யஜுர்வேதம்ஆபஸ்தம்பஸூத்ரம்உபாகர்மா--18-08-2016 வியாழன்
வரிசைக்ரமம்:-காலையில்எழுந்துஸ்நானம்செய்தல்.காலைஸந்தியாவந்தனம்காயத்ரிஜபம்செய்த.ல்.ப்ரஹ்மசாரிகளுக்குமுடிவெட்டுதல்.கிரஹஸ்தர்கள்ஒளபாசனமும்ப்ருஹ்மசாரிகள்ஸமிதாதானம்செய்தல்.
காமோகாரிஷீத்ஜபம்செய்தல்.முதல்வருடம்உபாகர்மாசெய்யும்ப்ருஹ்மசாரிகளுக்குகாமோகாரிஷித்ஜபம்கிடையாது,(தலைஆவணிஅவிட்டம்)
மாத்யானிகம்செய்தல்;ப்ருஹ்மயக்ஞம்செய்தல்.
மஹாசங்கல்பம்;புதுபூணல்அணிதல்;காண்டரிஷிதர்ப்பணம்செய்தல்.
காண்டரிஷிபூஜை;உபாகர்மாஹோமம்.( முதல்வருஷபையனுக்குமட்டும்
அனுக்ஞை;நாந்தி).வேதஅத்யயனம்.நமஸ்காரம்செய்துஆசிபெறுதல்.;
ஹாரத்தி.


ஸமிதாதானம்;-
ஆசமனம்:அச்யுதாயநம:அனந்தாயநம:கோவிந்தாயநமஹ;


கேசவ,நாராயணஎன்று கட்டை விரலால் வலதுஇடது கன்னங்களையும் மாதவகோவிந்த என்று பவித்ர விரலால்வலது இடது கண்களையும்

விஷ்ணோமதுஸூதன என்று ஆள் காட்டிவிரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரமவாமன என்று சுண்டு விரலால்வலது இடது காதுகளையும் ஶ்ரீதரஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால்வலது இடது

தோள்களையும்எல்லா விரல்களாலும் பத்மநாபஎன்று கூறி மார்பிலும்,தாமோதரஎன்று கூறி எல்லா விரல்களாலும்சிரஸிலும் தொடவேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

ஸுக்லாம்பரதரம்விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம்,ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னஉப ஷாந்தயே.

ப்ராணாயாமம்.ௐபூ:ௐபுவ:ஓகும்ஸுவ:ௐமஹ:ௐஜன:ௐதப:ஓகும்ஸத்யம்;ௐதத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்யதீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்மபூர்புவஸ்ஸுவரோம்.;

மமோபாத்தஸமஸ்த துரிதயக் *ஷயத்வாரஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்ப்ராத:சமிதாதானம்கரிஷ்யே.(ஸாயங்காலத்தில்)ஸாயம்ஸமிதாதானம் கரிஷ்யே.

அபஉப ஸ்பர்ஸ்ய என்று கையினால்ஜலத்தை தொட வேண்டும்.

பிறகுஎதிரில் ஒரு வரட்டியில்/(எருவாமுட்டை)அக்னியைஎடுத்து வைத்து கொண்டு அதில்ஒரு சமித்தை வைத்து விஸிரியால்//துகுழலால் ஊதி ஜ்வாலை வரும்படிசெய்து மந்த்திரத்தை கூறவேண்டும்.அல்லது

வரட்டிமேல் கற்பூரம் வைத்து சிராய்தூள் வைத்துபற்ற வைக்கவும்.மந்திரம்சொல்லவும்.

பரித்வாக்னேபரிம்ருஜாமி ஆயுஷா ச தனேன சஸுப்ரஜா:ப்ரஜயாபூயாஸம்;ஸூவீரோவீரை:ஸுவர்ச்சாவர்ச்சஸா ஸூபோஷ:போஷை:ஸூக்ருஹோக்ருஹை:சுபதி:பத்யா:ஸுமேதாமேதயா ஸுப்ருஹ்மாப்ரம்மசாரிபிஹி.

நான்குபுறமும் அக்னியை கூட்டுவதுபோல் பாவனை செய்து தேவஸவிதஹப்ரஸுவஹ என்று அக்னியைப்ரதக்*ஷிணமாக ஜலத்தினால்பரிஷேசனம் செய்ய வேண்டும்.

பிறகுபலாஸ சமித்து அல்லது அரசசமித்து இவைகளால் கீழ் கண்டமந்திரங்களை கூறி ஸ்வாஹாஎன்கும்போது கிழக்கு நுனி யாக ஜ்வலிக்கும்அக்னியில் ஒவ்வொன்றாக ஹோமம்செய்ய வேண்டும்.

