Announcement

Collapse
No announcement yet.

Jeeva samadhi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Jeeva samadhi

    Courtesy:Sri.soundarraj


    #ஜீவசமாதி ரகசியம் !
    ********


    ( ஜீவசமாதி பொருளை பிரித்து அறிய வேண்டும். ஜீவ என்றால் இதுவரை நம் உடலில் ஜீவனாய் இருந்து இயக்கிய ஆத்ம சக்தியானது (சமாதி-சமம்+ஆதி)ஆதாவது அந்த ஆதி பரம் பொருளுடன் கலப்பது அல்லது அதற்கு சமம் ஆவது என்று பொருள்.இதுவே ஜீவசமாதி தத்துவம்)


    ஜீவசமாதியை பற்றி
    சுருக்கமாகவே இங்கு கூறுகிறேன்.?


    விரிக்கின் பெருகும் ஆதலால், மற்றொரு
    சமயம் விரிவாக எழுதுகிறேன். முற்காலத்தில்
    ஐநூறு, ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த நம்
    சித்தர்கள்
    ஜீவசமாதி அடைவதற்காக 'லம்பிகா யோகம்'
    என்ற முறையை கையாண்டார்கள். இந்த யோகா
    முறையை அவர்கள் தவளை, உடும்பு, ஓணான்
    முதலிய விலங்குகளிலிருந்து
    கற்றுக்கொண்டார்கள். அதாவது
    என்னவென்றால்,
    சித்தர்கள் நாவை மடக்கி மேல் அன்னத்தில்
    ஓட்ட
    வைத்துக்கொண்டு, அப்படியே தவத்தில்
    அமர்ந்து விடுவார்கள். அதேசமயத்தில்
    ரகசியமான ஒருவித பயிற்சியை செய்வார்கள்.


    அதைப்பற்றி இங்கு வெளிப்படையாக சொல்ல
    இயலாது. இவ்வாறு சிறிது சிறிதாக,
    மணிக்கணக்கில் பயிற்சியை கூட்டிக்கொண்டே
    செல்வார்கள். அப்போது என்ன ஆகுமெனில்,
    மனிதனின் விந்துவில் உள்ள சாரமானது,
    பதங்கமாகி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி
    மூளைக்கு சென்று சேர்ந்து கொண்டே
    இருக்கும். கவனிக்கவும், மேலே செல்வது
    விந்து அல்ல. விந்துவின் சாரம்தான். இதனை
    எளிதாக காந்தசக்தி என அழைக்கலாம்.
    தத்துவத்தில் இது ஓஜஸ் அல்லது தேஜஸ்
    எனப்படுகிறது.


    இவ்வாறு தொடர்ந்து பலநாட்கள் செய்து
    வரும்போது, உடம்பானது சிறிது சிறிதாக
    மரத்துபோய், உணர்வற்றுக் கொண்டே வரும்.


    இது கோமா நிலை போன்றது. அதாவது
    உடலில் உயிர் இருக்கும், உடல் இயக்கங்கள்
    எல்லாம் நுண்ணியதாக நடந்து கொண்டுதான்
    இருக்கும். ஆனால் உணர்வு இருக்காது; மனம்
    செயல்படாது. சீடர்கள் அப்படியே உடலை
    தூக்கிக்கொண்டு சென்று ஏற்கனவே தயாராக
    உள்ள குழியில் வைத்து மூடிவிடுவார்கள்.
    இதுதான் ஜீவசமாதி.


    தமிழ் 'ழ' : இப்போது ழவிற்கு வருவோம்... ழ
    என்று உச்சரிக்கும்போது என்ன செய்கிறோம்?


    நாவை மடக்கி மேல் அன்னத்தில் தொட
    வேண்டும்- இப்போது மூளை பகுதியில் உள்ள
    பீனியல் சுரப்பி ஆக்டிவேட் ஆகும். அதாவது
    சஹாஸ்ராதார சக்கரம் திறக்கிறது. பின் என்ன
    செய்கிறோம்? ஒலி வருவதற்காக சற்று
    அழுத்தம் குடுத்து 'ழ' என்று உச்சரிக்கிறோம்.


