உபாஸனம்= உப+ஆஸனம் ; ஸமீபத்தில் இருத்தல் என்று அர்த்தம்.யக்ஞேஸ்வரர் என்னும் அக்னி பகவானை தினந்தோறும் காலையிலும் மாலையிலும் ஹோமம் செய்து உபாசிக்கும் கர்மா; இது ஒரு நித்ய கர்மா.இதுவே ஒளபாஸனம் என்று ஆகியது. கணபதி உபாஸகர். ஸ்ரீ வித்யோபாஸகர் என்பது போல்.ஆபஸ்தம்ப மஹரிஷிரின் வசனப்படி கணவன் மனைவியாக முத்ல் முதல் ஆன்வுடன் அன்றே ஒளபாசன ஹோமம் ஆரம்பிக்க படுகிறது.

தினமும் காலை மாலை ஸூர்ய உதயத்தின்//அஸ்தமனத்தின் போது செய்வது முதல் பக்ஷம்,. முடியாத நிலையில் இரண்டாம் பக்ஷமாக காலை 8-30 மணிக்குள்ளும் இரவு 8-30 மணிக்குள்ளும் செய்ய வேண்டும். ( வைத்தினாத தீக்ஷிதீயம் ஆஹ்ணீக கான்டத்தில் உள்ளது. பக்கம் -92

தினமும் இதை தவறாது செய்து வ்ந்தால் அவர் வசிக்கும் பகுதி தேசம் நன்றாக இருக்கும்.அந்த வீட்டில் செல்வம், ஞானம், ஆரோக்கியம் . வேறு எந்த பரிஹார ஹோமமும் தேவைபடாது என்கிறது சாஸ்திரம்.

பாரத்வாஜ மகரிஷி கணவனுக்காக மனைவி மந்திரமில்லாமல் ஒளபாஸனம் செய்யலாம் என்கிறார். ஆதலால் பெண்கள் ஒளபாஸன ஹோமம் செய்யலாம்.

நமது ஒளபாசன அக்னியில் பிறர்கள் ஹோமம் செய்யக்கூடாது. ஆதலால் மற்ற நவகிரஹ ஹோமம, கணபதி ஹோமம் , சுதர்சன ஹோமம் இவைகளை ஒளபாஸன அக்னியில் செய்வதில்லை. லெளகீக்காக்னியில் செய்கிறோம்.

எனது நலனுக்கும் எனது மனைவி நலனுக்கும் செய்வது ஸ்தாலிபாக ஹோமம். எனது குழந்தைகளுக்காக செய்வது செளளம், உபநயனம், ஜாதகர்மா முதலியன.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



எனது மனைவிக்காக செய்வது சீமந்தம்; பும்ஸவனம். எனது நலனுக்காக செய்வது ஒளபாசனம். எனது பையனுக்காக செய்யும் ஹோமம் லெளகீக்காக்னியில் செய்ய படுகிறது.

ஸந்தியாவந்தனம் போல் இது ஒரு நித்ய கர்மா. ""ஸூதகே ம்ருதகே சைவ அசக்தெள சிராத்த போஜனே ப்ரவாஸாதி நிமித்தேஷுஹாவயேந் ந து ஹாபயேத் ""
என்ற வசனப்படி பிறப்பு, இறப்பு தீட்டு வந்தாலும், வெளி ஊர் பயணம், உடல் நலமினமை ஆகிய நேரங்களில் மகன், மாணவன் போன்ற மற்றவர்களை செய்ய சொல்ல வேண்டும். ஒரு நாளும் செய்யாமல் விடக்கூடாது.