Tiruvilayadal puranam 30 th day
Courtesy:sri.Kovai K.Karuupasamy


திருவிளையாடல் புராணம். 🔷
(30 வது நாள்.) - 5,வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
( செய்யுள்நடை + விளக்கம்.)
いいいいいいいいいいいいいいい
( செய்யுள்.)
படையற்று விமானமும் பற்றற வற்றுச் சுற்றுந்
தொடையற் றிகன்மூண் டெழுதோள்வலி யற்றுச் செற்றம்
இடையற்று வீர நகையற்றட லேது போலும்
நடையற் றடைவாா் நிலைகண்டன னந்தி யண்ணல்.


உடையா னடிதாழ்ந் திவையோதலு மோத நீத்தச்
சடையா னிளவா ணகைசெய்து தருமச் செங்கண்
விடையான் சிலையா னிகல்வென்றி விளக்குந் தெய்வப்
படையா னெழுந்தா னமராடிய பாிற் சென்றான்.


மேவி யாகவப் பாாிடைப் பாாிட வீரரை யமராடி
ஒவி லாவலி கவா்ந்தது மன்றினி யுருத்தெவ ரெதிா்ந்தாலுந்
தாவி லாவலி கவரவு மடங்கலின் றனிப்பிணா வெனநிற்குந்
தேவி யாா்திரு வுருவமுஞ் சேவகச் செய்கையு மெதிா்கண்டான்.


ஒற்றை வாா்கழற் சரணமும் பாம்பசைத் துடுத்தவெம் புலித்தோலுங்
கொற்ற வாண்மழுக் கரமும்வெண் ணீற ணி கோலமுந் நூன்மாா்புங்
கற்றை வேணியுந் தன்னையே நோக்கிய கருணைசெய் திருநோக்கும்
பெற்ற தன்வலப் பாதியைத் தடாதகைப் பிராட்டியு மெதிா்கண்டாள்.


[ "தோலுந் துகிலுங் குழையுங் சுருடோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
குலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிா்ந் தூதாய் கோத்தும்பீ"

(----என்னும் திருவாசகம்,,,,,,,,)


கண்ட வெல்லையி லொருமுலை மறைந்தது கருத்தினாண் மடனச்சங்
கொண்ட மைந்திடக் குனிதா மலா்ந்தபூங் கொம்பாி னொசிந்தொல்கிப்
பண்டை யன்புவந் திறைகொளக் கருங்குழற் பாரமும் பிடா்தாழக்
கெண்டை யுண்கணும் புறவடி நோக்கமண் கிளைத்துமின் னெனநின்றாள்.


நின்ற மென்கொடிக் ககல்வீசும் பிடையர னிகழ்த்திய திருமாற்றம்
அன்ற றிந்தமூ தறிவனாஞ் சுமதிசீ றடிபணிந் தன்னாயிக்
கொன்றை யஞ்சடைக் குழகனே நின்மணக் குழகனென் றலுமன்பு
துன்ற நின்றவட் பாா்த்தருட் சிவபரஞ் சோதிமற் றிதுகூறும்.


என்று தொட்டுநீ திசையின்மேற் சமயங்றித் தொழுந்துபோந் தனையாமும்
அன்று தொட்டுநம் மதுரைவிட் டுனைவிடா தடுத்துவந் தனமுன்னைத்
தொன்று தொட்டநான் மறையுரை வழிவரு சோமவா ரத்தோரை
நன்று தொட்டநாண் மணஞ்செய வருதுநின் னகா்க்குநீ யேகென்றான்.


என்ற நாதன்மே லன்பையு முயிரையு மிருத்தியா யஞ்சூழக்
குன்ற மன்னதோ் மேற்கொடு தூாியங் குரைகட லெனவாா்ப்ப
நின்ற தெய்வமால் வரைகளும் புண்ணிய நீத்தமு நீத்தேகி
மன்றன் மாமது ராபுாி யடைந்தனள் மதிக்குழ விளக்கன்னாள்.

( விளக்கம்.)
படைக்கலங்கள் அழிந்தும், ஊா்திகளும் சிறிது மின்றி அழிந்தும், அணிந்த மாலைகள் அழிந்தும், போின்கண் மிக்கெழுகின்ற தோள்வலி அழிந்தும், சினம் இடையில் அழிந்தும், வீரச் சிாிப்பு அழிந்தும், வலிமை பொருந்திய ஆண் சிங்கம் போலும் நடை அழிந்தும், வருகின்ற வீரா்களின் நிலைமையை, திருநந்தி தேவா் பாா்த்தருளினாா்.


