பூமி:-அசுவினி, பரணி. கார்த்திகை, ரோஹிணி; ம்ருகசீர்ஷம்;
நீர்:- திருவாதிரை, புனர்பூசம்,பூசம், ஆயில்யம், மகம், பூரம்;
அக்னி: - உத்திரம், ஹச்தம், சித்திரை; ஸ்வாதி; விசாகம். அநுசம்;

காற்று:- கேட்டை;மூலம்.,பூராடம் உத்திராடம், திருவோணம்;
ஆகாயம்:- அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி; ரேவதி;

கால புருஷனின் த்ரிகோண ராசிகள்;-
அக்னி திரிகோணம்:-மேஷம்+சிம்மம்+தனுசு
உடல்+மனம்+ஆத்மா

தர்மத்தால் இணைகிறது.
பூமி த்ரிகோண ராசிகள்_
ரிஷபம்+ கன்னி + மகரம்

மனம்+ ஆத்மா= உடல்
கர்மத்தால் இணைகிறது. ( அர்த்தம்)=பொருள்
காற்று திரிகோணம்

மிதுனம்+ துலாம் + கும்பம்
ஆத்மா+ உடல்+ மனம்
காமத்தால் இணைகிறது.
ஜலம்=( நீர்) திரிகோண ராசிகள்

கடகம்+ விருச்சிகம்+ மீனம்
உடல்+மனம்+ ஆத்மா
மோக்ஷத்தால் இணைகிறது.

இராசி மண்டலங்கள் எல்லாம் ஆகாயத்தில் அடங்கி கிடக்கின்றன. அனைத்தும் ஆகாயத்தில் ஒடுக்கம்

த்ரிகோணம் முக்கோண அமைப்பாகும். ராசி மன்டலத்தின் 1,5,9. ராசிகள்.
தர்ம ராசி=மேஷம்+சிம்மம்+ தனுசு
அர்த்தம் ராசி=ரிஷபம்+கன்னி+மகரம்

காமம் ராசி=மிதுனம்+துலாம்+கும்பம்
மோட்சம் ராசி= கடகம்+விருச்சிகம்+மீனம்

கர்மத்தால் விளைவது தான் அர்த்தம் கர்மம்=கன்மம்==தொழில்=செயல்
அர்த்தம்=பொருள்=கர்மம்
மனம் உடையவன்=மனிதன்
மனிதன்= உடல்+மனம்+ உயிர்

கால புருஷன் உடல்+ மனம்+ ஆத்மா
ஆத்மா=சூரியன் உடல், மனம்=சந்திரன்; லக்னம்= ஆத்மா;

தந்தை=சூரியன்; தாய்=சந்திரன்; லக்னம்=ஜாதகன். ( தொடரும்)

வர்கோத்தமம் என்பது ராசியிலும் நவாம்சத்திலும் ஒரு கிரஹம் ஒரே இடத்தில் இருப்பது .இதனால் இந்த கிரஹம் பலம் சற்று அதிகம் பெறுகிறது.

பரிவர்த்தனம்:- சுக்கிரன் வீட்டில் சனி, சனி வீட்டில் சுக்கிரன். இம்மாதிரி ஒரு கிரஹம் மற்றொரு கிரஹத்தின் வீட்டில் வீடு மாறி நிற்பது. இதுவும் அதிக பலத்தை தரும்
கி.ரஹ யுத்தம்;- ஒரு ராசியில் கிரஹ இணைவு. இருக்கும்போது இதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தான் ஜயிக்கும். மற்ற கிரஹம் இருந்தால் எதற்கு அதிக பாகை உள்ளதோ அது ஜயிக்கும். தோற்ற கிரஹம் நல்ல பலன் அளிக்காது.

அஸ்தங்கதம்;-சூரியனுடன் பொதுவாக பத்து பாகைக்களுக்குள் சேர்க்கையாக உள்ள கிரஹங்கள் எரிக்கப்படும்.. எரிக்கப்பட்ட கிரஹம் நல்ல பலன் கொடுக்காது. இதற்கு அஸ்தங்கதம் அல்லது மெளட்யம் என்று கூறுவர்
.
சூரியனுக்கு செவ்வாய் 17 பாகை, புதன் 14 பாகை புதன் வக்ரமாக இருந்தால் 12 பாகையிலும் குரு 11 பாகை; சுக்கிரன் 8 பாகையிலும் சனி 15 பாகை பக்கத்தில் இருந்தால் மெளட்யம் ஆகி விடும்.சந்திரன் அஸ்தங்கதம் ஆகாது.

