திதிகள் 15. இவைகளின் லக்ஷணங்கள்:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends-நந்தை திதிகள்: -ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி
பத்ரை திதிகள்: -த்விதியை, ஸப்தமி, துவாதசி;
ஜயை திதிகள்: -திரிதியை, அஷ்டமி, த்ரயோதசி

ரிக்தை திதிகள்: -சதுர்த்தி, நவமி, சதுர்தசி
பூர்ணை திதிகள்: -பஞ்சமி, தசமி, பெளர்ணமி

அமாவாசைக்கு அடுத்த நாள் ப்ரதமை முதல் பெளர்ணமி முடிய உள்ள நாட்கள் :- இதை பூர்வ பக்ஷம், சுக்ல பக்ஷம், வளர் பிறை என்று கூறுவர்.
பெளர்ணமிக்கு அடுத்த நாள் ப்ரதமை முதல் அமாவாசை முடிய உள்ள நாட்கள்; - இதை தேய் பிறை, க்ருஷ்ண பக்ஷம், அமர பக்ஷம் என்று கூறுவர்

வாரம்:-7- ஞாயிறு, திங்கள், செவ்வாய்; புதன்; வியாழன்; வெள்ளி; சனி.

திதி; வாரம், நக்ஷத்திரம், யோகம்,. கரணம் இந்த ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம் எனப்படுகிறது.