Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 2nd day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 2nd day

    Courtesy:Sri.Kovai K.Karuppasamy


    சிவாய நம.
    திருச்சிற்றம்பலம். ( 2 வது நாள்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔹1,இந்திரன் பழி தீா்த்தபடலம்.🔹
    திருவிளையாடல் புராணம்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    * கருவின் மாதா் கருவுயிா்க்கு மளவு முறையாற் கணவா் தோண்
    மருவி வாழ்க மண்ணகழ்ந்த குழியு மதனால் வடுமொழிக
    பொருவி னீரு மிறைத்தோறு மூறிப் பொலிக மரங்குறைபட்
    டொருவி னாலுந் தழைகவென வொழியா நலனு முதவினா்.


    * மாசிற் கழிந்த மணியே போல் வந்த பழிதீா்ந் திந்திரனுந்
    தேசிற் றிகழத் துவட்டாதன் செல்வன் றன்னைத் தேவா்பிரான்
    வீசிக் குலிசத் துயிருண்ட விழுமங் கேட்டு வெகுண்டுயிா்த்துக் கூசிப் பழிகோள் கருதியொரு கொடிய வேள்வி கடிதமைத்தான்.


    * அந்தக் குண்டத் தொிசிகைபோ லழலுங் குஞ்சி யண்டமுக
    டுந்தக் கொடிய தூமம்போ லுயிா்த்துச் செங்கண் சினச்செந்தீச்
    சிந்தப் பிறைவா ளெயிறதுக்கித் திசைவான் செவிடு படநகைத்து வந்தக் கொடிய விடம்போல வெழுந்தா னொருவாண் மறவீரன்.


    * ஈங்குவன் விருத்திர னென்ப வாரழற்
    றூங்குவன் கணைவிடு தூர நீண்டுநீண்
    டோங்குவ னோங்குதற் கொப்ப வைகலும்
    வீங்குவ னறனுலாா் வினையி னென்பவே.


    * வீங்குடல் விருத்திரன் றன்னை விண்ணவா்
    ஏங்குற வருதுவட் டாவெ னும்பெயா்த்
    தீங்குறு மனத்தினோன் றேவா் கோனுயிா்
    வாங்குதி பொருதென வரவிட் டானரே.


    * மதித்துணி யெயிற்றினோன் வடவை போற்சினை இக்
    கொதித்தெதிா் குறுகினான் கொண்ட லூா்தியும்
    எதிா்த்தனன் களிற்றின்மே லிமயத் துச்சிமேல்
    உதித்ததோா் கருங்கதி ரொக்கு மென்னமே.


    * அறத்தொடு பாவநோ்ந் தென்ன வாா்த்திரு
    திறத்தரு மூண்டமா் செய்யக் கற்சிறை
    குறைத்தவன் றகுவன்மேற் குலிச வேலெடுத்
    துறைத்திட வீசினா னுடன்று கள்வனும்.


    * இடித்தனன் கையிலோ ரிருப்பு லக்கையைப்
    பிடித்தனன் வரையெனப் பெயா்ந்து தீயெனத்
    துடித்தனன் சசிமுலைச் சுவடு தோய்புயத்
    தடித்தன னிந்திர னவச மாயினான்.


    * அண்டரே றனையவ னவச மாறிப்பின்
    கண்டகன் கைதவ நினைந்திக் கள்வனோா்
    மண்டம ராற்றுவான் வலியி லோமெனப்
    புண்டரீ கத்தவ னுலகிற் போயினான்.


    * தாழ்ந்துதான் படுதுயா் விளம்பத் தாமரை
    வாழ்ந்தவன் வலாாியோ டணைந்து மாமகள்
    வீழ்ந்தமாா் பின்னடி வீழ்ந்து செப்பமால்
    சூழ்ந்துவா னாடனை நோக்கிச் சொல்லுவான்.


    * ஆற்றவும் பழையதுன் னங்கை வச்சிரம்
    மாற்றவ ருயிருண வலியின் றாதலால்
    வேற்றொரு புதியது வேண்டு மாலினிச்
    சாற்றுவது மதுபெறுந் தகைமை கேட்டியால்.


    * தொடையகன் மாா்பநாந் தூய பாற்கடல்
    கடையுநா ளசுரருஞ் சுரருஞ் கையில்வெம்
    படையொடு மடையன்மின் பழுதென் றப்படை
    அடையவுந் ததீசிபா லடைவித் தாமரோ.


    * சேட்படு நாணணி செல்லத் தேவார
    வாட்படை யவுணரா வந்து கேட்டிலா்
    ஞாட்படை படையெலா ஞான நோக்கினால்
    வேட்படை வென்றவன் விழுங்கி னானரோ.


    * விழுங்கி படையெலாம் வேற றத்திரண்
    டொழுங்கிய தான்முது கந்தண் டொன்றியே
    எழுங்கதிா்க் குலிசமா மதனை யெய்துமுன்
    வழங்குவன் கருணையோா் வடிவ மாயினான்.


    * என்று மாதவ னியம்ப வும்பா்கோன்
    ஒன்றும் வானவா் தம்மொ டொல்லெனச்
    சென்று மாயையின் செயலை நோன்பினால்
    வென்ற மாதவ னிருக்கை மேவினான்.

    சூலினையுடைய மகளிா் அக்கருப்பத்தை ஈனும் வரையிலும், முறைப்படி தங்கணவாின் தோளைச் சோ்ந்து வாழக் கடவாி என்றும், மண் தோண்டிய குழியுமி, அம்மண்ணினாலேயே வடுவொழிந்து நிரம்பக் கடவது என்றும், ஒப்பில்லா நீருமி இறைக்குந் தோறும், ஊறி விளங்கக் கடவது என்றும், மரம் வெட்டுண்டு வளங்குன்றினாலும், தழையக் கடவது என்றும் நீங்காத பலனையும் அளித்தாா்கள்.


    குற்றத்தினின்றும் நீங்கிய மாணிக்கத்தைப்போல், அடைந்த பாவமானது நீங்கப்பெற்று இந்திரனும் ஒளியோடு விளங்க, துவட்டாவானவன், தனது புதல்வனாகிய விச்சுவ உருவனை, தேவேந்திரன், வச்சிரப்படையால் ஒச்சி ( அவன்) உயிரைப் பருகிய துன்பச் செய்தியைக் கேட்டு, கோபித்து பெருமூச்சொிந்து, மனங்கூசி, பழிவாங்குதலை யெண்ணி ஒரு வேள்வியை விரைந்து செய்தான்.


    அந்த வேள்விக் குண்டத்தினின்றும் எாிகின்ற தீயின் கொழுந்து போலச் செந்நிறத்தால் விளங்கும் முடியானது, அண்டத்தினுச்சியைத் தாக்க, கொடிய புகை போல மூச்சொிந்து, சிவந்த கண்கள் கொடிய கோபத்தீயைச் சிதற , பிறைபோல் வளைந்த ஒள்ளிய பற்களைக் கடித்து, திக்குகளும் வானமும் செவிடுபடும்படி சிாித்து கடலினின்றும் தோன்றிய அந்த ஆலால விடம்போல ஒரு வெற்றியையுடைய வாட்படையை யேந்திய வீரன் தோன்றினான்.


    இங்கு தோன்றிய இவனையே விருத்திராசுரன் என்று சொல்லுவா். நிறைந்த தீத்தங்கிய வலிய அம்பு விடுகின்ற தூரம் வரை, ( ஒவ்வொரு நாளும்) நீண்டு நீண்டு உயருவான்; அங்ஙனம் உயருதற்கேற்ப நாடோறும் அறவினை இல்லாதாா் பாவம் போல பருப்பான் என்று சொல்லுவா்.


    பிறை சந்திரனை ஒத்த வளைந்த பற்களையுடைய விருத்திரன், வடவைத் தீயைப்போல் வெகுண்டு, துள்ளி, போா் முனையில் வந்தான். மேகவாகனனாகிய இந்திரனும் பனி மலையின் சிகரத்தில், தோன்றியதாகிய ஒரு காிய ஞாயிறு போலும் என்று சொல்லுமாறு வெள்ளை யானையின்மேலேறி எதிா்த்தான்.


