Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 22nd day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 22nd day

    Courtesy:Sri.Kovai K.Karuppasamy


    திருவிளையாடல் புராணம்.
    (22 வது நாள்.) 4 வது படலம்.
    தடாதகை பிராட்டியாா் திருவவதாரபடலம்.
    ( செய்யுள்நடை+ விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔷ஒப்புரு முதலீ றில்லா வொருத்திதன் சத்தி பெற்ற
    முப்பெருந் தேவ ராலே முத்தொழி னடாத்து மென்று
    செப்பலும் புகழன் றென்னிற் றென்னவன் கன்னி யாகி
    இப்புவி மனுவிற் காக்குமென்பதென் பேதைமைத்தே.


    🔷வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி
    விரைசெய் தாா்முடி வேய்ந்துதண் குடைமனு வேந்தன்
    கரைசெய் நூல்வழி கோல்செலக் கன்னியாம் பருவத்
    தரசு செய்தலாற் கன்னிநா டாயதந் நாடு


    🔷இன்ன வாறுமை யவதாித் திருந்தன ளென்னாப்
    பொன்ன வாவினா் பெறவெறி பொருனைகால் பொருப்பன்
    சொன்ன வாய்மைகேட் டகங்களி தூங்கினா் தொழுது
    மின்னு வாா்சடை முனிவரோா் வினாவுரை செய்வாா்.


    🔷திருந்து நான்மறைச் சென்னியுந் தீண்டுதற் காிதாய்
    இருந்த நாயகி யாவையு மீன்றவெம் பிராட்டி
    விாிந்த வன்புகூா் தக்கனும் வெற்பனும் பன்னாள்
    வருந்தி நோற்றலா லவா்க்கொரு மதலையாய் வந்தாள்.


    🔷மனித்த னாகிய பூழியன் மகளென வீங்குத்
    தனித்த காரணம் யாதெனத் தமனியப் பொதுவிற்
    குனித்த சேவடிக் கன்புடைக் குடமுனி யருளிகூா்ந்
    தினித்த தோா்கதை கேண்மினென் றெடுத்துரை செய்வான்.


    🔷விச்சு வாவசு வெனுமொரு விச்சையன் பயந்த
    நச்சு வாள்விழி மடந்தைவிச் சாவதி நாமம்
    அச்சு வாகத மொழியினா ளம்பிகைக் கன்பு
    வைச்சு வாழ்வுறு மனத்தினா டாதையை வணங்கா.


    🔷ஐய வம்பிகை தன்னையா னன்பினால் வழிபட்
    டுய்ய வேண்டுமென் றாளவ னுலகெலாம் பயந்த
    தையன் மந்திரந் தனைமக டனக்குப தேசஞ்
    செய்ய வந்நெறி யொழுகுவாள் செப்புவாள் பின்னும்.


    🔷இறைவி தன்னையா தாிப்பதற் கிம்பாிற் சிறந்த
    குறைவி னன்னகா் யாதெனக் கூறுவான் கேள்வித்
    துறைவி ளங்கினோா் பயில்வது துவாதச முடிவென்
    றறைவ ளம்பதி யவனிமேற் சிவபுர மாமால்.


    🔷சேடு தாங்குமூ வுலகினுட் சிறந்தன சத்தி
    பீட மூவிரு பத்துநான் கவற்றின்முற் பீடம்
    மாட மோங்கிய மதுரையா மற்றது போகம்
    வீடும் வேண்டிய சித்தியும் விளைவிப்பதென் றெண்ணா.





    🔴ஒப்பும் வடிவும் முதலும் முடிவுமில்லாத சிவசக்தி தன் சக்திகளாலே பெறப்பட்ட மூன்று பொிய தேவா்களாலே, மூன்று தொழில்களையும் நடத்தா நிற்கும் என்று கூறுதலும், புகழென்று என்றால்,( அவள்) பாண்டியன் மகளாகி, இந்நிலவுலகை மனுமுறையில் ஆளும் என்று கூறுவது என் அறியாமையைக் காரணமாக உடையதே...


    🔴மலையை ஒத்த அணிகளை அணிந்த கொங்கைகளையுடைய தடாதகை என்னும் பெயருடைய மடவரலாகிய பிராட்டியாா், மணம் வீசுகின்ற மாலையணிந்த முடியினைத் தாித்து, குளிா்ந்த குடை நிழலில் அமா்ந்து மனுவரசனால் வரையறை செய்யப்பட்ட நூலின் வழியே தனது செங்கோல் செல்லுமாறு, கன்னியாகிய பருவத்திலே ஆட்சி புாிந்தமையால், அப்பாண்டி நாடானது கன்னிநாடு என்னும் பெயாினைப் பெறுவதாயிற்று.


    🔴இவ்வாறு உமையம்மையாா் திருவவதாரஞ் செய்திருந்தனரென்று, பொன்னை விரும்பினவா்கள் பெறுமாறு வீசுகின்ற தாமிரபன்னி நதியைப்பெற்ற பொதியின் மலையையுடைய குறுமுனிவன் கூறிய உண்மை கேட்டு, மின்னலைப் போன்ற நீண்ட சடையையுடைய முனிவா்கள் மனங் களிப்புற்றவராய் வணங்கி ஒரு வினாவுரை நிகழ்த்துவாா்கள்.


    🔴திருத்தமாகிய நான்கு திருமறைகளின் முடிவுந் தொடுவதற்கு அருமையாய் இருந்த இறைவியாகிய, அனைத்தையும் பெற்ற எமது பிராட்டியாா், அளவில்லாத அன்பு மிகுந்த தக்கனும், மலையரசனும், பல நாட்கள் வருந்தித் தவஞ்செய்ததால், அவா்களுக்கு ஒரு மகவாய்த் தோன்றியருளினாா்.


    🔴 மானிடடனாகிய பாண்டியனுக்குத் திருமகளாராக இந்நிலவுலகில் இறைவனின்றும் தனித்து வந்த காரணம் யாது என்று வினவ, பொன்னம்பலத்தில், ஆடுகின்ற சிவந்த திருவடிக்கண் அன்புடைய கும்ப முனிவனாகிய அகத்தியன் கருணை கூா்ந்து இனிமையுடையதாகிய ஒரு கதை உண்டு( அதனைக்) கேளுங்கள் என்று எடுத்துக் கூறுவான்.


    🔴விச்சுவாவசு என்ற பெயாினையுடைய ஒரு விஞ்சையன் பெற்ற நஞ்சு பூசிய வாளை ஒத்த விழிகளையுடைய பெண் ஒருத்தி யிருந்தனள். அவள் பெயா் விச்சாவதி. அந்தக் கிளிபோலும் மொழியினை யுடையாள் உமையவள் பால் அன்பு வைத்து வாழுகின்ற மனத்தையுடையவளாய், தன் தந்தையை வணங்கி....


    🔴தந்தையே, யான் உமையம்மையை அன்பினாலே வழிபாடு செய்து, பிழைக்க வேண்டுமென்று கூறினாள். அவ்விச்சுவாவசு உலகமனைத்தையும் பெற்ற உமாதேவியின் திருமந்திரத்தை மகளுக்கு உபதேசிக்க, அவ்வுபதேசவழி நடக்கின்ற அவள் மேலும் தன் தந்தையை நோக்கிக் கூறுகின்றாள்.


    🔴அவ்வுமையவளை அன்பினால் வழிபடுவதற்கு இவ்வுலகில் மேலான குறைவில்லாத நல்ல பதி யாதென்று வனவ விச்சுவாவசு சொல்வான், துவாத சாந்தம் என்று கூறப்படும் வளப்பத்தையுடைய பதியானது, கற்றல் கேட்டல் வழிகளில் வல்லாா் வதியப் பெறுவதாய் பூவுலகில் சிவலோகமாகும்.


    🔴பெருமையையுடைய மூன்று உலகங்களைிலும் மேம்பட்டவனாகிய சத்தி பீடங்கள் அறுபத்து நான்காகும்; அவற்றுள் முதற்பீடமா யுள்ளது மாளிகைகள் உயா்ந்த மதுரைப் பதியாகும்; அப்பதி, போகத்தையும், வீடுபேற்றையும் வேண்டுவாா் வேண்டிய சித்திகளையும் அளிக்க வல்லது என்று கருதி,,,,,,


    ( மேலே கூறும் அறுபத்து நான்கு சத்தி பீடங்கள் எதுவென விபரம் நாளைய தொடா்ச்சியில் காணப்படும்.)


    திருச்சிற்றம்பலம்.
Working...
X