Announcement

Collapse
No announcement yet.

Neer kaatha Iyyanaar temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Neer kaatha Iyyanaar temple

    Neer kaatha Iyyanaar temple
    பிணக்குகள் தீர்ப்பார் நீர் காத்த ஐயனார்!
    ஐயன்' எனும் பதம் சாஸ்தாவைக் குறிக்கும். அத்துடன் அவரது மாண்பைச் சிறப்பிக்க `அப்பன்' எனும் சொல் சேர்ந்து ஐயப்பன் எனவும், `ஆர்' எனும் சொல் சேர்ந்து ஐயனார் எனவும் அழைக்கப்படுவதாக பெரியோர்கள் போற்றுவர். ஆக ஐயனார் அருளோச்சும் திருக்கோயில்களையும் இந்த இதழில் நாம் தரிசிக்கலாம். முதலில் அருள்மிகு நீர்காத்த ஐயனார்.
    விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில், வனப்பகுதியில் அமைந்துள்ளது பூரணா-புஷ்கலா சமேத அருள்மிகு நீர்காத்த ஐயனார் திருக்கோயில். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளைய மக்களின் காவல் தெய்வமாகத் திகழ்கிறார் இந்த ஐயனார்.
    தல வரலாறு:
    இந்தக் கோயில் 10-ம் நூற்றாண்டில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 12-ம் நூற்றாண்டில் பராக் கிரம பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்த வனப் பகுதியை, பந்தளத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன் ஆக்கிரமிப்பு செய்தான். அதனால் கோபம் கொண்ட பராக்கிரம பாண்டியன், பெரும் படையை அனுப்பி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை மீட்டு வரச் செய்தான்.
    அதன்படி, அந்தக் குறுநில மன்னனைத் தோற்கடித்து வெற்றியுடன் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஐயனார் கோயில் அருகில் இருந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றைக் கடக்க அருள் செய்யும்படி படைவீரர்கள் தங்கள் காவல் தெய்வமான ஐயனாரைப் பிரார்த்தித்தனர். ஐயனாரின் அருளால், ஆற்றின் ஒரு கரையில் இருந்த மரங்கள் ஆற்றில் விழுந்து மறு கரையைத் தொட்டன. படைவீரர்களும் அவற்றின் வழியே மறு கரைக்குச் பாதுகாப்பாகச் சென்றனர். அன்றுமுதல் இந்த ஐயனாருக்கு 'நீர் காத்த ஐயனார்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
    விசேஷங்கள்:
    நீர் காத்த ஐயனார் கோயிலில், சித்திரை மாதம் கோயில் கொடை - திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நெல்லை, மதுரை, விருதுநகர் மாவட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து ஐயனாரை வழிபட்டு மாலை அணிகிறார்கள். இந்த ஐயனாரை வழிபட்டால், கணவன்- மனைவி இடையிலான பிணக்குகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
    இந்தக் கோயிலில் பெரிய ஓட்டக்கார சாமி, சின்ன ஓட்டக்கார சாமி, ஸ்ரீமாடத்தி, ஸ்ரீமாடன், ஸ்ரீராக்காச்சி அம்மன், வனப்பேச்சியம்மன், யமதர்மராஜாஆகியோருக்கும் தனிச் சந்நிதிகள் இருக்கின்றன.
    கோயில் காலை 8 முதல் மாலை 5 மணி வரையிலும் திறந்திருக்கும். மழைக் காலங்களில், கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஐயனார் அருவியில் இருந்து பாயும் நீரோடையில் வெள் ளப் பெருக்கு ஏற்படும். அந்த காலகட்டத்தில் பக்தர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும்.
    எப்படிச் செல்வது?
    விருதுநகர் மற்றும் கோவில்பட்டியில் இருந்து ராஜபாளையத்துக்கு நிறைய பேருந்துகள் செல் கின்றன. ராஜபாளையத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல நிறைய ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. குறிப்பிட்ட நேர இடைவெளியில், ராஜபாளையத்திலிருந்து பேருந்து வசதியும் உள்ளது.
    [07/05 16:42] ‪+91 95430 10979‬: புனலூர் தாத்தா -
    காட்டுப்பாதையில்... இருட்டு வேளையில்... துணைக்கு வந்தான் ஐயப்பன்!
    சுள்ளென்று வெயிலடித்து, மொத்தப் பகுதியையும் அனலாக்கிவிடுகிற கோடைகாலம் அது. ஆனால், மலை முழுவதும் மரங்கள் அடர்த்தியாக நிறைந்திருக்க... அங்கே கோடை உக்கிரம் தன் கோர முகத்தைக் காட்டமுடியாமல் தவித்தது. அன்றைக்குச் சுமார் 3,000 பக்தர்கள், சபரிகிரிவாசனைத் தரிசிக்க வந்திருந்தனர்.
    இன்றைய நாளில் கார்த்திகை துவங்கியது முதல், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹரிஹரசுதனைத் தரிசனம் செய்ய சபரிமலைக்குச் செல்கின்றனர். ஆனால் அன்று இந்த அளவுக்குக் கூட்டம் கிடையாது. 'எனக்கும் ஆசைதான் ஐயப்பனைத் தரிசனம் பண்ணணும்னு! ஆனா காடு- மலையெல்லாம் கடக்கணுமாமே...' என்று பயந்து, புலம்பியபடி தயக்கம் காட்டியவர்களும் உண்டு. ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் ஐயனின் பேரருளால் விரதமிருந்து, மாலையணிந்து, இருமுடி கட்டிக் கொண்டு சபரியாத்திரை சென்றுவிடுவார்கள்.
    ஸ்ரீபரசுராமர் தோற்றுவித்த புண்ணிய க்ஷேத்திரம், கேரளம். இங்கே, சபரிமலையில் ஸ்ரீஐயப்ப விக்கிரகத் திருமேனியை பிரதிஷ்டை செய்ததே ஸ்ரீபரசுராமர் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். தன் யோக சகயும் திரட்டி, சபரிமலையில் குவித்து, அதன் மேல் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் விக்கிரகத் திருமேனியை பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீபரசுராமர் என்கிறது ஸ்தல புராணம்.
    காலமாற்றத்தில், அந்த விக்கிரகம் பின்னமாகிவிட... நல்ல மனிதர்களின் பெருமுயற்சியால், கருவறையில் அழகிய ஸ்ரீஐயப்ப விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். மதுரை பி.டி.ராஜன், புனலூர் தாத்தா எனப்படும் புனலூர் சுப்ரமணிய ஐயர் முதலானவர்களின் பெருமுயற்சியால் நிகழ்ந்தது இது.
    ''1966-ஆம் வருஷம்... கோடை காலத்துல பிரதிஷ்டை தினத்தை விமரிசையா கொண்டாடினோம். அபிஷேகம் நடந்து, அப்புறம் அலங்காரமும் பண்ணியாச்சு. தீபாராதனைல அந்தக் கற்பூரஜோதிப் பிரியனைத் தரிசனம் பண்ணும்போது, சிலிர்ப்போடு 'சுவாமியே... சரணம் ஐயப்பா'னு சரணகோஷம் முழங்கினாங்க பக்தர்கள். அடுத்த அஞ்சாவது நிமிஷம்... அங்கே மௌனம்!
    அந்த நேரத்துல, 'வாஞ்சி, ஐயப்ப பக்தர்களைச் சாப்பிடக் கூட்டிட்டுப் போ!'னு கம்பீரமான குரல்ல சொன்னார் புனலூர் சுப்ரமணிய ஐயர். 'இதோ... பண்ணிடறேன்'னு சொல்லிக் கிட்டே, விறுவிறுன்னு எல்லாரை யும் அழைச்சுக்கிட்டுப் போனேன். நாப்பத்தாறு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம்தான்... ஆனா, ஏதோ நேத்துதான் நடந்தாப்போல அப்படியே கண்ணுக்கு முன்னாடி நிக்குது'' என்று பரவசத்துடன் சொல்கிறார் வாஞ்சீஸ்வர ஐயர்.
    புனலூர் தாத்தாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவருடன் நெருங்கிப் பழகியவர். ஊருக்கு ஏழெட்டு சீடர்கள் தாத்தாவுக்கு உண்டு என்றாலும், ஆத்ம நண்பனைப் போல, அணுக்கத் தொண்டனைப்போல, உண்மையான உத்தம சீடனாக விளங்கியவர் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சீஸ்வர ஐயர்.
    ''சென்னை- பாரீஸ்கார்னர்லேருந்து குருஸ்வாமியோட வந்திருந்த பக்தர்கள் சிலர், 'இந்தக் காட்டுக்குள்ளே வந்திருக்கோமே... ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு எங்கே போய்ச் சாப்பிடுறதுன்னு தவிச்சுப் புலம்பினப்ப, எல்லாருக்கும் சுடச்சுட வெண்பொங்கலும், மணக்க மணக்க ரசமும்னு சாப்பாடு போட்ட மகராசன் யாரு சாமீ?'ன்னு கேட்டாங்க. அந்த குருசாமி, 'அதோ... அவர்தான் புனலூர் சுப்ரமணிய ஐயர். ஸ்ரீஐயப்ப ஸ்வாமியோட பேரருள் கிடைச்ச புண்ணிய ஆத்மா அவர்'னு சொன்னார். அந்தப் புண்ணிய ஆத்மாவை குருநாதரா அடைஞ்சது என் பாக்கியம்'' என்று சொல்லும் வாஞ்சீஸ்வர ஐயருக்கு இப்போது வயது 90.
    புனலூர் சுப்ரமணிய ஐயரின் மகன் ராமகிருஷ்ண ஐயர். ''அப்பா, நித்யானுஷ்டங்களைத் தவறாம செய்யறவர். ஒரு பக்கம் சடங்கு சாங்கியங்களும், இன்னொரு பக்கம் தாணுமாலயன் கோயிலுமா வாழ்ந்ததுதான், அப்பாவுக்கு பக்தி மார்க்கத்துல ஈடுபாடு வர்றதுக்குக் காரணம்னு நினைக்கிறேன். அப்புறமா புனலூர் வந்தவர், அங்கிருந்தபடியே காடுகள்ல மரங்களை வெட்டி எடுக்கிற கான்ட்ராக்டரானார். இதனால காடுகளும் மரங்களும் அவருக்கு அத்துப்படியாச்சு!
    சின்ன வயசுல, அப்பாவைப் பார்க்கும்போது பிரமிப்பா இருக்கும். தைப்பூசத்தின் போது பழநி கோயில் கமிட்டில இருந்துக்கிட்டு, அதுக்கான வேலைல மூழ்கிடுவார். கந்தசஷ்டி வந்துதுன்னா, திருச்செந்தூருக்கு வர்ற பக்தர்களுக்கு வேணுங்கற உதவிகளைச் செஞ்சு தருவார். வைக்கத்துல நடக்கற ஸ்ரீமஹாதேவாஷ்டமிக்கும், குமரில நடக்கிற நவராத்திரி விழாவுக்கும் எல்லாருக்கும் அன்னதானம் நடந்துக்கிட்டே இருக்கும்.
    ஆகமங்கள், சாஸ்திரங்கள், அரசாங்க விதிமுறைகள்னு எல்லாமே தெரிஞ்ச மிகச்சிறந்த நிர்வாகி, அப்பா. கோயிலில் குறிப்பிட்ட சில விஷயங்களை, தேவஸம் போர்டு அதிகாரிகள், அப்பாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுச் செய்ற அளவுக்கு மரியாதையும் கௌரவமுமா வாழ்ந்தாங்க அப்பா!'' என தன் தந்தையார் பற்றி நெக்குருகிச் சொல்கிறார் ராமகிருஷ்ண ஐயர்.
