Mattapalli Narasimhar
ஆந்திராவில் உள்ள மட்டப்பள்ளியில் லட்சுமி நரசிம்மர் கோயில் இருக்கிறது. இந்த கோயில் இருக்கும் வனப்பகுதியில் காட்டுவாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மட்டப்பள்ளி பகவான் மீது மிகுந்த பக்தி உண்டு. ஆனால், அவர் கோயிலுக்கு சென்றதில்லை. கோயில் இருக்கும் இடத்திலிருந்து நீண்ட துõரத்தில் இவரது வீடு இருந்தது. ஒருநாள் பகவானைப் பார்க்கும் ஆவலில் அரிசி, பருப்பு, காய், கனிகள் ஆகியவற்றுடன் நடக்க ஆரம்பித்து விட்டார். இரண்டு நாட்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து கோயில் வாசலுக்கு வந்தபோது நடை அடைக்கப்பட்டு இருந்தது. கஷ்டப்பட்டு நடந்து வந்தும், அன்றே சுவாமியை காணமுடியவில்லையே என வருத்தப்பட்ட காட்டுவாசி, கோயில் முன்பு உள்ள மண்டபத்தில் படுத்துவிட்டார். காலை நடை திறக்கும் நேரத்தில் எழலாம் என நினைத்து படுத்த அவர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கோயில் பட்டாச்சாரியார் அங்கு வந்தார். காட்டுவாசியை எழுப்பினார். யாரப்பா நீ ? எழுந்திரு. எங்கிருந்து வந்திருக்கிறாய் ? என அன்புடன் கேட்டார். காட்டுவாசியும் தன்னைப் பற்றிய விபரத்தைச் சொல்லவிட்டு நடை சாத்திவிட்டதால், மறுநாள் காலையில் சுவாமியை தரிசிப்பதற்கு காத்திருப்பதாக சொன்னார். பட்டாச்சாரியார் அவனிடம், நீ இங்கே காத்திருக்க வேண்டாம். இப்போதே நடை திறந்து சுவாமியை உனக்கு காட்டுகிறேன். உள்ளே வா, என்றார். காட்டுவாசியும் உள்ளே செல்ல, அவன் கொண்டுவந்த பொருட்களை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து, சடாரி வைத்து தீர்த்தம் கொடுத்தார்.
சுவாமியை தனிமையில் மிக அருமையாக தரிசித்ததில் காட்டுவாசிக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார், தம்பி ! இன்று இரவு நீ கோயிலுக்குள்ளேயே தங்கிவிடு. நான் காலையில் வந்து நடை திறந்த பிறகு போனால் போதும். இரவில் இந்த காட்டில் கள்ளர் பயம் உண்டு. எனவே இங்கேயே தங்கியரு என்றார். காட்டுவாசியும் சம்மதித்தார்.
மறுநாள் பட்டாச்சார்யார் கதவை திறந்தார். அங்கு ஒருவர் அழுக்கடைந்த ஆடையுடன் குளிக்காமல் படுத்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து திட்டினார். கோயிலுக்குள் எப்படி வந்தாய் ? என்று கத்தினார். ஓன்றும் புரியாத காட்டுவாசி, சுவாமி நேற்று நீங்கள்தானே எனக்கு சுவாமியை தரிசனம் செய்வித்து வைத்தீர்கள். நைவேத்தியம் செய்தீர்களே, நினைவில்லையா ? என்றார் அப்பாவியாக.
பட்டாச்சார்யார் அவசர அவசரமாக சன்னதிக்கு சென்றார். சன்னதி பூட்டப்பட்டிருந்தது. உள்ளே காட்டுவாசி சொன்னது போலவே நைவேத்தியம் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு ஆச்சரியம். பகவானே நேரில் வந்து அந்த காட்டுவாசிக்கு அருளியிருக்க வேண்டும் என அவருக்கு புரிந்து விட்டது. ஏனெனில் கோயில் நடை வழக்கம்போல் பூட்டப்பட்டிருந்தது. ஒரு தனி மனிதனால் அதை உடைத்துக்கொண்டு உள்ளே வரமுடியாது. சன்னதிக்குள் நைவேத்யம் செய்யப்பட்டதைத் தவிர மற்றதெல்லாம் முதல்நாள் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. பெருமாளின் கருணையை எண்ணி அவர் ஆனந்தம் அடைந்தார். இத்தனை காலமும் அவருக்கு பூஜை செய்த தனக்கு காட்சி தராமல், எவ்வித ஆச்சாரமும் இல்லாமல், பக்திக்கு முதலிடம் தந்து வந்த அந்த பாமரனுக்கு காட்சி தந்த பெருமாளின் கருணையே வியந்தார். இப்போதும் இந்த நிகழ்ச்சி குறித்து, மட்டப்பள்ளி கோயிலில் சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
[நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான், மட்டப்பள்ளி நரசிம்மர் சங்கு, சக்கரம் ஏந்தி, வளைந்த மீசையுடன் காணப்படுவார்!
திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.
ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.]

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends