Announcement

Collapse
No announcement yet.

Ashta Lakshmi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ashta Lakshmi

    Ashta Lakshmi
    அஷ்டலக்ஷ்மிகள் என்றாலே இன்று வரை பல குழப்பங்கள் உண்டு... எந்த எந்த ரூபங்கள் இந்த 8ல் இடம் பெறும், அவற்றின் சரியான வடிவம் வாகனம் என்ன.. இதெல்லாம் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை கொண்டது.
    ஸம்ப்ரதாய வகையில் மாறுபாடுகளும் உண்டு. ஆனால், பொதுவாக, சக்தியை தலைமையில் கொண்ட சாக்தத்தில் உள்ளவாறு, பல்வேறு நூல்களை ஆராய்ந்து, இந்த தீர்மானமான பொதுவான ரூபாதி வர்ணனைகளை பகிர்கிறேன். ஸந்தேஹங்களுக்கு விவாதித்து விடை காண எண்ணலாம். சர்ச்சைகளுக்கு இடம் இல்லை.
    விரும்புபவர்கள் படிக்கவும்.
    ப்ரதம ஸ்தானம் - ஆதி லக்ஷ்மீ
    மணிமய மண்டபத்தில், ரத்னஸிம்ஹாஸனத்தில் நடுவே ஒரு அடர் சிவப்பு நிற தாமரைபுஷ்ப ஆசனத்தில்,கிழக்கு முகமாக, மாணிக்ய தேஜஸோடு , வெளிர் சிவப்பு என்ற காஷ்மீர புஷ்பத்தின் நிறமான ரோஸ் வர்ணத்தில் வஸ்திரமும் ஆபரணங்களும் அணிந்து, சதுர்புஜங்களில் பின் கரங்களில் வலது புறம் சிவப்பு தாமரை, இடது புறம் த்வஜம் என்னும் கொடி, கீழிரண்டு கரங்களில் வலப்புறம் அபயம் இடப்புறம் வரதம் தாங்கி, தக்ஷார்த்த பத்மாஸனத்தில் , இரண்டு புறமும் தீபம் பிடிக்கும் பாவைகள் சூழ அமர்ந்திருப்பவள். சகல ஜகத்தின் ஸ்ருஷ்டிக்கும் ஆதி காரணியாகையால் ஆதி லக்ஷ்மீ என்று பெயர் பெறுபவள் . அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் ஆக்னேய பாகம் இவளுக்குரியது.
    த்விதீய ஸ்தானம் - தான்யலக்ஷ்மீ
    ஒரு சோலையின் மத்தியில், வடக்கே நோக்கும் வெள்ளை யானையின் மீது, கிழக்கு முகமாக , மரகத தேஜோமய ரூபத்தோடு, கதிர் பச்சை நிற வஸ்த்ரமும், ஆபரணங்களும் தரித்து, தக்ஷார்த்த பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவள். எட்டு புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, கரும்பு, பழம் காய்கள் நிறைந்த பாத்திரம், நிரம்பி கையில் வழியும் நெல்படியும் , வலது புறம் மேலிருந்து கீழாக சக்ரம், நெற் குருத்து, தாமரை புஷ்பம், அபய ஹஸ்தமும் தாங்கியவள். சகல ஜீவர்கட்கும் உணவுக்கு பஞ்சமின்றி வைப்பதால் தான்ய லக்ஷ்மீ என்று நாமதேயம். அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் தக்ஷிண பாகம் இவளுக்குரியது.