    மூலாதாரத்தில் உள்ள சூட்டின் காரணமாக,
    விந்து சுரப்பியில் உள்ள விந்துவின்
    சாரமானது எப்போதும் சிறிதளவு
    பதங்கமாகிக்கொண்டே இருக்கும். சத்தம்
    வருவதற்காக வாயில் சிறிது அழுத்தம்
    கொடுக்கிறோமே, அப்போது அந்த ஓஜஸ்
    சக்தியானது சட்டென்று ஒருவினாடியில்
    அனைத்து சக்கரங்களையும் கடந்து மேலேறி
    மூளைக்கு சென்று நிரம்புகிறது. இந்த ஓஜஸ்
    சக்தியானது மூளைக்கு நலமும், வளமும்,
    அமைதியும், சீர்மையும் அளிக்கிறது.


    இதுவே தமிழ் 'ழ' உருவான ரகசியமாகும்.
    'ழ'வை சரியாக உச்சரித்தால் இன்னும்
    ஏராளாமான பலன்கள் கிடைக்கும்.
    பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்களிடையே
    மெய்ப்பொருள் சிந்தனை மிகுந்திருந்தது.


    இதற்க்கு சரியான உதாரணம், எந்த
    தமிழருடைய
    ஆண் பெண்ணுடைய பெயர்களையும்
    எடுத்துக்கொள்ளுங்கள்...அவற்றை
    பிரித்துப்பார்த்தால் கடைசியில் தெய்வத்தின்
    பெயராகவே முடியும் (தொண்ணூறு
    சதவீதம்). மேலும் தமிழர்களின் பண்பாடும்,
    இறை
    உணர்வும் ஒன்றாக கலந்தே இருந்தன. இதை
    பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் தெரிந்து
    கொள்ளலாம். எனவே, தமிழில் 'ழ' எனும்
    எழுத்தை மேற்கண்ட பின்புலத்தில்தான்
    தமிழர்களோ, தமிழ் சித்தர்களோ
    உருவாக்கியிருப்பார்கள் என்பது என் துணிபு.
    ?


    ஞானியின் உடலை அடக்கம் செய்யும் இடங்கள் எங்கெல்லாம் அமைக்கலாம் தெரியுமா? சமாதி ஆனவன் வீட்டின் பக்கத்தில், நடமாடும் சாலையோரத்தில்,குளக்கரையில், ஆற்றின் நடுவில், பூஞ்சோலையில்,நகரத்தில் நல்ல சுத்தமான பூமியில், அழகான கானகம், உயர்ந்த மலைச் சாரல் ஆகிய இடங்களே உகந்த இடங்களாம். சமாதிக்கான குகை எனும் குழி அப்படி அமைக்கப்பட வேண்டும்?


    நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்நிற்கின்ற பாத நவபாத நேர்விழப்பொற்பம ரோசமு மூன்றுக்கு மூன்றணிநிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே.


    அமைக்கப்படுகின்ற குழி நான்கு புறமும் காலடியால் ஐந்து அடி அகலம், ஒன்பது அடி உயரம் இருத்தல் வேண்டும். ஞானியின் உடலை அந்தக் குழியில் சமாதி வைக்கும்போது அதில் இடப்பட வேண்டிய பொருட்கள்எவை?பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்துவிஞ்சப் படுத்த தன் மேலாசனம் இட்டுமுஞ்சிப் படுத்து வெண்ணீரிட்டு அதன் மேலேபொன்செய் நற் சுண்ணம் பொதியலுமாமே.பொன், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய ஐந்து வகை உலோகங்களையும்,வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், பவழம், கோமேதகம், புஷ்பராகம், குருவிந்தம், முத்து ஆகிய நவமணிகளையும் பரப்பி வைத்து, அதன் மீது இருக்கை அமைத்து, தர்ப்பைப் புல் பரப்பி, விபூதியை நிறைய இட்டுவைக்க வேண்டும். அதன் மூது சுண்ணப் பொடியை இட்டு வைக்க வேண்டும். பிறகு?நள்குகை நால்வட்டம் படுத்ததன் மேற்சாரக்கள்ளவிழ் தாமம் களபம் கத்தூரியும்தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்துஒள்ளிய தூபம் உவந்திடுவீரே.குழியின் அடியில் நடுவாக சதுரமாகச் செய்து அதன் மீது தேனொழுகும் மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் போன்றவற்றைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.


    நல்ல பிரகாசமான தீப ஒளியைக் குழிக்குள் காட்ட வேண்டும்.ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயமீதினில் இட்டு ஆசனத்தின் மேல் வைத்துப்போதறு சுண்ணமும் நீறும் பொலிவித்துமீதில் இருத்தி விரித்திடுவீரே.உடலெங்கும் திருநீற்றால் பூசி மேலாடை போர்த்தியதுபோல செய்து, உடலை இருக்கையில் அமர்த்தி, மலர், அருகம்புல், நறுமணப் பொடி, வெண்ணீறு ஆகியவற்றை அணிவித்துக் குழியில் வைத்து நான்கு பக்கமும் மண்ணைச் சரித்து மூடிட வேண்டும்.


    குப்பாயம் எனும் சொல்லுக்கு மேல்சட்டை என்று பொருள். எனக்கு ஒரு குப்பாயம் வாங்கினேன் என்று சொல்லிப் பழகலாமே.ஆக ஒரு மகா ஞானியை சமாதி இடுதல் என்பது ஏதோ ஒரு குழியை வெட்டி அதில் வைத்து மூடிவிடுவது அல்ல.அந்த குழி எப்படி வெட்டப்பட வேண்டும், எங்கெங்கு அமைக்கலாம், அதில் என்னவெல்லாம் இட்டு வைக்க வேண்டும், உடலை என்னவெல்லாம் செய்து உள்ளே வைக்க வேண்டும், எப்படி மூட வேண்டும் என்பதற்கெல்லாம்விதிமுறைகள் இருப்பது திருமந்திரம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.அந்த வழியில் தன் உடலை ஜீவசமாதி வைத்திட வேண்டுமென்று சதாசிவ பிரம்மேந்திரர் உத்தரவு இட்டார்.


    அவர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விதிமுறைகளின் அமைக்கப்பட்ட குகை போன்ற குழியில் இறங்கி குருநாதர் அமர்ந்து விட்டார். திருமந்திரம் கூறியுள்ளபடி அனைத்தையும் சரிவர செய்தபின் அவர் இறங்கிய குழியை இட்டு மூடினார்கள்.அவர் சமாதியடைந்த ஒன்பதாம் நாள் அவர் சமாதியின் மீது ஒரு வில்வ மரம் துளிர்விட்டு எழுந்தது. அவர் முன்பே தெரிவித்திருந்தபடி 12ஆம் நாள் காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி வந்தார். அவர் அங்கிருந்து ஒரு சிவலிங்கம் கொண்டு வந்திருந்தார்.
    அந்த சிவலிங்கத்தை சதாசிவ பிரம்மேந்திரர் சமாதிக்குக் கிழக்காக வைத்து லிங்கம் பிரதிஷ்ட செய்யப்பட்டது. அவர் சமாதியில் எழுந்த வில்வ மரம் முதலில் பத்தடிக்கு நேராக வளர்ந்து பின்னர் மூன்றாகக் கிளை விட்டது. அதனை பிரம்ம, விஷ்ணு,சிவன் என்று மக்கள் வழிபடலாயினர். இப்படியாக அந்த மகான் சமாதியான இடம் இன்று அவருடைய அதிஷ்டானமாகக் கட்டி சிறப்பாக வழிபட்டு வருகின்றனர். வேண்டியவருக்கு வேண்டியதை அருளும் அற்புத சக்தியாக அங்கு அவர் அருள்பாலித்து வருகிறார். அங்கு ஒரு முறை சென்று அந்த ஜீவசமாதியில் அவரை வணங்கி வந்தால் அதன் பலனை நிச்சயம் ஒவ்வொருவரும் உணர்வர்.


