Announcement

Collapse
No announcement yet.

வகுப்பறை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வகுப்பறை

    வகுப்பறை
    உலகில் முதன்முதலாக நின்று கொண்டே படிக்கும் வகுப்பறை. ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
    மாணவர்கள் குண்டாகாமல் தடுக்க புது முயற்சி.
    ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, சிறுவர்கள் இறுக்கையில் மணிக்கணக்கில் அமர்ந்தே இருப்பதால் உடல் குண்டாக ஊதிப்போகும் நிலைமை ஏற்படுகிறது.
    இதைத் தடுப்பதற்காக, மாணவர்களின் உயரத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளக்கூடிய டெஸ்க்கை வடிவமைதுள்ளனர். தமது தேவைக்கேற்ப நின்றுகொண்டோ அல்லது அமர்ந்தபடியோ பாடம் கேட்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு டெஸ்க் மான்ட் ஆல்பர்ட் தொடக்கப்பள்ளியின் 6-ம் வகுப்பு அறையில் அமைக்கப்பட்டுள்ளது.
    இந்த டெஸ்க் அமைக்கப்பட்டதிலிருந்து நிறைய மாணவர்கள் நின்று கொண்டே பாடம் கேட்கின்றனர். மாணவர்கள் நின்றபடி இருப்பதால் அவர்களது சுகாதாரம், உடல்தகுதி, படிப்பாற்றல், நினைவுத்திறன் மேம்படுகிறதா என்பதை விஞ்ஞானிகள் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.
    எவ்வளவு நேரம் அமர்ந்தபடி இருக்கின்றனர் என்பதை அளவிடும் கருவிகள் மாணவர்களுக்கு பொருத்தப்படும். சோம்பலாக மாணவர்கள் இருப்பதை தவிர்க்க பாடதிட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.
    பள்ளிக்கூடங்களில் தினமும் 3ல் 2 பங்கு காலம் அமர்ந்தபடியே இருந்தால் நீரிழிவு நோய், இதய நோய், உடல் ஊதி பருமனாதல் போன்ற பிரச்சினைகள் வருகின்றன.
    -- பிடிஐ சர்வதேசம்
    -- ' தி இந்து' நாளிதழ். வியாழன், டிசம்பர் 26, 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X