    த்ருதீய ஸ்தானம் - வீரலக்ஷ்மீ
    யுத்த பூமியின் மத்தியில், வடக்கே முகம் கொண்ட பெரிய சிங்கத்தின் மீது, கிழக்கு முகமாக, செம்பவள ஒளி வீச, ரத்த சிவப்பு நிறத்தில் வஸ்திரமும், ஆபரணங்களும் பூண்டு, தக்ஷார்த்த பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவள். எட்டு புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, வில், சூலம், பாசக்கயிறும், வலது புறம் மேலிருந்து கீழாக சக்ரம், அம்புகள், வாள், அபய ஹஸ்தமும் தரித்தவள். சகல உயிர்களுக்கும் தைர்யம், வீர்யம், மனோபலத்தை அருள்வதால், வீரலக்ஷ்மீ, தைர்ய லக்ஷ்மீ என்று நாமங்கள் உண்டு. அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் நிருருதி பாகம் இவளுக்குரியது.
    துரீய ஸ்தானம் - கஜலக்ஷ்மீ
    ராஜ்ய சபையின் மத்தியில், பொன்னிறமான தாமரை புஷ்பத்தின் மீது, கிழக்கு முகமாக, வைடூர்ய தேஜஸ் வீச, மாதுளம்பூ நிறத்தில் வஸ்திரமும், ஆபரணங்களும் தரித்து, பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இவள் சதுர்புஜங்களில், மேலிரு கரங்களில் செந்தாமரை மலர்களும் கீழிரு கரங்களில் அபயவரதமும் தாங்கி இருப்பவள். இரண்டு சேடிப்பெண்களும், நான்கு கஜேந்த்ர யானைகளும் சுற்றி இருக்க, யானைகளின் துதிக்கையில் உள்ள நீர் நிரம்பிய கும்பங்களில் இருந்து சுகந்த ஜலம் ஸதாகாலமும் தன் மீது அபிஷேகிக்குமாறு ஸுகரூபத்தோடு அமர்ந்திருப்பவள். சிறந்த அடியவர்களுக்கு ராஜ்யபாரமும், ஆளும் தன்மையும் தருவதால் இவளே ராஜ்ய லக்ஷ்மி என்றும் கஜலக்ஷ்மீ என்றும் அழைக்கப்படுகிறாள்.அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் பஸ்ச்சிம பாகம் இவளுக்குரியது.
    பஞ்சம ஸ்தானம் - ஸந்தான லக்ஷ்மீ
    தடாக சமீபத்தில், கிழக்கே நோக்கும் கருட பக்ஷியின் மீது, வாமார்த்த பத்மாஸனத்தில், கிழக்கு முகம் கொண்டு, புஷ்பராக தேஜஸோடு, நீலோத்பலத்தின் நிறத்தை ஒத்த ஊதா நிறத்தில் வஸ்த்ரமும், ஆபரணங்களும் தரித்து, அஷ்ட புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக, சங்கு, பூர்ணகும்பம், கத்தியும், வலது புறம் மேலிருந்து கீழாக, சக்ரம், பூர்ணகும்பம், உத்பல புஷ்பம், அபயஹஸ்தமும் கொண்டு, கீழ் இடது கரத்தால், தனது இடது தொடையில் உள்ள சிசுவை அணைத்துப்பிடித்தவாறு அமர்ந்திருக்கிறாள். பக்தர்களுக்கு வம்சம் தழைக்க ஸந்தான பாக்கியம் அருள்வதால் சந்தான லக்ஷ்மீ என்று திருநாமம். அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் வாயவ்ய பாகம் இவளுக்குரியது.
    ஷஷ்ட ஸ்தானம் - விஜயலக்ஷ்மீ
    போர்ப்பாசறையின் மத்தியில், தெற்கே முகம் கொண்ட வெண்குதிரை வாஹனத்தின் மீது, வாமார்த்த பத்மாஸனத்தில், கிழக்கு முகமாக, நீலமணி தேஜஸோடு, வெளிர் நீல நிற வஸ்திரமும், ஆபரணங்களும் தரித்து, அஷ்ட புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, வில், சூலம், கதையும், வலது புறம் மேலிருந்து கீழாக சக்ரம், அம்புகள், வாள், தாமரை புஷ்பத்தோடு கூடிய அபயகரமும் கொண்டவள். பக்தர்கள் செய்யும் காரியங்களில் வெற்றியையே தர வல்லவள் என்பதால், விஜயலக்ஷ்மீ, ஜயலக்ஷ்மீ என்று நாமங்கள் உண்டு. அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் உத்தர பாகம் இவளுக்குரியது.
