Announcement

Collapse
No announcement yet.

யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #31
    Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

    ஓம் ஸ்வதா என்றூ சொல்லி பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து பூமியில் எள்ளூம் ஜலமும் விடவும். அஸ்து ஸ்வதா என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.

    தெற்கே ப்ராஹ்மணரை பார்த்து. ஸ்தாதுஷகும் ஸதஹ-பிதரஹ-வயோதாஹா-க்ருச்சேச்சிதஹ—சக்திவந்தஹ-கபீராஹா-சித்ரஸேநாஹா
    இஷுபலாஹா –அம்ருதாஹா-ஸதோவீராஹா—உரவஹ-ப்ராதஸாஹா-ப்ராஹ்நாஸஹா-பிதரஹ-ஸோம்யாஸஹ-சிவேநஹ-த்யாவாப்ருத்வீ

    அநேஹஸா-பூஷாநஹ-பாது-துரிதாத்-ருதாவ்ருதஹ—ரக்ஷி-மாஹிர்னஹ-அதசாகும்ஸஹ-ஈசத- ஸூபர்நம்வஸ்தே-ப்ர்ருகோ அஸ்யாஹா –தந்தோ –கோபிஹி-ஸன்னத்யா பததி-ப்ரஸூதா யத்ரா நரஹ-ஸஞ்விச—த்ரவந்தி-தத்ர- அஸ்மப்ய-இஷவஹ-சர்மயகும்ஸன். என்றூ கூறவும்.

    உபவீதியாகி ஜலத்தை கையில் விட்டுக்கொண்டு ஓம் அக்ஷய்யம் என்றூ சொல்லி பூமியில் விடவும். அவர் அஸ்து அக்ஷய்யம் என்றூ சொல்வார்.-
    பிறகு அஷ்டா வஷ்டெள-அந்யேஷு-திஷ்னயேஷு-உபததாதி-அஷ்டாச பாஹா—பசவஹ-பசூநேவா வருந்தே-ஷன்மார் ஜாலியே -ஷட்வாருதவஹ— ருதவஹ-கலுவை-

    தேவாஹா- பித்ரஹ- ருதூனேவ தேவான்
    -பித்ருன்ப்ரீனதி என்றூ சொல்லவும்.பிறகு ப்ராஹ்மனர்கள் ஆசிர்வாதம்;

    ஆசீர் வாத மந்திரம்:_
    அக்னிராயுஷ்மான் ஸர்வஸ் யாப்த்யை ருத்யாஸ்ம ஹவ்யை நவோ நவோ பவதி ஸூமங்கலி ரியம் ஶ்ரீவர்சஸ்வ சதமானம் பவதி.----------------------------------------------இந்த மந்திரங்கள் பூராவும் சொல்லி ப்ராஹ்மனர்கள் ஆசீர்வாதம் செய்வார்கள்.அக்ஷதைகலை கர்த்தாவின் மேல் விரித்த உத்தரீயத்தில் போடுவார்கள்> பத்னி இடது பக்கத்தில் இருக்க வேண்டும்
    ஆசீர்வாதம் முடிந்ததும் பத்னி பர்த்தாவை .ப்ரதக்ஷிணமாக வலது பக்கம் வந்ததும் இருவரும் நமஸ்காரம் செய்யவும்.

    தேவதாப்யஹ பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ நமஸ் ஸதஸே நமஸ் ஸதஸஸ் பதயே நமஸ் ஸகீனாம் ப்ரோகானாம் சக்ஷுஸே நமோ திவே நமஹ் ப்ருத்வ்யை ஹரிஹி ஓம்.

    பிறகு ஆசாரியர் ஸ்வஸ்தி மந்த் ரார்த் தாஹா-------------ஸமஸ்த மங்களானி பவந்து என்றூ பூராவும் சொல்ல ப்ராஹ்மணர்கள் ததாஸ்து என்றூ சொல்வார்கள்>
    சிலர் ஆசாரத்தில் உபவீதி --------------------------------–கர்த்தா சொல்ல வேண்டும்.

    அநேந மயா க்ருதேன பிதரம் ( மாதரம் ) உத்தீச்ய ப்ரத்யாப்தீக சிராத்தேன வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாத் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா
    ( மாத்ரு பிதாமஹி,ப்ர்பிதாமஹாஹா ) ஸர்வே ( ஸர்வாஹா ) நித்யத்ருப் தாஹா பூயாஸூருதி பவந்தஹ மஹாந்தஹ அனுகிரஹனந்து. ப்ராஹ்மனர்கள் ததாஸ்து என்றூ ப்ரதி வசனம் சொல்வார்கள்>

    பிறகு ப்ராஹ்மணர்களுக்கு சந்தனம், குங்குமம் புஷ்பம் கொடுத்து உபசரித்து தர்பையை பித்ரு ஸ்தான ப்ராஹ்மணர் கையில் கொடுத்து கர்த்தா தர்பையின் நுனியையும் ப்ராஹ்மணர் அடியையும் பிடித்துக்கொண்டு

    உத்திஷ்டத வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா அஸ்மத் பித்ரு பிதாமஹ
    ப்ரபிதாமஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) என்றூ சொல்லி எழுப்பவும்.

