தற்கால மித்ருக்கள் தற்கால சத்ருக்கள் என உண்டு. அவை பிறகு வரும்.

நக்ஷத்திரங்கள்:- சாத்வீக குணமுடையது_ புனர்பூசம்; ஆயில்யம்; விசாகம்; கேட்டை; பூரட்டாதி; ரேவதி.
ராஜஸ நக்ஷத்திரங்கள்;- பரணி; கார்த்திகை; ரோஹிணி; பூரம்; உத்திரம்; ஹஸ்தம்; பூராடம்; உத்திராடம்; திருவோணம்;,
தாமஸ குண நக்ஷத்திரங்கள்:- அசுவினி; மிருகசீரிடம்; திருவாதிரை; பூசம்; மகம் சித்திரை; சுவாதி; அநுஷம்; மூலம்; அவிட்டம்; சதயம்; உத்திரட்டாதி

ஆண் நக்ஷத்திரம்:- அசுவினி; புனர்பூசம்; பூசம்; ஹஸ்தம்; அநுஷம். திருவோணம்; பூரட்டாதி; உத்திரட்டாதி;

பெண் நக்ஷத்திரங்கள்:- பரணி; கார்த்திகை; ரோஹிணி; திருவாதிரை; ஆயில்யம்; மகம். பூரம்; உத்திரம்; சித்திரை; சுவாதி; விசாகம். கேட்டை; பூராடம்; உத்திராடம்; அவிட்டம்; ரேவதி;
அலி நக்ஷத்திரம்:-_ மிருகசீர்ஷம். மூலம். சதயம்.

ஆண் கிரஹங்கள்:- சூரியன்; செவ்வாய்; குரு;
பெண் கிரஹங்கள்:- சந்திரன்; சுக்கிரன்; ராஹு
அலி கிரஹங்கள்:- புதன்; சனி; கேது.

பிராஹ்மண ஜாதி:-பிராஹ்மண ஜாதி
சூரியன்; செவ்வாய்:- க்ஷத்திரிய ஜாதி
சந்திரன், புதன்:- வைசிய ஜாதி

சனி:- சூத்திர ஜாதி
ராஹு; கேது:- சங்கிரம ஜாதி

சூரியன்; அவயவம்;- தலை
சந்திரன் முகம். வயிறு;
செவ்வய்; கேது:- கை, தோள்

புதன் :- கழுத்து
குரு :- ஹிருதயம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசுக்கிரன் :- மர்ம ஸ்தானம்
சனி; ராஹு :- தொடை;கணுக்கால்; பாதம்.

கிரஹ மறைவு ஸ்தானம் ;-
சூரியன்; செவ்வாய்; சனி; ராஹு; கேது :-லக்னத்திற்கு 8 அல்லது 12ல் இருந்தால் மறைவு.
சந்திரன்; புதன்; குரு :-லக்னத்திற்கு 3,6,8,12 ல் இருந்தால் மறைவு.

சுக்கிரன் :- ல்க்னத்திற்கு 3, 8 ல் இருந்தால் மறைவு.

கிரஹங்களின் ஐந்து பூத தன்மை:-
சந்திரன்; சுக்கிரன் :- தண்ணீர்
செவ்வாய் :- பூமி

குரு; சூரியன் :- (நெருப்பு) அக்னி
புதன் :- காற்று
சனி; ராஹு.; கேது :- ஆகாயம்

குரு; புதன்; சனி _ வாதம்
சூரியன்; செவ்வாய்; ராஹு; கேது :-பித்தம்
சந்திரன்; சுக்கிரன் :-கபம்;

செவ்வாய், சந்திரன் ;ராஹு; கேது:- சர கிரஹம்
சூரியன்; சுக்கிரன் :- ஸ்திர கிரஹம்
புதன்; குரு; சனி :- உபய கிரஹம்

குணம் ;-
சந்திரன்; குரு :- ஸாத்வீகம்.
சுக்கிரன்; செவ்வாய் :- ராஜஸம்
சூரியன்; புதன்; சனி; ராஹு; கேது :-தாமஸம்.

கிரஹங்களின் பாஷை:-
சூரியன்; குரு; சுக்கிரன் :- ஸம்ஸ்கிருதம், ஹிந்தி; தெலுங்கு;கன்னடம். மலையாளம்.
செவ்வாய் :- தமிழ்; தெலுங்கு; மஹாராஷ்டிரம்.

புதன் :- தமிழ்; கணிதம்; சிற்பம்; ஜ்யோதிடம்;
சனி; ராஹு; கேது :- அந்நிய பாஷை.

கிரஹங்கள் ராசியில் சஞ்சரிக்கும் கால அளவுகள்
சூரியன் :- ஒவ்வொரு ராசியிலும் 30 நாட்கள் சஞ்சரிப்பான்.
சந்திரன் ;- ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால் நாட்கள் சஞ்சரிப்பான்.

செவ்வாய் :- ஒவ்வொரு ராசியிலும் 45 நாட்கள் சஞ்சரிப்பான்.
புதன் :- ஒவ்வொரு ராசியிலும் 30 நாட்கள் சஞ்சரிப்பான்
குரு :- ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடம் சஞ்சரிப்பான்;

சுக்கிரன் :- ஒவ்வொரு ராசியிலும் 30 நாட்கள் சஞ்சரிப்பான்
சனி :- ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் சஞ்சரிப்பான்
ராஹு; கேது :- ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் சஞ்சரிப்பான்.

( வக்ரம்; அதிசாரம்; ஸ்தம்பனம் காரணமாக ராசியில் சஞ்சார கால அளவுகள் மாறும் )

மேஷம்; கடகம்; துலாம்; மகரம்:- சர ராசிகள்.
ரிஷபம்; சிம்மம்; வ்ருஸ்சிகம்; கும்பம் :- ஸ்திர ராசிகள்,

மிதுனம்; கன்னி; தனுசு; மீனம் :- உபய ராசிகள்.

ஆண் ராசி:- மேஷம்; மிதுனம்; சிம்மம்; துலாம்; தனுசு; கும்பம்.
பெண் ராசி :- ரிஷபம்; கடகம்; கன்னி; விருச்சிகம்; மகரம்; மீனம் .
ஆண் ராசிகள் எல்லாம் ஒற்றை படை ராசிகள்: பெண் ராசிகள் எல்லாம் இரட்டை படை ராசிகள் ஆகும்;

கால்:- இரு கால் ராசி_ மிதுனம்; கன்னி; துலாம்; கும்பம்;
நாற்கால் ராசி:- மேஷம்; ரிஷபம்;சிம்மம்.
பல கால் ராசி:- கடகம்; விருச்சிகம்; மீனம்;

தனுசு:- முதல் பகுதி இரண்டு; பிற்பகுதி நான்கு
மகரம்;_ முதல் பகுதி நாற்கால்; பிற்பகுதி இரு கால்.

கால புருஷாங்கம்:- மேஷம்= தலை; ரிஷபம்=முகம்; மிதுனம்=மார்பு; கடகம்= ஹிருதயம்; சிம்மம்= வயிறு; கன்னி= இடுப்பு; துலாம்= நாபி; விருச்சிகம்=பீஜம்
தனுசு= தொடை; மகரம்=முழங்கால்; கும்பம்=கணுக்கால்; மீனம்=பாதம்.

ஸத்வ குணம்;= கடகம்; சிம்மம்; தனுசு; மீனம்.
ரஜோ குணம்:=மேஷம்; ரிஷபம்; மிதுனம்; துலாம்; விருச்சிகம்
தமோ குணம்;=கன்னி;மகரம்; கும்பம்

வாதம்:-ரிஷபம்; மிதுனம்; கன்னி; துலாம்;மகரம்; கும்பம்.
பித்தம்=மேஷம்; சிம்மம்; தனுசு
கபம்:= கடகம்; விருச்சிகம்; மீனம்

சர ராசிகளுக்கு பதினொன்றாம் வீடு=பாதக ஸ்தானம். இதன் அதிபதி=பாதகாதிபதி பாதகம் செய்வார்;
ஸ்திர ராசிகளுக்கு:= ஒன்பதாம் வீடு =பாதக ஸ்தானம்; இதன் அதிபதி பாதகாதிபதி பதகம் செய்வார்;

உபய ராசிகளுக்கு ஏழாம் வீடு பாதக ஸ்தானம் இதன் அதிபதி பாதகாதிபதி =பாதகம் செய்வார்;
லக்னத்திலிருந்து பார்க்க வேண்டும்;. சர ராசிக்கு லக்னத்திலிருந்து பதினொன்றாம் வீட்டு அதிபதி பாதகாதிபதி இவர் பாதகம் செய்வார்,

இந்த பாதகாதி பதிகளை லக்னாதிபதியோ, அல்லது ஐந்தாம் வீட்டு அதிபதியோ அல்லது ஒன்பதாம் வீட்டு அதிபதியோ பார்த்து விட்டால்
பாதகம் செய்ய மாட்டார்கள். இவர்களால் பார்க்கபடாவிட்டல் பாதகம் செய்வார்;

உதாரணம்:- ஒரு ஜாதகத்தில் லக்னம் =கும்பம் இதன் அதிபதி சனி; கும்பம் ஸ்திர ராசி; ஆதலால் ஒன்பதாம் வீட்டுகாரன் துலாம்= அதிபதி=சுக்கிரன்; இந்த ஜாதகத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சத்தில் உள்ளார். கும்பத்திற்கு ஐந்தாம் வீட்டுகாரன் புதன். . சனியோ புதனோ இந்த ஜாதகத்தில் சுக்கிரனை பார்க்கவில்லை. அப்போது நடந்தது சுக்கிர தசை ; சுக்கிர தசை முடிந்தவுடன் சூரிய தசை சூரிய புக்தியில் திருமணம் நடந்து விட்டது. சுக்கிரன் உச்சத்தில் இருந்தாலும், சுக்கிர தசை நடந்தாலும் பாதகாதிபதி சுக்கிரன் ஆனதால்

திருமணம் நடத்தவிட வில்லை. இந்த சுக்கிரனே பாக்கியாதிபதி. ஆக இந்த ஜாதகத்தில் இருந்தாலும் திருமண பாக்கியம் கொடுக்கவில்லை. அவனே பாதகாதிபதி ஆனதால்..
தசை களிலும் பல உள்ளன. அஷ்டோத்தரி தசை, பஞ்சோத்தரி தசை/ லக்னாதி தசை; ராசி தசை; கால தசை; சக்கிர தசை; யோகினி தசை; த்ரிகோண தசை. ஸ்திர தசை; சர தசை; த்ருக் தசை; கால சக்கிர தசை; சஷ்டாப்தீக தசை; த்வாதச அஷ்டோத்தரி தசை விம்சோத்தரி தசை.

இதில் தற்காலத்தில் புழக்கத்தில் உள்ளது விம்சோத்தரி தசை