Announcement

Collapse
No announcement yet.

SAVE OUR COMMUNITY

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: SAVE OUR COMMUNITY

    ஸ்ரீ எல்லா போஸ்ட்டையும் படித்தபிறகு நிதர்சனம் அறிந்து மனம் கனத்துப்போய்விட்டது யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே என்ற் வரிகள் தான் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வாத்யார் ஸ்வாமிகள் குறித்து எதிர் மறையாக இவ்வளவு அழுத்தமான எண்ணங்கள் தேவையில்லை என்பது என் கருத்து அவர்களுக்கும் ஒரு லௌகீக வாழ்க்கை உள்ளதையும் அவர்களூக்கு நிலையான வருமானம் இல்லை என்பதியும் நாம் மனதில் கொள்ளவேண்டும். இவர்களூக்கு ஒரு அசோசியேஷன் ஏற்படுத்தி நிலையான நியாயமான வருமானத்திற்கும் நிம்மதியான வாழ்க்கைக்கும் ஏற்பாடு செய்வது மிகமிக அவசியமனதும் அவசரமானதுமாகும்.வூர் கூடி தேர் இழுக்க முயற்சிப்போம்

    Comment


    • #17
      Re: SAVE OUR COMMUNITY

      Bmbc admin மாமா நமஸ்காரம் ... தங்கள் மின் அஞ்சல் கடிதத்தை பார்த்தேன். தங்கள் அனுபவம் எனக்கு கிடையாது எனினும் என் தாபத்தை தெரியப்படுத்த கடைமைபட்டுள்ளேன். "தாங்களே 'யார் எந்த வாத்யார் தவறு செய்கிறாரோ, துணிவிருந்தால் நேரடியாக அந்த வாத்யாரிடம் பேசி நீர் செய்வது தவறு என்று அவரைத் தட்டிக்கேளுங்கள்" என்று கூறுவது சரியாகப்படவில்லை. நாம் பகிர்ந்து கொள்ளும் இந்த விவரங்கள் சமூக தளங்களின் வழியே பரவுவதன்மூலம் நம்முடைய பரிவர்த்தனைகள் நம் சமுதாயத்தினரிடையே சகஜமாக பரபுறையாக வீசப்படுகிறது. வைதீகத்தொழில் தற்போது நம்முடைய விஷேஷ தொழிலாக மாறி வைதீகத்தை க்ரமமாக பயின்று வந்தவர்களும் சரி ப்ரயோகமாக கற்றுக்கொண்டு வந்தவர்களும் சரி பணத்திற்காகவே இத்தொழிலை அவகாசவாதி போல்
      செய்து வருகிறார்கள். Demand செயது தக்ஷிணை வாங்குவது தக்ஷிணை என்பது Market நிலவரம் என்பது தனியாக சந்தடிசாக்கில் ஆட்டோ fare கேட்பது போன்ற வழக்கங்களே நம் சமுதாயதில் இழிவை உண்டாக்குகிறது. இந்த மாதிரியாக உள்ள வாத்தியார்களுக்கும் வேதமே கற்காமல் ப்ராம்மண ஜாதி என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் வித்யாசம் என்ற பாகுபாடே இல்லாமல் இருக்கிறது. இது குறித்து நான் மேலும் விவரிக்க விரும்பவில்லை.


      Soundarajan50 who is also Admn. For this forum கூறியதும் தற்க்காலத்திற்கு ஒத்துவராது என்பது என் எண்ணம். அவர் கூறியதாவது "அவர்களுக்கும் ஒரு லௌகீக வாழ்க்கை உள்ளதையும் அவர்களூக்கு நிலையான வருமானம் இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்". இது ஒற்றுக்கொள்ள வேண்டிய விஷயமே! அதே போன்று அவர்களும் நம் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோர்களுக்கு ஏதுவாக உதவும் எண்ணத்துடன் முன் வரவேண்டும். நம் சமுதாயத்தில் நிறைய அசோசியேஷன் உள்ளது ஆனால் நம்சமுதாயத்தினரிடையே ஒற்றுமை என்ற எண்ணம் துளிர் வராமலே சுயநலமாக மாறிவிட்டமயால் நாம் அவதிக்குள்ளாகிவிட்டோம். மற்ற இனத்தவர்களிடம் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் வந்தாலும் ஊர் கூடி தேர் இழுக்க முயற்சிப்போமா என்பதும் கேள்விக்குறியே?