    விசுவேதேவரை விசுவே தேவஸ்ஸஹ என்றூ தர்பைகலை அவர் கையில் கொடுத்து எழுப்பவும்.

    விஷ்ணூவை விஷ்ணூநா ச ஸஹ என்றூ சொல்லி தர்பையை கொடுத்து எழுப்பவும்.
    பிறகு கர்த்தா ப்ராஹ்மணர்கலை

    வாஜே வாஜே அவத வாஜினஹ நோதனேஷு விப்ராஹா அம்ருதாஹா
    ருதக்ஞாஹா – அஸ்யமத்வஹ-பிபத-மாதயத்வம்-த்ருப்தாயாத பார்திபி தேவயானைஹி- பத்ர சாகாதி தானேன க்லேசிதாஹா யூயமித்ருசாஹா

    தத் க்லேச ஜாதம் சிதேஷு விஸ்ம்ருத்யக்ஷந்து மர்ஹத அத்ய மே ஸபலம் ஜன்ம பவத் பாதாப் ச வந்தனாத். அத்ய மே வம்ச ஜாச்ஸர்வே வாதா வோனுக்கிரஹ ஹிவம்.
    மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் த்விஜோத்தமஹ சிராத்தம் ஸம்பூர்ணதாம் யாது ப்ரஸாதாத் பவதாம் மம.

    என்றூ சொன்னவுடன் தம்பி முதல் எல்லா கர்த்தாகளூம் ப்ரதக்ஷணம் செய்து ( அந்த காலத்தில் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் இருந்ததால் )

    உத்தரிய வஸ்த்திரத்தை மடித்து , வடக்கு நுனியாக பூமியில் போட்டு , ப்ராஹ்மணர்கள் பாதம் வஸ்த்திரத்தில் பட்ட பிறகு , அதை வலது கையினால் எடுத்துக்கொண்டு சிரஸீல் உதரிக்கொண்டு ப்ராஹ்மணர்கலை ப்ரதக்ஷிணமாக வந்து வழி அநுப்ப வேண்டும்.

    ஹவி சோபனம் என்றூ சொல்ல வேண்டும். அவர்கள் சோபனம் ஹவிஹி என்றூ சொல்வார்கள்.
    சிராத்த ஸங்கல்பத்தின் போது பிண்ட தானம் ச கரிஷ்யே என்றூ சேர்த்து சொல்லி விட்டால் இப்போது ஸங்கல்பம் தேவை இல்லை

    பிறகு பிண்ட தானம்;---

    காலுக்கடியில் தர்பங்கள் போட்டு கொள்ளவும். கையில் பவித்ரத்துடன் தர்பங்கள் சேர்த்து வைத்து கொள்ளவும்.
    சுக்லாம்பரதரம்=====--=++++++++உபசாந்தயே ப்ராணாயாமம் சங்கல்பம்

    மமோபாத்த -------------ப்ரீத்யர்த்தம்=++++++++++அத்ய பூர்வோக்த -------------------புண்ய திதெள ப்ராசீனாவீதி ---------------------கோத்ரஸ்ய ----------------------சர்மணஹ---(
    (-----------------கோத்ராயாஹா-----------------நாம்ன்யாஹா ) அஸ்மத் மம பிதுஹு ( மாதுஹு) ப்ரத்யாப்தீக சிராத்தே பித்ராதீனாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் பிண்ட தானம் கரிஷ்யே.
    உபவீதி---அபௌபஸ்பர்ஸீயா===-கையை துடைத்து கொள்ளவும். ப்ராசீனாவீதியாகி

    அக்னிக்கு மேற்கே தெற்கு நுனியாக கிழக்கிலும் மேற்கிலும் இரு கோடுகள் போல் தர்பைகலை போட்டு, தெற்கு நோக்கி
    இடது கால் முட்டி இட்டு உட்கார்ந்து கிழக்கே போட்டிருக்கும் தர்பைகளீன்
    மேல்
    மார்ஜயந்தாம் மம பிதரஹ என்றூ சொல்லி தர்பைகளீன் அடிபாகத்தில் பித்ரு தீர்த்தமாக எள்ளூம் ஜலமும் விடவும்.

    மார்ஜயந்தாம் மம பிதாமஹாஹா என்றூ சொல்லி பித்ரு தீர்த்தமாக எள்ளூம் ஜலமும் தர்பையின் நடு பாகத்தில் விடவும்.
    மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹாஹா என்றூ சொல்லி தர்பைகளீன் நுனி பாகத்தில் எள்ளூம் ஜலமும் பித்ரு தீர்த்தமாக விடவும்.

