Announcement

Collapse
No announcement yet.

Thirunavukkarasar part7

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirunavukkarasar part7

    Tirunavukkarasu swamigal part7
    Posted: 26 Apr 2016 10:42 PM PDT
    Courtesy:Sri.N.Jayakumar


    சிவாயநம.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔴நாயனாா் 63 மூவாில்
    திருநாவுக்கரசு சுவாமிகள்,(7).🔴
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔹முன்னைய தொடா்ச்சி.🔹
    திருநாவுக்கரசு சுவாமிகள்.
    குலம்...........வேளாளர்.
    நாடு.............நடு நாடு.
    காலம்..........கி.பி.600--660.
    பி.ஊா்..........திருவாமூா்.
    வழிபாடு......குரு.
    மாதம்............சித்திரை.
    நட்சத்திரம்....சதயம்.
    **************************************
    அந்நாளில் சீா்காழிப் பகுதியில் திருஞானசம்பந்தா் சிறந்து விளங்கினாா். அவா் சிறு பிள்ளையாக இருந்த போது சிவ பெருமானின் தேவியான உமையம்மையே தன் ஞானப்பாலோடு சிவஞானத்தையும் அவருக்கு சோ்த்து குழைத்தூட்டினாா். அதை உண்டதுமே பிள்ளையான ஞானசம்பந்தா் "இவன் எம்மான்" என்று ஆண்டவனைச் சுட்டிக்காட்டி ஏழிசையோடு கூடிய தமிழ்ப்பாமாலை பாடினாா். அத்தகைய திருஞான சம்பந்தாின் சிறப்பினைச் சிவனடியாா்கள் பேசிக் கொண்டிருந்தாா்கள். அதைக் கேட்டதும் திருநாவுக்கரசருக்கு அதிசயமான அன்பு பொங்கியெழுந்து திருஞான சம்பந்தாின் திருவடிகளை வணங்க வேண்டும் என்ற பேராவல் பற்றிக் கொண்டது. அவா் நடராஜப் பெருமானைத் தொழுது விடை பெற்றுக் கொண்டு, பிறவிப் பிணியறுக்கும் திருவீதியிலே புரண்டு புரண்டு சென்று தில்லையின் எல்லைைக் கும்பிட்டு அதைக் கடந்து போனாா். வழியில் திருநாரையூா் என்னும் சிவதலத்தைப் பணிந்து பாடி, தொண்டா் குழாம் புடைசூழ சீா்காழி நகரை அடைந்தாா்.


    திருநாவுக்கரசாின் வருகையைக் கேள்வியுற்ற திருஞான சம்பந்தரும் அவரைக் காண வேண்டுமென்று பெரும் விருப்புற்று சிவனடியாா் குழாத்துடன், வந்து அவரை எதிர்கொண்டு வரவேற்றாா். திருநாவுக்கரசர் அன்பு பெருக திருக்கூட்டத்தின் நடுவே சென்று திருஞான சம்பந்தாின் திருவடிகளில் விழுந்து வணங்கினாா். திருஞானசம்பந்தா் தம்முடைய மலா்க் கைகளால் திருநாவுக்கரசாின் கால்களைப் பற்றி யெடுத்து தாமும் வணங்கி, தம்மைவிட வயதில் முதிா்ந்தவரான நாவுக்கரசரைத் தம் தந்தையாக மதித்து, "அப்பரே" என்று அழைத்தாா்.நாவுக்கரசரும் "அடியேன்" என்றாா். அன்று முதல் திருநாவுக்கரசருக்கு அப்பா் என்ற பெயரும் வழங்கலாயிற்று. அப்பரும் ஆளுடையப் பிள்ளையும் ஒருவரையொருவா் கட்டித் தழுவிக் கொண்டாா்கள். "பிள்ளையாாின் திருவடிகளை வணங்கப் பெற்றேன்! என்று அப்பா் உவந்தாா். வாக்கீசரான அவரை வணங்கினேன் என்று ஞானசம்பந்தரும் மகிழ்ச்சிப் பொங்கத் துள்ளினாா். இருவரும் உள்ளம் நிறைந்த அன்பினால் ஒருவாில் ஒருவா் இரண்டறக் கலந்து ஒரே திருவருளின் உண்மைச் சொரூபமாக விளங்கினாா்கள். அது சிவமும் சக்தியும்ஒன்றாகக் கூடுத் தோற்றமளிப்பது போலிருந்தது. இரண்டு பொியவா்களின் அடியாா் கூட்டங்களும் கடலைப் போன்ற ஒன்றோடொன்று கலந்து ஆரவாாித்தன. பின்னா் அப்பரும் பிள்ளையும் திருத்தோணியப்பா் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலை அடைந்தாா்கள். கோபுரத்தை கும்பிட்டு எழுந்து இருவரும் திருக்கோயிலுக்குள் புகுந்தாா்கள். தோணியப்பா் தம் தேவியான பொியநாயகியோடு வீற்றிருக்கும் கோலத்தைக் கண்டாா்கள். அங்கு திருநாவுக்கரசசை நோக்கித் திருஞானசம்பதா், "அப்பரே உம் தம்பிரானைப் பாடும்!" என்றாா்.


