கோவணாண்டி பாக்கியசாலி
j.k. sivan


ஆதி சங்கரரின் இந்த ஐந்து ஸ்லோகங்கள் கௌபீன பஞ்சகம் எனப்படும். ஒரு மனிதன் மானத்தை மறைக்க வேண்டிய அளவு துணி ஒரு கோவணம் தான். உலகத்தை துறந்த, வாழ்க்கையை துறந்த ஞானிகள் விரும்பி அணிந்தது கோவணம் தான். ஆண்டிகளையே கோவணாண்டி என்று தான் சொல்வது. முருகனே மாம்பழம் சமாச்சாரத்தில் கோபம் கொண்டு கைலாசத்தை துறந்து, பெற்றோரை துறந்து பழனியில் கோயில் கொண்டபோது அவன் தோற்றம் இன்றும் கோவணாண்டி தானே. இதன் ஆங்கில பொருளுரைத்தவர் எனது நண்பர் மதிப்புக்குரிய ஸ்ரீ பி. ஆர். ராமச்சந்தர்.


நிறைய சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் இவ்வாறு கோவணதாரிகளாக, வடமொழியில் கௌபீன தாரிகளாக வாழ்ந்தார்கள். ரமணர் சேஷாத்திரி ஸ்வாமிகள் பட்டினத்தார் எல்லோருமே அப்படித்தானே. மஹா பெரியவாளும் அப்படி இருந்த ஒரு படம் இத்துடன் இணைத்துள்ளேன்.


எனக்கு தெரிந்து இளம் வயதில் நிறைய வயல் வெளிகளில் வேலை செய்பவர்களும் கூட கௌபீன தாரிகளாகத்தான் வாழ்ந்தார்கள்.


Kaupeena Panchakam
By Adi Shankara
[The Pentad of the Loin Cloth]
Translated by P. R. Ramachander


[This is a very short poem with five stanzas which glorifies the life of a sannyasi (Ascetic). An ascetic in India is supposed to give away all his wealth before entering in to renunciation and get a loin cloth (kaupeena) from his teacher. That would be his only property.]


Vedantha Vakhyeshu Sada ramantho,
Bhikshannamathrena trishtimantha,
Vishokamantha karane charantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha 1


Always thinking about words of philosophy, Always getting satisfied with food got by begging,And always without trace of sorrow, thinking of the inner self, The man with the loin cloth is indeed the lucky one.
வேறென்ன வேண்டுமடா. என் மனம் எல்லாம் வேதாந்த விசாரங்களை பற்றி நிரம்பி இருக்கிறது. நா ன் என்ன பசியாலா வாடுகிறேன், ஒரு கவளம் அன்னம் என் கப்பரையில், விழுகிறதே கிடைத்ததை மகிழ்ச்சியோடு உண்பவனுக்கு தனியாக எது ருசி எதற்கு ருசி. எனக்கு ஒரு கவலையும் இல்லை, நான் சந்தோஷத்தில் மிதக்கிறேன். அந்த பகவான் என் சித்தத்தை கொள்ளை கொண்டு என்னை சதானந்தத்தில் ஆழ்த்தும்போதே எனக்கென்ன குறை?- இப்படிச் சொல்லும் இந்த கோவணதாரியல்லவோ ஈடிணையற்ற பாக்கியவான். பெரும் அதிருஷ்ட காரன், ,குபேரனும் கூட.....


Moolam tharo kevalam ashrayantha,
Panidhvayam bhokthuma manthrayantha,
Kandhamiva sreemapi kuthsayantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha 2


Always depending on only roots and plants,Always taking only two hands full of food,And always thinking of wealth as a torn piece of cloth,The man with the loin cloth is indeed the lucky one.


