Old & new proverbs


[15:44, 7/4/2016] +91 94458 61434: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்...


அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச் சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!


பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!


மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன் : - உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????


குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."
"ஏன்? "
"ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"


என்னடா! கையில பைனாகுலர் எடுத்துகிட்டு எங்கே போறே? "
"நான் என் "தூரத்து" சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்."


நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது,நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?


காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!


ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..."
"ஆமாம்...அதுக்கென்ன...?"
"நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"


அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "ஓ" போட்டாங்க...


முதலாளி: இந்தக் கம்பெனியில்"நைட் வாட்ச் மேன்"வேலை கேட்கறியே,உனக்கு அனுபவம் இருக்குதா?
வேலைக்கு வந்தவன்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க.இரவுல லேசா சின்ன சத்தம் கேட்டாக் கூட நான் விழித்துக் கொண்டு விடுவேன்.


நர்ஸ்: ஆப்ரேஷன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
நர்ஸ்: இப்ப அதுவும் டெட் ஆய்டுச்சு


பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?
தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!


காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.


போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
போலீஸ்:!!!!


மனைவி: ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன்: முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்.
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க.. .
வணக்கம்தான் சொல்லிட்டேனே...வெண்ணே மறுக என்ன வணக்கம் நொனக்கம்னு.Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்.


நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா?
இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா.
நீதிபதி: ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?
கபாலி : என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான் அதான்.
ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் 'மசாலா' படங்கள் எடுக்கறதில்லே?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.
[13:50, 7/5/2016] +91 94458 61434: பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க,
பழைய படத்த ரீமேக் பண்றாங்க,
அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்?


அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம்.
அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.
ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு 'cell' போனாலே சொல் போச்சு'.


பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!!


புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்..
***
பழசு: இளங்கன்று பயமறியாது..!!


புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது..
***
பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்..!!


புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்..
***
பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு


புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு..
***
பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.!!


புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு ணிssணீஹ்வே அனுப்பும்..
****
பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!


புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்..
***
பழசு: ஆறிலும் சாவு... நூறிலும் சாவு..!!


புதுசு: ஆறு ரூபாய்க்கும் ரீசார்ஜ், நூறு ரூபாய்க்கும் ரீசார்ஜ்..
****
பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது..!!


புதுசு: நெட்வொர்க்காரனை திருத்த முடியாது..
****
பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..!


புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..
****
பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!!


புதுசு: செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு..
****
பழசு: கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது..!!


புதுசு: பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது..
***
பழசு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..!!


புதுசு: வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்..
***
பழசு: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!!


புதுசு: வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்..
****
பழசு: குரைக்கிற நாய் கடிக்காது!!


புதுசு: கொரியன் போன் உழைக்காது..
***
பழசு: யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்


புதுசு: ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்..
***
பழசு: ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது..!!


புதுசு: டவர் கிடைக்கும் வரை டைம் காத்திருக்காது..
**
பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!


புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே..
***
பழசு: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை..!!


புதுசு: கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை.
****
பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்..!!


புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்..
****
பழசு: பேராசை பெருநஷ்டம்..!!


புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்.