    பிறகு மேற்கே போட்டிருக்கும் தர்பைகளீன் மேல் மார்ஜயந்தாம் மம மாதரஹ என்றூ சொல்லி பித்ரு தீர்த்தமாக தர்பையின் அடி பாகத்தில் எள்ளூம் ஜலமும் விடவும்.
    மார்ஜயந்தாம் மம பிதாமஹ்யாஹா என்றூ சொல்லி தர்பைகளீன் மத்தியில் பித்ரு தீர்த்தமாக எள்ளூம் ஜலமும் விடவும்.

    மார்ஜயந்தாம் மம ப்ரபிதா மஹ்யாஹா என்றூ சொல்லி தர்பையின் நுனியில் பித்ரு தீர்த்தமாக எள்ளூம் ஜலமும் விடவும்.

    இதே வரிசையில் ஒவ்வொரு பிண்டமாக மந்திரம் சொல்லி வைக்க வேண்டும் .பிண்டம் உருளக்கூடாது உடையவும் கூடாது.
    ஏதத்தே பிதரஹ ----------------------சர்மன்னு .தகப்பனாரின் பெயரை சொல்லி வைக்கவும்.-----------------கோத்ர வசு ரூப யே சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில்

    வைக்கவும்.
    ஏதத்தே பிதாமஹ ----------------------சர்மன்னு .தாத்தாவின் பெயரை சொல்லி வைக்கவும்.-----------------கோத்ர ருத்ர ரூப யே சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில்

    வைக்கவும்
    ஏதத்தே ப்ரபிதாமஹ ----------------------சர்மன்னு .தகப்பனாரின் தாத்தா பெயரை சொல்லி வைக்கவும்.-----------------கோத்ர ஆதித்ய ரூப யே சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில் வைக்கவும்

    மேற்கு வரிசையில்
    ஏதத்தே மாதஹ ----------------------தே அம்மா பெயரை சொல்லி வைக்கவும்.--------------கோத்ரே வசு ரூபே யா சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில் வைக்கவும்

    ஏதத்தே பிதாமஹி ----------------------தே அப்பாவின் அம்மா பெயரை சொல்லி வைக்கவும்.--------------கோத்ரே ருத்ர ரூபே யா சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில் வைக்கவும்

    ஏதத்தே ப்ரபிதாமஹி ----------------------தே அப்பாவின் பாட்டி பெயரை சொல்லி வைக்கவும்.--------------கோத்ரே ஆதித்ய ரூபே யா சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில்

    வைக்கவும்
    பிறகு கிழக்கு வரிசையில் தகப்பனார் முதல் ஆரம்பித்து வரிசை க்ரமமாக

    பிண்டங்களீன் மேல் கீழ் கண்ட மந்திரங்கலை சொல்லி எள்ளூம் ஜலமும் விடவும்.
    ( இந்த பேர்களூள் எவர்கள் ஜீவித்து இருக்கிறார்களோ , அவர்களூக்கு பதிலாக அவருக்கு அடுத்து முன்னிருக்கும் பித்ருக்கள் பெயரை சொல்லிக்கொள்ள வேண்டும்.)
    )
    கிழக்கு வரிசையில்

    மார்ஜயந்தாம் மம பிதரஹ என்றூ பிதா பிண்டத்தின்

    Comment


    • #32
      Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

      மார்ஜயந்தாம் மம பிதரஹ என்றூ பிதா பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்.

      மார்ஜயந்தாம் மம பிதாமஹாஹா என்றூ பிதாமஹர் பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்.

      மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹாஹா என்றூ ப்ரபிதாமஹர் பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்.

      மேற்கு வரிசையில்
      மார்ஜயந்தாம் மம மாதரஹ என்றூ மாதா பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்
      மார்ஜயந்தாம் மம பிதாமஹி என்றூ பிதாமஹி பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்

      மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹி என்றூ ப்ரபிதாமஹி பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்
      பிறகு உபஸ்தானம் ( எழுந்து நின்றூ கொண்டு )

      கிழக்கு வரிசையில் இருக்கும் பிண்டங்கலை பார்த்து
      யே சவோத்ர யே சாருமாஸூ ஆசகும்ஸந்தே என்றூ சொல்லி இரு கைகலையும் நீட்டி கூப்பி காட்டவும்.

      மேற்கு வரிசையில் இருக்கும் பிண்டங்கலை பார்த்து
      யாஸ்ச வோத்ர யாஸ்சாஸ்மாஸூ ஆசகும்ஸந்தே என்றூ சொல்லி இரு கைகலையும் நீட்டி கூப்பி காட்டவும்.

      கிழக்கு வரிசையை பார்த்து தேஜவஹந்தாம் என்றூ சொல்லி கைகலை நீட்டி காட்டவும்.
      மேற்கு வரிசையை பார்த்து தாஸ்ச வஹந்தாம் என்றூ சொல்லி கைகலை நீட்டி காட்டவும்.

