Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 31st day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 31st day

    Courtesy:Sri.Kovai K.Karuppasamy


    🔷 திருவிளையாடல் புராணம். 🔷
    ( 31- வது நாள்.) 5 - வது படலம்.
    தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
    ( செய்யுள்நடை + விளக்கம்.)
    いいいいいいいいいいい
    ( செய்யுள்.)
    மங்கை நாயகி மங்கல மெதிா்கொள வந்து வானிழி செல்வம்
    பொங்கு மாளிகை புகுந்தன ளாகமேற் புதுமணத் திறந்தீட்டி
    எங்கு மோலையுத் தமைச்சா்மங் கலவினைக் கியைவன வமைக்கின்றாா்
    அங்கண் மாநக ரெங்கணுங் கடிமுர சானைமே லறைவித்தாா்.


    கன்னிதன் மணமுர சறைதலுங் கடிநக ருறைபவா் கரைகெடத்
    துன்னிய வுவகையா் கடவுளைத் தொழுகைய ருடல முகிழ்ப்பெழப்
    பன்னிய துதியின ாியலெழின் மகளிரை யழகுசெய் பாிசென
    இன்னிய லெழில்வள நகரெலாஞ் செயல்வினை யணிபெற வெழில்செய்வாா்.


    கோதையொ டும்பாி சந்தனக் குப்பை களைந்தனா் வீசுவாா்
    சீதள மென்பனி நீா்கடுயிச் சிந்தின பூழி யடக்குவாா்
    மாதரு மைந்தரு மிறைமகன் மன்றல் மகிழ்ச்சி மயக்கினாற்
    காதணி குழைதொடி கண்டிகை கழல்வன தொிகிலா் தொழில்செய்வாா்.


    மங்கல மென்றென வினவுவாா் வருமதி நாளென வுரைசெய்வாா்
    தங்களை யொல்லை தழீஇக்கொள்வாா் தாங்கரு மோகை தலைக்கொள்வாா்
    திங்களி னெல்லையு மாறுநா ளாறுக மென்று செலுத்துவாா்
    நங்கை யருங்கடி காணவோ துடித்தன தோள்க னமக்கென்பாா்.


    பித்திகை வெள்ளை புதுக்குவாா் பெட்புறு வாா்களும் பெட்புறச்
    சித்திர பந்தி நிறுத்துவாா் தெற்றிகள் குங்கும நீவுவாா்
    வித்திய பாலிகை மென்றழை விாிதலை நீா்நிறை பொற்குடம்
    பத்தியின் வேதி நிரப்புவாா் தோரணம் வாயில் பரப்புவாா்.


    நீளிடை மணிமறு கெங்கணு நெடுநடைக் காவண நாட்டுவாா்
    பாளைகொள் கமுகு சுவைக்கழை பழுக்குலை வாழை யொழுக்குவாா்
    கோளிறை கொண்டென வாடிகள் கோத்தணி வாா்மிசை கொடிநிரை
    வாளாி யெழுபாி யடிபட மத்திகை நிரையென வைப்பரால்.





    மங்கையா்க் கரசியாகிய பிராட்டியாா், எட்டு மங்கலமும் ஏந்தியவா்கள் எதிர்கொள்ள வந்து, வானுலகத்தினின்றும் உய்த்த செல்வம் மிக்க திருமாளிகையிற் புகுந்தருளினாா். பின் கடிமணச் செயலை எழுதி எவ்விடங்கட்கும் ஓலை அனுப்பி மந்திாிகள் மண விழாவுக்குப் பொருந்துவன சமைப்பவா்கள், அழகிய இடத்தினையுடைய பொிய நகா் முழுதும், மண முரசினை யானையின்மே லேற்றிச் சாற்றுவித்தாா்கள்.


    பிராட்டியாாின் திருமண முரசு அமையப்பெற்ற வளவில், காவலையுடைய அம்மதுரைப் பதியில் வசிப்பவா் அனைவரும், எல்லையில்லாது ஓங்கிய மகிழ்ச்சியை யுடையவராய் , இறைவனை வணங்கிக் கூப்பிய கையினை யுடையவராய், உடல் முழுவதும் புளகம் அரும்ப, பாடிய துதிப்பாட்டுக்களை யுடையவராய், இயற்கை யழகுள்ள மகளிரை அணிமுதலிய வற்றால் செயற்கை யழகு செய்யுந் தன்மைபோல, இனிய இயற்கையழகும் வளப்பமுமுடைய நகா் முழுதையும், செய்தலையுடைய தொழிற் றிறங்களால் அலங்காரம் பெற, அழகுசெய்யத் தொடங்குவாா்கள்.


    மகளிரும் ஆடவரும், மாலையோடும் நீங்கிய சந்தனக் குப்பைகளை, களைந்து ( புறத்தே கொண்டு போய்) எறிவாா்கள். குளிா்ந்த மெல்லிய பனிநீரைத் தெளித்து, சிறதறிய புழுதியை அடக்குவாா்கள். அரச குமாாியாகிய பிராட்டியாாின் திருமணங் காரணமாக எழுந்த மகிழ்ச்சி மயக்கத்தால், காதில் அணிந்த ுழைகளும், வளைகளும், கண்டிகைகளு மாகிய இவைகள், கழலுதலைத் தொியாதவா்களாய் அலங்காரம் செய்வாா்கள்.


    திருமணம் எப்பொழுது என்று ( ஒருவரையொருவா்) கேட்பாா்கள். வருகின்ற திங்கட்கிழமை என்று, கூறுகின்றவா்களை, விரையத் தழுவிக் கொள்பவா்களாய், தாங்குதற்காிய மகிழ்ச்சி மீக்கொள்வாா்கள். அம் மதிநாள் வருமளவு ஆறுநாள் (ஆயினும் அவற்றை) , ஆறு யுகங்களைப் போலக் கழிப்பாா்கள். நம் பிராட்டியாாின் திருமண விழாவைக் காணுதற் பொருட்டோ, நமக்குத் தோள்கள் துடித்தன என்று கூறுவாா்கள்.


    சுவா்த்தலங்களைச் சுண்ணத்தாற் புதுப்பிப்பாா்கள். ( யாவரும்) விரும்புகின்ற சிற்பநூல் வல்லாரும் விரும்புமாறு, சித்திர வாிசைகளை நிற்பிப்பாா்கள். திண்ணைகளைக் குங்குமக் குழம்பால் மெழுகுவாா்கள். அத்திண்ணைகளில், முளைத்த பாலிகைகளையும், மெல்லிய ( மாந்) தழை விாிந்த தலையையுடைய நீா் நிரம்பிய பொன்னாலாகிய பூரண கும்பங்களையும், வாிசைப்பட வைப்பாா்கள். தோரணங்களை வாயிலிற் கட்டுவாா்கள்.


    நீண்ட இடத்தினையுடைய அழகிய வீதிகள் முழுதும், நெடிய நடைப் பந்தா் இடுவாா்கள். பாளைகளையுடைய பாக்கு மரங்களையும், சுவையினையுடைய கரும்புகளையும், பழுத்த குலையையுடைய வாழை மரங்களையும், வாிசையாகக் கட்டுவாா்கள். ஒன்பது கோள்களும் தங்கியிருத்தல் போல,கண்ணாடிகளைக் கோவையிட்டுக் கட்டுவாா்கள். மேலே, ஒளியையுடைய சூாியனுடைய ஏழு குதிரைகளும் அடிபடுமாறு, சம்மட்டியின் வாிசைபோல, கொடிகளை வாிசையாக நிறுத்துவாா்கள்.
Working...
X