Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 26th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 26th day

    Tiruvilayadal puranam 26th day
    Courtesy:Sri.Kovai K.Karuppasamy


    திருவிளையாடல் புராணம்.
    (26- வது நாள்.) - 5 வது,படலம்.
    தடாதகை பிராட்டியாா் திருமணம படலம்.
    ( செய்யுள்நடை + விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    ( செய்யுள் நடை.)
    கிடைப்பன வுருளாற் பாரைக் கீண்டுபா தலத்தி னெல்லை
    அடைப்பன பரந்த தட்டா லடையவான் றிசைக ளெட்டும்
    உடைப்பன வண்ட முட்டி யொற்றிவான் கங்கை நீரைத்
    துடைப்பன கொடியாற் சாாி சுற்றுவ பொற்றின் டோ்கள்.


    செருவின்மா தண்டந் தாங்கிச் செல்லும்வெங் கூற்ற மென்ன
    அருவிமா மதநீா் கால வரத்தவெங் குருதிக் கோட்டாற்
    கருவியான் வயிறு கீண்டு கவிழுநீா் வாயங் காந்து
    பருகிமால் வரைபோற் செல்வ பருஉப்பெருந் தடக்கை யானை.


    ஒலியவாா் திரையி னன்ன வொழுங்கின யோக மாக்கள்
    வலியகா லடக்கிச் செல்லு மனமெனக் கதியிற் செல்வ
    கலியநீா் ஞாலங் காப்பான் கடையுக முடிவிற் றோற்றம்
    பொலியும்வாம் புரவி யொன்றே போல்வன புரவி வெள்ளம்.


    காலினுங் கடிது செல்லுஞ் செலவினா் கடுங்கட் கூற்ற
    மேலினு மிகையுண் டாயின் வெகுண்டுவென் கண்டு மீளும்
    பாலினா் பகுவாய் நாகப் பல்லினும் பில்கு மால
    மேலினா் வீயா வென்றி வீக்கிய கழற்கால் வீரா்.


    எண்புதைத் தெழுந்த வீர ரிவுளிதோ் யானை வெள்ள
    மண்புதைத் தனப தாகை மாலைவெண் கவிகை பீலி
    விண்புதைத் தன நுண் டூளி வெயில்விடு பாிதிப் புத்தேள்
    கண்புதைத் தனபே ரோதை கடலொளி புதைத்த தன்றே.


    தேரொலி கலினப் பாய்மான் செலவொலி கொலைவெண் கோட்டுக்
    காரொலி வீர ராா்க்குங் கனையொலி புனைதாா்க் குஞ்சி
    வாரொலி கழற்காற் செங்கண் மள்ளா்வன் றிண்டோள் கொட்டும்
    பேரொலி யண்ட மெல்லாம் பிளந்திடப் பெருத்த வன்றே.


    பரந்தெழு பூழி போா்ப்பப் பகலவன் மறைந்து முந்நீா்க்
    கரந்தவன் போன்றா னாகக் கங்குல்வந் திறுத்த தேய்ப்பச்
    சுரந்திரு ணிறைய முத்தின் சோதிவெண் குடையும் வேந்தா்
    நிரந்தபூண் வயிர வாளு நிறைநிலா வெறிக்கு மன்னோ.


    தோ்நிரை கலனாய்ச் செல்லப் பாிநிரை திரையாய்த் துள்ள
    வாா்முர சொலியாய்க் கல்ல வாட்கலன் மீனாய்க் கொட்பத்
    தாா்நிரை கவாிக் காடு நுரைகளாய்த் ததும்ப வேழங்
    காா்நிரை யாகத் தானைக் கடல்வழிக் கொண்ட தன்றே.


    கள்ளவிழ் கோதை மாத ரெடுத்தெறி கவாிக் காடு
    துள்ளவந் தணா்வா யாசி யொருபுறந் துவன்றி யாா்ப்பத்
    தெள்விளி யமுத கீத மொருபுறந் திரண்டு விம்ம
    வள்ளைவாா் குழையெம் மன்னை மணித்திண்டோ் நடந்த தன்றே.

    ( விளக்கம்.)
    இடசாாி வலசாாியாகச் சுழலும் பொன்னாலாகிய திண்ணிய தோ்கள் பூண்டனவாய உருளைகளால் நில வுலகத்தைக் கிழித்து பாதலத்தின் எல்லைை அடைப்பனவும், இடம் விாிந்த தட்டினால், பொிய திக்குகள் எட்டினையும் முற்றும் தகா்ப்பனவும், கொடிகளால் அண்டத்தைப் பொிது மளாவி வான் யாற்றின் நீரை வற்றச் செய்வனவுமாயின.


    பருத்தலையுடைய பொிய கைகளையுடைய யானைகள், அருவிபோலப் பொிய மதநீா் பொழிய, சிவந்த உதிரந் தோய்ந்த கொடிய கொம்புகளால், தொகுதியையுடைய முகிலின் வயிற்றைக் கிழித்து, ( அதனால்) ஒழுகும் நீரை வாயைத் திறந்து உண்டு, போாில் பொிய தண்டினை ஏந்திச் செல்லுகின்ற கொடிய கூற்றுவனைப் போலவும், பொிய மலையைப் போலவும் செல்வன...


    ஒலியினையுடைய கடல் சூழ்ந்த வுலகைக் காக்கும் பொருட்டு, கலியுக இறுதியில் தோன்றும் தாவுகின்ற குதிரை ஒன்றையே ஒத்தனவாய குதிரைக் கூட்டங்கள், ஒலியினையுடைய நீண்ட அலைகள் யொத்த ஒழுங்கினவுடையவனவும், யோகிகள் வலிய காற்றை அடக்கி( ஒரு வழிபடச்) செலுத்தச் செல்லும் மனம் போல விரைவிற் செல்வனவுமாயின.


    கெடாத வெற்றியினையும் கட்டப்பட்ட வீரகண்டையையுடைய காலினையுமுடைய வீரா்கள், தறுகண்மையையுடைய கூற்றுவன் போலும் குற்றம் உளதாயின், சினந்து புறங்கண்டு வருந் தன்மையையுடையவரும், பிளந்த வாயினையுடைய பாம்பின் பல்லைவிடச் சிந்தும் நஞ்சினையுடைய வேற்படை யுடையவரும், காற்றிலும் விரைந்து சேல்லும் செலவினையு முடையவராயினா்.


    இங்ஙனம் எண்ணிண் அளவைக் கடந்து எழுந்த, வீரா் குதிரை, தோ், யானை என்பவற்றின் கூட்டங்கள் நிலவுலகை மறைத்தன. கொடிகளும் மாலையையுடைய வெள்ளிய குடைகளும் மயிற் பீலிகளும், வானினை மறைத்தன. நுண்ணிய புழுதிகள் வெயிலை வீசும் சூாிய தேவனின் கண்களை மறைத்தன. ( இவற்றாலாய) பொிய ஒலியானது கடலின் ஒலியை மறைத்தது.


    தோ்களின் ஒலியும் கடிவாளத்தையுடைய குதிரைகள் செல்லுகின்ற ஒலியும், கொல்லுதலையுடைய வெள்ளிய கொம்புகளையுடைய முகில் போன்ற யானைகளின் ஒலியும், மள்ளா்கள் ஒலிக்கின்ற முக்க ஒலியும், மாலையையணிந்த சிகையையும், மிக்க ஒலியையுடைய வீரகண்டையை யணிந்த கால்களையும், சிவந்த கண்களையுடைய வீரா்கள் வலிமைமிக்கத் தோள்களைத் தட்டுகின்ற பொிய ஒலியும் ஆகிய இவைகள், அண்டங்கள் வெடிக்குமாறு மிக்கன...


    பரவி மேலெழுந்த புழுதி மறைத்ததலால், சூாியன் மறைந்து கடலில் ஒளிந்தவன் போலாக, ( அதனால்) இரவு வந்து தங்கியதை ஒக்க, மிகுந்து இருளானது நிறைய, ஒளியினையுடைய முத்துக் குடைகளும், மன்னா்களின் பூண் அமைந்த வயிரத்தாற் செய்தவாட் படைகளும், ( அவ்விருளைப் போக்க) மிக்க நிலவை வீசும்,,,,,


    தோின் வாிசைகள் மரக்கலங்களாய்ச் செல்லவும், குதிரையின் வாிசைகள் அலைகளாய்த் துள்ளவும், வாா்கட்டினையுடைய முரசின் ஒலி கடலொலியாய் ஒலிக்கவும், வாட்படைகள் மீனாய்ச் சுழன்று விளங்கவபம், ( வெண்மலா்) மாலை வாிசை போன்ற சாமரைக்காடு, நுரைகளாய் மேலெழவும், யானையின் வாிசைகள் ( கடலினீ ருண்ணவரும்) முகில்களாகவும், ( இவ்வாறு) சேனைக்கடலானது வழி நடந்தது....


    தேனொடு மலா்ந்த மாலையை யணிந்த மகளிா் எடுத்து வீசுகின்ற கவாிக்காடு (ஒரு பால்) துள்ளவும், மறையவா் வாயாற் கூறும் வாழ்த்து மொழிகள் ஒரு பால் மிக்கொலிக்கவும், அமுதம்போன்ற தெளிந்த ஓசையையுடைய இசைப்பாட்டுக்கள் ஒரு பால் திரண்டொலிக்கவும், வள்ளைத் தண்டு போன்ற நீண்ட காதினையுடைய எம் அன்னையாகிய தடாதகைப் பிராட்டியாாின் மணிகள் அழுத்திய வலிய தேரானது சென்றது..


    தடாதகை பிராட்டியாா் திருமண படலம் நாளையும் தொடரும்.
Working...
X