      தக்ஷிணை வாங்கதையே பாவம் என்று நினைக்கும் வேதவிற்ப்பண்ணர்கள் இன்றும் நம் சமுதாயத்தில் இருக்கிறார்கள். ஜோஸ்யம் என்ற அடிப்படையில் இரண்டு விதமாக சம்பாதிப்பதையும் நாம் இன்று காணமுடிகிறது.


      இந்த இணயதளத்தின் மூலம் So Called வாத்யார் எனப்படும் மனிதர்களின் எண்ணிக்கையை முறியடிக்க முடியும் என்பது என் நம்பிக்கை.

      Please treat this message in right spirit. With the increasing number in so called Vadhyar creating bad name to the real Vedha Pundits.

      Comment


      • #18
        Re: SAVE OUR COMMUNITY

        ஶ்ரீ:
        நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

        என்ன ஆனாலும் வைதீகத்தைக் கற்றக்கொள்வதில்லை என்று அடம் பண்ணுகிறவர்களை விட
        சிரமம் பாராமல் கற்றுக்கொண்டு பண்ண விரும்புகிறவர்களுக்கு தேவையான கட்டணத்தைப்
        பெற்றுக்கொண்டு பண்ணுகிறவர்களே மேலானவர்கள்.
        அது ஆட்டோ கட்டணமோ, வழிப்பறிக் கொள்ளையோ எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தரம்தாழ்ந்து
        எழுதுங்கள் தவறில்லை, ஆனால் அடியேன் பார்வையில் அவர்களே என்றும் உயர்ந்தவர்கள்.

        பிறர் செய்யும் தவறை உண்மையே ஆயினும் நேரடியாகக் கேளாமல் மற்றவர்களிடம் கூறுபவன்
        தவறுசெய்தவனின் பாபத்தைக் காட்டிலும் அதிகமாக பாபம் செய்தவன் ஆவான் என்று சாஸ்த்ரம்
        சொல்வதாக அடியேன் குருநாதர் கூறுவார்.


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #19
          Re: SAVE OUR COMMUNITY

          ஶ்ரீ:
          வைதீகம் கற்றுக்கொள்ளும்போது அடியேனுடைய குருவிடம் கேட்டதும், அவர் அதற்கு பதில் சொன்னதும் நினைவிற்கு வருகிறது:

          அடியேன்: "ஸ்வாமின், தேவரீரை எல்லாரும் ஸ்பென்சர் வாத்யார் என்று சொல்கிறார்களே"?!
          வாத்யார்: "எதற்கு அப்படிச் சொல்றா"?
          அடியேன்: "தேவரீர் எல்லார்கிட்டயும் நிறைய வாத்யார் தக்ஷிணை கேட்டு வாங்கறதா சொல்றா"!
          வாத்யார்: "சொல்லட்டுமே, நிறைய வாங்கினா நிறைய வாங்கறேன்னு சொல்லுவா, சொல்லட்டுமே
          எதையானும் அவாளுக்குத் தெரியாம எடுத்துண்டு வந்துட்டேன், திருடிட்டேன், ஏமாத்திட்டேன்னு சொன்னாதான் தப்பு.
          நல்ல வாத்யார் இல்ல, நன்னா பண்ணி வைக்கல இப்படியெல்லாம் பேர் வாங்கக்கூடாது, நிறைய வாங்கரார்னு சொல்றது நல்லபேர்தான்"
          என்றார்.


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #20
            Re: SAVE OUR COMMUNITY

