Announcement

Collapse
No announcement yet.

நேயர் விருப்பம்- கொத்தவரங்காய் பருப்பு உ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நேயர் விருப்பம்- கொத்தவரங்காய் பருப்பு உ

    நேயர் விருப்பம்- கொத்தவரங்காய் பருப்பு உசிலி
    ..
    ..
    நன்கு வளர்ந்த வாடாத முத்தல் இல்லாத காம்புகள் ஆய்ந்த கொத்தவரங்காய் - கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
    உப்பு - தேவைக்கு
    மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
    ஊற வைத்து அரைக்க:
    கடலை பருப்பு - அரை கப்
    மிளகாய் வற்றல் - நான்கு
    பெருங்காயம் - ஒரு துண்டு
    ..
    தாளிக்க:
    எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி
    கடுகு - ஒரு தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை - இரண்டு ஆர்கு (கிள்ளியது)
    எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
    கொத்தமல்லி தழை - பொடியாக நறுக்கியது..
    கருவேப்பிலை

    பருப்பையும் மிளகாய் வற்றலையும் அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.
    ..
    ஆய்ந்த பொடியாக சீராக நறுக்கிய கொத்தவரங்கயை கொஞ்சம உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.. இங்குதான் உங்கள் பின்னங்குடியின் பக்குவம் தேவைப் படுகிறது.. நன்றாக வேந்தும் ருக்கவேண்டும்.. தனித்தனியாக உதிராகவும் இருக்க வேண்டும்.. குழைந்து விட்டால் உசீலி வ்ராது.. குழுதான் மிஞ்சும்.. உஷார்..
    ..ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த கலவையை போட்டு உதிரியாக சீராகக் கிளறி கொண்டே இருக்கவும்.. இடையிடையே கொஞ்சம் மீதி எண்ணெய் விட்டு கிளறவும்.

    பிறகு வெந்த காயையும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.. கடைசியில் எலுமிச்சை சாறு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.. சுவையான பருப்பு உசிலி ரெடி..



  • #2
    Re: நேயர் விருப்பம்- கொத்தவரங்காய் பருப்பு &#2

    அருமை மாமா, ஆனால் பருப்பு உசிலிக்கு வெறும் கடலை பருப்பை விட கொஞ்சம் துவரம் பருப்பும் கூட போட்டுக்கொண்டால் அருமையாக இருக்கும் .............எங்களுக்கு மிகவும் பிடித்த இந்த கொத்தவரையை கயாவில் விட்டு விட்டோம்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: நேயர் விருப்பம்- கொத்தவரங்காய் பருப்பு &#2

      ரொம்ப அருமையான குறிப்பு. கொத்தவரங்காயை குழையாமல் உதிரியாக வேக வைக்க நான் சின்ன ஸ்டீல் குக்கரை use பண்ணுவேன். குக்கரில் 3 spoon ஜலம் + 2 spoon coconout oil ( or any cooking oil) சேர்த்து மேலே மஞ்சள் தூள் மிளகாய் பொடி etc வை பரவலா தூவிட்டு உப்பையும் தூவி ( பருப்பு அரைக்க தனியா உப்பு காரம் போடுவேன்...இங்கே காய்க்கு மட்டுமானது போடறது) போட்டு மூடி வைச்சுடணும். 5 நிமிஷத்துக்குள்ள 2 விசில் வந்துடும். வெயிட்டை தூக்கி ப்ரஷரை இறக்கிட்டு நேரே பருப்பு வதக்கினதோட சேர்க்கலாம். ஜலமில்லாம திட்டமா வெந்திருக்கும். Super fast என்பதோடு காய்களின் நிறம் சத்து மாறாது. சுவை மட்டும் கூடும். தேவையானா தேங்காய் துருவலையும் காய் மேல தூவலாம். முக்கியமாக கலக்காம வைக்கணும்.

      Thanks for sharing.

      Comment

      Working...
      X