Announcement

Collapse
No announcement yet.

வெஜிடபிள் ஆம்லெட்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெஜிடபிள் ஆம்லெட்

    வெஜிடபிள் ஆம்லெட்..
    தேவையானவை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், முழு கோதுமை - தலா 50 கிராம், பச்சைமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 1, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு - சிறிதளவு.

    செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, ஆம்லெட் போல தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.
    பலன்கள்: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, முந்திரி அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச்சோளம், முழு கோதுமை போன்றவற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது. பச்சைமிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து நுண் ஊட்டச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன.





  • #2
    Re: வெஜிடபிள் ஆம்லெட்

    வெஜிடபெல் ஆம்லெட் என்ற பெயருக்கு பதில் இதை நவரத்ன அடை என்று சொல்வோம் என்று ஒரு மாமி மற்ற ஒரு site ல் பெயர் மாற்றம் செய்தார் அதையே நாமும் கடைபிடிப்போம்

    Comment

    Working...
    X