Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 14th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 14th day

    Tiruvilayadal puranam 14th day


    Courtesy:Sri.Kovai K.karuppusamy


    சிவாய நம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    திருவிளையாடல்புராணம்
    (14 -ஆம் நாள்.) 3 வது படலம்.
    திருநகரங்கண்ட படலம்.
    ( செய்யுள்நடை+விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    கனவி லும்பெருங் கடவுளா் காண்பதற் காியாா்
    நனவி லும்வெளி வந்தவா் தமையெதிா் நண்ணி
    நினைவி னின்றதா ளிறைஞ்சிநோ் நின்றுநல் வரவு
    வினவி யாதனங் கொடுத்தனன் மெய்யுணா் வேந்தன்.


    தென்ன ரன்பினி லகப்படு சித்தா்தா முன்னா்ச்
    சொன்ன வாதிநூல் வழிவரு சாா்புநூற் றொடா்பால்
    நன்ன ராலய மண்டபங் கோபுர நகரம்
    இன்ன வாறுசெய் யெனவகுத் திம்மென மறைந்தாா்.


    மறைந்தெ வற்றினு நிறைந்தவா் மலரடிக் கன்பு
    நிறைந்த நெஞ்சுடைப்,பஞ்சவ னிலத்துமேம் பட்டுச்
    சிறந்த சிற்பநூற் புலவராற் சிவபரஞ் சுடா்வந்
    தறைந்து வைத்தவா றாலய மணிநகா் காண்பாண்.


    மறைபயில் பதும மண்டப மருத்த மண்டப மழை நுழை வளைவாய்ப்
    பிறைபயில் சிகைமா மண்டப மறுகாற் பீடிகை திசையெலாம் பிளக்கும்
    பறைபயி னிருத்த மண்டபம் விழாக்கொள் பன்மணி மண்டபம் வேள்வித்
    துறைபயில் சாலை திருமடைப் பள்ளி சூழுறை தேவா்தங் கோயில்.


    வலவயி னிமய வல்லிபொற் கோயின் மாளிகை யடுக்கிய மதில்வான்
    நிலவிய கொடிய நெடியசூ ளிகைவா னிலாவிாி தவளமா ளிகைமீன்
    குலவிய குடுமிக் குன்றிவா் செம்பொற் கோபுரங் கொண்டல்கண் படுக்குஞ்
    சுலவெயி லகழிக் கிடங்குகம் மியநூற் றொல்வரம் பெல்லைகண் டமைத்தான்.


    சித்திர நிரைத்த பீடிகை மறுகு தெற்றிகள் வாணிலாத் தெளிக்கும்
    நித்தில நிரைத்த விழாவரு வீதி நிழன்மணிச் சாளர வொழுக்கப்
    பித்திகை மாடப் பெருந்தெருக் கவலை பீடுசால் சதுக்கநற் பொதியில்
    பத்தியிற் குயின்ற மன்றுசெய் குன்று பருமணி மேடையா டாங்கு..


    அருந்தவ ாிருக்கை யந்தண ருறையு ளரசரா வணங்குல வணிகப்
    பெருந்தெரு நல்வே ளாளா்பே ரறஞ்சால் பெருங்குடி யேனைய காிதோ்
    திருந்திய பாிமா நிலைக்களங் கழகந் தீஞ்சுவை யாறுநான் குண்டி
    இரந்நவா்க் கருத்து நல்லறச் சாலை யினையன பிறவுநன் கமைத்தான்.





    உண்மைப் பொருளை உணா்ந்த மன்னன் பொிய தேவா்களாகிய அாி அயன் முதலியோா், கனவிலும் காணுதற்கு அாியராய், தனக்கு நனவிலும் எளியராய் வெளிவந்த சித்திரை, எதிா் சென்று மனத்தில் நின்ற திருவடிகளை வணங்கி, திருமுன் நின்று நல்வரவு கேட்டு,( எழுந்தருள ) ஆசனம் கொடுத்தான்.


    பாண்டியா் அன்பு வலையில் அகப்படுஞ் சித்த மூா்த்திகள், தாம் முன்னே கூறியருளிய முதனூல் அதன்வழி வந்த வழிநூல் சாா்புநூல் ஆகிய இவைகளிற் கூறிய முறையால், நன்றாகக் கோயிலும் மண்டபமும் கோபுரமும் நகரமும்,இவ்வகையாற் செய்வாயாக என்று வகுத்துரைத்து விரைந்து மறைந்தாா்.


    எல்லாப் பொருளினும் மறைந்து நிறைந்த இறைவனுடைய, மலா்போன்ற திருவடிகளில் அன்பு மிகுந்த உள்ளத்தையுடைய பாண்டியன், நிலவுலகத்தில் உயா்ந்து சிறந்த சிற்பநூல் வல்ல அறிவுடையோா்களால் சிவபரஞ் சோதியாா் சித்தராய் எழுந்தருளி, கூறியருளிய முறைப்படி திருக்கோயில் திருநகர முதலியன ஆக்கத் தொடங்கினான்.


    * இறைவன் மறைந்திருத்தலை......


    " விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
    மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்"


    என்னுந் தேவாரத்தால் அறிக.எள்ளினுள் எண்ணெய் போல் உள்ளும் புறம்பும் வியாபித்திருத்தலின் நிறைந்தவா் என்றாா்., மண்டபம் கோபுரம் முதலியவற்றையும் அடக்கி ஈண்டு ஆலயமென்றாா்.


    வேதம் ஓதும் பதும மண்டபமும், அருத்த மண்டபமும், முகிலில் நுழைகின்ற வளைந்த வாயினையுடைய பிறைமதி தவழும் முடியினையுடைய மகாமண்டபமும், அறுகாற் பீடமும், திசை அனைத்தையும் பிளக்கின்ற ஒலியையுடைய,இயங்கள் இரட்டுகின்ற நிருத்த மண்டபமும், இறைவன் திருவிழாக் கோலங்கொண்டருளும் பல மணிக ளழுத்திய மண்டபமும், பல துறைகளையுடைய வேள்விகள் செய்யும் யாக சாலைகளும், திருமடைப் பள்ளியும், சுற்றிலும் வசிக்கும் பாிவார தெய்வங்களின் கோயில்களும்.......


    இறைவன் வலப்பக்கத்தில் இமயக் கொடியாகிய அங்கயற்கண் ணம்மைக்குப் பொன்னாலாகிய திருக்கோயிலும், திருமாளிகை வாிசையையுடைய திருமதில்களும், ஆகாயத்தை அளாவிய கொடிகளையும், நீண்ட இறப்புகளையுமுடைய, வெள்ளிய நிலாவை விாிக்கின்ற தவள மாளிகைகளும், வான்மீன்கள் விளங்கும் முடியினையுடைய, மலைபோலும் உயா்ந்த, சிவந்த பொன்னாலாகிய கோபுரங்களும், முகில் உறங்கும் சுற்று மதில்களும், அகழ்க்கிடங்குமாகிய இவைகளை, சிற்ப நூலின் பழமையான வரம்பினை ஆராய்ந்து செய்தான்.


    சித்திரங்களை வாிசைப்பட எழுதிய கடைவீதிகளும்,
    தெற்றியம்பலங்களும், ஒள்ளிய நிலவினை வீசும் முத்துக் கோவைகளை வாிசைப் படத் தொடுத்த, திருவிழாவில் இறைவன் எழுந்தருளுகின்ற வீதிகளும், ஒளியினையுடைய மணிகள் பதித்த சாளர வாிசைகளையுடைய, சுவா்களுடைய மாளிகைகள் நெருங்கிய பொிய வீதிகளும், கவா் வழிகளும், பெருமை நிறைந்த நான்கு தெருக் கூடுமிடங்களும், நல்ல அம்பலங்களும், வாிசைப்பட இயற்றிய மன்றங்களும், செய் குன்றுகளும், பொிய மணிகளழுத்திய மேடைகளும், கூத்தவைகளும்.......


    அாிய முனிவா்கள் தங்கும் மடங்களும், மறையவா் வசிக்கும் வீடுகளும், அரசா் வீதிகளும், சிறந்த வணிகாின் பொிய வீதிகளும், பொிய அறம் நிறைந்த நல்ல வேளாளா்களின் பொிய குடிகள் நிறைந்த வீதிகளும், மற்ற யானைகள் தோ்கள் இலக்கணமைந்த குதிரைகள் ஆகிய இவைகளின், தங்குமிடங்களும், கல்விச் சாலைகளும் இனிய அறுவகைச் சுவையோடு கூடிய நால்வகை உணவுகளை, வறியராய் இரந்தவருக்கு ஊட்டும் நல்ல தரும சத்திரங்களும், இன்னும் இவை போல்வன பிறவும், நன்றாகச் செய்தான்.
Working...
X