      கிழக்கு வரிசையை பார்த்து த்ருப்யந்து பவந்தஹ என்றூ சொல்லி கைகலை நீட்டி காட்டவும்.
      மேற்கு வரிசையை பார்த்து த்ருப்யந்து பவந்தஹ என்றூ சொல்லி கைகலை நீட்டி காட்டவும்.

      த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்றூ சொல்லவும்

      பிறகு பித்ருக்களுக்கு அர்க்கியம் கொடுத்த அர்க்கிய பாத்திரத்தை இடது கையில் வைத்துகொண்டு விசுவேதேவர் அர்க்கிய பாத்திரத்தை வலது கையில் எடுத்து கொண்டு அதிலுள்ள ஜலத்தை பித்ரு பாத்திரத்திலுள்ள ஜலத்துடன் கவிழ்த்து சேர்த்து வைத்து கொண்டு அந்த பாத்திரத்தை மூடிக்கொண்டு பிண்டங்களூக்கு தெற்கிலிருந்து ஆரம்பித்து அப்பிரதக்ஷிணமாக மூன்றூ தடவைகீழ் கண்ட மந்திரங்கலை சொல்லிக்கொண்டே பரிசேஷனம் செய்யவும்.


      புத்ரான் பெளத்ரான் அபிதர்ப யந்திஹி இமாஹா ஸ்வதாம் பித்ருப்யஹ அம்ருத துஹானாஹா ஆபோ தேவாஹா உபயான் தபயந்து த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்றூ சொல்லவும். அர்க்கியம் இல்லாத வழக்க முள்ளவர்களூம் இம்மாதிரி செய்யலாம்.

      இந்த இரண்டு பாத்திரங்கலையும் பிண்டங்களூக்கு தெற்கே கவிழ்த்து வைக்கவும்,த்ருப்யத என்றூ ஒன்பது தடவை சொல்லவும். கவிழ்த்த இரு பாத்திரங்கலையும் ஜலத்தினால் ப்ரோக்ஷித்து நிமிர்த்தி கிழக்கே வைக்கவும்
      ஒரு தட்டில் வடை, அதிரஸம் அல்லது அப்பம் வைத்து நைவேத்யம் செய்யவும்.

      ஓம் பூர்புவஸ்ஸூவஹ பரிசேஷனம். தத்ஸ விதுர் வரேன்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத் ப்ரோக்ஷணம்
      தேவ சவிதஹ ப்ரஸூவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷயஞ்சாமி பரிசேஷனம்

      அம்ருதோப ஸ்தரனமஸீ. ப்ரானாயஸ்வாஹா, அபானாயஸ்வாஹா, உதனாய ஸ்வஹா ஸமாநாய ஸ்வாஹா ப்ரஹ்மனே ஸ்வாஹா என்றூ பூராவும் சொல்லி வலது கையை பிண்டங்களீன் பக்கம் காண்பிக்கவும்
      பிண்ட பித்ரு தேவதா ப்யோ நமஹ மாஷாபூபம், குலாபூபம் நிவேதயாமி.

      என்றூ நிவேதனம் செய்யவும். அம்ருதா பிதா நமஸீ என்றூ சொல்லி ஜலம் விடவும். நிவேதனாந்த்ரம் ஆசமனியம் ஸமர்பயாமி. ஜலம் விடவும்
      தாம்பூலம் ஸமர்பயாமி. மந்த்ர புஷ்பம், ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி/
      என்றூ சொல்லி எள்லை மறீத்தாற்போல் போடவும். ஸமஸ் தோப சாரான் ஸமர்பயாமி என்றூ எள்ளு மறீத்தார் போல் போடவும்,
      உபவீதி
      அவரவர் ஆசாரப்படி கையில் சாப்பிடுவதற்கோ அல்லது முகர்வதற்கோ நிவேதன சேஷத்தை கொஞ்சம் எடுத்துக் கொண்டு ப்ராநேனி விஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி ப்ருஹ்மனிம ஆத்மா அம்ருதத்வாயா. என்றூ சொல்லி

      முகர்ந்து பார்க்கவும். அல்லது சாப்பிடலாம்.
      பவித்ரம் காதில் வைத்துகொண்டு ஆசமனம் செய்யவும்.
      பவித்ரம் அணீந்து ப்ராசீனா வீதியாகி பிண்ட பித்ரு தேவதாப்யோ நமஹ ஸமஸ் தோப சாரான் ஸமர்பயாமி யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.
      என்றூ சொல்லி எள்லை மறீத்தாற்போல் போடவும்.
      பிறகு ஓம் ஓம் என சொல்லிக்கொண்டே வரிசை க்ரமமாக தொட்டுகொண்டு சொல்லவும்.பிண்டங்கலை இரண்டு இரண்டாக பித்தலை தட்டில் எடுத்து வைக்கும்போது , முதலில் மத்திய பிண்டங்கலை; வலது கையில் புருஷ

      பின்டமும் இடது கையில் ஸ்த்ரீ பிண்டமும் ஒரே சமயத்தில் எடுத்து வைக்கவும்.
      பிறகு தர்பைக்கு நுனியில் இருக்கும் பிண்டங்கலை ஒரே சமயத்தில் எடுத்து வைக்கவும். பிறகு தர்பைக்கு அடியில் இருக்கும் பிண்டங்கலை ஒரே சமயத்தில் எடுத்து
      வைக்கவும்.

