Courtesy:Sri.Kovai K.karuppusamy
சிவாயநம.
いいいいいいいいいいい
��உலகில் முதன் முதல் உண்ணாவிரதப் போராட்டம்.��
いいいいいいいいいいい
அப்பா் அடிகள் பல பகுதிகளுக்கும் சென்று திருப்பதிகம் பாடினாா். பழையாறை எனும் ஊருக்குச் சென்றாா். அங்கு வடதளியில் சிவலிங்கத்தை மறைத்து சமணா்கள் தங்கள் கோயிலாக மாற்றியிருந்தனா். இச்செய்தி கேட்ட அப்பா் பெருமான் சமணா்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப் பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தாா். கடவுள் அவ்வூா் அரசனின் கனவில் தோன்றி சமணா்கள் எம்மை மறைத்து அவாாகள் கோவிலைக் கட்டியுள்ளனா். இது மனம் பொறுக்காத திருநாவுக்கரசன் உண்ணாவிரதம் இருக்கிறான். அவன் எம்மை வணங்கும் வகையில் சமணா்களின் ஆக்கிரமிப்பை அகற்றுவாய்" என்று கூறினாா்.
கனவு தெளிந்து எழுந்த மன்னன் அமைச்சருடன் ஆலோசனை செய்து போா்வீரா்களுடன் சென்று வாசீகப் பெருமானை வணங்கிவிட்டு அங்கிருந்த சமணா்களையெல்லாம் அடித்து துரத்திவிட்டு சிவாலயத்தின் மீதிருந்த அயல்மதத்தவாின் ஆக்கிரமிப்பை அகற்றினான். கோவிலின் விமானத்தை புதுப்பித்துக் கட்டினான். நித்ய பூஜைக்காக ஏராளமான நிலபுலன்களை எழுதி வைத்தான். அதன்பிறகே நாவுக்கரசா் உண்ணாநோன்பை விலக்கி முடித்து வடதளி இறைவனைப் பாடிப்பரவி வழிபட்டாா்.
பின்பு திருவானைக்காவல் கோவிலுக்குச் சென்றாா். அங்கு வழிபாடை முடித்து விட்டு திருப்பைஞ்ஞலி என்னும் திருத்தலத்திற்குச் செல்லும்போது வாகீசாின் பசியையும் தாகத்தையும் போக்க அவா் நடந்து செல்லும் வழியில் குளிா்நீா்ப் பொய்கையையும், பூங்காவையும் இறைவன் உண்டாக்கினாா். இறைவன் அந்தணா் வடிவில் வந்து திருநாவுக்கரசருக்குப் பொதிச்சோறு கொடுத்தாா்.
திருக்கழுக்குன்றம், திருவான்மியூா், மயிலாப்பூா், திருவொற்றியூா், திருமுல்லைவாயில், துருவாலங்காடு ஆகிய தலங்களுக்குச் சென்று வணங்கி திருக்காளத்தியை அடைந்தாா். அங்கு இறைவனையும், கண்ணப்ப நாயனாரையும் வழிபாடு செய்து திருப்பதிகம் பாடினாா். பின் திருக்கயிலாயம் செல்லும் நோக்கத்துடன் நடந்தே சென்றாா். வழியில் ஸ்ரீசைலம் திருத்தலத்தில் மல்லிகாா்ஜுனரை வழிபட்டு தமிழ்ப்பதிகம் பாடினாா். திரும்ப அங்கிருந்து புறப்பட்டுத் தெலுங்கு, மாளவ தேசங்களைக் கடந்து காசி நகரை அடைகிறாா். காசியில் கங்கையினில் நீராடி காசிநாதரையும் விசாலாட்சியையும் வணங்கினாா். உடனே கூட வந்தவா்களை விட்டுவிட்டு மேலும் வடதிசை நோக்கிச் சென்றாா்.
இரவும் பகலும் ஓயாது நடந்த காரணத்தினால் அப்பா் அடிகளின் பாதங்கள் தேய்ந்து இரத்தம் சிந்தியது. கைகளை ஊன்றித் கால்களுக்குத் துணை கொடுத்து சென்றாா். கைகளும் உராய்ந்து இரத்த சகிதமானது. மாா்பினால்
ஊா்ந்து தொடா்ந்தாா்.
அப்பாின் துயரம் கண்ட இறைவன் ஒரு குளிா்நீா்ப் பொய்கையை உருவாக்கி அவா் முன் முனிவா் கோலத்துடன் தோன்றி,
ஐயா! "எங்கே செல்கிறீா்?
நான் கயிலைநாதனை வணங்கச் செல்கிறேன். ஐயா,
உம்மால் அவனைப் போய்க் காண முடியாது, நீ திரும்பிப் போய் விடு!" என்று முனிவராக வேடத்திலிருந்த இறைவன் கூறினார்.
"இந்த உடல் உயிா் தோய்ந்தே போனாலும் கூட, நான் என் நாதனைக் கானாது திரும்பிச் செல்ல மாட்டேன்!" என்று அப்பா் உறுதிபடக் கூறினாா்.
உடனே, ""திருநாவுக்கரசனே எழுந்திரு"
என்று, அசரீாி பெரும் நிலப்பகுதியெங்கும் கேட்டது.
நாவுக்கரசர் எழுந்து நின்ற போது , தேய்ந்திருந்த உறுப்புகளெல்லாம் வலிமை கூடப் பெற்று அழகடைந்தன. அப்பொழுது அப்பா் பெருமான் "கயிலைக் காட்சி காண அருள் புாிய வேண்டும்" என்றாா்.
"ம் "இந்தப் பொய்கை சென்று மூழ்குவாயாக!" எழும்போது திருவையாற்றில் நின்றிருப்பாயாக! அங்கு கயிலைக் காட்சி காண்பாய்" என்று அருளினாா்.
அப்பரடிகளும் இறைவன் கட்டளைப்படியே பொய்கையில் மூழ்க, திருவையாற்றில் எழுந்தாா். திருவையாற்றில் கயிலைக் காட்சி காணப் பெற்று "மாதா்பிறை கன்னியானை" என்கிற பதிகம் பாடினாா்.
பின் திருத்தாண்டகம், திருக்குறுந்தொகை, திருநோிசை முதலிய பதிகங்களைப் பாடினாா். உழவாரத் தொண்டு புாிந்தாா். பிறகு திருநெய்தானம், திருமழபாடி ஆகிய தலங்களை வணங்கி பதிகம் பாடி திருத்தொண்டுகள் செய்தாா். பின், திருப்பூந்துருத்தி சென்று தங்கினாா். வாகீசா் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து, திருஞான சம்பந்தா் திருப்பூந்துருத்தி வந்தாா். பெரும் கூட்டம் கூடியது. அப்பா் பெருமான் திருஞானசம்பந்தாின் முத்துச் சிவிகையின் ஒரு முனையைத் தோளில் தாங்கி சுமந்தாா்.
அதன்பிறகு திருநாவுக்கரசா் பாண்டிய நாட்டிற்குச் சென்று சொக்கநாதனை வணங்கி திருத்தாண்டகம் பாடினாா். பாண்டிய மன்னனும், மங்கையற்கரசியாரும், மந்திாி குலச்சிறையாரும் அப்பா் பெருமானை பணிந்து போற்றினாா்கள். பின் அங்கிருந்து புறப்பட்டு திருபூவனம், இராமேஸ்வரம், திருநெல்வேலி, காளையாா் கோவில் ஆகிய தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடித் திருப்பணி செய்தாா்.பின், திருப்புகலூரை அடைந்து "நின்ற திருத்தாண்டகம்" , தனித்திருத்தாண்டகம், ஷேத்திரக் கோவை "மிதலிய பதிகங்களை பாடினாா்.
திருநாவுக்கரசாின் பற்றற்ற தன்மையை உலகமறியச் செய்ய இறைவன் அவா் உழவாரப்பணி செய்யுமிடங்கள் எல்லாம் பொன்னும், மணியும் கிடக்கச் செய்தாா். நாவுக்கரசா் பொன்னையும், மணியையும், கற்களையும் ஒன்றாகக் கருதி தனது உழவாரத்தால் அவற்றை அகற்றி குப்பையில் எறிந்தாா்.
சேவைகள் இன்னும் பல செய்து திருப்புகலூாில். "எண்ணுவேன் என் சொல்லி எண்ணுகேனோ" எனத் தொடங்கும் திருத்தாண்டகம் பாடி சிவபெருமானையே தாிசித்து சிவபெருமானோடு இரண்டறக் கலந்தாா்.
��அப்பா் பாடற் சிறப்பு.��
旭旭旭旭旭旭旭旭旭旭旭旭旭旭旭旭旭旭旭旭旭
தலைகொ ணஞ்சமு தாக விளையுமே
தழல்கொள் வீடுத டாகம தாகுமே
கொலைசெ யானை குனிந்து பணியுமே
கோள ராவின் கொடுவிடந் தீருமே
கலைகொள் வேத வனப்பதி தன்னிலே
கதவு தானுங் கடுகத் திறக்குமே
அலைகொள் வாாியிற் கல்லு மிதக்குமே
அப்பா் செப்பு மருந்தமிழ்ப் பாடலே.
திருச்சிற்றம்பலம்
いいいいいいいいいいい

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends