Announcement

Collapse
No announcement yet.

சிம்பிளான... மோர் குழம்பு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிம்பிளான... மோர் குழம்பு

    சிம்பிளான... மோர் குழம்பு





    மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அத்தகைய மோரை சாதாரணமாக குடிப்பது போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அதனை குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும்

    தேவையான பொருட்கள்: மோர் - 1 கப் தேங்காய் - 1/2 கப் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது வரமிளகாய் - 1 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், மல்லித், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின் மிதமான தீயில் அதனை 3 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    source: One india
Working...
X