            நமஸகாரம்




            தாங்கள் கூறுவது அனைத்தும் பாராட்டுக்குட்பட்டதே. நான் என் தரமத்தை இன்றும் கடைபிடித்து வருகறேன் என் வாத்யாரிடம் பேரம் ஆடுவதும் கிடையாது ஏனெனில் நம் சமுதாயம் சீர்குலைந்து வருவது தெட்டத்தெளிவாக அறிய முடிகிறது காரணம் போலி வாத்யார் தொகை அதிகரித்து வருகிறார்கள். இவ்வாறு எப்பொழுது வைதீகம் பரம்பரையாக வளராமல் தொழிலாக அதுவும் போலி வாத்யார் தொகை அதிகரிதப்பு ஜோஸ்யம் பித்ரு சாபம் என்ற விளம்பரத்தின் அடிப்படையில். தாங்கள் வேதம் படித்த விர்ப்பண்ணர் என்பதை என்னால் அறிய முடிகிறது. இருப்பினும் தாங்கள் தங்களது முதல் செய்தியில் குறிப்பிட்டுள்ள படி குறிப்பிடாமல் விவேகமாக கூறியிறுப்பது வருத்தத்தை உண்டாக்குகிறது. நமது தர்மத்தை காக்கவேண்டியது வேதம் பயின்றவர்களது கடைமையே? என்னிடம் வேதம் பயில்வதற்க்கான ஆர்வம் ஏற்ப்படவேண்டும். நான் அலுவலக தொழிலாளி தாங்கள் வேதம் படித்தவர். அலுவல தொழிலாலர்கள் நியமணம் அவரவர் தகுதிப்பேற்க நியமிக்கப்படுவார்கள். என தகுதி என்னவோ அதன் பணியே என்னால் செய்ய இயலும். என் தொழிலை விட்டு இடையில் வேதம் பயின்று இன்றய நிலவரத்தில் உள்ள போட்டியில் நம் சமுதாயத்தில் தங்களுக்கு நிகராக இடம் பிடிப்பது இழிவான எண்ணமாகும். இன்றய தினத்தில் தற்க்காலிக உபாத்யாயர்கள் இருக்கும் உத்யோகம் பறி போனதின் கட்டத்தில் உங்களைப்போல் உள்ளவர்களிடம் எடுபிடியாக இருந்து தங்களை போன்றவர்களை விட்டெறிந்து பணம்பாற்கிறார்களே அவர்களை குறித்து என் உளமார்ந்த கருத்தை கூறுகிறேன். எனது முன்னோர்களும் வேதம் படித்த கனபாடிகளாவார்கள். இன்றும் நாறாயண கணபாடிகள் என்பவர் பரமாச்சார்யாரால் மதிக்கப்பட்டு மச்சிலிபட்டிணத்தில் உள்ள வேதபாடசாலையை நிர்வகித்து வேதமே தனது உயிர் நாடி என்று எண்ணி கடைசி மூச்சு வெளியேறும் வரை வேதத்துவணியுடன் உயிர் நீர்த்தார். இன்றும் அவரிடம் வேதம் பயின்றவர்கள் பல பேர்கள் கூடி அவர் ஸரார்த திதி அன்று அவர் ஞாபகார்த்தமாக வேதம் பயின்ற கணபாடிகளுக்கு ஸன்மானம் செய்து வருவது பெறுமைக்குறியது. அவருடைய சிஷயர் ஒருவர் வேதபாடசாலை ஒன்றிணையும் நடத்திவருகிறார். 25 மாணவர்கள் வேதம் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. இனி இந்த சர்ச்சையை வளர்க்கவேண்டாம்.

            Comment


            • #21
              Re: SAVE OUR COMMUNITY

              வைதீகத்தொழில் தற்போது நம்முடைய விஷேஷ தொழிலாக மாறி வைதீகத்தை க்ரமமாக பயின்று வந்தவர்களும் சரி ப்ரயோகமாக கற்றுக்கொண்டு வந்தவர்களும் சரி பணத்திற்காகவே இத்தொழிலை அவகாசவாதி போல்
              செய்து வருகிறார்கள். Demand செயது தக்ஷிணை வாங்குவது தக்ஷிணை என்பது Market நிலவரம் என்பது தனியாக சந்தடிசாக்கில் ஆட்டோ fare கேட்பது போன்ற வழக்கங்களே நம் சமுதாயதில் இழிவை உண்டாக்குகிறது.
              ஶ்ரீ:
              மேற்கண்ட வார்த்தகள் தங்களுடையதுதானே?
              அதற்கு என்ன அர்த்தம்? முறையாக கற்வர்கள், ப்ரயோகமாகக் கற்றவர்கள் அனைவரையுமே சாடியுள்ளீர்கள்
              ஆட்டோ பேர் வாங்குவது போல வாங்குகிறார்கள் என்று?!

              ப்ரயோகம் பண்ணி வைக்க முழு வேதத்தையும் அத்யயனம் செய்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
              சொல்லப்போனால் முழுமையாக அத்யயனம் செய்தவர்கள் பெரும்பாலும் உபாத்யாயம் வைத்துக்கொள்வதில்லை.
              எந்த ப்ரயோகம் பண்ணி வைக்கிறோமோ அந்த ப்ரயோகத்திற்குத் தேவையான வேத பாகங்களை மட்டும் கற்றுக்கொண்டு
              பண்ணி வைப்பதில் எந்தத் தவறுமில்லை.

