Announcement

Collapse
No announcement yet.

Mahalaya paksham 2016

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Mahalaya paksham 2016

    Mahalaya paksham 2016


    மஹாளய பித்ருபக்ஷம் 17.09.16செவ்வாய் முதல் 30.09.16செவ்வாய்வரை…
    நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி,அத்தை முதலிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் காலமே மஹாலயபக்ஷம் எனப்படும். பக்ஷம் என்றால் 15 நாட்கள், மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம். இறந்து போனாலும் கூட நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷம் 15 நாட்களும் பூமிக்குவந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவேதான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யகூடாது என்கிறது சாஸ்திரம்.
    மஹாளயத்தை 1. பார்வணம் 2. ஹிரண்யம் , 3. தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.
    1) பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை ( பித்ருக்களாக ) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, ப்ராம்ஹணர்களுக்கு சாப்பாடு போடுவது ,
    2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது,
    3) தர்ப்பணம் என்பது தானாகவே அமாவஸைபோல் தர்ப்பணமாகச் செய்வது.
    இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச்செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
    ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள்
    மஹாபரணி ,மஹாவ்யதீபாதம், மத்யாஷ்டமி,கஜச்சாயா ,ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மஹாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.,
    மஹாளய பக்ஷம் திதிகள் தேதிகள் 17/09/16 சனி ப்ரதமை
    18/09/16 ஞாயிறு த்விதியை
    19/09/16 திங்கள் திருதியை
    20/09/16 செவ்வாய் சதுர்த்தி, மஹாபரணி
    21/09/16 புதன் பஞ்சமி,ஷஷ்டி(2திதிகள்)
    22/09/16 வியாழன் சப்தமி
    23/09/16 வெள்ளி மத்யாஷ்டமி,வியதிபாதம்
    24/09/16 சனி நவமி
    25/09/16 ஞாயிறு தசமி
    26/09/16 திங்கள் ஏகாதசி
    27/09/16 செவ்வாய் த்வாதசி, சன்யஸ்தமஹாளயம்
    28/09/16 புதன் த்ரயோதசி
    29/09/16 வியாழன் சதுர்த்தசி
    30/09/16 வெள்ளி சர்வஅம்மாவாஸ்யை
    01/10/16 சனி ப்ரதமை

  • #2
    Re: Mahalaya paksham 2016

    ஒரு திருத்தம் ஸ்ரீ.சௌந்தரராஜன்,

    முதல் வரியில், ...சனிக்கிழாமை முதல்....வெள்ளி வரை என்று இருக்க வேண்டும். 17-9-16 தேதி சனிக்கிழமை. அவ்வாரே 30-9 16 வெள்ளிக்கிழாமை.
    ...
    வரதராஜன்

    Comment


    • #3
      Re: Mahalaya paksham 2016

      ஸ்ரீ வரதராஜன் ஸ்வமினுக்கு எனது மனமார்ந்த நன்றி [தவறு சுட்டிக்காட்டியமைக்கு]போரம் மெம்பர்களும் அதிதிகளும் திருத்தி வாசிக்கக்கோறுகிறேன்

      Comment


      • #4
        Re: Mahalaya paksham 2016

        ஶ்ரீ:
        ஶ்ரீமான் சௌந்திரராஜன் ஸ்வாமின்,
        அதிதிகள் நல்ல வார்த்தை உபயோகம்.
        அதிதிகள் என்றால் என்ன என்று விளக்கவும்.
        தாஸன்,


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: Mahalaya paksham 2016

          I think he is meaning ,Guests,' visitors who are not members of our forum. Is it correct, Soundarrajan?
          Varadarajan

          Comment


          • #6
            Re: Mahalaya paksham 2016

            Sri:
            Yes, I understood, but the word he used is very appropriate one for "unexpected/unknown guests". It should be bring in practice.

            Sent from my SM-J700F using Tapatalk


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: Mahalaya paksham 2016

              Swamin you are very correct . Thanks for understanding me .

              Comment

              Working...
              X