      பிறகு கீழே பரப்பிய தர்பைகலை வலது கையால் எடுத்து ஒன்றூ சேர்த்து நுனிகள் கீழே இருக்கும்படி மறீத்தால் போல் பிடித்துக்கொண்டு யேஷா ந மாதா ந பிதா ந பந்துஹு நான்ய கோத்ரினஹ

      தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டைஹி குசோதக ஹைஹி என்றூ சொல்லி தர்பைகளீன் மேல் எள்ளூம் ஜலமும் விட்டு நுனி வழியாக கீழே விழச் செய்யவும்.
      தர்பைகலை கீழே போட்டுவிட்டு பவித்ரத்தை காதில் வைத்து கொண்டு உபவீதியாகி ஆசமனம் செய்யவும்.

      பவித்ரத்தை அவிழ்த்துபோட்டு விட்டு மறூபடியும் ஆசமனம் செய்யவும்.

      பிறகு ஹோமம் செய்த சாம்பலில் கொஞ்சம் வடகிழக்கு மூலையில் இருந்து எடுத்து கொண்டு ப்ருஹத் ஸாம க்ஷத்ர ப்ருத் விருந்த வ்ருஷ்ணீயம்
      த்ருஷ்டு போதஹ சுபிதம் உக்ரவீரம் இந்த்ரஸ் தோமேன பஞ்சதஸேன மத்யமிவம் வாதேன ஸஹரேன ரக்ஷ என்றூ சொல்லி நெற்றீயில் இட்டுக்கொள்ளவும். மனைவிக்கும் இடவும்.


      . .

      Comment


      • #33
        Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

        பிறகு காயேன வாசா மனசே இந்திரியைவா புத்தியார்த்தன வாவ ப்ருஹ்ருதே சுபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணா யேதி ஸமர்பயாமி மம பிதரம் ( மாதரம் ) முத்திஸ்ய மயா அனுஷ்டிதம்

        ப்ரத்யாப்தீக ச்ராத்தாக்யம் கர்ம ஸர்வம் ஸூகுணமஸ்து ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பணம். என்றூ சொல்லி வலது கையில் தீர்த்தம் விட்டு நுனி விரல்களால் பூமியில் விடவும் ஆசமனம் செய்யவும்..
        பிறகு ஹிரண்ய கர்ப ப்ரயஸ்சமே மயா அனுஷ்டித பித்ரு ( மாத்ரு ) சிராத்த சாத்குன்யார்த்தம் இதம் ஹிரண்யம் ஸதாம்பூலம் ஸதக்ஷிணாகம் ஆசார்யாய
        ஸம்ப்ரததே ந மம. அபிசிரவண ப்ராஹ்மணர்களூக்கும் தக்ஷினை கொடுக்கவும்.

        பிறகு ப்ருஹ்ம யக்ஞம் செய்யவும் .ப்ருஹ்ம யக்ஞம் செய்த பிறகு ஸ்நானம் செய்த போது கட்டிகொண்டு அவிழ்த்து வைத்திருக்கும் இடுப்பு வஸ்திரத்தை உச்சிஷ்ட

        பாகினோ தாஸா யேம்ருதாஸ்தே தத்ர மந்ரகாஹா
        த்ருப்யந்து தருதாம் யாதா மம ஸம்ருத் யோனநரா. என்றூ சொல்லி வஸ்திரத்தை நான்காக மடித்து கொண்டு கிழக்கு முகமாக நுனியின் வழியாக பூமியில் ஜலம் விழும்படி பிழிய வேண்டும்.
        பரேஹணீ தர்பணம் மறூநாள் விடியற்காலை செய்ய வேண்டியது.
        சிராதத்திற்கு மறூநாள் விடியற்காலையில் சுமார் நான்கு மணீக்கு எழுந்து முதல் நாள் சிராதத்தின் போது கட்டியிருந்த வேஷ்டியுடனே ஸ்நானம் செய்து பிறகு மடி

        வேஷ்டியை உடுத்திக்கொண்டு,ஒரு வர்க்கத்திற்கு மாத்திரம் தர்பணம் செய்ய வேண்டும்.
        அல்லது விடிந்த பிறகு ஸ்நானம் ஸந்தியாவந்தனம் செய்து பரேஹனி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

        கிழக்கு முகமாக இரண்டு ஆசமனம் செய்யவும். வடக்கு நுனியாக மூண்றூ தர்பங்களூக்கு குரையாமல் தர்பேஷ்வா ஸீனஹ எனறூ சொல்லி காலின் கீழ் ஆஸனமாக போட்டுக்கொள்ளவும்.

        மூன்றூ தர்பங்களூக்கு குரையாமல் வலது கை மோதிர விரலில் 3 தர்பை பவித்ரதுடன் .வடக்கு நுனியாக இடுக்கி கொள்ளவும். தர்பாந்தாரய மானஹ என்றூ சொல்லவும்.
        சுக்லாம் பரதரம் விஷ்ணூம் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.

        ப்ராணாயாமம் ஓம் பூஹு ஓம் புவஹ ஓம் ஸூவஹ ஓகும் ஸத்யம் ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோனஹ ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதி

        ரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஓம் பூர்புவஸ் ஸூவரோம்.
        மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்

        அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தான் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவா வ்யபோஹதி ந

        சம்சயஹ ஶ்ரீ ராமா, ராம, ராமா திதிர் விஷ்ணூஹு ததா வாரஹ நக்ஷத்ரம் விஷ்ணூரேவச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணூ மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்தா அத்ய ஶ்ரீ பகவதஹ மஹா புருஷஸ்ய

        விஷ்ணோராக்ஞ யயா ப்ரவர்த்தமானய த்விதீய பரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்த்தரே அஷ்டாவிம்சதீ தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்தீவீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோஹோ
        தக்ஷிணே பார்ஸ்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே-------------------நாம ஸம்வத்ஸரே
        ---------------அயனே---------------------ருதெள-----------------------மாசே---------------பக்ஷே----------
        புண்ய திதெள -----------------வாஸாரயுக்தாயாம்-----------------நக்ஷத்ர யுக்தாயாம்

        -----------யோக யுக்தாயாம்----------------------கரணயுக்தாயாம்---ஏவங்குண ஸகல விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம்-------திதெள------ப்ராசீனாவீதி----------------------கோத்ரானாம்----------------------சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூ பானாம்
        அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் அக்ஷய த்ருப்தி யர்த்தம் மம பிதுஹு ( மாதுஹு ) பூர்வேத்யுஹு க்ருத ப்ரத்யாப்தீக சிராத்தாங்கம் தில தர்பணம் அத்ய

        கரிஷ்யே. கையில் இடுக்கி இருக்கும் தர்பைகலை தென்மேற்கு மூலையில் போடவும். உபவீதி அபௌபஸ் பர்சியா.
        ப்ராசீனாவீதி மூன்றூ தர்பங்களால் ஸ்தல சுத்தி.

        அபேதவீதா விசஸர்ப்ப தாதஹ யேத்ரஸ்த புராணாஹா யேச நூதனாஹா அதாதிதம் யமஹ அவஸானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னியம் பிதரஹ லோகமஸ்மை என்றூ சொல்லி பூமியை சுத்தம் செய்வது போல் செய்யவும் உத்தத் ய பூமியில் தர்பைகலின் அடியால் குத்தவும். தர்பைகலை தென்மேற்கு மூலையில் போடவும்.

        அபஹதாஹா அஸூராஹா ரக்ஷாகும்சீ பிசாசாஸ்ச யே க்ஷயந்தி ப்ரிதிவி மனு அன்யத்ர இதோ கச்சந்து யத்ரைஷாம் கதம் மனஹ. உதீரதாம் அவர உத்பராஸஹ

        உன்மத்யமாஹா பிதர ஸோம்யாஸஹ அஸூம்ய இயுஹு
        அவ்ருகா ருதக்ஞா தேனோஹ வந்து பிதரோஹ வேஷு.என்றூ சொல்லி எள்லை கீழே கை மரித்தாற் போல் இரைக்கவும்..
        உபவீதி
        அபவித்ர பவித்ரோ வா ஸர்வா வஸ்தாங் கதோபிவா யஸ் ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸூசிஹி பூர்புவஸூவஹ பூர்புவஸ்ஸூவஹ பூர்புவஸ்ஸூவஹ என்றூ ஜலத்தால் பூமியில் தெளீக்கவும்.

        ப்ராசீனாவீதி

        ஒரு பெரிய தாம்பாளத்தில் ( செம்பு, வெள்ளீ அல்லது பித்தலை)) கிழக்கு நுனியாக மூன்றூக்கு மேல் தர்பங்கள் பரப்பி இவைகளீன் மேல் குறூக்காக தெற்கு நுனியாக ஏழு தர்பங்களூக்கு குரையாமல் கூர்ச்சங்களாகவோ தர்பங்களாகவோ போடவும்.
        ஆவாஹனம்;

        கையில் ஆள் காட்டி விரலை தவிர மற்ற விரல்களால் சிறீது எல்லை எடுத்துக்கொண்டு
        ஆயாத பிதரஹ ஸோம்யாஹா கம்பீரைஹி பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததஹ ரயீம் ச தீர்காயுத்வம் ச சதசாரதம் ச

        அஸ்மின் கூர்ச்சே ---------------------கோத்ராந்----------------------சர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் பிது பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி.
        என்றூ சொல்லி கையை மறீத்தாற் போல் எள்லை போடவும்.

        ஆஸனம் போடுதல் மிருதுவான மூன்றூ நுனி தர்பங்கலை எடுத்துக்கொண்டு ஸக்ருதா சின்னம் பர்ஹிஹி ஊர்னம் ம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ் வத்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்து மே பிதரஹ ஸோம்யாஹா பிதாமஹாஹா ப்ரபிதாமஹாஸ்ச அனுகை ஸ்ஸஹா.

        என்றூ சொல்லி ஆவாஹனம் செய்த இடத்தில் தெற்கு நுனியாக அஸ்மின் கூர்ச்சே ஆவாஹிதானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதம் ஆஸனம். என்றூ சொல்லி தர்பைகலை போடவும்
        ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம் என்றூ சொல்லி கை மறீத்தார் போல் எள்லை தர்பைகலீன் மேல் போடவும்.

        ( சிலர் ஆசாரத்தில் ஊர்ஜம் வஹந்திஹி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்றுத ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் என்றூ சொல்லி பித்ரு தீர்த்தம் போல் எள்ளூம் ஜலமும் விடுவதாக உள்ளது )

        தர்ப்பணம்- இடது காலை முட்டி இட்டு தெற்கு முகமாக திரும்பி ஒவ்வொரு தடவையும் வலது கட்டை விரலில் எள்ளை ஒட்டிக்கொண்டு கீழ் கண்ட மந்திரங்கள் சொல்லி கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் நடு

        வழியாக ஜலம் விட்டு தர்பணம் செய்யவும் .மேற்படி விரல்கள் தெற்கு பக்கமாகத்தான் இருக்க வேண்டும் என்றூ சாஸ்திரம் சொல்கிறது,
        கிழக்கு பக்கமாக உட்கார்ந்து தர்பணம் செய்தால் தெற்கே பித்ரு தீர்த்தம் மாதிரி விடவும்.

        உதீரதாம் அவர உத்பராஸஹ உன்மத்ய மாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அஸூம்ய யூஹு அவ்ருக்கா ருதஞ்ஞா தேவோவஸ்து பிதரோஹ வேஷு----------------கோத்ரான்---------------சர்மணஹ வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

        ( சிலர் ஆசாரத்தில் இதை மூன்றூ தடவை செய்வதாக உள்ளது. )>
        அங்கீரஸோ ந பிதரஹ நவக்வாஹா அதர்வானஹ ப்ருகவஹ ஸோம்யா ஸஹ- தேஷாம் வயம் ஸூமதெள யஞ்ஞிஞானாம் அபிபத்ரே செள மனஸே ஸ்யாமஹ ----------------கோத்ரான்---------------சர்மனஹ வசுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை தர்பணம் செய்யவும்

        ஆயந்துனஹ பிதரஹ மனோஜவஸ அக்னிஸ் த்வஷ்டாஹா பதிபிஹி தேவயானைஹி அஸ்மின் யஞ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ரூ வதந்துமே அவந்தஸ் மான் -----------------கோத்ரான்--------------------சர்மணஹ வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.. 3 தர்பணம்

        ஊர்ஜம் வஹந்தி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் _----------------கோத்ராந்---------------சர்மணஹ ருத்ர ரூபான் அஸ்மத்

        பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. என்றூ முன் போல் 3 தடவை தர்பணம் செய்யவும்.
        பித்ருப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ அக்ஷீன் பிதரலாபி மதந்த பிதரஹ

        அதித்ருபந்த பிதரஹ அபெளம்ருஜந்த பிதரஹ பிதரஸ்ஸூவந்தம் -----------------கோத்ராந்---------------சர்மனஹ ருத்ர ரூபான் அஸ்மத் பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
        3 தடவை தர்ப்பணம் செய்யவும்
        யே சேஹ பிதரஹ யே சனேஹ யாகும்ஸ்ச வித்ம யாகும் உச ச ப்ரவித்யா

        அக்னே தான் வேத்த யதீதே ஜாதவேதஹ ததா ப்ருகும்ஸ்வ தயா மதந்து------------------------கோத்ராந்------------------சர்மனஹ ருத்ர ரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும்

        மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி சிந்தவஹ மாத்வீ ந ஸந்தோஷதீஹி------------------------------கோத்ராந்--------------------சர்மனஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை தர்ப்பனம் செய்யவும்.

        மது நக்தம் உதோஷஸீ மதுமத் பார்திவகும் ரஜஹ மது தொள அஸ்து ந பிதரஹ ---------------------கோத்ராந்--------------------சர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும்.

