இதன் மூலம் அன்று இந்த குழந்தை சூரிய உதயத்திலிருந்து 13 மணி 12 நிமிஷத்தில் பிறந்து உள்ளது..சூரிய உதயமும் ஊருக்கு ஊர் மாறுபடும்.
.
ராசி இருப்பு, தசா புக்தி போன்ற கணக்கீடு முறைளுக்கு நாழிகை விநாடி முறை அநுசரிக்க படுவதால் இந்த 13மணி 12 நிமிஷத்தை நாழிகையாக மாற்ற வேண்டும். 12 மணிக்கு 30 நாழிகை+1 மணிக்கு 2 நாழிகை 30 விநாடி
12 நிமிஷத்திற்கு 30 விநாடி ஆதலால் 13 மணி 12 நிமிஷத்திற்கு 33 நாழிகை.

இரவு 2 20 மணிக்கு குழந்தை பிறந்தால் 24+2-20=26-20-சூரியோதய நேரம் 6-03.
ஆதலால் குழந்தை பிறந்த நேரம் சூரியோதயத்திலிருந்து 22மணி 17 நிமிஷம் என கணக்கிட்டு கொள்ள வேண்டும்.

அந்தந்த ஊரில் உள்ள ஜோதிடர்கள் அந்தந்த சூரியோதயம், பாகை கணக்குபடி அட்டவணை போட்டு வைத்திருப்பார்கள் அந்த காலத்தில்
தற்போது கம்ப்யூட்டர் தவறில்லாமல் உடனே போட்டு கொடுத்து விடுகிறது.,
வாரம்:-7- ஞாயிறு, திங்கள், செவ்வாய்; புதன்; வியாழன்; வெள்ளி; சனி.
திதி; வாரம், நக்ஷத்திரம், யோகம்,. கரணம் இந்த ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம் எனப்படுகிறது.12 ராசிகளில் 27 நக்ஷத்திரங்கள் இம்மாதிரி அடங்கி உள்ளன,
மேஷம் அசுவினி, பரணி. கார்த்திகை 1 ம் பாதம்
ரிஷபம்கார்திகை-2,3,4-பாதம், ரோஹிணி, ம்ருகசீர்ஷம் 1,2, பாதம்
மிதுனம்- ம்ருக்சீர்ஷம்-3,4,பாதம், திருவாதிரை , புனர்பூசம் 1,2,3, பாதம்

கடகம்புனர்பூசம்-4 ம் பாதம், பூசம், ஆயில்யம்
சிம்மம்- மகம்-பூரம், - உத்திரம்-1ம் பாதம்
கன்னிஉத்திரம்,2,3,4,ம் பாதம், ஹஸ்தம்-சித்திரை1,2,ம் பாதம்

துலாம்சித்திரை3,4, ம்பாதம், சுவாதி, விசாகம்1,2,3ம் பாதம்
வ்ருச்சிகம்-விசாகம் 4 ம் பாதம் அனுஷம், கேட்டை;
தனுசு;-மூலம், பூராடம், உத்ராடம்-1 ம் பாதம்

மகரம்உத்ராடம்-2,3,4,ம்பாதம், திருவோனம், அவிட்டம் 1, 2 பாதம்
கும்பம் அவிட்டம் 3,4,பாதம்,சதயம், பூரட்டாதி 1,2,3,,பாதம்
மீனம்: -பூரட்டாதி 4 ம் பாதம், உத்ரட்டாதி ரேவதி.

ஒரு வருடத்திற்கு 2 அயனங்கள்; -

உத்திராயனம்:- தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய.
தக்ஷிணாயனம்:- ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய

ஒரு வருடத்திற்கு ஆறு ருதுக்கள்;

சித்திரைவைகாசி=வஸந்த ருது
ஆனி-ஆடி=க்ரீஷ்ம ருது
ஆவணி-+புரட்டாசி=வர்ஷ ருது

ஐப்பசி-கார்த்திகை=சரத் ருது
மார்கழி-தை=ஹேமந்த ருது
மாசி-பங்குனி=சிசிர ருது

சகாப்தங்கள்=8

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபான்டவ சகாப்தம், சாலிவாஹன சகாப்தம் ( தற்போது நடக்கிறது.)
விக்கிரம சகாப்தம்;போஜ ராஜ சகாப்தம்; கொல்ல சகாப்தம்; ராமதேவ
சகாப்தம்;பிரதாப ருத்திர சகாப்தம்; கிருஷ்ண தேவ ராய சகாப்தம்.

கிரஹ பாத சாரம்
பஞ்சாங்கத்தின் முன் பக்கங்களில் கிரஹ பாத சாரங்கள் என்ற தலைப்பின் கீழ் கிரஹங்களின் சஞ்சார நிலை குறிக்க பட்டிருக்கும்.. அதை கவனிக்கவும்.
அதன் படி நம் உதாரண ஜாதகத்தில் கார்த்திகை மாதம் 25ந் தேதி சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ராஹு , கேது எந்த நக்ஷத்திரத்தில் உள்ளார் என்பதை பார்த்து எழுதி கொள்ளவும்.

அந்த தேதியில் இல்லை எனில் அதற்கு முன்னுள்ள தேதியில் உள்ளதை குறித்து கொள்ளலாம். உதாரணமாக சூரியனுக்கு கார்த்திகை 25ல் இல்லை .அதற்கு முன்னுள்ள தேதியிலும் பின்னுள்ள தேதியிலும் உள்ளது; ; இதிலிருந்து கார்த்திகை 25ல் உள்ள நிலையை அறிய வேண்டும்.


சூரியன் கேட்டை 3ல் 24 ந் தேதியில் உள்ளது. பிறகு 27ந்தேதி கேட்டை 4ம் பாதம் செல்கிறது. ஆதலால் சூரியன் 25 ந்தேதியில் கேட்டை 3 ல் என்று எழுதி கொள்ளவும். . கேட்டை 3 ம் பாதம் வ்ருச்சிக ராசியில் சூரியன் என்று குறிக்க வேண்டும். இம்மாதிரி ராசி கட்டத்தில் எல்லா கிரஹங்களையும் குறித்து விடலாம். நவாம்ச சக்கிர அட்டவணையை வைத்துகொண்டு கேட் டை 3 ம் பாதம் நவாம்ச சக்கிரத்தில் கும்பத்தில் போட்டு விடலாம்..

ராசி அம்ச கட்டங்களில் அந்தந்த கிரஹங்களை போட்டோம். தற்போது அந்தந்த ஸ்தானங்களில் உள்ள கிரஹங்கள் எந்த நிலையில் உள்ளன.
பூரண பலமா அல்லது பலமற்ற நிலையா என்பதை பார்ப்போம்;

ஆறு வகை பலமுள்ளன. அவை_ ;ஸ்தான பலம், கால பலம், திக் பலம், நைசார்க்க பலம்; சேஷ்ட பலம். அயன பலம் என்பன.
இவற்றின் ஸ்தான பலத்தின் உட் பிரிவுகள்.: -உச்ச பலம்; சப்த வர்க பலம்; யுக்மாயுக்ம பலம். கேந்திர பலம்; திரேக்கோன பலம்; த்ருக் பலம்.

கால பலம்:- ஐந்து உட் பிரிவுகளை கொண்டது; பகல் இரவு பலம் ஆண்டு மாத தின பலம்; நத உன்னத பலம்; ஹோராதிபதி பலம்; பக்ஷ பலம் என்பன.,
கிரஹ யுத்த பலம். இவை எல்லவற்றையும் பார்த்து, தற்கால தசா புக்தி பலன், கோச்சார நிலையும் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.
.