வீடு மனைவி சமைக்க அடுப்பு, வெளியே சாப்பிட ஓட்டல் எதுவும் வேண்டாமய்யா. தொப்பென்று மரத்திலிருந்து விழும் காய் கனி, பூமியில் கிடைக்கும் கிழங்கு வகைகள், இலைகள், கொடிகள் இது போதும். ஆடு மாடு மாதிரி உணவு எனக்கும் .. இரு கை குவித்து அதில் என்ன விழுகிறதோ, கிடைக்குமோ அதுவே வயிறு நிரம்ப போதுமானது. ஒரு கையகல கிழிசல் துணி அதுவே என் வஸ்திரம். இதற்கு மேல் எதற்கு செல்வம் உண்மையாகவே சொல்லுங்கள் '' -- என்கிறாரே இந்த கௌபீன வந்தர் இவரல்லவோ பாக்கியவந்தர், செல்வந்தர்


Swananda bhava pari thushti mantha,
Sushantha sarvendriya vruthi mantha,
Aharnisam brahma sukhe ramantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha 3


Always getting elated in his own thoughts, Always peacefully controlling all his senses,And always drowned in the pleasure of Brahmam, The man with the loin cloth is indeed the lucky one.


எனக்கு யார் கூடவும் பேசவேண்டாம். தனியாக இருக்க விட்டால் அதுவே மஹா சந்தோஷம். எனக்குள்ளேயே எனக்கு ஆனந்தம் இருக்கும்போது வெளியே எங்கே யாரிடம் அதை தேடவேண்டும் ? என்னை எதுவும் அணுகாது நான் எதையும் நெருங்காது என்னை அடக்கி ஆள்கிறேன் . எனக்கு நானே ராஜா இல்லையா இப்படிப் பட்ட ப்ரம்மானந்தத்தில் யார் என்னைப் போல் திளைக்க முடியும் ? என்கிறார் கௌபீனவந்தரான ஒரு பாக்கியசாலி தனவந்தர்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Dehadhi bhavam parivarthayantha,
Swathmana athmanyavalokayantha,
Naantha na Madhyam na bahi smarantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha 4


Always witnessing his own changes of the body, Who is seeing himself as his soul, And who never thinks of ends, middle and outside, The man with the loin cloth is indeed the lucky one.


நான் வேடிக்கை பார்க்க எதற்கும் எங்கும் போவதில்லை. நிறைய வேடிக்கைகள், ஆட்டங்கள் படங்கள் என் உடம்பிலேயே நிகச்சிகள் மாற்றங்களாக நிறைய நடக்கின்றனவே. அவற்றை பார்த்து ரசிக்கவே நேரம் போதவில்லையே. நான் தான் இந்த உடம்பில்லையே, பரிபூரண ஆனந்தமயன் ஆச்சே. ஆரம்பமோ, நடுவோ முடிவோ எதுவும் இல்லாதது நான் என்கிற ஆத்மா. இப்படிப் பட்ட சுகம் எங்கே ஐயா கிடைக்கும் என்கிறார் கௌபீனதாரியான பாக்கியசாலி தனவந்தர்.


Brahmaksharam pavanamucharantho,
Brahmahamasmeethi vibhavayantha,
Bhikshashano dikshu paribramayantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha 5


Always reciting the name of Brahmam with devotion,Always thinking that he himself is Brahmam, And who wanders aimlessly depending on alms obtained,
The man with the loin cloth is indeed the lucky one.
வாயைத் திறந்தாலும் திறக்காமல் இருந்தால் மனத்திலும் எப்போதும் எனக்கு ப்ரம்ம ஸ்மரணை தானே. விழிப்பிலும் உறக்கத்திலும் கூட. ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் அலைந்து கொண்டே இருப்பது தான் என் வேலை எங்கு எது கிடைக்கிறதோ அதுவே உணவு. அதைத் தேடி அழிவதில்லை ஐயா. இதற்குமேல் ஒருவனுக்கு எது அதிருஷ்டம் சொல்லுங்கள் என்கிறார் கௌபீனவந்தரான பாக்கியசாலி தனவந்தர்.