Announcement

Collapse
No announcement yet.

6 doubts of Ramanujar cleared by Tirukachi nambigal

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6 doubts of Ramanujar cleared by Tirukachi nambigal

    6 doubts of Ramanujar cleared by Tirukachi nambigal


    அருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள்.......!!!


    இளையாழ்வாருக்கு(இராமானுஜருக்கு) ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.


    1. "அஹமேவ பரம் தத்துவம்"
    நாராயணமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.


    2. "தர்சநம் பேத ஏவச"
    சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது.
    ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.


    3. "உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்"
    மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.
    சரணாகதியே மோட்சத்திற்கு வழி.
    சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.


    4. "அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்"
    அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.


    5. "தேஹாவஸாகே முக்கிஸ் யாத்"
    சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.


    6. "பூர்ணாசார்ய ஸ்மாச்ரய"
    பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.

    இந்த "ஆறு வார்த்தைகளை" தாமே ஆசிரியர் போல இருந்து ராமானுஜருக்கு விளக்கினார் திருக்கச்சி நம்பிகள். 🏻 🏻

  • #2
    Re: 6 doubts of Ramanujar cleared by Tirukachi nambigal

    ஶ்ரீ:
    மிக அருமை,
    ஸம்ஸ்க்ருத பதங்களில் சில தவறுகள் உள்ளன - பரவாயில்லை.
    (மற்ற தங்களுடைய பதிவுகளை (நேரமின்மையால்) கூர்ந்து கவனிப்பதில்லை
    இது அடியேனுடைய ஞாபகத்தை புத்துணர்ச்சி பெறச்செய்யும் என்பதால் கவனித்தேன்)

    இன்னும் கொஞ்சம் விளக்கத்துடன் பதிந்தால் நன்றாக இருக்கும்.

    அதாவது:
    1. இந்த விஷயங்கள் திருக்கச்சி நம்பிகளால் ஶ்ரீமத்ராமாநுஜருக்கு அருளப்பட்டவையே
    ஆனால், அவை திருக்கச்சிநம்பிகளுக்கு ஶ்ரீதேவாதிராஜன் திருவாக்கினால் அருளப்பட்டவை.

    2. ஶ்ரீமத் ராமாநுஜர் திருக்கச்சிநம்பிகளிடம் "அடியேனுக்குச் சில சந்தேஹங்கள் இருக்கின்றன"
    என்று மட்டுமே கூறியிருந்தார். திருக்கச்சி நம்பிகள் ஶ்ரீதேவாதிராஜனிடம், "ராமாநுஜனின்
    சந்தேஹங்களைத் தெளிவுபடுத்தவேண்டும்" என்று மட்டுமே விண்ணப்பித்தார். இதற்கு
    விடையாகவே ஶ்ரீதேவாதிராஜன் திருக்கச்சிநம்பிகளுக்கு இந்த ஆறு மஹாவாக்யங்களை அருளிச்செய்தார்.
    இதை அடிப்படையாகக்கொண்டே பலவித கஷ்டங்களை அநுபவித்து, காஷ்மீரம் வரைச்சென்று
    (போதாயன வ்ருத்தி க்ரந்தங்கள்) க்ரந்தங்களை கொணர்ந்து, விஸ்தரித்து, ஶ்ரீபாஷ்யத்தை அருளிச்செய்தார்.

    குறிப்பு:- ஆர்வமிகுதியால் அதிகப்ரசங்கித்தனமாகப் பதிவிட்டமைக்கு க்ஷமிக்கப் ப்ரார்த்திக்கிறேன்.
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: 6 doubts of Ramanujar cleared by Tirukachi nambigal

      ஸ்ரீ தங்கள் விளக்கம் சரியே [QUOTE]1. இந்த விஷயங்கள் திருக்கச்சி நம்பிகளால் ஶ்ரீமத்ராமாநுஜருக்கு அருளப்பட்டவையே
      ஆனால், அவை திருக்கச்சிநம்பிகளுக்கு ஶ்ரீதேவாதிராஜன் திருவாக்கினால் அருளப்பட்டவை.

      2. ஶ்ரீமத் ராமாநுஜர் திருக்கச்சிநம்பிகளிடம் "அடியேனுக்குச் சில சந்தேஹங்கள் இருக்கின்றன"
      என்று மட்டுமே கூறியிருந்தார். திருக்கச்சி நம்பிகள் ஶ்ரீதேவாதிராஜனிடம், "ராமாநுஜனின்
      சந்தேஹங்களைத் தெளிவுபடுத்தவேண்டும்" என்று மட்டுமே விண்ணப்பித்தார். இதற்கு
      விடையாகவே ஶ்ரீதேவாதிராஜன் திருக்கச்சிநம்பிகளுக்கு இந்த ஆறு மஹாவாக்யங்களை அருளிச்செய்தார்.[QUOTE] இதை ஸ்ரீ உவே வேளுக்குடி ஸ்வாமின் சொல்லக்கேட்டிருக்கிறேன்.இதைக் கூறாம்ல் விட்டது எனது தவறூதான்

      Comment

      Working...
      X