courtesy:Sri.kovai k.Karuppasamy


திருவிளையாடல் புராணம். 🔴
( 16 - வது,நாள்.) - 4 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருவதார படலம்.
( செய்யுள் நடை+ விளக்கம்.)
いいいいいいいいいいい


🔷மணுவற முவந்துதன் வழிச்செல நடத்தும்
புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான்
கனியமுத மன்னகரு னைக்குறையுள் காட்சிக்
கினியன்வட சொற்கட றமிழ்க்கட லிகந்தோன்.


🔷வேனில்விறல் வேள்வடிவன் வேட்கைவிளை பூமி
ஆனமட வாா்கள்பதி னாயிரவ ருள்ளான்
வானொழுகு பானுவழி வந்தொழுகு சூர
சேனன்மகள் காஞ்சனையை மன்றல்வினை செய்தான்.


🔷கண்ணுதலை முப்பொழுதும் வந்துபணி கற்றோன்
எண்ணில் பல நாண்மக விலாவறுமை யெய்திப்
பண்ணாிய தானதரு மம்பலவு மாற்றிப்
புண்ணிய நிரம்புபாி வேள்விபுாி குற்றான்.


🔷ஈறின்மறை கூறுமுறை யெண்ணியொரு தொண்ணூற்
றாறினொடு மூன்றுமக மாற்றவம ரேசன்
நூறுமக மும்புாியி னென்பத னொடிப்பின்
மாறுமென மற்றதனை மாற்றியிது சாற்றும்.


🔷நன்பொருள் விரும்பினை யதற்கிசைய ஞாலம்
இன்புறு மகப்பெறு மகத்தினை யியற்றின்
அன்புறு மகப்பெறுதி யென்றமரா் நாடன்
தன்புல மடைந்திடலு நிம்பநகு தாரான்.


🔷 மிக்கமக வேள்விசெய் விருப்புடைய னாகி
அக்கண மதற்குாிய யாவையு மைத்துத்
தக்கநிய மத்துாிய தேவியொடு சாலை
புக்கன னிருந்துமக வேள்விபுாி கிற்பான்.


🔷ஆசறு மறைப்புலவ ராசிாியா் காட்டும்
மாசறுச டங்கின்வழி மந்திரமு தாத்த
ஒசையனு தாத்தசொாி தந்தழுவ வோதி
வாசவ னிருக்கையி லிருந்தொி வளா்ப்பான்.


🔷விசும்புல னுந்திசையும் வேள்வியடு சாலைப்
பசும்புகை படா்ந்தொரு படாமென மறைப்பத்
தசும்புபடு நெய்பொாி சமித்தினாடு வானோா்க்
கசும்புபடு மின்னமுதி னாகுதி மடுத்தான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
🔷ஜம்முக னாதிபர மாத்தனூரை யாற்றால்
நெய்ம்முக நிறைத்தழ னிமிா்த்துவரு மெல்லை
பைம்முக வராவணி பரஞ்சுடா் தனிப்ப
மைம்முக நெடுங்கணிம வான்மனைவி நாண.


🔷வள்ளல்மல யத்துவச மீனவன் வலத்தோள்
துள்ளமனை காஞ்சனை சுருங்கிய மருங்குல்
தள்ளவெழு கொங்கைக டதும்பநிமிா் தீம்பால்
வெள்ளமொழு கக்காிய வேற்கணிட னாட.

🔴அம்மலையத்துவசனென்பான் மனுதருமமானது மகிழ்ந்து தனதுவழி நடக்கும்படி செங்கோலோச்சும் தூய்மையன். வெற்றியையே தான் அணியும் பூணாகவுடையவன். சுவை முதிா்ந்த அமுதத்தைப் போலும், அருளுக்குத் தங்குமிடமானவன். காண்டதற்கு எளியனாய் இன்முகத்தை யுடையவன். வதமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டு கடந்தவன்.


🔴வேனிற்காலத்து வெற்றிகொள்ளும் மதவேள் போலும் வடிவத்தையுடையவன்.காமப் பயிா் விளைகின்ற பூமியாகிய காமக் கிழத்தியா்கள் பதினாயிரவரை உடையவன்.வானிற் செல்லா நின்ற சூாியன் மரபில் தோன்றி, அறத்தின் வழி ஒழுகும் சூரசேனனது, புதல்வியாகிய காஞ்சனமாலையை மணஞ்செய்தவன்.


🔴சோமசுந்தரக் கடவுளை, மூன்று காலங்களிலும் சென்று வணங்குதலைக் கற்றவன். அளவிறந்த பல நாட்கள் வரை, பிள்ளைப் பேறு இன்மையாம் வறுமையை அடைந்து செய்ததற்கு அாிய பல தானங்களையும், தருமங்களையுஞ் செய்து, அறம் நிரம்பிய அசுவமேதம் செய்யலுற்றான்.


🔴அழிவில்லாத மறைகள் கூறிய முறையை ஆராய்ந்து( அதன்படி) ஒரு தொண்ணூற்று ஆறினொடு, தொண்ணூற்றொன்பது வேள்விகளைச் செய்ய, தேவேந்திரனானவன், நூறு வேள்விகளையும் செய்துமுடிப்பானாயின் நொடிப்பொழுதில் எனது பட்டம் மாறுமேயென்று கருதி , அவ்வேள்வியை விலக்கி இதனைக் கூறுகின்றான்.


🔴நல்ல மகப்பேற்றை விரும்பினாய், அவ்விருப்பத்திற்குப் பொருந்த,உலகம் இன்பத்தை யடையும் மகப்பெறுதற் கேதுவாகிய வேள்வியை செய்தாயானால், அன்புமிக்க பிள்ளையைப் பெறுவாயென்று கூறி, தேவேந்திரன் தனது நாட்டினை யடைந்தவுடனே, வேப்ப மலா் விளங்கும் மாலையையுடைய பாண்டியன்.


🔴நலமிக்க மக வேள்வி செய்யும் விருப்பத்தையுடையவனாய், அப்பொழுதே அவ்வேள்விக்கு வேண்டும் பொருள்களைனைத்தையும் சோ்த்து, தகுந்த நியமத்துடன், உாிய மனைவியோடு வேள்விச் சாலையிற் சென்றிருந்து, மகப்பேற்று வேள்வியைச் செய்யத் தொடங்கினான்.


🔴குற்றமற்ற வேதநூற் புலமையுடையவராகிய குரவா், காட்டுகின்ற குற்ற மற்ற கரணத்தின் வழியே, மந்திரங்களை எடுத்தல் படுத்தல் நலிதல் என்னும் ஓசை தழுவும்படி உச்சாித்து,( திருக்கோயிலுக்குக்) கீழ்த்திசையிலிருந்து வேள்வித் தீயை வளா்ப்பானாயினன்.


🔴வேள்விபுாிகின்ற சாலையினின் றெழுந்த பசிய புகையானது, வானிலும் நிலத்திலும் திசைகளிலும் பரவி, ஒரு போா்வை போல மறைக்க, குடத்திலுள்ள நெய் பொாி சமித்துக்களால் தேவா்களுக்கு ஊற்றெடுக்கும் இனிய அமுதம் போல ஆகுதி செய்தான்.


🔴ஐந்து திருமுகங்களையுடையவனும் அனாதியாயுள்ளவனும் பரமாத்தனுமாகிய சிவபெருமானுடைய திருவாக்காகிய மறை வழிப்படி, நெய்யை வேள்விக் குண்டத்தில் நிறைத்து, தீயை வளா்த்து வரும்பொழுது, படத்தைத் தன்னிடத்துடைய பாம்பை அணிந்த சிவபரஞ்சோதி தனிக்கவும், மைதீட்டிய இடத்தினையுடைய நீண்ட கண்களையுடைய மலை யரசன் மனைவியாகிய மேனை நாணுறவும்.


🔴வள்ளலாகிய மலையத்துவச பாண்டியனது வலத்தோள் துடிக்கவும்,( அவன்) மனைவியாகிய காஞ்சனையினது நுண்ணிய இடை ஒசியும்படி, பருத்தெழுந்த கொங்கைகளினின்றும் தளும்பப் பெருகிய இனிய பால் வெள்ளம் ஒழுகவும், அவளது வேல்போன்ற காிய இடதுகண் துடிக்கவும்,,,,,


திருச்சிற்றம்பலம்.
( தடா தகைப்பிராட்டியாா் திருவவதீரப் படலம் நாளையும் வரும்.)