    ஸப்தம ஸ்தானம் - வித்யாலக்ஷ்மீ
    வித்யாசாலையில், தெற்கே முகம் கொண்ட ஹம்ஸ பக்ஷியின் மீது, வெண்தாமரை புஷ்பமும், அதன் மீது வாமார்த்த பத்மாஸனத்தில், கிழக்கு முகமாக, முத்து தேஜஸோடு, வெண்பட்டு வஸ்திரமும், முத்து ஆபரணங்களும் அணிந்து, சதுர்புஜங்களில் மேலிரு கரங்களில் இடப்புறம் அக்ஷஸூத்ரம், வலப்புறம் குண்டிகை, கீழிருகரங்களில் இடப்புறம் வேதபுஸ்தகமும், வலப்புறம் சின்முத்ரையும் கொண்டு காட்சி தருபவள். பக்தர்களுக்கு அழியாத கல்விச்செல்வத்தை அருள்வதால் வித்யாலக்ஷ்மீ என்று திருநாமம். அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் ஐஸான்ய பாகம் இவளுக்குரியது.
    அஷ்டம ஸ்தானம் - தனலக்ஷ்மீ
    தனசாலையின் நடுவே, வெளிர் சிவப்பு என்ற ரோஸ் நிற தாமரையின் மீது, பத்மாஸனத்தில், கிழக்கு முகமாக, கோமேதக தேஜஸோடு, தங்க மஞ்சள் நிறத்தில் வஸ்திரமும், ஆபரணங்களும் தரித்து, அஷ்டபுஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, வில், கதை, நிரம்பி கையில் வழியும் தனபாத்ரம் ஆகியனவும், வலப்புறம் மேலிருந்து கீழாக சக்ரம், அம்பு, தாமரைபுஷ்பம், அபயகரம் ஆகியனவும் கொண்டிருப்பவள். ஜனங்களுக்கு பொருட்செல்வத்தை குறைவின்றி தருவதால் தனலக்ஷ்மீ என்று பெயர். அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் பூர்வ பாகம் இவளுக்குரியது.
    மண்டலத்தின் மூலத்தில் மத்தியபாகத்தில் - மஹாலக்ஷ்மீ
    சம்பூர்ணமும் ஷூன்யமும் ஆன வானவெளியில், கமலாசனத்தில், ஸுகாசனம் போட்டு அமர்ந்து, வஜ்ரதேஜஸோடு, கிழக்கு முகமாக, பலவர்ணங்களில் ஆன பட்டு வஸ்திரமும் நவரத்நாபரணங்களும் பூண்டு, சதுர்புஜங்களில் சங்கு , சக்ரம், கதை, கமலமலர் ஆகியவற்றை ஏந்தி, விஷ்ணுப்ரியையாக, மூன்று தொழிலும் செய்பவளாக, ஸித்த லக்ஷ்மீ, மஹாலக்ஷ்மீ, வர லக்ஷ்மீ, வைபவ லக்ஷ்மீ, ஸௌபாக்யலக்ஷ்மீ, சாம்ராஜ்ய லக்ஷ்மீ என்ற திருப்பெயர்களால் இந்த ரூபிணி அறியப்படுகிறாள்.
    இதுவே பூஜைக்குரியதும், த்யானிக்கத்தகுந்ததும் ஆன, அஷ்டலக்ஷ்மீ மண்டலம் ஆகும். இதற்கு விக்ரஹ பூஜை, கும்ப ப்ரதிஷ்டையோடு கூடிய பூஜை, மண்டலத்தை வஸ்த்ராதிகளோடு ப்ரதிஷ்டித்து ஹோமம் செய்தல் ஆகியன பிரயோகமாகும்.
    - Rohit Subramaniam
Working...
X