நாகதோஷம் போக்கும் செருநெட்டூரி பகவதி
சிலருக்கு திருமணத்தடை ஏற்படுவதுண்டு. இதற்கு ஜோதிடம் பார்த்தால் "நாகதோஷம்' என்று சொல்வர். இந்த தோஷம் போக்கும் பகவதி, கேரளத்திலுள்ள ஸ்ரீ செருநெட்டூரி என்ற ஊரில் அருள்புரிகிறாள்.
இந்த பகவதியம்மனுக்கு, பக்தர்கள் புஷ்பாஞ்சலி செய்து வழிபடுகின்றனர். இவளை செம்பருத்தி மலரால் பூஜிப்பது சிறப்பு. இவளுக்கு காலை, மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது. தங்கத்தில் ஜொலிக்கும் பகவதியை, கற்பூர ஜோதியில் காண கண் கோடி வேண்டும். மாலையில் கோவில் முழுவதும் தீபம் ஏற்றப்படுகிறது.
பகவதிக்கு சுவைமிக்க பாயசம் நைவேத்யம் செய்யப்படுகிறது.
தை மாத உத்திர நட்சத்திரத்தன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும். இந்த விழாவில், பக்தர்கள் வெண்கல விளக்கை காணிக்கையாக செலுத்துகின்றனர். இங்கு கணபதி, சிவன், நவகன்னியர், ஐந்துதலை நாகர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.
இருப்பிடம்: பொள்ளாச்சி-திருச்சூர் சாலையிலுள்ள ஆலத்தூரிலிருந்து 7 கி.மீ.,
தொலைபேசி: 049 2- 224 3468.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends