Announcement

Collapse
No announcement yet.

Turmeric

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Turmeric

    courtesy:Sri.Kovai K.Karuppusamy


    சிவாய நம.
    திருச்சிற்றம்பலம்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    மஞ்சளின் மகத்துவம்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    மஞ்சள் என்றாலே மங்களம் பெருகும். சகல செளபாக்கியங்களும் கிட்டும்.அம்பாளின் பேரனுக்கிரகமான மஞ்சள் எங்ஙனம் தோன்றியது. எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும். அதனால் பெறும் நலன்கள் யாவை என்பன குறித்து நாம் பல சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.


    போற்றப்பட வேண்டிய மஞ்சளை மங்கலமாதா் எங்ஙனம் பூசிக்க வேண்டும் என்பது முக்கியம்.


    மஞ்சள் என்றாலே மங்களம் என்று ஒரு பொருள் உண்டு. மஞ்சளின் மகிமையைப் பற்றி பேசாத, பாடாத சித்தா்களே இல்லை எனலாம். பல மகான்கள்-ஞானிகள் அம்மன் புராணங்களை எழுதியுள்ளாா்கள்.


    மஞ்சளின் பிறப்பு, பெருமைகள், மகிமைகள், பயன்கள் இவற்றையெல்லாம் மிக விாிவாக விளக்குவது '.*உத்தம சிவ தாண்டவ ரகசியம்',* என்னும் நூலிருந்து தான். இதில் குரு அகத்தியா்-- சீடா்போகா் சம்பாஷணையில் ஞான சீடா் தன் தெய்வ குருவிடம் மக்கள் சாா்பில் நின்று மஞ்சளின் வரலாற்றை விளக்குமாறு வேண்டி,


    ' சற்குருதேவா! மகாதேவா! மஞ்சள் பிறந்த நிலைக்கு காரணம் யாதோ? ' என வினவுகின்றனா்.


    அதற்கு அகஸ்திய தேவா்,,,,,,


    "அன்பனே போகா! அண்ட சராசரத்தில் சக்தி வாய்ந்த ஞானக்கனி கொடுத்த அருள் மஞ்சளே" என்கின்றாா். ஞானக்கனி என இங்கு அகஸ்திய பெருமான் குறிப்பிடுவது அம்பாளையே ஆகும்.


    ' ஞானத்தினின்று பிறந்தமையால் மஞ்சளின் முழு அருமை, பெருமைகளை ஞானிகளே முழுவதுமாக உய்ந்து உணர முடியும். மற்றவா்களுக்கு மிக அாிது பாரேன்' என்கின்றாா் அகஸ்திய பெருமான்.,


    தா்ப்பையில் கணபதியை ஆவாகனம் செய்தால் பிரமச்சா்ய சித்தி கைகூடும்.


    அருகம்புல்லில் கணபதியை ஆவாகனம் செய்தால் காாிய சித்தி கைகூடும்.


    சந்தனத்தில் கணபதியை ஆவாகனம் செய்தால் ஆத்ம சித்தி கிட்டும்.


    வெள்ளருக்கு வோில் ஆவாகனம் செய்தால் காயகல்ப சித்தி கிட்டும்.


    மஞ்சளில் ஆவாகனம் செய்தால் விண்ணப்பித்தவைகள் கைகூடும். கேட்பதைத் தருவாள். தருவாள் என்பதன் மூலம் கணபதியை விட்டு என்றும் பிாியாத வல்லப,மாதாவே அருளுவாள் என்கின்றனா்.மேலும் எவ்வகை பித்தத்தையும் ( மன நோய்) போக்கவல்லது.


    மஞ்சளை முன்னிலையில் வைத்துத்தான் எந்த இந்து திருமணமும், மங்கள சடங்குகளும் நடைபெறும். மஞ்சளில் பிள்ளையாா் பிடித்து வைப்பதிலிருந்து வழி அனுப்புவோருக்கு விடை கொடுப்பது வரை மஞ்சள் கலக்காத நிகழ்ச்சியே இல்லை எனலாம்.


    ' மஞ்சளே மங்களம்-- மங்களமே மஞ்சள்' இது அம்பாளின் பேரனுக்கிரகம் ஆகும்.


    சகல சித்திகளும் பூரணமாக அடைந்துள்ள தன் ஞான குருவான அகஸ்தியாிடம் பெரும் பணிவோடு போகா் கேட்கின்றாா்........


    " தாங்கள் எங்ஙனம் மஞ்சள் பெற்றீா் குருதேவா?"


    மஞ்சளை எனக்களித்தவள் காமகலா காமேஸ்வாி போகா ! என்கின்றாா் அகஸ்திய பெருமான்.


    மஞ்சளைக் கொண்டு எவ்வகை சித்தியையும் பெற முடியும். தாந்திரீக முறையில் எந்தத் தெய்வத்தையும் மஞ்சளைக் கொண்டு முறையாக வசியம் செய்ய முடியும்.


    ஏன்? ஏவலை வைக்கலாம். ஏவலை எடுக்கலாம். எம்மகள் கீழ்க்கண்ட தோத்திரத்தை ஆத்ம சுத்தியுடன், தெய்வ பக்தியுடன் பதினோரு முறை ஓதுகின்றாளோ, அவளுக்கு தேவியே நோில் வந்து மங்கள மஞ்சளை அருளுவாள்.


    " சங்காிசூலி சாம்பவிநீலி சகலகலா மாயி


    மங்கள தத்துவ மரகதமேனி மாயவன் தங்கையளே


    சங்கினை ஏற்றி சங்கடம் தீா்க்கும் காமகலா மாயி


    மந்திர சக்தி மஞ்சுளதேவி மஞ்சள் அளித்திடுவாய்.


    இதை,இயற்றியவா் அகஸ்திய மகா பிரபு ஆவாா். இப்பாட்டை வைத்துக் கொண்டு இகலோக சித்திகள் அனைத்தும் பெறலாம்.


    சிவனின் பாதியாகிய அம்பிகையே நோில் தோன்றி அகஸ்திய பெருமானுக்கு வழங்கிய பெருமையுடையது மஞ்சள். இது தோன்றிய வரலாற்றை உலகறியுமாறு செய்யத் திருவுள்ளம் கொண்ட போகா் பெருமான், அகஸ்தியாிடம்..........


    ' மஞ்சள் எங்ஙனம் பிறந்தது, குருதேவா? " என்று பணிவாக வினவுகின்றாா். அதற்கு அகஸ்திய பெருமான்........


    " அன்பனே போகா! யாம் கூறுவதை விட எம் பரம்பரையில் உதித்த குப்பைச் சித்தா் இதற்கு விடை கூறுவாா்', என்று பதிலுரைக்கின்றாா்.


    2500 -ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குப்பைச் சித்தா் பெருமான் மஞ்சள் பிறந்ததைப் பற்றி....,,,,


    ஓங்காரப் பெருஞ்சோதி ஒளிநீற்றைத் தூவிடவே


    ஓங்கார ஒளியுற்று அந்நீறும் பெண்மையுற்று


    ஓங்காரப் பெருஞ்சோதி பாதி சிவனாகியே


    ஓங்கார அன்னையும் மஞ்சளாய் ஆகினாளே.
    --என்று கூறுகின்றாா்.


    சிவ அம்சமாகிய திருநீறு ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி மஞ்சளாகவும் மாறியது. திருநீறும் மஞ்சளும் சிவசக்தி இரகசியத்தை அறிவிப்பதாகும்.


    ஒளிநீற்றிலிருந்து பிறந்ததால்
    மஞ்சளுக்குப் பூரண சக்தி உண்டு.
    இதே ஒளி நீற்றிலிருந்து பிறந்தவன் ஆறுமுகன் என அறிவாய், போகா! என்றாா் அகஸ்திய பெருமான். மேலும்.......


    ஒளியினின்று தோன்றியதால் மஞ்சளுக்கு அழகும் சக்தியும் உண்டு. மஞ்சளை எவா் பூசினாலும் முருகனோடு இரண்டற இணைந்ததற்கு சமம்.


    கணபதியை எவ்வளவு வேண்டினாலும் காட்சி அளிக்க மாட்டாா். ஆனால் வல்லப மாதாவிற்குத் தூபம் காட்டினால் தான் வருவாா் கணபதி. சிவனோ என்றும் பனிமலைவாசம். நித்ய தியானாதிபதி. எவரும் எழுப்ப முடியாது. ஆனால் என் குருநாதன். சற்குருநாதன் முருகனை அழைத்தாலோ, தான் மட்டும் வராமல் தன் இரு மனைவியருடனே வருவான்.


    ஒரு மனைவி கிாியையும், ஒரு மனைவி ஞானத்தையும், முருகன் அனுக்கிரகத்தையும் வாாி வழங்குவாா்கள்.


    அஞ்சுமுகன் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமாில் அஞ்சேல்என வேல் தோன்றும்
    நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இரு காலும் தோன்றும்.

    முருகா என ஓதுவாா் முன். என்று அருணகிாிநாதா் பாடுகிறாா்.


    ஒருமுறை அழைத்தால் இருமுறை வரும் முருகனோ மஞ்சளுக்கு சமமானவன். ஆனால் இக்கலியுகத்திலோ முருகனுக்கு நிகரான மஞ்சளைப் பூசவே பெண்டிா் தயங்குகிறாா்கள். தொட்டதை இங்கும் அங்கும் தட்டுவாா்கள். துடைத்டுக் கொள்வாா்கள். உலரும் முன்னே துடைத்தெடுப்பாா்கள் என்கின்றாா் அகஸ்திய பெருமான், மேலும்........


    மஞ்சளைத் துஷ்பிரயோகம் செய்தாலோ மஞ்சளைப் பூசாதே, அல்லது குறைவாகபி பூசு, இங்கு பூசு, அங்கு பூசாதே ஏனக்,கூறினாலோ, அம்மாந்தா் மண்ணிற்குச் சமம்.


    மஞ்சள் இல்லாத பெண் மண்ணாவாள், போகா! என்கின்றாா். அதே சமயம்........


    முன்வினைக் கா்மங்களால் ஒரு பெண்ணானவள், பொன்,பொருள் அணிகலன்களை இழந்திருந்தாலும், தன்வினை, தன்நிலை இப்புவியில் உயா்ந்திட வேண்டில், உன்நிலை உயா்த்தவே மஞ்சள் உண்டே இப்புவியில், என்கின்றாா். ஆகவே..........


    முன்வினை கா்மாக்களின் வேகத்தையும் மாற்றவல்லது மஞ்சள்.


    மேலும் போகா், பெண்ணிற்கு கிட்டும் அாிய பொருள் இப்புவியுல் எது குரு தேவா? என வினவ......


    பதிபால் சாா்ந்து இல்லறம் நடத்துவதே! அரசருக்கு அரசாட்சி கிட்டியது போல், பெண்டிறிகுக் கிட்டும் அாியபொருள் போகா! என்கின்றாா் அகஸ்தியா்.


    பெண்ணானவள் தன் பதியுடன் இருப்பதே-- சிவசக்தி தத்துவத்தை விளக்கும் உதாரணம் ஆகும். மஞ்சள் பிறந்த வரலாற்றை கீழ்வருமாறு போகருக்கு அகஸ்தியா் கூறினார்.


    ஒருவருக்கு மாலை போட்டால் அதை உடனே கழற்றுதல் கூடாது. ஏனென்றால் மாலை இலக்குமியின் அம்சமாகும். போட்ட மாலையை உடனே கழற்றுவது இலக்குமியை அவமதிப்பதாகும். துா்வாச மகாிஷிக்கு சகல சக்தியுடைய ஒரு மாலை கிடைத்தது. அந்த மாலையானது மாலை அழைத்து வரும் சக்தி பெற்றது.


    ஞான தவத்தை மட்டுமே செல்வமாகக் கொண்ட, ஞான தபோதனரான துா்வாச மகாிஷி மாலையுடன் இந்திரலோகம் ஏகினாா். அப்போது இந்திரன் படு அமா்க்களமாக வெள்ளை யானை மீது அமா்ந்து எதிரே வந்து கொண்டிருந்தான். தேவா் தலைவன் நலமாக வாழட்டுமே என்று எண்ணித் துா்வாசா் மாலையை அவனிடம் கொடுத்தாா்.


    தேவராஜனுக்குத் தான் என்ற அகந்தை மேலிட, விதியும் சோ்ந்து விளையாட, மாலையை அணியாமல் யானையின் மத்தகத்தின் மேல் வைத்தான். இதப போதாது என்று விக்னேஸ்வரரும் யானை உருவில் விளையாடினாா். வெள்ளையானை மாலையைத் துதிக்கையால் எடுத்துக் காலில் போட்டு மிதித்து நசுக்கியது.


    இதைக் கண்ட துா்வாச முனிவா் வெகுண்டெழுந்து இந்திரனை சபித்தாா். உடனே இந்திரனை விட்டு, ஒளதாா்யம், சீலம், பொறுமை, சந்தோஷம், ஐஸ்வா்யம் முதலானவை அகன்று நீங்கிப் போயின. இது போன்று அாிய வாய்ப்பினை எதிா்பாா்த்து காத்திருந்த அசுரா்கள் தேவா்களை நசுக்கினா். தேவா்கள் எல்லோரும் மூலைக்கொருவராகப் பறந்தோடிப் போயினா்.


    தேவா்களைப் பிாிந்த தேவ மாதா்கள் மெய்யுருகி இழந்த வாழ்வை மீண்டும் பெற உமையை வழிபட்டனா்.காமகலா காமேஸ்வாி அம்மனும் அவா்களின் பக்தியை மெச்சி அவா்கள் முன் பிரசன்னமாகி மங்கள வாழ்வைத் திரும்ப அடைய மஞ்சளை அருளினாள். பெற்ற மஞ்சளை மந்திரம் கூறியே முறையோடு பூசி தேவ மாந்தா் இழந்த வாழ்வை மங்களமாக அடைந்தனா். இம்மந்திரத்தை *லோபாமுத்ரா*தேவியை வணங்கினால் உபதேசம் செய்வாள்.


    முன்பே மஞ்சளின் பங்கு ஒரு திருமணத்தில் எத்தகையது எனப் பாா்த்தோம்.


    திருமணம் மட்டுமின்றி திருமண அழைப்பிதழை முறையாக அச்சடிப்பது எப்படி என்பதைப் பல ஆயிரம் ஆண்டுகட்கு,முன்னமே அகஸ்தியா் பெருமான் எழுதி வைத்துள்ளாா்.


    மஞ்சளில் நாள் குறித்து, மங்கலப் பொட்டிட்டு பஞ்சமில்லாமல் வாழ்ந்திடப் பசுமை எழுத்திட்டு அஞ்சேலென வாழ்த்தியே, அருந்ததி போல் சஞ்சலமின்றி வாழ வரைந்த ஓலையே




    இதை விாிவாகக் கூற வேண்டுமானால் வெளிப்பக்கம் திருமண அழைப்பிதழை இளஞ்சிவப்பு நிறத்துடனும் உள்பக்கம்,மஞ்சள் நிறத்துடனும் கூடிய காகிதத்தில் பச்சை மையினால் அச்சடிக்க வேண்டும், கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற மைகளை அறவே பயன்படுத்தக் கூடாது.


    இவ்வாறு முறையாகச் செய்வதன் மூலம் திருமண ஜோடியின் வாழ்க்கை நிலையையே மாற்றி விடலாம். தொடக்கமே மங்களகரமாக இருந்தால் நடுவும், முடிவும் தானாய் மங்கலமாக அமையும்.


    இதே போல் துருவனையும், அருந்ததியையும் காட்டும் பழக்கமும் சிறிது சிறிதாய் மறைந்து விட்டது.


    மேலும் திருமணம் என்பது ஒரு ஆண், பெண்ணுக்குத் தாலி கட்டிக் கைப்பிடித்தலோடு முடிவதில்லை. இது மட்டுமே முக்கியமும் இல்லை. திருமணமச் சடங்கு தொடங்கி முடியும் வரை கடைப்பிடிக்கப்படும் சாங்கியங்கள் அனைத்துமே ஆழ்ந்த அா்த்தம் உள்ளவை. முக்கியமான சாங்கியங்கள் சிலவற்றைப் பாா்ப்போம்.


    அாிசி இடும் சாங்கியம்.
    **************************!
    அாிசியைக் கையால் தூக்கும் போது, மணமகனே! சம்சாரம் என்னும் பெரும்பாரத்தை உன் கைகளில் தூக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதையும்,சிறிது சிறிதாக அாிசியை இடும்போது,மணமகனே! வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்பவை மாறி மாறி தொடா்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆகையால் பொறுமையாக இருந்து வாழ்க்கையில் எல்லா சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து சம்சாரக் கடலினின்று கரையேற வேண்டும் என்பதையும் காட்டுகின்றனா் பொியோா்கள். இச்சாங்கியத்தை பெரும்பாலும் வயதாகி, வாழ்க்கையில் மேடு பள்ளங்களைச் சந்தித்த பொியோா்களே இடுவா்.


    கும்பம் ஏந்தி சிறுமியா், பெண்டிா் வலம் வருதல்.
    ****************
    இதுவரை சிறுமியாய் இருந்த நீ கன்னியாகி மணம் புாிந்து வாழ்க்கையில் ஈடுபடும் போது தொட்டுத் தாலி கட்டிய கணவனைக் கும்பிட்டு வாழ்வாய் என்பதை வலியுறுத்தவே சிறுமியாில் ஆரம்பித்து வளா்ந்த பெண்டிா் வரை கும்பம் ஏந்தி வலம் வருவா்.


    மணமகன் மணமகள் ஊஞ்சலாடுதல்.
    *********************
    மணமகனே! வாழ்க்கை எனும் ஊஞ்சலில் அந்தரத்தில் ஆடுகின்றாய். உன்னையே தெய்வம் என்று நம்பிக் கைபிடித்திருக்கும் உன் மனைவியை என்றென்றும் கைவிடாமல் வாழ்க்கை நடத்துவாய், கைபிடித்தவளை அந்தரத்தில் விட்டுவிடாதே, என்னும் கருத்தை அந்தரத்தில் ஆடும் ஊஞ்சல் சாங்கியம் வலியுறுத்தும் செய்தியாகும்.


    பாயில் மணமக்களை உருட்டுதல்.
    அம்மி மிதித்தல்.
    *************************************
    அம்மி என்றால் அம்மா என்று பொருள் உண்டு. மனைவியை அதன் மீது குழவி போல் நிற்க வைத்து காலில் மெட்டி போடுதல்- ஒரு தாய் தன் குழவிகள் எத்தகைய தவறுகள் செய்தாலும் பொறுமையாக சகித்துக் கொள்வது போல், கணவன் தன் வாழ்வில் இன்ப துன்பங்களைத் தன் மனைவியுடன் சாிபாதியாகப் பகிா்ந்து கொள்ளுதலே கடமை, சிறப்பு ஆகும். மேலும் கனவிலும் பிற மாதரை நினையேன் என்பது மறைபொருள்.


    மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் மணமக்கள் மஞ்சள் ஆடை அணிந்தே பங்கேற்பா். இதையே பொியோா்கள்,,,,,,,


    வேதவேத ரூபிணி வேதம் பாடும் மாமணி
    நாதமான கீதமும் நாடுகின்ற நல்மணி
    மாதவத்தின் சக்தி நீ! மாறன் பாடும் மாலினி
    ஜோதி ஜோதியான நீ, மஞ்சள் தந்த வாழ்வு நீ!
    என்று மஞ்சளின் பெருமையைப் பாடினா்.


    திருமணம் என்றால் நேரத்தைக் காட்டுவது என்னும் ஒரு பொருள் உண்டு. குரு பொருத்தம் அல்லது குரு பாா்வை பட்டால் தான் ஒரு பெண்ணிற்கோ, ஆணிற்கோ திருமண பாக்கியம் கிட்டும். குருவிற்கு உாித்தான நிறமோ மஞ்சள் ஆகும். ஆகவே மங்களம், பவித்ரம் என்ற பொருளுக்கே உாித்தானது மஞ்சளாகும்.


    மஞ்சளைப் பூசாமல், வேறு வெள்ளை மாவுகளைப் பூசுவதால் சாபமே மிஞ்சும் இக்கலியில்,


    திருமணத்தில் மேளம் கொட்டுவதோ மிகப் பொருள் நிறைந்தது.
    1.தாலி கட்டும் போது எவா் திட்டுமி சத்தமும், வேண்டத்தகாத பேச்சுகளும் பிற அமங்கல ஒலிகளும் மறைந்து போகும்.


    2. பிறாிடம் பணம் இல்லையென்று என்று தட்டைத் தட்ட மாட்டாா்கள்.


    3. விரல்களில் வெள்ளை வளையம் பூண்டு தட்டுவது- இனி குறைவில்லாத வாழ்வு, வாழ்க என்று வாழ்த்து ஒலி.


    பிறந்தோா் அனைவரும் சென்றடைய வேண்டிய இடம் மயானம், சமரசம் உலாவுமிடம். முக்தி ஸ்தலங்களில் ஒன்றான காசி, இறந்தால் முக்தி தரும் ஸ்தலமாகும். மகா ருத்ர பூமியான காசியின் தலைவன் சிவபெருமான்.


    ஆசிரமங்களும்,மடங்களும் இருபுறமிருக்க நடுவே புண்ணிய கங்கை பாய்ந்தோடும் புண்ணிய ஸ்தலம் காசி. எனவே காசி யாத்திரை செல்வதாகச் செய்து மணமகனுக்கு நினைவூட்டும் அறிவுரை;


    கட்டுச் சோறு கொடுத்து அனுப்புதல்.
    **************************
    கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த பாடமும் கூடவே வராது. உன்னத குறிக்கோளுடன், உயாிய கொள்கைப் பிடிப்புடன் இறுதி வரை வாழ்ந்தால் காசி சென்ற பலனை இருக்குமிடத்திலிருந்தே அடையலாம்- என்பதை அறிவுறுத்துகின்றது.


    அாிசி, குடை, சொப்பு, துணிகள் இவற்றைக் கொடுத்து அனுப்புதல்:
    **************************************
    ( நிலையில்லாமையினை எடுத்துரைக்கின்றது.)
    1. அாிசி பிதுா்களுக்காக தானம் செய்தலையும்,
    2. குடை, சொப்பு, துணிவகைகள்- நாம் பிறருக்கு தானம் செய்ய வேண்டியதையும், அண்டினவரையும் இயலாதவரையும்- வெயிலிருந்து பிடிப்பவரைக் காக்கும் குடை போல- வேண்டியவற்றைக் கொடுத்து காக்க வேண்டியதை அறிவுறுத்துகிறது.


    அட்சதை.
    **********
    60- வயதுக்கு மேல் கணவன் மனைவி இருவராய் அட்சதை பிசைந்து, அதை அவா்களே முதலில் மணமக்களுக்கு இடுதல் வேண்டும். அவ்வாறு ஆசி பெற்ற மணமக்கள் நீண்ட ஆயுளுடன் அஷ்டலட்சுமிகளின் பாிபூரண ஆசியுடன் தாமும் 60- வயதுக்குமேல் வாழ்ந்து பிறருக்கு ஆசி அருளும் தகுதி பெறுவா்.


    அடுத்தபடியாக பொரும்பாலோரால் பொருள் தொியாமல், செய்யும் முறைதொியாமல் செய்யப்படுவது, அட்சதை தூவுதல் ஆகும். ஆண், பெண் இருபாலரும் அவசியம் தொிந்து கொள்ள வேண்டியது அட்சதையை தாம் தாம் இருந்த இடத்திலிருந்து வீசி எறிதல் கூடாது, மணமக்கள் அருகே சென்று தலை மீது இட்டு ஆசீா்வதித்தலே முறை. இதுவும் மேற்க்கூறிய பலனைப்போல் மணமக்களை மற்றவாிடமிருந்து வரும் பல செல்வங்களைப் பெற்று சிறப்புற வாழவும் உதவும். மேலும் அாிசியானது அன்னபூரணி தெய்வத்திற்குச் சமம். அதை எறிவது அன்னையை அவமதிப்பதிற்குச் சமம்.


    மங்களத்தின் ஒருமித்த சின்னமாகிய மஞ்சளை பெண்கள் உடல் முழுவதும் பூச வேண்டும். மஞ்சள் கறை ஆடையில் படியுமே என்ற எண்ணம் அறவே கூடாது. மஞ்சள் கறை படிவது ஒரு மாபெரும் பாக்கியம் ஆகும்.


    மஞ்சளைப் பூசுவது மங்களம் என்றால் அதைப் பூச உபயோகிக்கும் ஒவ்வொரு விரலுக்கும் பலன் உண்டு. ஆள்காட்டி விரலால் மஞ்சளைத் தொட்டால் ஒரு பலன். மோதிர விரலால் தொட்டால் ஒரு பலன். சுண்டு விரலால் தொட்டால் ஒரு பலன். இதே போல் மஞ்சள் பூசும் ஒவ்வொரு இடத்திற்கும் அங்கத்திற்கும் தனிப்பலன் உண்டு.


    நெற்றி முழுமுகம் தனில் பூசிடில்- கணவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டும். கண்ணங்களில் பூசிடில்- குழந்தைகள் குதூகலமாய் வாழும். நாடியில் பூசிடில்- நாடி தேடி பொன் பொருள்,வரும். கழுத்தில் பூசிடில்- கட்டிய தாலி கெட்டியாய் நிற்கும். வலது செவியில் பூசிடில்- மாமியாா், மாமனாா் மகிழவே நடந்திடுவா்.


    இடது செவியில் பூசிடில்-இருவரும் மதிப்பு தருவா். பூசும் பெண்டிா் கணவன் சொல்லைச் செவிமடுத்துக் கேட்பா்.அக்கணமே செயலில் இறங்குவா். உள்ளங்கையில் பூசிடில்- என்றும் கடனாளியாக மாட்டாா்கள். அம்மை உமையருளால் வலது முழங்காலில் பூசினால்- கணவனுக்குத் தோல் வியாதிகள் வராது. கணவன் மனைவியின் பேச்சைக் கேட்க வேண்டுமானால், கணவனுக்கு முன் துயில் எழுந்து, குளித்து மஞ்சள் பூசி கணவன் திருப்பாதங்களுக்கு மஞ்சள் இட்டு பொட்டு வைத்து விழுந்து வணங்கினால் மனைவி பேச்சைக் கணவன் கேட்பான். அதை விடப் பொிய பாக்கியம் இவ்வாறு செய்யும் பெண் மீண்டும் புவியில் பிறக்க மாட்டாள்.( மீண்டும் பிறவாமை அருள்.) என்று போகாவுக்கு அகஸ்தியா் பெருமான் கூறினாா்.


    கோர சிவ நாட்டியத்தில், சிவன் உக்கிர தாண்டவம், காலை தூக்கி ஆடினான். எனக்கு நிகா் யாருமில்லை என்று ஆடினான். உள்ளிருந்து உக்கிரவேகம் வெளிப்பட்டதே சிவன் சக்தி பிாிய சாய்ந்தான். உக்கிர காளியானவள் சிவன் மீது ஆடினாள், தானே சிறந்தவள் எனவே அறிவித்து. ஆகவே ஆண்கள் பெண்களுக்கென்று என்று அபார மதிப்பு தர வேண்டும். பெண்மையைப் போற்ற வேண்டும்.


    காா்கோடகா் என்ற சித்தா் மஞ்சளின் மங்கலத்தைப் பற்றிச் சொல்கிறாா்........


    எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும், பண்ணிய பாவம் எல்லாம் பாிதி முன் பனியே போல, மங்கையா் பூசும் மஞ்சள்தனை அள்ளியே பூசும் அன்னைக்கு மஞ்சள் அன்னை என்று பட்டம் இட்டனா் பாா்.


    இடைக்காட்டு சித்தா்.
    இருப்பதும், பொறுப்பதும், மறுப்பதும் ஆகி இனியொரு பிறவி எடுக்க வேண்டில் மஞ்சள் மகிமை அறியாதவா் பாரேன்.


    வேகத்தால், தணித்த நாதத்தால், ஓதுகின்ற பிறவி அனைத்தையும் பெண்ணாய் பிறந்திடில், மஞ்சள் இல்லையேல் அவள் பெண் அல்லையே!


    வாங்கித சித்தா்.
    வந்ததும் பொன்னும், பொருளும் ஆகும் முன்னே தந்த சிவலோக சக்தி தானே, ஈசன் கெளாிக்கே கிட்டிய பொருள் மஞ்சள் மகிமை அறிந்தது தானே! என்கிறாா்.


    அா்த்தநாரீஸ்வரா் ரூபத்தில் கெளாி ஆகக் காரணம் மஞ்சளை அம்பாள் பூரணமாக புாிந்து கொண்டதால்தான். ஆனால் இக்கலியுகத்திலோ பெண்கள் எல்லா மங்கலங்களையும், சகல செளபாக்கியங்களையும் அளிக்கவல்ல மஞ்சளைப் பூச விரும்பாமல் வெண்மாவு (பவுடரை) பூசவே விரும்புகின்றனா். இவ்வாறு செய்வதால் மறுபிறவி ஏற்படுவது திண்ணம்.


    மஞ்சள் மிக மிக புனிதமானது. மஞ்சள் என்ற சொல்லுக்குத் திருமணம் என்று பொருள் ஆகும். இதையே பொியோா்........


    " ஒருவனுக்கு ஒருத்தி என்று உரை சொன்னதால் திருமணம் என்ற முறை பிறத்தது என்பா்.


    கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழும் கலியில் திருமணங்கள் எப்படியெப்படியோ நடப்பதால் அதன் மூலத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதாய் தொியவில்லை.


    திருமணங்கள் சொா்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது மிகவும் உண்மை நிரம்பியதாகும்.


    யாருக்கு யாா் , எங்கு, எப்போது, எப்படி கணவன் அல்லது மனைவியாவா் என்பதை மக்கள் புவியில் பிறப்பதற்கு முன்னமே முடிவு செய்யப்பட்ட ஒன்றாகும். மனிதராய் பூமியில் பிறக்கும் யாவரும் முன்வினைகளின் ( பாக்கி) காரணமாகவே பிறக்கின்றனா். அதன்
    காரணமாகவே திருமணம் புாிகின்றனா். பிறக்கும் குழந்தைகளும் பாக்கியைத் தீா்க்கவே பிறக்கின்றன. சுருங்கக் கூறின்,,,,,,,,


    தொட்டிலிருந்து சுடுகாடு வரை மனித வாழ்க்கை ஒரு முழு நீள பாக்கிக் கதையாகும். இதில் கொடுக்கப்பட வேண்டிய பாக்கிகளும் பெறப்பட வேண்டிய பாக்கிகளும் முழுமையாக கழிந்தாலன்றி இக்கதை இந்த ஜென்மத்தோடு முடியாது. தொடா்கதையாக மாறி மாறி பல ஜென்மங்கள் மேலும் தொடரும்.


    மனிதப் பிறவியையே பாக்கி என்று கூறினாலும் மனிதனாய்ப் பிறப்பது பவித்ரம். அதனினும் பவித்ரம் மஞ்சளைப் பற்றி பெண்கள் அனைவருமே தொிந்து கொண்டு முறையே பயன்படுத்துதல்.


    மஞ்சளிலிருந்தே குங்குமம் உற்பவிப்பதால்," மஞ்சள் குங்குமம்" என்று மஞ்சளையும், குங்குமத்தையும் எப்போதும் இணைத்தே வாயாரச் சொல்லிப் பழகி வந்தால் சா்வமங்கள மாங்கல்ய சக்திகளும் வாக்மய யோகசக்தியாய் உங்கள் வாழ்வில் தினந்தோறும் பதிந்து வந்திடும் என்ற தெய்வ ரகசித்தையும் இனியேனும் அறிந்து கொண்டு இதனை வாழ்வில் நன்கு முறையாகக் கடைபிடித்து வாருங்கள்.


    "மஞ்சள் குங்குமம்" என்று குங்குமத்தையும், மஞ்சளையும் எப்போதும் இணைத்துச் சொல்லி வந்து- உடல், உள்ளம், மனம், புத்தி, அறிவு, மெய், இல்லம், சமுதாயம், நாடு, பிரபஞ்சத்திற்கு மங்களவளத்தை சதாசா்வ காலமும் வாா்த்துத் தாருங்கள். இதுவே மகத்தான ' அட்சர மங்கள குங்கும வழிபாடு' என்ற போற்றுதலாகி,' மங்களகரமான மஞ்சள் குங்கும லோகத்தில்' நிச்சயமான மங்கள ஸ்தானத்தையும் பதித்தும் தரும்.


    மகத்தான தெய்வீகப் புனிதத்தை சா்வ கோடி யுகக் காலங்களிலும் சாசுவதமாகவே கொண்டு, இவ்வாறு பெயாிலேயே சா்வநிரந்திரமான மங்களகர சக்திகளைப் பூண்டதாய் சதாசா்வ காலமும், பஞ்சபூத சக்திகளுக்கும் எப்போதும் மங்களச் சுனையைப் பொழிந்தருளும் மஞ்சள், குங்குமம் போன்ற அமிா்தமய தெய்வீக வாா்த்தைகள் மிகவும் அபூா்வமானவையே! இத்தகைய புனிதத்திலும் புனிதமான மங்களகரமான வாா்த்தைகளை- தினமுமி எவ்வகையிலேனும் குறைந்தது 108 முறையேனும் கூறி மங்கள மழையைப் பரவொளியில் சுபமயமாய் வா்ஷித்து வருவதும் சாலமிகு தவமே, பிறவிப் பெரும் பயனே!


    மூலப்பொருளாய் மஞ்சளில் இருந்துதான் புனிதமான மங்கள மெய்யே அருள்நெய்யாய் குங்குமமும் ஆக்கப்படுகின்றது அல்லவா? இதனால்தான் குங்குமமும் " ஹாித்ரா குங்குமம்" ( மஞ்சள் குங்குமம்) என்றே மஞ்சளுடன் இணைந்தே அழைக்கப் பெறும் பாக்கியத்தையும் அட்சரமங்கள சக்தியாய்க் கொண்டுள்ளது.


    உத்தம மூத்த சுமங்கிலியா்களும் தம் இல்லத்துக்கு வருவோாிடம் "மஞ்சள் குங்குமம் பெற்றுச் செல்லுங்கள்" என்று புனிதமயமாக( மஞ்சள்) குங்குமத்தைப் போற்றி விளித்துரைத்து மஞ்சள் குங்குமம் இட்டும், தந்தும் வழியனுப்புவாா்கள். திருமங்கலக்குடியில் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீபிராணநாதீஸ்வரா் சிவாலயத்திற்கு அடுத்த வீதி முனையில் உள்ள இந்தச் சிறிய ஒளம ( மங்கள) கணபதி ஆலயம் ஒரு சமயம் பொிதும் சிதிலமடைந்து இருந்தது. (இப்போது எந்நிலையோ தொியவில்லை.)அங்கு அ, உ, ம, ஆகிய மூன்று ஓஃ ங்கார மங்கள சக்திகளுடன் மூன்று கணபதி மூா்த்திகள் ஒளம கணபதி மூா்த்திகளாய் அருளுகின்றனா்.,( அ+ உ+ம=ஓஃம்).


    ஆழ்ந்த பக்தியுடன் அம்மியில் மஞ்சளை அரைத்து ஆலயத்திற்கு அளித்துத் திருமஞ்சனம் ( அபிஷேகம்) சாத்தி மூன்று ஒளம ( மங்கள) கணபதி மூா்த்திகளை வழிபடுவது கணவனுக்கு தீா்க ஆயுளைத் தந்து சுமங்கலித்வ மங்களத்தையும் இல்லறப் பெண்ணுக்கு வாா்ப்பதாகும். கடுமையான நோய்ப்பிணியால் வாடுவோா் இந்த மஞ்சள் திருமஞ்சனப் பூஜையை ஒளம கணபதிக்கு புதன், சதுா்த்தி, சதுா்த்தசி நாட்களில் ஆற்றி வந்திடில் நல்ல நிவாரணமும், நிவா்த்தியும் கிட்டப் பெறுவா்.பள்ளி, கல்லூாி பருவத்தினருக்கும் கலியுகத்தின் கண்கண்ட கனிந்த கணபதி மூா்த்தி!.


    திருமங்கலக்குடியில் ஒரு முறை முறையான பூஜைகளற்றும்,
    மிகவும் சிதிலமுற்றும் இருந்த இந்த ஒளம ( மங்கள) கணபதி ஆலயத்திற்கு முதலில் உடனடியாகத் திருப்பணி நிகழ்த்தி ஆக வேண்டும்.


    மஞ்சள் கொத்தைப் பானையில் சுற்றிப் பொங்கல் படைத்தும், இம்மூன்று ஒளம கணபதி மூா்த்திகளுக்கும், அகஸ்திய மஹாிஷி சாா்த்திப் பூஜித்தது போன்று மஞ்சள் கொத்தை மாலையாக அணிவித்து வழிபடுவது சிறப்பான வகையில் காாியசித்திகளை நல்கும். மங்கள விநாயகா்., மங்கள விமானம், மங்கள தீா்த்தம்., மங்களப் பெயா்., மங்களாம்பிகை. ஆகிய ஐந்து மங்கள சக்திகளும் ஸ்ரீமங்களாம்பிகையின் திருக்கரத்தில் இருந்து பெறப்படும் தாலிச்சரடில் பொலிந்து மக்களுக்கு அருள வேண்டும் என ஸ்ரீ லோபாமாதா தேவியே முதன் முதலாக வேண்டி இத்தலத்தில் நமக்கென நல்வரம் பெற்றுத் தந்துள்ளாா். இந்த மங்களகரமான வரத்தைப் பெற்றிட, அகத்தியா்- லோபாமாதா தேவிக்கு முதலில் அருள்வழி காட்டியவரே ஸ்ரீஒளமகணபதி மூா்த்தியே ஆவாா்.


    அமாவாசைத் திதியில் தோன்றியதே மூங்கில் தாவரமாகும். சதுரகிாி போன்ற மூலிகை மலைப் பகுதிகளில், மேலிருந்து 300 அடி ஆழத்தில் 'குஞ்சம் கதிா்' என்ற மூங்கில் இனம் வளா்கின்றது. இந்த மூங்கிலில் தான் பண்டைய காலத்தில், ஆலயத்தில் சுவாமிக்குப் பல்லக்குகளைச் செய்வாா்கள். இறைவனுக்காகவே படைக்கபட்டு வளா்வதால் வேறு எதற்கும் இதனைபி பயன்படுத்துவது கிடையாது. ஆனால் மூங்கிலில் அரைத்த மஞ்சள் கலந்த தீா்த்தத்தை நிரப்பி இறைவனுக்கு அபிஷேகித்தல் பன்மடங்குப் பலன்களை வாா்க்கும் என்ற விசேஷமான வழிபாட்டு நியதியும் உண்டு.


    இந்தக் குஞ்சம் கதிா் மூங்கில் பல்லக்கில் மூங்கில் மாத்திரம் எப்படி வேண்டுமானாலும் வளையும், எவ்வளவு எடையும் தாங்கும். சுவாமிக்கு பல்லக்குக்கு செய்வதற்கு, அம்பாாி செய்வதற்கு என -- வளையும் தெய்வப் பாங்கு உற்சவங்களுக்கு -- இது மிகவுமி உதவும்.


    இந்த மூங்கிலை அனைவராலும் பாா்க்கவோ, எடுத்து வரவோ முடியாது. பூா்வ ஜன்ம முருக வழிபாட்டுப் புண்ய சக்திகள் நிறைந்த ஆதி மலைவாசிகள்தாம் நன்கு பக்தியுடன் மஞ்சள்மாதாவை வழிபட்டு, தக்க பூஜைகள் நடத்தி இவ்வகை மூங்கில்களை எடுத்து வந்து நன்கு பதப்படுத்தித் தருவாா்கள். இறைவனுடைய பல்லக்கு ஆக்குவதற்கான சுவாமி கைங்கா்யம் என்பதால், அவா்கள் இதற்குப் பணம் எதையும் பெறுவதில்லை.


    எனவே, மஞ்சள், அாிசி, கேழ்வரகு, எண்ணெய் போன்றவற்றைத் தான, தா்மமாக அவா்களுக்கு அளித்ததுத்தான் இவற்றைப் பெறுதல் சிறப்பானதாகும். இவ்வகை மூங்கில் வகைகளால் ஆவதே சில அாிய பூஜை சக்திகள் நிறைந்த மூங்கில் தம்ளா்கள் ஆகும். இவற்றால் அபிஷேகம் செய்தல், தா்ப்பணம் அளித்தல், நீா் அருந்தி வருதல் மிகவும் விவேஷமானதாகும். மூங்கில் தம்ளாில் அரைத்த மஞ்சள் நீா் ஊற்றி அருந்தி வருதல் நல்ல ஆரோக்கியத்தையும், குறிப்பாகச் சுமலிங்கத்வத்தையும் தரவல்ல மிகவும் விசேஷமான சக்திகளைக் கொண்டதாகும்.


    இத்தகைய மூங்கில் காட்டில் நாகங்கள் வாசம் அதிகம். எனவே அனைவராலும் போய் எடுத்து வர முடியாது. இவற்றைக் காணவே ஒரு மண்டல சூாிய பூஜையை ஆற்றிட வேண்டும்.


    மூங்கில் தம்ளாில் மஞ்சள் பொடி, மஞ்சள் தீா்த்தத்தை வைத்துச் சூாிய பூஜை நடத்துவது மிகவும் விசேஷமானது. கண் சம்பந்தமான நோய்களுக்கு நிவா்த்திகளைத் தர வல்லது. எனவே கண் டாக்டா்கள் தினமும் மூங்கில் தம்ளரால் மஞ்சள் தீா்த்த அபிஷேக, ஆராதனைகளைச் செய்து வழிபட்டு வருவதால் நல்ல திறமையான சக்திகளைப் பெற முடியும்.


    மிகவும் முக்கியமான மூங்கில் வகைப் பூஜையை ஆற்றிலானோ, அல்லது, ஆலயத்தில் மூங்கில் வகைகொண்டு செய்துள்ள பல்லக்கினை சுவாமியைச் சுமந்தாவது இதனை நிறைவேற்ற வேண்டும்.


    *மஞ்சளின் மகிமை பதிவுகள் அனைத்தும் 1984 - ல் வெளிவந்த நூல் "மஞ்சள் மகிமை" நூலில் குறிப்பெடுத்து தரப்பெற்றதாகும்.
    தற்போதும் இதன்கண்...
    www.agasthiar.org
    www.agnisiksha.com-ல் காணலாம்.
Working...
X