விஷ சூன்ய ராசிகள் எதுவோ அந்த ராசியும் அதில் உள்ள கிரஹங்கள் பலம் குறையும்.

வக்ரம்:- சில சமயங்களில் கிரஹம் பின்னோக்கி செல்வதாக காணப்படும்.இதனால் பலன் தரும் தன்மை மாறும்.சுப கிரஹம் ஆனால் பலன் அதிகம் தரும்.

சஷ்டாஷ்டகம்:- ஒரு கிரஹம் மற்றொரு கிரஹத்திற்கு ஆறு அல்லது எட்டில் இருப்பது, இது நன்மை தராது.

த்விர் த்வாதசம்:- ஒரு கிரஹம் மற்றொரு கிரஹத்திற்கு இரண்டிலோ பன்னிரண்டிலோ நிற்பது. இவைகளின் தசா புக்திகளில் நல்லது நடக்காது.

ஜைமினியின் கணக்குப்படி எந்த ஒரு கிரஹம் ஒரு ஜாதகத்தில் அதிக பாகை சென்றுள்ளதோ அந்த கிரஹம் ஆத்ம காரகன் எனப்படும். இது மிகுந்த பலமுள்ள கிரஹம் ஆகிறது...

தசா புக்தி நடக்கும் வரிசை;- இந்த வரிசை க்ரமத்தில் தான் தசா புக்தி நடை முறைக்கு வரும். சூரியன்; 6 வருடம்; சந்திரன்;10 வருடம்; செவ்வாய் 7 வருடம்; ; ராகு 18 வருடம்; ; குரு 16 வருடம்; ; சனி 19 வருடம். ; புதன்; 17 வருடம்; கேது 7 வருடம்;; சுக்கிரன்.20 வருடம்.
ஒவ்வொரு தசையிலும் புக்திகளில் கிரஹங்கள் பலன் அளிப்பதில் வெவ்வேறு தன்மை கொண்டுள்ளன, அவர்களை நான்கு வகைகளாக பிறித்து கூறுவர். அவர்களை பாசகாதிபர்கள் என்பர்.

பாசகாதிபர் :- போதகன். வேதகன், பாசகன், காரகன் எனப்படுவர். இவர்களில் போதகன் என்பவன் தசையின் பலன் எல்லாவற்றையும் கொடு என்பான். வேதகன் என்பவன் பலன் கொடுக்காமல் கெடுப்பான். பாசகன் என்பவன் அந்த தசைக்கு கொடுக்க வேண்டியதற்கு மேலே அதிகம் கொடுப்பான்.
காரகன் என்பவன் தசையில் பலனுக்குறிய பலனை கொடுப்பவன். ராகு கேதுகளுக்கு பாசகாதிபர்கள் இல்லை. இது ஒவ்வொரு கிரஹத்திற்கும் மாறும்.

.
நாம் எடுத்துக்கொன்ட உதாரண ஜாதகத்தில் பரணி நட்சத்திரம் புதன் கிழமை அன்று பஞ்சாக்கத்தில் 42-52 நாழிகை வரை உள்ளது. இது இரவு 11மணி 12 நிமிடம் வரைக்கும் உள்ளது. ஆதலால் குழந்தை 7-15 மணிக்கு பிறந்து விட்டதால் பரணி நட்சத்திரம் எனத்தெரிகிறது.