    ''புனலூருக்கு வந்ததும் ஆரியங்காவு ஸ்ரீஐயப்பன் மேல பெரிய ஈடுபாடு வந்துது புனலூர் தாத்தாவுக்கு! அங்கே நதிக்கரையோரத்துல இருக்கிற கிருஷ்ணன் கோயில், ரொம்பவே அழகானது! கிட்டத்தட்ட குருவாயூர் கண்ணனே இங்கே வந்துட்டது போல இருக்கும். அந்தக் கோயிலுக்கு அடிக்கடி போயிட்டு வந்துட்டிருந்தார் புனலூர் தாத்தா.
    அப்புறமா, புனலூர்ல கரைக்குப் பக்கத்துலயே வீடு கட்டி, அதுக்கு 'ஷண்முக விலாஸம்'னு பேரு வைச்சார். ஒரு குட்டி அரண்மனை மாதிரி இருக்கும் வீடு. எந்நேரமும் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்துக்கிட்டே இருக்கும். சில தருணங்கள்ல, புனலூர் தாத்தா வீட்டு அரிசி உப்புமாவுக்காகவே பக்தர்கள் பெருங்கூட்டமா வருவாங்க. யாருக்கும் இல்லேன்னு சொல்லாம, சுடச்சுட அரிசி உப்புமா தயாராகிட்டே இருக்கும். வீடு முழுக்க உப்புமா வாசனை நிறைஞ்சிருக்கும். அதனாலதானோ என்னவோ, அன்னதானப் பிரியனான ஐயப்பனோட பேரருள் புனலூர் தாத்தாவுக்குப் பூரணமா கிடைச்சுது. கேரளாவோ தமிழகமோ... எங்கே இருந்தாலும் ஸ்ரீஐயப்ப பக்தர்களுக்குத் தவறாம, ஒரு குறைவும் இல்லாம அன்னதான சேவை தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கும்படி பண்ணின சிறந்த நிர்வாகி அவர்!'' என்று குருநாதரின் புகழ் பாடுகிறார் வாஞ்சீஸ்வர ஐயர்.
    சபரிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை களில் உள்ள அத்தனை குறுக்குப் பாதைகளும் அத்துப்படியாம் புனலூர் தாத்தாவுக்கு! கார், ஜீப், லாரி என வாகனங்கள் பல உண்டு என்றாலும்,மிக அவசியமான நேரம் தவிர, வேறு எப்போதும் எந்த வாகனத்தையும் பயன்படுத்திக் கொள்ளமாட்டாராம்.
    '''நான் ஐயப்பனைப் பார்த்துட்டு வந்துடுறேன்'னு சொல்லிட்டு, சபரிமலைக்கு நடந்தே போய் தரிசனம் பண்ணிட்டு, அப்படியே காட்டுக்குள்ளே இருக்கிற குறுக்குப் பாதைகளையெல்லாம் கடந்து புனலூருக்கு நடந்தே வந்துடுவார் அப்பா. 'காட்டுல, அதுவும் இருட்டுல இப்படித் தனியா வர்றீங்களே... பயமே இல்லியாப்பா?'ன்னு கேட்டிருக்கேன். அதுக்கு அப்பா, ''நான் எங்கேடா தனியா வந்தேன்? ஐயன் ஐயப்பன், புனலூர் வரைக்கும் வந்து, என்னைக் கொண்டு விட்டுட்டு இப்பத்தான் போறான்!'னு சிரிச்சுக்கிட்டே சொல்வார்'' என்று விழிகள் விரியச் சொல்கிறார் ராமகிருஷ்ண ஐயர்.
    (சரண கோஷம் தொடரும்)
Working...
X