        மதுமான் வனஸ்பதிஹி மதுமாகும் அஸ்து ஸூர்யஹ மாத்வீஹி காவோ பவந்துனஹ -----------------கோத்ராந்---------------------சர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத்

        ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்.
        மாதாவிற்கு ( தாயார் உயிரோடு இருந்தால் அப்பவின் அம்மாவிற்கு ( பிதாமஹி ) என்றூ சொல்லிக்கொள்ளவும்.)

        -----------------------கோத்ரா-----------------------நாம்நீ வஸூரூபாஹா மாத்ரு ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும் ( தாயார் இருந்தால் பிதாமஹி என்றூ சொல்லிக்கொள்ளாவும் )

        Comment


        • #34
          Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

          -------------கோத்ரா------------நாம்னீ—ருத்ர ரூபான் பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும் ( தாயார் இருந்தால் பிதுஹு பிதாமஹி என்ரூ சொல்லவும்.

          --------------கோத்ரா------நாம்நீ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ்தர்பயாமி- 3 தடவை செய்யவும்.( தாயார் இருந்தால் பிதுஹு ப்ரபிதாமஹி என்றூ சொல்லவும் )
          சிலர் ஆச்சாரத்தில் ஒரு தடவை தான் தர்பணம் செய்கிறார்கள்.
          -

          . ஞாத அஞ்ஞாத பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி ஒரு தடவை அல்லது 3 தடவை குல ஆச்சார வழக்கப்படி செய்யவும்.

          ஊர்ஜம் வஹந்திஹி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்றுதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யதஹ. என்றூ சொல்லவும் 3 அல்லது ஒரு தடவை உங்கள் வீட்டு வழக்கப்படி செய்யவும்.

          உபவீதியாகி தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச நமஹ ஸ்வதாயை ஸ்வாஹையை நித்யமேவ நமோ நமஹ என்றூ சொல்லிகொண்டே 3 தடவை ப்ரதக்ஷிணம் செய்யவும்.

          பிறகு கை கூப்பி நமோவஹ் பிதரஹ ரஸாய- நமோ வஹ பிதரஹ ஸ்வதாயை நமோ வஹ பிதரஹ மன்யவே நமோ வஹ பிதரஹ கோராய-பிதரஹ நமோ வஹ ய ஏதஸ்மின் லோகேஸ்த-யுஷ்மாகும் ஸ்தேன யே

          அஸ்மின் லோகே மாந்தேனு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயந்தேஷாம் வசிஷ்ட ஹ பூயாஸ்த யே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வசிஷ்டஹ பூயாஸம். என்றூ சொல்லி நமஸ்காரம் செய்யவும். அபிவாதயே கிடையாது.

          ஈசானஹ பித்ரு ரூபேன மஹா தேவோ மஹேஸ் வரஹ ப்ரீயந்தாம் பகவான் ஈசஹ பரமாத்மா சதாசிவோம். என்றூ சொல்லி ப்ரார்த்தனை.
          ப்ராசீனாவீதி

          வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நமஹ. என்றூ சொல்லி எள்ளை கை மறீத்தாற்போல் தர்பத்தின் மேல் போடவும்.
          உத்ஸர்ஜனம்_:- பரேத பித்ரஹ ஸோம்யா கம்பீரைஹி பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததஹ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்றூ சொல்லி கை மறீத்தார் போல் எள்லை போடவும்

          சிலர் ஆசாரத்தில் உத்திஷ்டதஹ பிதரஹ ப்ரேத சூராஹா யமஸ்ய பந்தாமந் வேதா புராணம் தத்தாஸ் தஸ்மாசு த்ரவினம் யச்சபத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸூ என்றூம் உத்ஸர்ஜனம் செய்கிறார்கள்

          பிறகு எல்லா தர்பங்கலையும் ஒரே நுனியாக சேர்த்து வலது கையில் நுனி கீழாக இருக்கும்படி வைத்துக் கொண்டு மீதி இருக்கும் எள்லையும் எடுத்துக்கொண்டு ஏஷாம் ந மாதா ந பிதா ந பந்துஹு நான்ய

          கோத்ரினஹ தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்றுஷ்டைஹி குசோதகைஹி த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்றூ சொல்லிக்கொண்டு தர்பையின் நுனி வழியாக தர்பணம் செய்த இடத்தில் நிரைய ஜலம் விட

          வேண்டியது. தர்பண தாம்பாளத்தில் இருக்கும் தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்ட வேண்டியது அல்லது வெய்யலிலோ காற்றீலோ சீக்கிரம் உலரும் இடத்தில் கொட்ட வேண்டியது. எள்ளூ முலைக்காத இடத்தில்

          போட வேண்டும் .உபவீதியாகி காதில் பவித்ரம் ஆசமனம், பிறகு பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு தினம் போல் ஸ்நானம் முதலியவற்ரை அநுஷ்டானம் செய்யலாம்.

          ,



          .
          .

          Comment

          Working...
          X