முதல் நாள் செவ்வாய் கிழமை இதே பஞ்சாக்கத்தில் அசுவினி நக்ஷத்திரம் 46-12 என உள்ளது. ஒவ்வொரு கிழமைக்கும் 60 நாழிகை. செவ்வாய் கிழமை 46-12 க்கு மேல் பரணி நட்சத்திரம் ஆரம்பம். இந்த 60-00 நாழிகையில் 46-12 நாழிகை கழித்து விட்டால் 13-48 நாழிகை செவ்வாய் கிழமை பர\ணி நட்சத்திரம். புதன் கிழமை பஞ்சாக்கத்தில் 42-52 வரை பரணி நட்சத்திரம் உள்ளது. ஆக பரணி நட்சத்திரம் மொத்த நாழிகை 13-48+46-12=56-40. இதையே பரணி நட்சத்திரம் ஆத்யந்த பரம நாழிகை 56-40 என அறிய வேண்டும்.
இப்போது குழந்தை பரணி நட்சத்திரத்தில் எத்தனையாவது நாழிகையில் பிறந்தது என்று பார்க்க வேண்டும்.

புதனன்று 33 நாழிகையில் குழந்தை ஜனனம். முதல் நாள் பரணி நட்சத்திரம் 13-48 நாழிகை சென்று விட்டது. ஆதலால் 33.00+13-48=46-48.
பரணி நக்ஷத்திரம் மொத்தம்= (பரம நாழிகை)=56-40. இந்த 56-40 நாழிகையை நான்கினால் வகுத்தால்=14-10 நாழிகை ஒரு பாதத்திற்கு எனத் தெரிகிறது. ஜெனனமான பரணி நக்ஷத்திர நாழிகை 46-48. ஆதலால் பரணி நக்ஷத்திரம் நான்காம் பாதம் எனத்தெரிகிறது.

பரணி நக்ஷத்திர பரம நாழிகை 56-40. கர்பச்செல்லு 46-48 ; கர்பசெல்லு போக பாக்கி இருப்பு=9-52. நாழிகை.
பரணி நக்ஷத்திரத்தின் அதிபதி கிரஹம்;- சுக்கிரன். இதன் மொத்த ஆண்டுகள் 20 வருடம். இந்த ஜாதகத்திற்கு இன்று பரணி நக்ஷத்திர பரம நாழிகை 56-40கு 20 ஆண்டுகள். .
பரணி நக்ஷத்திரம் பரம நாழிகை 56-40ல் இந்த குழந்தை பிறந்தது 46-48 நாழிகைக்குத்தான் ஆதலால்
56 நாழிகையை விநாடிகளாக்க 60 ஆல் பெருக்கி 40 விநாடியையும் கூட்டினால் 56 இன்டு 60=3360+40=3400 விநாடிகள். 46 இன்டு 60=2760+48=2808 விநாடிகள் கர்ப்ப செல்லு போனது.
3400 விநாடிகள் கடக்க 20 ஆன்டுகள் ஆகுமென்றால் 2808 விநாடிகள் கடக்க எத்தனை காலம் ஆகி யிருக்கும் என ப்பாருங்கள்.

2808ஐ 20ஆல் பெருக்கினால்=56160. இதை 3400 ஆல் வகுத்தால் 16 வருடம். மீதியை 12ஆல் பெருக்கி 3400 ஆல் வகுத்தால் 6 மாதம் மீதியை 30 ஆல் பெருக்கி 3400 ஆல் வகுத்தால் 6 நாள் வரும். இதன் மீதியை விட்டு விடலாம்.. கர்ப்ப செல்லு காலம் 16 வருடம்-6 மாதம்-6 நாள் என வருகின்றது. சுக்கிர தசை மொத்த ஆண்டு 20 ல் சுக்கிர தசை கர்ப செல்லு போக பாக்கி 3 வருடம். 5 மாதம்-24 நாட்கள்.

இது தான் தசை இருப்பை கண்டறியும் முறை. இதன் பிறகு சூரிய தசை 6 வருடம் இதன் பிறகு சந்திர தசை 10 வருடம் எனப் போட்டுக்கொண்டு செல்லலாம்.
இப்போது கணனி வந்து விட்டது. அக்காலத்தில் 3400 ல் 2808 போக பாக்கி 592 விநாடிகளுக்கு 3 வருடம்-5- மாதம்,-24 நாட்கள் வருகிறது. ஆதலால் போட்டது சரி என்று மேலே தொடருவோம்.

புக்தி பார்க்கும் முறை: -
ஒவ்வொரு தசை ஆண்டுகள் நிர்ணயிக்க பட்டவை.. ஒவ்வொரு தசையிலும் மற்ற எல்லா கிரஹங்களின் புக்திகளும் வரும். அதன் படி ஆரம்ப புக்தி, தசைநடத்தும் கிரஹத்தினுடையதாக இருக்கும்.
சுக்கிர தசையில் முதலில் சுக்கிர புக்தி தான் நடக்கும். இதயே சுய புக்தி என்பர். அடுத்தது சூரிய புக்தி, சந்திர புக்தி என்ற வரிசையில் வரும்.

ஒவ்வொரு கிரஹ தசையிலும் , புக்திகளின் கால அளவு அந்தந்த கிரஹங்களின் தசை ஆண்டை பொருத்து இருக்கும்.

உதாரணத்திற்கு சூரிய தசை எடுத்து கொள்வோம். சூரிய தசை 6 வருடம். முதலில் சூரிய புக்தி தான் வர வேண்டும். ஆதலால் சூரிய தசையின் 6ஆண்டுஇன்டூ6 ஆன்டு=36 இன்டூ3= 108 /30=3 மாதம் 18 நாட்கள்.
சூரிய தசையில் சந்திர புக்தி சூரிய தசை 6 வருடம் இன்டூ சந்திரதசையின் 10 வருடம்=60 இன்டூ 3= 180 நாட்கள்=6 மாதம் 0 நாட்கள்.

சூரிய தசை செவ்வாய் புக்தி;- சூரியனின் 6 ஆன்டுகளும் இன்டூ செவ்வாயின் 7 ஆன்டுகளும்=42 இன்டு 3 =126 நாட்கள்./30=4 மாதம் 6 நாட்கள்.
சூரிய தசை ராகு புக்தி:- சூரியனின் 6 இன்டூ ராகுவின் 18 =108 இன்டூ3=324 நாட்கள்.=324/30=ராகு புக்தி 10 மாதம் 24 நாட்கள்..

இந்த கணித முறையில் மற்ற எல்லா கிரஹ தசையிலும் புக்திகளின் கால அளவை கண்டறியலாம்.
அந்தரம் கணக்கிடும் முறை: -இதயே சித்திரம் எனவும் கூறுவர்.

சூரிய தசை சூரிய புக்தி 108 நாட்கள் என மேலே பார்த்தோம்; இந்த 108 நாட்களை அரை நாழிகையாக கொண்டு சூரிய அந்தரம் காண வேண்டும். 108 ல் பாதி 54. இதை சூரிய தசை வருடம் 6 ஆல் பெருக்கினால்=324 நாழிகை வரும்.324/60 நாழிகை=5நாள் 24 நாழிகை.

சூரிய தசை சூரிய புக்தியின் சந்திர அந்த்ரம் காண= .
சூரிய தசை சூரிய புக்தியின் 108 நாட்கள்/2= 54 சந்திர தசை=10 ஆண்டு
54 இன்டூ10= 540 நாழிகைகள் /60=9 நாட்கள்.

சூரியா தசை சூரிய புக்தி செவ்வாய் அந்த்ரம் காண;- 108/2=54 இன்டூ 7 ஆண்டு செவ்வாய் தசை=378 நாழிகை/60 நாழிகை=6 நாள் 18 நாழிகை.
சூரிய தசை சூரிய புக்தி கேது அந்தரம் காண 108/2=54 இன்டூ 7=378 நாழிகை /60=6 நாள் 18 நாழிகை.

சூரிய தசை சூரிய புக்தி சுக்கிரன் அந்த்திரம் காண:-108/2=54 இன்டூ 20=1080 நாழிகை/60 நாழிகை=18 நாட்கள்..

இதை இம்மாதிரியும் போடலாம்:-
கேது தசை புதன் புக்தி குரு அந்த்ரம் காண:-

கேது தசை 7 வருடம். புதன் தசை 17 வருடம், குரு தசை 16 வருடம்.
7 இன்டூ 17=119 இன்டூ 3=357 நாட்கள் 357/2=178.5 நாழிகை இன்டூ 16=2856 நாழிகை /60=47 நாள் 36 நாழிகை= 1 மாதம்,17 நாள் 36 நாழிகை
.
இந்த அந்தரத்திலிருந்து அந்த்ராந்த்ரமும் கானலாம். இதனை உட்சித்திரம் என்பர் சிலர். இந்த அந்த்ராந்திரத்திலிருந்து சூட்சுமம் கணக்கிடும் முறையும் உள்ளது. தசா புக்தி
கணக்கிட வேறு முறையும் உள்ளது. ஆனால் தற்காலத்தில் இது தேவை இல்லை. அச்சடித்த புத்தகங்களும் கணினியும் தற்காலத்தில் உள்ளதால் இம்மாதிரி போட்டு கொண்டிருக்க வேண்டாம்.

கணித முறை இவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவே இது.
தசை என்பது மனிதனின் வாழ் நாட்களில் கிரஹங்கள் ஆட்சி செலுத்தும் கால அளவு. ஜோதிட சாத்திரத்தில் மனித ஆயுளை 120 வருடங்கள் ஆக்கி இதை ஒன்பது கிரஹங்களுக்கு பிரித்து போட்டிருக்கிறார்கள்.

குளிகன் அல்லது மாந்தி
உப கிரஹங்கள் என்பது ஒன்பது. இவர்கள் நவ கிரஹங்களின் புதல்வர்கள். சனியின் புதல்வன் குளிகன் அல்லது மாந்தி, குருவின் மகன் எமகண்டன்; புதனின் மகன் அர்த்த ப்பிரகாரன்; சூரியனின் மகன் காலன். செவ்வாயின்

மகன் தூமன்; ராகுவின் புதல்வன் வ்யதீபாதன்; சந்திரனின் மகன் பரிவேடன். சுக்கிரனின் மகன் இந்திர தனுசு; கேதுவின் மகன் தூமகேது.
இவகளுக்கும், ஆட்சி, உச்ச நீச வீடுகன் காரகத்துவம் பார்வை எல்லாம் உள்ளன.

இந்த மாந்தியை கேரளாவிலும்ஆந்திராவிலும் வட நாட்டில் சில இடங்களிலும் நவகிரங்களுடன் இதையும் சேர்த்து அதற்குண்டான பலன்களையும் கூறுகிறார்கள்.
மாந்தி இருக்கும் ராசிநாதனும் மாந்தி யுடன் கூடியுள்ள கிரஹங்கள் கெடுதல் செய்யும் என்கிறாகள். மாந்தியை கொண்டு ஆயுர்தாயம் நிர்ணயம் செய்கிறார்கள். மாந்தி லனத்தில் இருந்தால் ஆரோகியம் கெடும். அங்க

ஊனம் ஏற்படலாம். லகனத்தினத்திற்கு இரண்டில் மாந்தி இருந்தால் பிறரை தூஷிப்பது; மூன்றில் இருந்தால் தம்பி, தங்கைகளை கொடுமை படுத்துதல்; நான்கில் மனக்கஷ்டம்; ம்னோபயம்; சத்ரு ப்யம், சந்தோஷம் இல்லாமை;

ஐந்தில் குரு த்ரோகம், குழந்தை இல்லாமை; பெரியோர்களை தூஷிப்பது; ஆறில் பந்துக்களை பிறிதல்; ஏழில் களத்ர தோஷம்; எட்டில் ஏழ்மை; ஒன்பதில் தெய்வீக தன்மை இல்லாமை; பத்தில் நல்ல பேரும் புகழும்; பதினொன்றில் தன லாபம்; பன்னிரண்டில் கெடு நினைவுகள். மாந்தி 4;, 10

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsவீடுகளில் சந்திரனுடன் கூடியிருந்தால் தாயுக்கு கெடுதல்; 9;,3 ல் சூரியனுடன் கூடியிருந்தால் அப்பாவிற்கு கெடுதல்.
மாந்தி 2 4, 7, 8, 12 இடங்களில் இருந்தால் குடும்பத்தில் இறந்து போன முன்னோர்களின் ஆத்மா சாந்தி இல்லாத காரணத்தால் இளைய

தலை முறையினரின் திருமணம் தாமதம் ஆகலாம்., ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்தால் இந்த தோஷம் நீங்கி விடும்.
.

.