Benefits of Bhagavatam
MSG., FROM J.K.SIVAN
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
ஒரு சிறந்த மனிதரைத் தெரிந்து கொள்வோமா?
ஸ்ரீமத் பாகவதத்தை ஒரு கை சொடுக்கில் கொடுத்தவரை அறிவது புண்யமில்லையா?
அவர் எழுதிய புத்தகங்கள் தேடினேன். பெயர் தான் கிடைத்தது. யாரிடமாவது இருந்தால் சொல்லவும் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.
புத்தகத்தின் பெயர்:'' ஸ்ரீமத் பாகவத ரத்னாவளி''. பாகவதத்துக்குத் தன்னை அர்பணித்துக்கொண்ட இந்த அதிசய மனிதர் இப்போது இல்லை. அவர் எழுதிய புத்தகங்கள் கட்டுரைகளும் சேமித்து வைக்கப்படவில்லை. எதெதற்கோ நேரம், ஆவல், விருப்பம் இருக்கிறது. சில அரிய சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்டு விடுகிறோமல்லவா. அதில் இதுவும் ஒன்று. இப்போது தேடினால் அவை அச்சில் இல்லை. யார் படிக்கிறார்கள்? அச்சிட்டவர் அத்தனை பிரதிகளையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது?
இந்த அபூர்வ எழுத்தாளர் பெயர் ஸ்ரீ T.B. தர்மராஜய்யர். அவர் மகள் -- 80ஐ நெருங்குபவர். அவரை நேற்று சந்தித்தபோது தான் (திரு ஜம்பு ராதா கிருஷ்ணய்யர் வீட்டில்) இந்த புதையல் இருப்பதை வாசனை பிடித்தேன். வலையில் தேடி அட்டையைப் பிடித்தேன்.
தர்மராஜய்யர் தனது 80வது வயது - சதாபிஷேகம் அன்று (19.5.1991) வாழ்த்த வணங்க வந்தவர்களையும் விடவில்லை. ஆளுக்கு ஒன்று என்று ஒரு 6 பக்கங்கள் கொண்ட ஒரு பொக்கிஷத்தையும் கொடுத்திருக்கிறார். வந்தவர்க்கெல்லாம் ஒரு கிருஷ்ணப்ரசாதம். கைச் சொடுக்கில் பாகவதம். ஒரு உபநிஷதம் மாதிரி இருக்கிறது அது. அதில் ஒன்று அந்த வீட்டில் கிடைத்தது. அதைப் படித்து சாராம்சம் கீழே கொடுத்திருக்கிறேன். ஸ்கேன் காபி இணைத்துள்ளேன். உங்கள் சதாபிஷேகத்தின் போதாவது படிக்க உதவுமே!
புழுவாக புல்லாக பிறந்து அரிய உயர்ந்த மானுடப் பிறவி எடுத்திருக்கிறோம். மற்ற பிறவிகள் அனுபவிக்காத, குடும்பம், வீடு, கார், உடை, பேங்க் பேலன்ஸ் எல்லாமே இருக்கிறது. இருந்தும் அனைத்து மனிதரும் ஒன்று போல் இல்லை. எல்லா மிருகங்களும், பட்சிகளும், புழு, பூச்சி, பூரான் போன்று ஒன்றாகவா இருக்கிறோம்? மனிதரிலேயே பிரம்ம வர்ச்சஸ் எவனிடம் இருக்கிறதோ அவனே உயர்ந்தவன். அவனே மோக்ஷம் அடைகிறான். மற்றவர்கள் வந்த இடத்துக்கே கீழே எதற்காக போகவேண்டும்? கிருஷ்ணன் தனது உற்ற நண்பன் உத்தவருக்கு சொன்னதை நாமும் காது கொடுத்துக் கேட்போம்:
'''புத்திசாலிக்குள்ளே புத்திசாலி, கெட்டிக்காரனுக்குள்ளே கெட்டிக்காரன் அறிவது என்ன தெரியுமா? சாஸ்வதமற்ற பொய்த் தோற்றமான உண்மையற்ற சரீரம் கொண்டிருந்தாலும் அழிவற்ற நிரந்தர என்னை அடையமுடியும் என்பதை''
eṣā buddhimatāṁ buddhir
manīṣā ca manīṣiṇām
yat satyam anṛteneha
martyenāpnoti māmṛtam 11.29.22
சொல்வது சுலபம். அதை அடைவது எப்படி என்கிற கேள்வி வருகிறதே. அதற்கும் கிருஷ்ணன் வழி காட்டுகிறார் உத்தவரிடம் அவர் சொல்வது:
bhaktyāham ekayā grāhyaḥ
śraddhayātmā priyaḥ satām
bhaktiḥ punāti man-niṣṭhā
śva-pākān api sambhavāt 11.14.21
ஒன்றும் பெரிய யாகம், யக்னம், கோவில் கோவிலாக சுற்றுவது, குளங்களில் நீராடுவது. ஒற்றைக்கால் தவம், பெரிய பூஜை, -- இதெல்லாம் ஒன்றுமே தேவையில்லை. வேண்டவே வேண்டாம் . உனக்கு மனது என்று ஒன்றை காலியாகத்தானே கொடுத்தேன். அதில் முழுமையுமாக என்னை நினை, நிரப்பிக்கொள். உண்மையாக நீ அப்படி நினைப்பது தான் ''பக்தி'' . பூரண நம்பிக்கை. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பு. என்னோடு உன்னை இணைத்துக்கொள். கண் திறந்து பார். அடடே, நீ என்னை அடைந்தாயிற்றே.
இந்த பக்தி எப்படி கிடைக்கிறது? சத் சங்கத்தின் மூலம் தான். கண்டவனோடு சேராதே. அவன் வழியில் உன்னை இழுத்துவிடுவான். என் வழியில் உன்னை இழுப்பவனும் இருக்கிறானே. அவனோடு சேர். அவன் தக்க வழி காட்டுவான். உயர்ந்த பாதையில் உன்னைக் கூட்டிசெல்வான். என்னை அடையும் வழி தான் அவனுக்குத் தெரியுமே.
அவனை எப்படிக் கண்டுபிடிப்பது என யோசிக்கிறாயா? என்னைப்போலவே குணம் உள்ளவன். உன்னருகே இருப்பவன். உனக்கு வேண்டியவன். நீயே தான் அவன். அவனே நான். நல்வழி காட்டுபவன். இதை ஸ்லோகமாக சொல்கிறார் கிருஷ்ணன்:
santo diśanti cakṣūṁṣi
bahir arkaḥ samutthitaḥ
devatā bāndhavāḥ santaḥ
santa ātmāham eva ca 11.26.34
ஸ்ரீமத் பாகவதம் 18000 ஸ்லோகம் கொண்டது. 12 காண்டங்களில் 335 அத்யாயங்களோடு . இதை பரிக்ஷித்- சுகர் சம்வாதம் என்றும் சொல்வதுண்டு. பரிக்ஷித் மரணத்தை சில தினங்களில் முன்கூட்டியே தெரிந்து கொண்டு எதிர்பார்த்துக்கொண்டிருப்பவன். சுக பிரம்ம ரிஷியை
''எது ஒருவனுக்கு உயர்ந்த லக்ஷியம்?
மரணமடையுமுன் நான் என்ன செய்யவேண்டும்?
மனிதனானவன் எதை கேட்கவேண்டும், செய்யவேண்டும், ஞாபகம் கொள்ளவேண்டும்? '
'என்று கேட்டதற்கு அவர் சொல்கிறார்: மனிதன் பொறுப்பற்று தனது பொன்னான வாழ்நாளை உலக வாழ்க்கையின் ஆசா பாசங்களில், மாயையில் வீணாகப் போக்குகிறான். சம்சார சாகரத்திலிருந்து தளை நீங்கி விடுதலை பெற (மோக்ஷ சாதகத்துக்கு) பாகவதம் படித்தாலோ, கேட்டாலோ போதுமே!