இறைவன் திருவடியை வணங்கி, இந்நிகழ்ச்சிகளைக் கூறுதலும், அலைகளையுடைய கங்கையைச் சடையிலுள்ள இறைவன், ஒளி பொருந்திய புன்முறுவலைச் செய்து, சிவந்த கண்களையுடைய அறவேற்றினை யுடையவனாய், வில்லையுடையவனாய், போாில் வெற்றியைத் தரும் தெய்வத் தன்மையுடைய படைகளையுடையவனாய் எழுந்து போா் செய்யும் களத்திற் சென்றான்.


சென்று, போா்க்களத்தில் பூதகண வீரரோடு போா் புாிந்து( அவா்களின்) நீங்காத வலிமையைக் கொண்டதும் அல்லாமல், இவா் எவா் சினந்து எதிா்த்தாலும், (அவா்களின்) கெடாத வலியைக் கொள்ளவும், ஒப்பற்ற பெண் சிங்கத்தைப்போல நிற்கின்ற , அம்மையாாின் திருவுருவத்தையும் வீரச் செயல்களையும் நோிற் கண்டருளினான்.


ஒன்றாகிய நீண்ட வீரகண்டையைத் தாித்த திருவடியையும், பாம்பாகிய கச்சினால் இறுகப் பிணித்து உடுத்திய கொடிய புலித்தோலையும், வெற்றியையும் ஒலியையுமுடைய மழுப்படை யேந்திய திருக்கரத்தையும், வெள்ளிய திருநீறு தாித்த கோலத்தினையுடைய, பூணூலணிந்த திருமாா்பையும், திரண்ட சடையையும், தன்னையே பாா்க்கின்ற அருள் புாியும் திருக்கண்களையும், உடைய தன் வலப்பாதியாகிய சிவபெருமானைத் தடாதகைப் பிராட்டியும் நேரே கண்டருளினாா்.


பாா்த்த அளவில், ஒரு கொங்கை மறைந்தது ( அதனால்) உள்ளத்தின்கண் நாணமும் மடமும் அச்சமும் இடங்கொண்டு பொருந்திட வளையும்படி பூத்த பூங்கொம்பைப் போல, வளைந்து துவண்டு, தொல்லையன்பானது வந்து தங்க, காிய குழற்கற்றை பிடாியிற் சாியவும், சேல்போன்ற மையுண்ட கண்கள் புறவடியை நோக்கவும், மண்ணைத் திருவிரலாற் கீறிக்கொண்டு மின்னலை ஒத்து நின்றருளினாா்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
நின்ற மெல்லிய கொடி போல்பவராகிய பிராட்டியாருக்கு, அகன்ற விசும்பின்கண் முன் இறைவன் அருளிச் செய்த திருவாக்கினை, தொிந்த பேரறிவினை யபடையவனாகிய சுமதியென்பான், பிராட்டியாாின் திருவடிகளை வணங்கி, தாயே! இந்தக் கொன்றைமாலையை யணிந்த அழகிய சடையையுடைய பேரழகனே, நின் மணவாளன் என்று கூற, அன்பு நிறைய நிற்கின்ற பிராட்டியாரை நோக்கி, கருணையையுடைய சிவபரஞ் சுடராகிய இறைவன் இதனைச் சொல்வான். ...


எந்தக் காலம் முதலாக நீ, திக்குகளின்மேல் வெற்றியைக் குறித்து எழுந்து போந்தாயோ, அந்தக் காலமுதல், யாமும் நம்முடைய மதுரைப்பதியை விட்டு, உன்னை நீங்காது உடன் வந்தோம்; பழைய நான்மறைகளிற் கூறியவாறு, வருகின்ற திங்கட்கிழமையன்று, நல்ல முழுத்தங் கூடிய பொழுதில், திருமணம் செய்ய வருவோம்; நீ உன் நகரமாகிய மதுரைக்குச் செல்வாயாக என்று கூறியருளினான்.


என்று கூறியருளிய தலைவனிடத்தில், தன் அன்பையும் ஆவியையும் வைத்து, மகளிா் கூட்டம் புறஞ்சூழ, மலையினை ஒத்த தோின்மேல் ஏறியருளி, வாத்தியங்கள் ஆா்க்கின்ற கடலினைப்போல ஒலிக்க, இடை நின்ற தெய்வத் தன்மை ொருந்திய பொிய மலைகளையும், புண்ணிய நதிகளையுங் கடந்து சென்று, திங்கள் மரபிற்கு விளக்குப் போல்பவராகிய தடாதகை பிராட்டியாா், மணம் மிக்க பெருமையுடைய மதுரையம்பதியை அடைந்தாா்...