கிரஹங்களின் சுப அசுப தன்மை;

குரு, சுக்கிரன், புதன் வளர் பிறை சந்திரன் சுப கிரஹம்
சூரியன், செவ்வாய், சனி, ராஹு, கேது அசுப கிரஹங்கள்.

குரு முழு சுபன்; சுக்கிரன் முக்கால் சுபன்.
சந்திரன் வளர்பிறை ஏகாதசி முதல் தேய் பிறை பஞ்மி முடிய முழு சுபன்..

வளர்பிறை சஷ்டி முதல் தசமி வரையில் சமன். இந்த சமன் நிலையில் இருக்கும் போது இவன் எந்த கிரஹத்துடன் கூடி இருக்கிறானோ அந்த கிரஹம் சுபனாக இருந்தால் சந்திரனும் சுபன். பாபியாக இருந்தால்

சந்திரனும் பாபி ஆகின்றான்.தேய் பிறையில் ஏகாதசி முதல் வளர் பிறை பஞ்சமி வரை முழு பாபி.தேய் பிறை சஷ்டி முதல் தேய் பிறை தசமி வரை சமன். அதாவது பாபியுடன் சேர்ந்தால் பாபி. சுபனுடன் சேர்ந்தால் சுபன்.

புதன் ஒரு ராசியில் தனியாக இருப்பின் அரை சுபன்.சுப கிரஹங்களுடன் சேர்ந்து இருந்தாலும் அரை சுபன். அசுபர்களுடன் புதன் சேர்ந்து இருந்தால் புதன் அரை அசுபன்.
கிரஹங்களின் பலத்தை ஸ்தானத்தை கொண்டு மட்டுமின்றி அவை இருக்கும் நிலையை கொண்டும் மதிப்பிடலாம். மூல த்ரிகோணத்தில் இருந்தால் முக்கால் பங்கு பலம்.

உச்ச ராசியில் இருந்தால் ஒரு பங்கு பலம்.ஆட்சி வீட்டில் இருந்தால் அரை பங்கு பலம்.
அதிக நட்பு பெறும் கிரஹ ராசியில் இருந்தால் முக்கால் பங்கு பலம்.நட்பு பெறும் கிரஹ ராசியில் இருந்தால் கால் பங்கு பலம்.சமம் பெறும் கிரஹ ராசியில் இருந்தால்

அரைகால் பங்கு பலம்.விரோத கிரஹ ராசியில்
இருந்தால் வீசம் பங்கு பலம்.அதிக விரோத கிரஹ ராசியில் இருந்தால் அரைவீசம் பங்கு பலம். நீச ராசியில் இருந்தால் பலம் இல்லை.

முக்கால் என்பது 75% அரை என்பது 50% கால் என்பது 25% அரைகால் என்பது 12..50% வீசம் என்பது 6..25% அரை வீசம் என்பது 3..125%பலம். என அறியலாம்.
12 ராசிகளை , பாவங்கள் என்றும் வீடு என்றும் கூறுவர். பன்னிரு பாவங்களிலும் பல் வேறு ஸ்தானங்கள் உள்ளன.அவை

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsகேந்திரம்: -1,4,7,10. 1 என்பது லக்கினம். 4, 7, 10 என்பது லக்கினத்திலிருந்து நான்காவது, வீடு, லக்கினத்திலிருந்து 7ஆவது வீடு. லக்கினத்திலிருந்து பத்தாவது வீடு என்று கொள்க. இதற்கு கேந்திர ஸ்தானம் என்று பெயர்.

இதை விஷ்ணு ஸ்தானமென்றும் உச்சம் என்றும் கூறுவர். ஒன்று லக்ன கேந்திரம்- உதயம்; கால் பலன்; நான்காவது கேந்திரம்- அரை பலன். ஏழாவது கேந்திரம் சுப அசுப கலப்பு பலன். பத்தாவது கேந்திரம் பூரண பலன்.

கிரஹ கேந்திர பலன்: - லக்ன கேந்திரத்தில்; புதன் குருபூரண பலன் நாலாவது கேந்திரத்தில் சந்திரன்- சுக்கிரன்; பூரண பலன்;
ஏழாவது கேந்திரத்தில் சனி-ராகு- கேது-; பூரண பலன்

பத்தாவது கேந்திரத்தில் : - சூரியன் செவ்வாய்;-பூரண பலனை கொடுப்பார்கள்

த்ரிகோணம்;- 1,5,9. லக்கினத்திலிருந்து ஐந்தாவது வீடு,, ஒன்பதாவது வீடு கோணங்கள் ஆகும். இதை லக்ஷ்மி ஸ்தானம் என்று அழைப்பர். ஐந்தாவது வீட்டில் ( கோணத்தில் )முக்கால் பலனையும் ஒன்பதாவது வீட்டில்

(கோணத்தில்) கிரஹங்கள்,, தசாநாதன் இவர்கள் இருக்கும் போது முழு பலனையும் கொடுப்பார்கள்.
பணபரம்: -2,5,8,11.

ஆபோகிலிபம்: -3,6,9,12.
உபஜயம்: -3,6,10,11,
மறைவு ஸ்தானம்; - 6,8,12.
இந்த ஸ்தானங்களில் கிரஹங்கள் இடம் பெறும் போது தன் பலத்தில் வேறு படுகிறது.

கேந்திராதிபத்ய தோஷம்: -1,4,7,10 ஸ்தானங்களுக்கு அதிபதியாக இருப்பது.கேந்திர ஆதிபத்ய தோஷம். இது பாப கிரஹங்களுக்கு கிடையாது.சுப கிரஹங்களுக்கு உண்டு.

கேந்திர ஸ்தானங்களில் (1,4,7,10) இருக்கும் கிரஹங்கள் பூரண பலத்துடன் இருக்கும். இதை விட்டு விலக விலக பலமும் குறைகிறது. பணபரம் 2,5,8,11,ல் இருக்க அரை பலம். அபோகிலிபம் 3,6,9,12,ல் இருக்க கால் பலம்.ஆகிவிடுகிறது.

நைசார்க்கம் என்றால் இயற்கையில் என்று பொருள். கிரகம் இயற்கையில் பெறும் நட்பு, சமம், பகை.யை குறிக்கிறது .இதை தவிர தற்காலிக நட்பு, பகை உண்டு. தற்காலிகத்தில் சமம் கிடையாது. ஒரு கிரஹம்,,, தான் இருக்கும்

இடத்திலிருந்து , 2,3,4,10,11,12 இடங்களில் இருக்கும் கிரஹங்கள் தற்கால நட்பு கிரஹங்கள். மற்ற 1,5,6,7,8,9, இடங்களில் கிரஹங்கள் இருப்பின் அவை தற்கால் பகை கிரஹங்கள் ஆகின்றன.
இந்த இரண்டு வித நட்பு,, பகை அடிப்படையில் அதிக நட்பு, அதிக பகை சமம் என மூன்று பிரிவுகள் வருகிறது.

ஒரு கிரஹம் இயற்கைநட்பு+ தற்காலிக நட்பு=அதிக நட்பு.
ஒரு கிரஹம் இயற்கை பகை+ தற்காலிக பகை=அதிக பகை

இயற்கையில் சமம்+தற்காலிக நட்பு=நட்பு
இயற்கையில் சமம்+ தற்காலிக பகை=பகை

இயற்கையில் நட்பு+ தற்காலிக பகை=சமம்
இயற்கையில் பகை+ தற்காலிக நட்பு=சமம்.