    சாகாக்கலை பெற்றவர்கள்-ஜீவ
    பிரயானமானவர்களின்(ஜீவ சமாதி) #தூல #அடையாளங்கள்
    ********************


    1.உலகத்தில் செத்தவர்களுக்கு இறுதி
    நேரத்தில் தீட்டு என்று ஏற்படுகிற-ஆணுக்கு
    சுக்கில ஜலமாகிய கசப்பு ஜலம் வெளியாகி
    பிண நாற்றம்எழும்புகிறதும் - இல்லாமல்
    பரிசுத்தமாக மணத்துடன் இருப்பார்கள்
    சாகாகலை பெற்றவர்கள்.


    2.ஜீவ பிரயாணம் ஆன பின்னும் தேகத்தில்
    கேசாதி பாதம் வெதுவெதுவென்று
    சூடிருக்கும்.விறைத்து விறுவிறுப்பு
    ஏறாது.உரித்த வாழைத்தண்டை வெய்யிலில்
    போட்டால் எப்படி துவளுமோ அப்படியே கை
    கால் முதலிய அங்கங்களெல்லாம் துவண்டபடி
    இருக்கும்.


    3.பாவக்கணம் ஏறாமல் தேகமானது
    பூக்கூடையை தூக்குவது போல இருக்கும்.


    4.கை கால்களில் சொடுக்கு எடுத்தால் நெட்டி
    வரும்.


    5.ஆண்டவர்களின் பாடல்களோ
    திருவக்கியங்களோ திருநாமமோ ஜீவபிரயானம்
    ஆன தூல பிம்பம் இருக்கும் எல்லையில்
    ஆரவாரத்துடன் ஒலிக்க பெரும் நேரங்களில்
    அவர்கள் மேனியிலே வியர்வை
    கொப்பளிக்கும்-துடைக்க துடைக்க வியர்வை
    மேலும் மேலும் கொப்பளிக்கும்.


    6.வயோதிகமாய் உள்ளவர்கள் ஜீவ
    பிரயாணமாகி நேரம் அதிகம் ஆகஆக அவர்கள்
    முகத்தில் இளமை பூத்து பசுமஞ்சள் வர்ணம்
    உலாவும்.


    7.பிராணன் நீங்கியவுடன் தொண்டை
    அடைத்து கொண்டு ஒரு சொட்டு ஜலம் கூட
    உள்ளே இறங்காதே(தீட்டாகி இறப்பவர்களுக்கு)-
    அந்த அடையாளம் இல்லாமல் மெய்வழி
    தெய்வமவர்களின் சன்னதியிலிருந்து காஷாய
    தீர்த்தம் கொண்டுவரபெற்று கொடுத்தால்
    அதை சாப்பிடுவார்கள்-ஒரு மாதம் கழித்து
    சென்று கொடுத்தாலும் கூட இக்காரியம்
    நடக்கிறது.


    8.பிராணன் நீங்குமுன் கூனி குறுகி
    இருந்தவர்கள்-கால் கை வராமல் இருந்தவர்கள்-
    புண் முதலியவற்றால் துர்நாற்றம்
    வீசிகொண்டிருந்தவர்கள் அத்தேக குறைகளும்
    நாற்றமும் நீங்கி சாகாகலையின் வைபவ
    சிறப்புடையவர்களாக ஆகின்றார்கள்.


    9.அடக்கமான பின் வெளியே நாற்பது நாள்
    போட்டு வைத்திருந்தாலும் தேகம்
    கெடுவதில்லை.


    10.மண்ணில் புதைத்தால் தேகத்தை மண்
    தீண்டாது.


    ஜீவ சமாதியில் கடைபிடிக்க
    வேண்டிய நியதிகள்
    ******************


    பக்தி சிரத்தையோடு காலை உள்ளே வைக்க வேண்டும்.
    மனதை முழுமையாக மகானின் சன்னதியில் செலுத்த வேண்டும்.
    மூச்சை மகானின் சிவலிங்கத்தில் இருந்து இழுத்து உடல் முழுவதும் செலுத்த வேண்டும்.


    மூச்சுக் காற்றை குறைந்தது 9 முறையாவது அவ்வாறு இழுக்க வேண்டும்.


    அவ்வாறு மூச்சை இழுத்து விழும் போது உடல் முழுவதும் ஆனந்த அதிர்வலைகள் உருவாகின்றதை நன்கு உணரலாம்.


    குறைந்தது ஐந்து நிமிடம் சன்னதியின் முன் உட்கார்ந்து மகானின் திரு உருவத்தின் மீது மனதை தியானிக்க வேண்டும்.
    உங்களின் குறைகளை மகானின் முன், அமைதியில் வெளிப்படுத்த வேண்டும்.


    உங்களின் குறைகள் தீர்வு பெற்ற பின்பு உங்களால் ஆன உதவிகளை மகானின் கோவிலுக்கு செய்ய வேண்டும்.


    உடல் உழைப்பாக இருந்தாலும் சரி, கோவிலுக்கு தேவைப்படும் அகர்பத்தி, எண்ணை, பூ, இவற்றை செலுத்தினாலும் நல்லது.
    மகானின் கோவிலுக்கு செல்லும் போது சிறந்த நறுமணம் கொண்ட ஊதுவத்தியுடன் செல்வது மிக சிறந்த பண்பாகும்.


    ஜீவசமாதியில் தியானம் செய்யும் போது நம் பாவ வினைகளின் தீவிரம் குறையும்.
    இது புனிதமான இடம். இந்த இடத்தில் சித்த புருஷர் ஜீவசமாதியில் உறைந்திருக்கும் இடம்.


    இந்த புனிதமான இடத்தில் நீங்கள் தரிசனம் செய்தால் உங்களின் பாவ பதிவுகள் அனைத்தும் பறந்தோடிவிடும்.


    இந்த புனித இடத்தில் நீங்கள் உட்கார்ந்து தவம் இயற்றினால் உங்களின் ஆத்மா பரிசுத்தம் அடையும்.


    ஆன்மீக தாகம் கொண்டவர்கள் இங்கு தவம் இயற்றும் போது மகானின் சூக்கும சரீரம் உங்களுள் ஊடுருவுவதை கண்கூடாக உணர்வீர்கள்.


    உங்களின் தேவையற்ற சிந்தனைகள், கட்டுப்பாடில்லாத எண்ண ஓட்டங்கள் மற்றும் உங்களை படுகுழியில் தள்ளிவிடும் அர்த்தமற்ற ஆசைகள் அனைத்தும் நின்று போகும்.


    ஜீவன் முக்தர் உறையும் இடத்தில் தொடர்ந்து நித்திய கருமமாக நீங்கள் தவம் இயற்றினால் நீங்கள் இந்த மனிதப் பிறவி எடுத்ததற்கான முழு அர்த்தத்தை உணர்ந்து அந்த பெருவதற்கு அரிய பேறையும் அடைவீர்கள்
    ஜீவ சமாதிக்கு செல்லும் போது மகானின் சன்னதி மிகவும் ஏழ்மை நிலையிலும், பராமரிப்பு இல்லாமல் இருந்தால், அதனை சரி செய்வதற்கு நம் சக்திக்கு முடிந்த வரை முயல வேண்டும்.


    மகானின் ஜீவசமாதிக்கு தொண்டு புரியும் போது, நான் என்ற அகம்பாவம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்
Working...
X