1.
அக்னயேஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதேஜாதவேதஸே யதா த்வமக்னே ஸமிதாஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷாவர்ச்சஸா ஸந்யா மேதயா ப்ரஜயாபஸுபிஹி ப்ரஹ்ம வர்ச்சஸேனாஅன்னாத்யேந ஸமேதய ஸ்வஹா.
2.
ஏதோஸிஏதீஷீ மஹி ஸ்வாஹா.

3.
ஸமிதஸிஸமேதிஷீ மஹி ஸ்வாஹா

4.
தேஜோஸிதேஜோமயீ தேஹீ ஸ்வாஹா.

5.
அபோஅத்ய அன்வ சாரிஷம் ரஸேந ஸமஸ்ருக்ஷ்மஹி பயஸ்வான் அக்னஆகமம் தம்மா ஸகும் ஸ்ருஜவர்சஸா ஸ்வாஹா.

6.
ஸம்மாக்னேவர்சஸா ஸ்ருஜ ப்ரஜயாச தனேனச ஸ்வாஹா.

7.
வித்யுந்மேஅஸ்ய தேவா இந்த்ரோ வித்யாத்ஸஹ ரிஷிபி:ஸ்வாஹா.

8.
அக்னயேப்ருஹதே நாகாய ஸ்வாஹா.

9.
த்யாவாப்ருத்வீப்யாகும் ஸ்வாஹா.

10.
ஏஷாதேஅக்னே ஸமித்தயா வர்தஸ்வசஆப்யா யஸ்வ ச தயாஹம் வர்தமானோபூயாஸம் ஆப்யாய மானஸ்சஸ்வாஹா

11.
யோமாக்னே பாகினகும் ஸந்தம்அதாபாகம் சிகீர்ஷதி அ பாகமக்னேதங்குரு மாமக்னே பாகினம்குரு ஸ்வாஹா..

12.
ஸமிதம்ஆதாய ---அக்னேஸர்வ வ்ரத :பூயாசம்ஸ்வாஹா.

மறுபடியும்ஜலத்தை ப்ரதக்*ஷிணமாக தேவஸவித:ப்ராஸாவீ:என்றுபரிசேஷனம் செய்யவும்.ஒருசமித்தை ஸ்வாஹா என்று சொல்லிஅக்னியில் வைத்து


அக்னே:உபஸ்தானம்கரிஷ்யே என்று எழுந்து நின்றுபின் வரும் மந்த்ரத்தை கூறவேண்டும்.யத்தேஅக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்விபூயாஸம் .,யத்தேஅக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்விபூயாஸம்.யத்தேஅக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்விபூயாஸம்

மயீமேதாம் மயிப்ரஜாம் மய் யக்னிஸ்தேஜோ ததாது.//மயிமேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர:இந்த்திரியம்ததாது./மயிமேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோப்ரஜோ ததாது.அக்னயேநமஹ;

மந்த்ரஹீனம் க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயாதேவ பரிபூர்ணம் த தஸ்துதே;ப்ராயஸ்சித்தானி அ ஷேஷாணி தப:கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம்பரம்..க்ருஷ்ண,க்ருஷ்ண,க்ருஷ்ண .(நமஸ்காரம்)


பிறகுஹோம பஸ்மாவை எடுத்து இடதுகையில் வைத்து சிறிது ஜலம்விட்டு வலது கை மோதிர விரலால்குழைத்து கொள்ளும் பொழுது
மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷுமானோ அஸ்வேஷு ரீரிஷ;வீரான்மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த:ஸதமித்வஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்துதரித்து கொள்ளவும்.

மேதாவிபூயாஸம் (நெற்றியில்)தேஜஸ்வீபூயாஸம் (மார்பில்).வர்ச்சஸ்வீபூயாஸம் (வலதுதோளில்)ப்ரம்மவர்ச்சஸ்வீ பூயாஸம் (இடதுதோளில்)ஆயுஷ்மான்பூயாஸம்(கழுத்தில்)அன்னாத:பூயாஸம்(வயிற்றில்)ஸ்வஸ்திபூயாஸம் (ஸிரஸில்).

பிறகுகைகளை அலம்பிக்கொண்டு கைகளைகூப்பி அக்னியை கீழ்கண்டவாறுப்ரார்திக்கவும்.

ஸ்வஸ்திஸ்ரத்தாம் மேதாம் யச:ப்ரஞ்ஞாம்வித்யாம் புத்திம் ஷ்ரியம்பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம்தேஹிமே ஹவ்ய வாஹன.

பிறகுகாயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதேஸ்வபா வாத் கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணாயேதிஸமர்பயாமி
ஓம்தத்சத் என்று சொல்லி ஒருஉத்திரிணி தீர்த்தம் கீழேவிடவும்.ஆசமனம்செய்யவும்


.