7 நாள் பாகவதம் சொல்கிறார் சுகர். அதில் ப்ரம்மாவும் நாரதரும், விதுரரும் மைத்ரேயரும் யுதிஷ்டிரனும் நாரதரும், கிருஷ்ணனும் உத்தவரும், பரிமாறிக்கொண்ட சம்பாஷணைகள் பற்றி சொல்கிறார். குறிப்பாக,
நாராயணனின் அவதாரங்கள் பற்றி, பக்தர்களைப் பற்றி,
ஆத்மாவின் உண்மை ஸ்வரூபம் பற்றி,
ஆசா பாசங்களின் மாயத் தளைகள் அவற்றிலிருந்து ஜீவன் எப்படி விடுபடுவது என்பதை,
ஹிந்து சனாதன தர்ம கோட்பாடுகளைப் பற்றி,
சாதுகளின் சங்கம் தரும் பெருமை பற்றி,
பக்தி ஞான கர்ம மார்கத்தில் காட்டும் வழிகள், இவற்றில் பக்தி யோகம் என்பது சிறந்த மார்க்கம் என்று.
''பரிக்ஷித் , ஆத்மா உன் உடம்பல்ல, பிறப்பற்றது. உடல் அழிந்தாலும் ஆத்மா மரண அழிவற்றது. இதை அறிந்தாலே நீ ப்ரம்மாகிவிடுவாய். இன்னும் என்ன சொல்லட்டும் சொல்?''
''குருநாதா, போதும் போதும். அடைய வேண்டியதை அடைந்துவிட்டேன். பாக்யவான் நான். சாஸ்வதமான ஹரி யை எனக்குக் காட்டிவிட்டீர்களே. வேறு என்ன வேண்டும்? என் அறியாமை, சந்தேகம் சகலமும் நீங்கின. இனி என்னை அந்த தக்ஷகன் என்கிற சர்ப்பம் தீண்டி மரணம் அடைந்தாலும் துளியும் வருத்தமோ, கவலையோ இல்லை. வாடா நண்பா என்று வரவேற்பேன்.
அருமை நண்பர்களே, நாமும் ''அறிந்து கொள்வோமா'' பாகவதம் புரிந்து கொள்வோமா ?
pibata bhāgavataṁ rasam ālayam
muhur aho rasikā bhuvi bhāvukāḥ 1 - 1.3
பாகவதம் எனும் அம்ருத ரசம் பருகுவோமா?
கீழே சில பாகவத அருமையான ஸ்லோகங்கள் கொடுத்துள்ளேன். அர்த்தம் சொல்லப்போவதில்லை. நீங்களும் கொஞ்சம் தேடி அனுபவிக்கவேண்டாமா?
etāvān eva loke 'smin
puṁsāṁ dharmaḥ paraḥ smṛtaḥ
bhakti-yogo bhagavati
tan-nāma-grahaṇādibhiḥ 6.3.22
etāvān eva loke 'smin
puṁsāṁ niḥśreyasodayaḥ
tīvreṇa bhakti-yogena
mano mayy arpitaṁ sthiram 3. 25.44
bhaktiṁ labdhavataḥ sādhoḥ
kim anyad avaśiṣyate
mayy ananta-guṇe brahmaṇy
ānandānubhavātmani 11.26.30
bhidyate hṛdaya-granthiś
chidyante sarva-saṁśayāḥ
kṣīyante cāsya karmāṇi
mayi dṛṣṭe 'khilātmani 11.20.30
sadhrīcīno hy ayaṁ loke
panthāḥ kṣemo 'kuto-bhayaḥ
suśīlāḥ sādhavo yatra
nārāyaṇa-parāyaṇāḥ 6.1.17
santo 'napekṣā mac-cittāḥ
praśāntāḥ sama-darśinaḥ
nirmamā nirahaṅkārā
nirdvandvā niṣparigrahāḥ 11.26.27

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends