' ஆல்ஃபா நிலை '
" சக்திகளிலேயே மிகப்பெரிய சக்தி நம் ஆழ்மனதின் சக்தி !." இதை உணர்ந்து நமக்குள்ளேயே இருக்கும் இந்த சக்தியைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டால் நிச்சயமாக நம் வாழ்வில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். பல விஷயங்களைச் சாதிக்கவும் முடியும்.
இந்த ஆழ்மனதின் சக்தியை எப்படித் தெரிந்து கொள்வது? உங்கள் மனதின் ' ஆல்ஃபா நிலை ' தான் அது. ஒரு தியான முறையின் மூலம் இந்த நிலையை அடைய முடியும்.
மனித மூளையின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் மிக அழகாக ஆராய்ந்திருக்கிறார்கள். மூளையிலிருந்து வெளிப்படும் மெல்லிய முன் வீச்சுக்கள் அவ்வப்பொழுது அதன் செயல்பாட்டிற்கேற்ப மாறக்கூடியது. இது EEG என்ற கருவியின் மூலம் வினாடிக்கு இத்தனை ' சைக்கிள் 'கள் என்று கனக்கிடப்படுகிறது.
இதில் ஆல்ஃபா எனப்படுவது வினாடிக்கு 7 முதல் 14 சைக்கிள்கள் வரையிலான நிலையாகும். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையிலான நிலை இது. இந்த நிலையில் செயல்படும் பொழுது பொதுவாக அதிகமாக இயங்கும் இடது பக்க மூளையுடன், வலது பக்க மூளையும் ஊக்குவிக்கப்படுகிறது. அதனால் நமது மூளை மிகவும் சக்தி வாய்ந்த, ஆக்கபூர்வமான உள்ளுணர்வுடன் கூடிய சிந்தனையில் ஈடுபடுகிறது. இந்த நிலையில் உங்கள் ஆழ்மனதுடன் உங்களுக்கு தொடர்பு ஏற்படுகிறது. அங்கு பதுங்கி இருக்கும் மிகப்பெரிய சக்தியைத் தட்டி எழுப்பி நீங்கள் பயன்பெற முடியும்.
இந்த நிலையில் இருக்கும்பொழுது மனதில் பதிக்கப்பட்ட எண்ணங்கள் நிச்சயமாக வாழ்க்கையில் ஏடேறும் என்று கண்டறியப்படுள்ளது.
அது மட்டுமன்றி, தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆல்ஃபா தியானத்தைப் பயிற்சி செய்தாலே நினைவாற்றல் கூடுவதுடன் புத்திக் கூர்மையும் உண்டாகிறது.
- 'ஆல்ஃபா மைண்ட் பவர் ' என்ற நூலில். - டாக்டர் விஜயலக்ஷ்மி பந்தையன்.
-- இதழ் உதவி : S.B.மாதவன், விருகம்பாக்கம், சென்னை .
Posted by க. சந்தானம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends