Announcement

Collapse
No announcement yet.

புல்லாணிப்பக்கங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புல்லாணிப்பக்கங்கள்

    Posted by Raguveeradayal Thiruppathi Iyengar
    தினம் ஒரு பாதுகாஸஹஸ்ரம்


    அச்ரத்ததாநமபி நந்வதுநா ஸ்வகீயே
    ஸ்தோத்ரே நியோஜயஸி மாம் மணிபாதுகே த்வம்
    தேவ: ப்ரமாணமிஹ ரங்கபதிஸ் ததாத்வே
    தஸ்யைவ தேவி பதபங்கஜயோர் யதா தத்வம்


    ஸ்ரீமத் நம்மாண்டவன் : ஏ பாதுகையே! உன்னை ஸ்தோத்ரம் பண்ணவேண்டுமென்று எனக்கு ஆவலில்லை. நீ வலுவிலே பண்ணச் சொல்கிறாய். நீ பெருமாள் திருவடிக்கு எவ்விதமாயிருக்கிறாயோ, அதை அந்த ரங்கநாதன் எனக்குச் சொல்ல வேண்டும். பாதுகையின் குணம் போட்டுக்கொண்டவர்கள் சொன்னால்தானே பிறருக்குத் தெரியும். பிராட்டி (தாயார்) பெருமாள் ஸ்ரீபாஷ்யகாரர் முதலானவர் களை ஸ்தோத்திரம் பண்ணினேன். அந்த மாதிரி ஆழ்வார் ஸ்தோத்திரம் என்று ஒன்றும் நான் பண்ண வில்லை. எனக்கும் இன்னும் எல்லோருக்கும் க்ஷேமத்திற்காக ஆழ்வார் பெருமாள் விஷயத்தில் இருக்கிற இருப்பை எனக்கு எவ்விதமாகச் சொல்லத் தெரியும். ஸ்ரீரங்கநாதன்தான் தோன்றப்பண்ண வேண்டும்.
    "யதா த்வாம்"( ywa Tva——
    என்று பாடமிருந்தால் ஸ்வரஸமாயிருக்கும் என்று தோன்றுகிறது. "ததாத்வே" சிரத்தையில்லாதவனை நியமிக்கும் விஷயத்தில், ஸ்ரீரங்கநாதனானவர் ஸாக்ஷியாகிறார். எப்படியென்னில்: பகவான், "தஸ்யைவ" தன்னுடைய திருவடித் தாமரைகளில், "த்வாம்" சிரத்தையில்லாத உன்னை, "ததா நியோஜயஸி" எப்படி நியமிக்கிறாரோ, அப்படியே நீயும் என்னை நியமிக்கிறாய் என்று கீழோடு சேர்த்துக் கொள்ளவேண்டும்.
    பகவான், சிரத்தையில்லாத உன்னைத் தன் திருவடிகளில் நியோஜநம் பண்ணுகிறாப்போலே (சேர்த்து வைக்கிறாப்போலே) நீயும் சிரத்தையில்லாத என்னை உன் ஸ்தோத்திரத்தில் நியமிக்கிறாய் என்று கருத்து.
    A.ல.ந. : மணிபாதுகையே! தேவி! உன்னை ஸ்தோத்திரம் பண்ண வேண்டும் என்ற சிரத்தை (முயற்சி) சிறிதும் இல்லாதிருந்த எனக்கு, நீ கட்டளையிடுகிறாய் -- ஸ்தோத்திரம் இயற்ற. உன்னை அணிந்துகொண்டிருக்கும் அந்த அரங்கன்தான், எனக்கு உன்னுடைய விசேஷங்களைப் பற்றித் தெரிவித்து அருள வேண்டும். (The user knows BEST)
Working...
X