு, சூலமங்கலம் இரு ஊர்களிலும் நாடகங்கள் நின்றுவிட்டது.


    பாகவதமேளா என்னும் இந்த இசை நாட்டிய நாடகங்கள் ஸம்ஸ்க்ருதம் மற்றும் தெலுங்கு மொழியிலும் பாடல்களுடன் அமைந்திருக்கும், நாடகத்தில் பாத்திரத்தின் முதல் வசனம் “தரு”மற்றும் பாடல்கள் தெலுங்கிலும் பிறகு வசனம், ஸ்லோகம் ஸம்ஸ்க்ருத்திலும் உள்ளது. 65 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீமான் நாராயணைய்யர் என்னும் பாகவதர் தெலுங்கு தருவினைத் தொடர்ந்து வரும் சமஸ்க்ருத வசனத்தைத் தொடர்ந்து அதன் தமிழ் மொழிபெயர்பையும், தமிழ் வசனத்துடன் மொழிபெயர்த்து பேசவைத்தார்.

    வைகாசி ஏகாதசியன்று ருக்மாங்கத சரித்திரத்துடன் துவங்கி மறுதினம் துவாதசியன்று அம்பரீஷ சரித்திரம் என வளர்ந்து உஷாபரிணயம், தேவகி கல்யாணம், க்ருஷ்ணாவதாரம்,கம்ஸவதம், சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், நரசிம்ஹ ஜயந்திக்கு முதல் நாளும்,நரசிம்ஹஜயந்தி அன்றும் பிரஹலாத சரித்திரம் நாடகமும் நடைபெறும்.


    மராட்டியர் கால மோடி ஆவணங்களில், தேப்பெருமாள்நல்லூர் பெருமக்கள் ஸ்ரீராமநவமி உற்சவத்தில் ஒன்பதாம் திருநாளில் கம்ஸவதம் நாடகம் சர்க்கார் மண்டகப்படியாக நடத்தப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக குறிப்பு உள்ளது. தற்போது பாகவதமேளாவில் ஸ்ரீநரசிம்ஹஜயந்தி அன்று பிரகலாத சரித்திரம் மட்டும் ஸ்ரீலக்ஷ்மிநாராயண ஸ்ரீபூமிதேவி ஸ்ரீஸ்ரீதேவி ஸமேதா ஸ்ரீவரதராஜ ஸ்வாமி சன்னதியில் இன்றும் நடைபெறுகிறது. மற்ற நாடகங்கள் கால மாற்றத்தினால் நின்றுவிட்டது



    to be contd..2
Working...
X