Announcement

Collapse
No announcement yet.

ஸிம்மாச்சலம் - ஸ்ரீலஷ்மி வராக நரஸிம்ஹர்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸிம்மாச்சலம் - ஸ்ரீலஷ்மி வராக நரஸிம்ஹர்

    ஸ்தல புராணம் (சுருக்கமாக)
    ஹிரண்ய கசிபு, ஹிரண்யாட்சன் என்ற இரண்டு அரக்க சகோதரர்கள். மகாவிஷ்ணு வராக அவதாரமெடுத்து இளயவனான ஹிரண்யாட்சனை வதம் செய்து பூமியை மீட்டார்.
    மூத்தவனான ஹிரண்யகசிபுக்கு ப்ரஹ்லாதன் மகனாகப் பிறந்தான். ப்ரஹ்லாதன் மகாவிஷ்ணுவின் பரம பக்தனாக இருந்ததால், ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதனைக் கொல்ல பல வழிகளில் முயல்கிறான். ப்ரஹ்லாதனைக் கொல்ல மலையிலிருந்து தூக்கிப் போடும்போது, மஹாவிஷ்ணு அவனைத் தாங்கிக் காப்பாற்றி, ஸிம்மாச்சல மலை மேல் ப்ரஹ்லாதனை வைத்து “உனக்கு வேண்டுவதைக் கேள்” என்கிறார்.
    அதற்கு ப்ரஹ்லாதன், “என் சிற்றப்பா ஹிரண்யாட்சனை வதம் செய்த அவதாரம், என் அப்பா ஹிரண்ய கசிபுவை வதம் செய்யப் போகும் அவதாரம் இவற்றை ஒருசேரக் காண வேண்டும்” என்கிறான். உடனே மஹாவிஷ்ணு ஸ்ரீவராக நரஸிமஹராகக் லஷ்மியுடன் காட்சி கொடுத்தார்.
    (நரஸிம்ஹ அவதாரமே நரனும் - ஸிம்ஹமும் சேர்ந்தது. இங்கே அதில் வராகமும் இணைந்து காட்சி கொடுக்கிறார்.)
    உக்கிரஹம் தாங்காமல் மரம் செடிகளெல்லாம் பொசுங்கின.
    ஆதலால் ஸ்ரீவராக நரஸிம்ஹ மூர்த்தியை சந்தன குழம்பால் காப்பிட்டு (With a heavy layer of sandal paste) வைத்துள்ளார்கள். சந்தனத்தாலான பெரிய லிங்கம் போன்ற வடிவையே நாம் தரிசனம் செய்ய முடியும். ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை அன்று சந்தனத்தை எடுத்துவிட்டு, புதிய சந்தனம் பூசுவார்கள். அன்று மட்டும் பக்தர்கள் “நிஜ ரூப தரிசனம்” காணலாம். நிர்மால்யமான சந்தனம், தேவஸ்தானத்தால் பக்தர்களுக்கு பிரசாதமாகக் விற்கப்படுகிறது.
    மலைமீது மிகவும் அழகான கோவில். மனதைக் கொள்ளைகொள்ளும் ரம்யமான சூழல்.

    விசாகப்பட்டிணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 12 கி.மீ. மலை அடிவாரம் வரை சிட்டி பஸ்ஸில் செல்ல வேண்டும். மலை அடிவாரத்திலிருந்து மலை மேல் செல்வதற்கு தேவஸ்தான பஸ் வசதி செய்திருக்கிறார்கள்.
    பரித்ரானாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம் தர்மசன்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே.
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாயாய _()_



Working...
X