Courtesy: Sri.JK.Sivan


கால பைரவாஷ்டகம் 2


ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள் அறிவோம். ஹிந்துக்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் ருத்ராக்ஷம் எனலாம். முன்னோர்கள் கௌடி சரடு என்று கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.
ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.
ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் துக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை துளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த <உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம்.
ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.
மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.
நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.
ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.
எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.
ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.
பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.
ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்
भानुकोटिभास्वरं भवाब्धितारकं परं
नीलकण्ठमीप्सितार्थदायकं त्रिलोचनम् ।
कालकालमंबुजाक्षमक्षशूलमक्षरं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥२॥
Bhaanu-Kotti-Bhaasvaram Bhavaabdhi-Taarakam Param
Niila-Kannttham-Iipsita-Artha-Daayakam Trilocanam |
Kaala-Kaalam-Ambuja-Akssam-Akssa-Shuulam-Akssaram
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||2||

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Meaning:
2.1: (Salutations to Sri Kalabhairava) Who has the Brilliance of a Million Suns, Who Rescues us from the Ocean of Worldly Existence and Who isSupreme.
2.2: Who has a Blue Throat, Who Bestows us with Worldly Prosperity which we Wish for and Who has Three Eyes.
2.3: Who is the Death of the Death [i.e. beyond death], Who is Lotus-Eyed, Whose Trident Supports the Three Worlds and Who is Imperishable.
2.4: Salutations to Sri Kalabhairava Who is the Supreme Lord of the City of Kasi.


சதாசிவா, உன் மகனை கணேசனை வணங்கும்போது ''சூர்ய கோடி சம பிரபா'' என்போமே. அது உன் குடும்ப சொத்தா? கண்ணைப்பறிக்கும் பொன்னார் மேனியனே, நீயும் நூறு நூறு கோடி சூர்ய பிரகாசமானவன். பவ சாகரத்தை கடக்கும் தோணி, நீல கண்டா, அது எப்படி ஹாலஹால விஷம் கூட உன் மேனிக்கென்று ஒரு தனி அழகைத்தருகிறது. மயில் கழுத்து போல் மயக்குகிறது. சிவம் என்றால் மங்களம் தானே. உன் பெயர் சொன்னாலே சுபிக்ஷம் தானே. அரவிந்த லோச்சனா, இந்த அழகிய இரு கண்களை அரை மூடி நீ த்யானத்தில் இருக்கும் காந்த சக்தி அகிலத்தை வளைத்து விடுமே, ஆனால் அதன் மீது இருக்கும் முக்கண்ணோ தீயவர் கண்டஞ்சும் தன்மையது. பரம சிவா, நீ காம தகன காரணன் மட்டு மல்ல. திருபுராந்தகன் மட்டும் அல்ல. காலனுக்கே காலன். ம்ருத்யுஞ்சயன் . கால சம்ஹார மூர்த்தி. சூலாயுத பாணி. திரி புவனத்தையும் காக்கும் ரக்ஷை உன் திரிசூலம். முடிவில்லாதவன் நீ மோன குரு. கால பைரவேஸ்வரா, காசிபுராதினாதா, உன்னை பூஜித்து மகிழ்கிறோம்.