              பணத்துக்காகப் பண்ணி வைக்காவிட்டாலும், தெரிந்து வைத்துக்கொண்டால் பணி நிமித்தமாக வாத்யார் இல்லாத இடத்திற்குச்
              செல்ல நேரும்போது நமக்கும் உபயோகமாக இருக்கும், நெருக்கடி நேரத்தில் ஒரு உதவியாக யாருக்காவது செய்து வைக்கலாம்.

              எப்படிப்பட்ட உத்யோகத்தில் இருப்பவர் ஆயினும் ப்ராம்மணர் அனைவரும் கீழ்கண்டவற்றை மட்டுமாவது தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்
              என்பது அடியேன் அபிப்ராயம்: (செய்யவேண்டும் என்று சொல்லவில்லை).
              1. கச்சம் கட்டிக்கொள்ளதல், முறைப்படி புண்ட்ரம் தரித்தல்
              2. ஸந்தியாவந்தனம்
              3. ப்ரம்மச்சாரிகள் ஸமிதாதானம், க்ருஹஸ்தர்கள் ஔபாஸனம்
              4. லகு ஆராதனம்
              5. பூணல் மாற்றிக்கொள்ளுதல்
              6. புண்யாஹவாசனம்
              7. ச்ராத்த ப்ரயோகம்
              8. சுருக்கமான தளிகை
              9. லகுவான தர்ம சாஸ்த்ரம், தீட்டு விஷயம்.
              10. எழுத்துக்கூட்டியாவது ஸம்ஸ்க்ருதம் வாசிக்கத் தெரியவேண்டும்.

              போலி வாத்யார்களைப் பற்றித் தெரிவித்துள்ளீர்கள்,
              எல்லாவற்றிலும் போலிகள் இருக்த்தான் செய்வார்கள்
              போலிகளை நாங்கள் வாத்யாராகக் கருதுவதே இல்லை.
              போலிகளை ஆதரிப்பதும், வாழவைத்துக்கொண்டிருப்பதும்
              ஆத்துவாத்யார் என்று கற்றறிந்த வித்வானை வைத்துக்கொள்ளாமல்
              தேவையான சமயத்துக்கு அகப்பட்டவர்களை அமர்த்திக்கொள்ளும் க்ருஹஸ்தர்கள்தான்.


              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment


              • #22
                Re: SAVE OUR COMMUNITY

                ப்ரயோகம் பண்ணி வைக்க முழு வேதத்தையும் அத்யயனம் செய்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
                .
                எந்த ப்ரயோகம் பண்ணி வைக்கிறோமோ அந்த ப்ரயோகத்திற்குத் தேவையான வேத பாகங்களை மட்டும் கற்றுக்கொண்டு
                பண்ணி வைப்பதில் எந்தத் தவறுமில்லை.

                பணத்துக்காகப் பண்ணி வைக்காவிட்டாலும், தெரிந்து வைத்துக்கொண்டால் பணி நிமித்தமாக வாத்யார் இல்லாத இடத்திற்குச்
                செல்ல நேரும்போது நமக்கும் உபயோகமாக இருக்கும், நெருக்கடி நேரத்தில் ஒரு உதவியாக யாருக்காவது செய்து வைக்கலாம்.
                மிக அருமையான தீர்வு விவாதத்தின் முக்யத்வம் நன்கு விளங்கியது. நன்றி பங்கு கொண்டனைவருக்கும்.

                Comment


                • #23
                  Re: SAVE OUR COMMUNITY

                  உங்கள் பட்டியலில் வரித்திருக்கும் 10ம் நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் நடைமுறையில் வாத்தியார் என்று ஒருவரையே வைத்துக்கொண்டு அமல் படுத்தி இருக்கிறார்கள். எப்போழுது நாம் கால நிர்ணயத்தின் காரணத்தினால் பட்டிணங்களுக்கு இடம் பெயர்ந்து மேற்கிந்திய காலாசாரங்களை கடைபிடித்து அலுவலக தொழிலில் கைகட்டி வேலை பார்க்க ஆரம்பித்தோமோ அன்றய தினமே நமது கலாசாரம் பெயரளவில் மாறி நம் சமுதாயத்தினர்களே போட்டி என்ற கருவியை வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.