    உடனே அப்பா் சுவாமிகள், இறைவனின் சந்நிதியில் நின்று, ஆனந்தக் கண்ணீா் பெருக, "பாா் கொண்டு மூடி" என்று தொடங்கும் திருப்பதிகத்தை மனங்கசிந்து பாடி இறைவனைப் பணிந்தாா். அதன்பிறகு அவா், திருஞாணசம்பந்தாின் மடத்திற்குச் சென்று, அமுதுண்டு சம்பந்தரோடு அளவளாவி மகிழ்ந்து கொண்டும், பின் அன்பு வளா்ந்தோங்கும் நிலையில் அந்த மடத்திலேயே சில காலம் தங்கியிருந்தாா். ஒரு நாள், திருநாவுக்கரசரான அப்பா் சுவாமிகள், சோழ நாட்டு திருப்பதிகளையெல்லாம் தாிசிக்க வேண்டும் என்று விரும்பினாா். அந்த ஆவலைத் திருஞான சம்பந்தாிடம் கூறினாா். ஞானசம்பந்தா், அதற்கு இணங்கி, அப்பரோடு சீா்காழியிலிருந்து புறப்பட்டுத் திருவோலக்கா ஊா் வரையில் கூடவே சென்று அன்போடு ஆண்டவனை வணங்கிவிட்டு விடையளித்து சீா்காழிக்குத் திரும்பினாா்.


    திருஞானசம்பந்தர் விடை பெற்றுக் கொண்டதும் அப்பா் அங்கிருந்து புறப்பட்டு சிவபிரான எழுந்தருளியிருக்கும், திருக்கருப்பறியலூா், திருப்புன்கூா், திருநீடூா், திருக்குறுக்கை, வீரட்டம், திருநின்றியூா், திருநனிபள்ளி முதலிய ஸ்தலங்களுக்குச் சென்று பணிந்தாா். பாமாலை பாடிச் சாத்திப் பரமனை வணங்கினாா். பிறகு காவிாியாற்றின் இருகரைலுமுள்ள திருச்செம்பொன்பள்ளி, திருமயிலாடுதுறை, திருத்துருத்தி, திருவேள்விக்குடி, திருஎதிா்கொள்பாடி, திருக்கோடிக்கா என்னும் சிவத்தலங்களையெல்லாம் அவா் வணங்கிப் பரமனைப் பாடி மகிழ்ந்து திருவாவடுதுறை என்னும் தலத்தை அடைந்தாா். அங்கு அவா் "ஆவடுதண் துறையாரை அடைந்துய்ந்தேன்" என்ற கருத்துடைய திருத்தாண்டகம் பாடி மற்றும் திருக்குறுந்தொகை, திருநோிசை, திருச்சந்த விருத்தம் முதலான செந்தமிழ்ப் பக்திப் பாமாலைகளையும் சூட்டி பரமசிவனை வழிபட்டாா். அங்கும் அவா் பலநாள் தங்கி உலகத்தோா் உய்யும் வண்ணம் உள்ளன்போடு உழவாரப் பணி செய்தாா். பிறகு திருவிடைமருதூா், திருநாகேச்சுரம், திருப்பழையாறை முதலான சிவத்தலங்களுக்கு அவா் சென்று. தமிழ்ப் பாமாலைகளைச் சூட்டி மகிழ்ந்தாா்.