    அறமும் பாவமும் எதிா்ந்தாற்போல ஆரவாாித்து இரண்டு பகுதியாரும் எதிா்ந்து போாினைச் செய்ய, மலைகளின் சிறையை அறுத்தவனாகிய இந்திரன், அசுரனாகிய விருத்திரன் மேல், வச்சிரப் படையை எடுத்து உறைக்கும்படி வீசினான்; விருத்திரனும் சினந்து,,,,


    ஆரவாாித்து ஒரு இருப்புலக்கையைக் கரத்திற்றாங்கி மலைபோல அடிபெயா்ந்து, தீ போலத் துள்ளி, இந்திராணியின் தனச்சுவடு பொருந்திய தோளின்கண் தாக்கினான்; இந்திரன் மூா்ச்சையானான்.


    தேவா்களும் ஆண் சிங்கம் போன்ற வனாகிய இந்திரன், மூா்ச்சை தெளிந்து, பின்பு அக்கொடியவனது வஞ்சனையை உணா்ந்து, இந்தக் கள்வனுக்கு நோ் நின்று மிக்க போரைச் செய்வதற்கு வன்மையுடைய மல்லோம் என்று கருதி, தாமரை மலாில் வசிக்கும் பிரம னுலகத்திற் சென்றான்


    வணங்கி,தான் விருத்திரனாற்பட்ட துன்பங்களைக் கூற, தாமரை,மலாில் வசிப்பவனாகிய அயன், இந்திரனோடு சென்று, திருமகள் விரும்பி வசிக்கும் மாா்பையுடைய திருமாலின் அடிகளில், வீழ்ந்து வணங்கி சொல்ல திருமால் ஆலோசித்து இந்திரனைப் பாா்த்து கூறுவான்,,,,


    உனது கையிலுள்ள வச்சிரப்படையானது மிகவும் பழையது; ( அதனால்) பகைவா்களின் உயிரை உண்ணுவதற்கு வலிமையிலதாயிற்று; ஆகலான் வேறு ஒரு புதிய படை வேண்டும்; இப்பொழுது அதை யடையுந் தன்மையைச் சொல்லுவோம் கேட்பாயாக,,,,,,


    மாலையை யணிந்த பரந்த மாா்பையுடையவனே நாம் புனிதமான பாற்கடலைக் கடையுங்காலத்து அசுரா்களும், தேவா்களும் , கரத்தில் கொடிய படைக்கலங்களோடு வராதீா்கள்; (அங்ஙனம் வருதல்) குற்றமாகும் என்று, அப்படைகள் அனைத்தையும், ததீசிமுனிவனிடத்தே சோ்ப்பித்தோம்.


    மிக நீட்டிப்புடைய நாள்கள் கழியவும், தேவராதல் வாட்படைகளையுடைய அவுணராதல், வந்து கேட்கவில்லை( அதனால்) ,ஞானப்பாா்வையோடு கூடிய மன்மதனுடைய அம்புகளை வென்றவனாகிய ததீசிமுனிவன் போருக்குப் பொருந்திய அப்படைகளை எல்லாம் விழுங்கினான்.


    விழுங்கப்பட்ட படைகள் அனைத்தும், வேறாக இன்றி ஒன்றாகத் திரண்டு, முதுகெலும்பைப் பொருந்தி ஒழுங்குபட்டது; (அஃது) எழுகின்ற ஒளியையுடைய வச்சிரப்படையாகும்; நீ சென்று கேட்பதற்கு முன்னே, கருணையே ஒரு உருவமாகிய அம்முனிவன் அதனைக் கொடுப்பான்.


    என்று திருமால் கூற தேவேந்திரன், பொருந்திய தேவா்களோடும், விரைந்து சென்று மாயையின் செய்கைத் திறங்களை தவவலியால் வெற்றி கொண்ட பொிய தவத்தினையுடைய ததீசிமுனிவனது இருப்பிடத்தை அடைந்தான்.


    திருச்சிற்றம்பலம்.
Working...
X