                  தாங்கள் கூறுவது என்ன 'எந்த ப்ரயோகம் பண்ணி வைக்கிறோமோ அந்த ப்ரயோகத்திற்குத் தேவையான வேத பாகங்களை மட்டும் கற்றுக்கொண்டு பண்ணி வைப்பதில் எந்தத் தவறுமில்லை'.
                  ப்ரயோகமாக கற்றுக்கொண்டு சமுதாயத்திற்கு உதவும்படி நடந்து கொள்ளவேண்டுமே தவிர செய்யும் தொழிலை தவறாக அப்பட்ட பிழையுடன் மற்றவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் நம்மை கவனிப்பார்களே என்ற பயம் இல்லாமல் அதர்மமாக செய்துவிப்பதே நம் சமுதாயம் அழிந்து வருவதற்க்கான முக்கிமான காரணமாகும். கல்யாண காரியத்தில் முக்கியமாக செய்ய வேண்டியவைகளைக்கூட செய்துவிப்பதுகிடையாது. ஆனால் கல்யாண வீட்டுக்காரர்கள் செய்யும் ஆடம்பர செலவுகளை மட்டுமே சுட்டிக்காண்பித்து தங்கள் பிழைகளை மறைத்துக்கொள்கிறார்கள். ஒரே நாள் கல்யாணம் ஆனால் வாத்யார் சம்பாவனை 3 நாட்களுக்கு. இதில் இரு தரப்பினருமே தவறு செய்வதாக உள்ளது. இதே போல் தாயாதிகள் செய்யும் பீம தர்ப்பணத்திற்கு ரூ 1500 முதல் ரூ 2000 கேட்பது ஒருவர் காலமானால தகன காரியங்களுக்கு தனி நித்யவதிக்கு தனி 10ம் நாளுக்கு தனி 11, 12 நாட்களுக்கு தனி சுப ஸ்ரீ காரியத்திற்கு தனி இப்படி தனித்தனியாக பணம் வாங்கி தான சாமான்களை இருப்பதையே வைத்தே சமாளிப்பது இப்படித்தான் தற்க்காலத்தில் நடந்துவருகிறது. அதுவும் தவிர தானம் வாங்கும் அளவிற்கு ப்ராம்மணர்களும் கிடைப்பதில்லை.


                  இளைங்கர்களுக்கு திருமணமாகாமல் வேதம் பயின்றவர்கள உள்பட இருக்கும் நிலை வரும்காலத்தில் நமது சமுதாயத்திற்கு மிகப்பெரிய விபரீதமாக அமையும் நிலை உள்ளது. மதம் மாற்றாருடன் நமது சமுதாயத்தினர்கள் திருமணம் செய்துகொள்வது பெண்கள் பெற்றோர்கள் நடந்து கொள்ளும் விதம் இவ்வாறு நமது சமுதாயம் சீர்குளைந்து வருகிறது தெட்டதெளிவாக காணமுடிகிறது. இந்து தர்மத்தின் நிலை என்னவாகும்?

                  Comment


                  • #24
                    Re: SAVE OUR COMMUNITY

                    ஶ்ரீ:
                    சோகால்டு ப்ராம்மணர்களுக்கு
                    சோகால்டு வாத்யார்களே போறும்
                    சோகால்டு ப்ராம்மணர்களிடம் எவ்வளவு, எப்படி வாங்கினாலும் தவறில்லை.
                    கல்யாணத்தில் என்னென்ன மந்திரங்கள் உள்ளன அவற்றில் எவற்றையெல்லாம் விட்டார்
                    என்று தெரியாதவர்களெல்லாம் அதுபற்றிப் பேசுவது சரியல்ல.

                    எவ்வளவு வேண்டுமானாலும் ஆடம்பர செலவு செய்வோம்
                    வாத்யாருக்கு மட்டும் கொடுக்க மட்டும் கீழ்த்ரமாக பேரம்பேசுவோம்
                    என்பவர்கள் இருக்கும்வரை ஒருநாளும் வைதீகம் வளரவ வாய்ப்பில்லை.


                    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                    Encourage your friends to become member of this forum.
                    Best Wishes and Best Regards,
                    Dr.NVS

                    Comment


                    • #25
                      Re: SAVE OUR COMMUNITY

                      Short but a fitting reply. There seems to be no desire to learn minimum required rituals. When complaining about Vaadhyaars, as quoted" it has been a practice to get it done by vaadhyaars..."indicates that even after knowing some vaadhyaars are not doing properly we dont want to learn the prayogams. There is no use incomplaining.but seek a solution. If Vedhabhavans are there where you reside,approach them for vaafhyasrs. If not let those eho can learn these things instead of watching serials or movies . By helping friends and relatives in making them performin rituals we may perpetuate our samskara.
                      Let us not whine, but learn ordo somethingconstructive.
                      Faults are NOT ONLY WITH VAADHYAARS
                      Varadarajan

                      Comment

                      Working...
                      X