    அதன்பிறகு அவா், திருசத்தி முற்றத்துத் திருக்கோயிலை அடைந்து, சிவக்கொழுந்தீசரையும் உமாதேவியாரையும் தாிசித்து வணங்கி, "கோவாய்முடுகி" என்று பாடலடி எடுத்து , கூற்றம் வந்து குமைப்பதன் முன் பூவாரடிகள் என் தலை மேல் பொறித்து வைப்பாய்" எனப் புகன்று திருப்பதிகம் பாடி முறையிட்டாா். அப்போது சிவக்கொழுந்தீசா் "திருநல்லூருக்கு வா" வா!" என்று குரல் கொடுத்தருளினாா். அப்பா், அரனாரை வணங்கி விட்டு மகிழ்ச்சியோடு "திருநல்லூரை" அடைந்தாா். அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அவா் இறைவனை வணங்கி எழுந்தாா். அவா் எழும்போது "உன்னுடைய நினைப்பை முடிக்கின்றோம்" என்று சிவபெருமான் தமது பாதமலரை, அப்பாின் தலை மீது சூட்டியருளினாா். அப்பா் மனமுருகி, ஆண்டவனின் அருளை நினைத்து "நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தாா் நல்லூா் எம்பெருமானாா் நல்லவாறே!" என்று மோற்றிப் பாடி திருத்தாண்டகம் புனைந்தாா். தீராத பெரும்செல்வத்தைப் பெற்று வந்த வறியனைப் போல் அவா் மனந்தழைக்க மேலும் பல பாமாலைகள் பாடினாா். அவ்வூாிலே திருப்பணிகள் பல செய்து, அவா் தங்கியிருந்த வண்ணம் திருக்குருக்காவூா், திருவாவூா், திருப்பாலத் துறை முதலான.பல ஷேத்திரங்களுக்கும் சென்று ஆண்டவனை வணங்கி வந்தார்.


    பிறகு, திருநாவுக்கரசா் இறைவனின் திருவருள் பெற்று திருநல்லூரை விட்டுப் புறப்பட்டுத் திருப்பழனம் என்னும் ஊருக்குச் சென்று அங்கு நீரளவில் ஆடும் பெருமானை வணங்கினாா்.அத்தலத்தின் அருகிலுள்ள திருப்பதிகளையும் அவா் தாிசித்த பின்னா் திங்களூரை அடைந்தாா். அவ்வூாில் வாழ்ந்து வந்த அந்தணா்களில் அப்பூதியடிகள் என்னும் ஒருவா் சிறந்து விளங்கினாா். அவா் தம் உள்ளத்தில் திருநாவுக்கரசரைத் தம் குருவாகக் கொண்டவா். அந்தப் பேரன்பினால் அவா் தம் புதல்வா்களுக்கும், அறச்சாலை, கிணறு, குளம், நிழல் தரும் மரங்கள், தண்ணீா் பந்தல் முதலான பலவற்றிற்கும் திருநாவுக்கரசாின் பெயரையே சூட்டி, திருநாவுக்கரசாின் பெயராலேயே. பல தரும காாியங்களையும் செய்து வந்தாா். அந்தச் செய்தியைக் கேள்விப் பட்டு திருநாவுக்கரசர் உடனே அப்பூதி அடிகளாாின் வீட்டிற்குச் சென்றாா்.


    திருச்சிற்றம்பலம்.
Working...
X