திதி என்றால் வானத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்.சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இருக்க அமாவாசை.. அதுவே 12 பாகை விலகி செல்லும்போது ப்ரதமை திதி. இவ்வாறே மற்றவற்றிற்கும் அறியலாம்..

ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியுனும் சந்திரனும் செல்லுகின்ற மொத்த தூரத்தை குறிப்பது யோகம். இவை மொத்தம் 27.
நக்ஷத்திரங்கள் ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாக பிரிக்க படுகிறது. ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்கள் ஆதிக்க செலுத்தும் கால அளவு வேறு படும். இதை பஞ்சாங்கம் மூலம் அறியலாம்.

திதியில் பாதியே கரணம்.

பூமியின் மத்திய பாகமான பூமத்திய ரேகையில் ரேகையின் தெற்கு வடக்காக உள்ள பாகத்தை அட்சாம்சம் ( லேட்டிடூடு ) என்பர்.
தெற்கில் உள்ளதை தெற்கு அல்லது தக்ஷிண அட்சாம்சம் என்பர்.வடக்கில் உள்ளதை உத்திர அல்லது வடக்கு அட்சாம்சம் என்பர்.

இதே போல் மேற்கு கிழக்காக உள்ளதை ரேகாம்சம் ( லாங்கிடூடு ) என்பர்.மேற்கில் உள்ளது மேற்கு ரேகாம்சம், கிழக்கில் உள்ளது கிழக்கு ரேகாம்சம் என்பர்.
ஒவ்வொரு ஊரிலும் இந்த அட்சாம்சம், ரேகாம்சத்திற்கேற்ப கால வித்தியாசம் ஏற்படும் இதற்கேற்ப சூரிய உதய நேரம் மாறுபடும்.

ரேகாம்சத்தின் வித்தியாசத்திற்கேற்ப ஒரு ரேகைக்கு 4 நிமிடமாக சூரிய உதய நேரத்தை கூட்டியோ கழித்தோ அறியலாம்.
தமிழ் மாதங்களும் அதற்குறிய ராசிகளும்.; -சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் வீதம் 12 ராசிகளையும் கடக்க ஒரு வருடம் ஆகின்றது.

ராசியில் முதல் ராசி மேஷ ராசி. சூரியன் வருடத்தின் முதல் மாதமான சித்ரையில் ----அதாவது மேஷ ராசியில் இருப்பதால் சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்று கூறுவது பொருந்தும்.

மேஷம்-சித்திரை; ரிஷபம்-வைகாசி; மிதுனம்-ஆனி; கடகம்- ஆடி; சிம்மம் ஆவணி;கன்னி=புரட்டாசி; துலாம் ஐப்பசி;; வ்ரிச்சிகம்=கார்த்திகை; தனுசு=மார்கழி; மகரம்=தை; கும்பம்=மாசி; மீனம்= பங்குனி;;

சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கிறானோ அந்த ராசியே ஆரம்ப லக்னமாக இருக்கும். அதாவது சூரியன் கார்த்திகை மாதத்தில் =விருச்சிக மாதத்தில்
விருச்சிக ராசியில் 30 நாட்களும் சஞ்சரிப்பான். கார்த்திகை மாதத்தில் குழந்தை பிறந்த அன்று முதல் ஆரம்ப .ராசி விருச்சிகம்; முதல் ஆரம்ப லக்னமும் விருச்சிகம் தான்
..
இந்த குழந்தை பிறந்தது சென்னையில் இது 13 பாகை ( டிகிரி) அட்சாம்சத்திலுள்ளது.. . சென்னை மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள சுமார் 120 கிலோ மீட்டர் உள்ள ஊர்களுக்கும் இந்த 13 பாகையே பொருந்தும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends13 பாகை அட்சாம்சத்திற்குறிய ராசிமான சங்கியை பஞ்சாகத்தில் இருக்கும்.

சுதேச அக்ஷாம்சத்திற்கேற்ப எல்லா பெரிய ஊர்களுக்கும் பஞ்சாங்கத்தில் கொடுக்கிறார்கள். சென்னைக்கு 13 டிகிரி அக்ஷாம்சத்திற்கு மேஷம் 4 நாழிகை 28 விநாடிகள்; ரிஷபம் 5.03; மிதுனம் 5-29; கடகம் 5,22; சிம்மம்-5-08
கன்னி-5-04; துலாம் 5-17; வ்ருச்சிகம்-5-30; தனுசு-5-19; மகரம்-4-45; கும்பம்-4-16; மீனம்-4-10. என்று கொடுத்து இருப்பார்கள்.; குழந்தை பிறந்தது கார்த்திகை மாதம் 25ந்தேதி. 33 நாழிகைக்கு ஜனனம் என்றால் பஞ்சாங்கத்தில் 25ந்தேதி

உதய லக்ன முடிவு என்ற காலத்தில் வ்ருச்சிக மாத 5நாழிகை 30 விநாடிகளை விநாடிகளாக்கி இந்த மாதத்திற்கு 30 நாட்கள் ஆனால் இதை 30 ஆல் வகுத்து ஒரு நாளைக்கு 11 விநாடிகள் வீதம் குறைத்து 25ந் தேதி உதய

லக்ன முடிவு 1 நாழிகை என கொடுத்து இருப்பர்.; விருச்சிகம்1-00 நாழிகை; மேஷம் 4-28; ரிஷபம் 5-03; மிதுனம் 5.29; கடகம் 5,22; சிம்மம்-5-08; கன்னி-5-04
இதை கூட்டினால் 31 நாழிகை 34 விநாடிகள் வரும்.33 நாழிகையில் ஜனனம் என்றால் 33-00-31-34=1 நாழிகை 26 விநாடிகள் , ஆதலால் கன்னிக்கு அடுத்த துலாம் லக்னமாக அமைக்க வேண்டும் ராசி கட்டத்தில்.

இந்த குழந்தை இரவு 7-15 மணிக்கு ஜனனம் என்றால் பகல் 12 ம்னிக்கு மேல் என்பதால் 12+7-15= 19-15 மணிக்கு ஜனனம் என்றால் பகலா இரவா என்ற சந்தேகமும் வராது.சென்னையில் அன்று சூரிய உதயம் 6-03 என்றால்

19-15-6-03=13-12. .