பிரம்மதேசம் ஸ்ரீகயிலாசநாதர் கோயில்


- வி.ராம்ஜி(MyTemple team)


நெல்லையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். அங்கிருந்து வடமேற்கில் 4 கி.மீ. தொலைவு பயணித்தால், பிரம்மதேசம் எனும் அழகிய ஊரையும் அங்கே உள்ள ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்தையும் அடையலாம்! சுவாமியின் பெயர் ஸ்ரீகயிலாசநாதர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபிரஹன்நாயகி.


பிரம்மாவின் பேரன் ரோமச முனிவர், இங்கே இலந்தை மரங்கள் அடர்ந்த வனத்தில், சுயம்புவாய் லிங்கத்திருமேனியைக் கண்டு, இலந்தையடி நாதர் எனும் திருநாமம் சூட்டி வழிபட்டார். அருகில், திருவாலிநாதர் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழ மன்னன், இந்த கிராமத்தை வேதங்கள் அறிந்த அந்தணர்களுக்குத் தானமாக அளித்து, ராஜராஜ சதுர்வேதிமங்கலம் எனப் பெயர் சூட்டினான்.


ஏராளமான கல்வெட்டுகள் கொண்ட அற்புதமான ஆலயம். ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆலயம், பாண்டிய மன்னர்கள் மற்றும் விஜயநகர அரசர்களால் விரிவுபடுத்தப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


திருக்குற்றாலத் தல புராணத்தின் படி, நவ கயிலாயத் திருத்தலங்களில் பிரம்மதேசம் முதல் தலம் என்று போற்றப்படுகிறது.


கல்வி கேள்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் வழிபடும் தலம் இது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
கோயில் நேரம் :
காலை 6 முதல் 10.30 வரை.
மாலை 5 முதல் இரவு 8.30 வரை


MyTemple - Daily temple stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com