வேதம் ஓதுவதின் அவசியம் பற்றி!
(பெரியவா சொன்னது)
கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
.
"எனக்கென்னவோ ஆசாரியாள் 'தினமும் வேதம் ஓது'
என்று சொன்னதைவிட ,ஔவையார் 'ஓதாமல்
ஒரு நாளும் இருக்க வேண்டாம்' என்று எதிர்மறையில்
சொன்னது ரொம்பப் பிடிச்சிருக்கு.எந்த ஒரு விஷயத்தையும் நெகட்டிவாகச் சொன்னால் அதிகமாக நம்மைக் கவரும். மனத்திலும் நன்றாக நிற்கும்' என்று சொல்லியிருக்கிறார்.
எவ்வளவுக்கவ்வளவு நம்மை வேத சப்தங்கள் சூழ்கிறதோ அவ்வளக்கவ்வளவு நமது சுற்றுச் சூழலிலும் அதன் பிரதிபலிப்பு தெரியும்.கடவுளை எந்த மொழியில்
வேண்டுமானாலும் துதிக்கலாம்.ஒவ்வோர் மொழிக்கும்
எழுத்துக்கும் சப்தங்களுக்கும் தனிச் சிறப்பு உண்டு.
அவற்றைச் சரியாக உச்சரிப்பதால் அதற்கேற்ற
சிறப்பான பலனும் உண்டு.
நமக்கு வேண்டாதவர்கள் வீட்டுக்கு வந்தால் பாராமுகமாக வெறுப்போடு,"வாங்கோ" என்று சொல்வதற்கும்,வேண்டியவர்கள்
வந்தால் வாய் நிறையச் சிரிப்புடன் அதே 'வாங்கோ'என்று சொல்வதற்கும் வேறுபாடில்லையா?
ஒரே சப்தம்தான் என்றாலும்
வெளியிடும் விதத்தில் பொருளே மாறுவது போல்,வேதத்திலும் உச்சரிப்பு மிகவும் முக்கியம்.
'ஸரிகமபதநி'என்று ஏழு ஸ்வரங்களில்
எத்தனை ராகங்களைப் பாடுகிறார்கள்!.ஸ்வரங்களைக்
கையாள்வதில் உள்ள வேறுபாடுகள் சங்கீதத்தில் வருகிறதென்றால் வேதங்களுக்கென்று உள்ள ஸ்வர சப்தங்களும் அப்படிப்பட்டவைதான்!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends