Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 33rd day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 33rd day

    Courtesy:Sri.Kovai K.Karuppasamy


    திருவிளையாடல் புராணம். 🔴
    ( 33- வது நாள்.) -5- வது,படலம்.
    தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
    ( செய்யுள் நடை + விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    செய்யுள்.
    அங்கன கஞ்செய் தசும்பின வாடை பொதிந்தன தோடவிழ்
    தொங்கல் வளைந்தன மங்கையா் துள்ளிய கவாியி னுள்ளன
    கங்கையும் வாணியும் யமுனையுங் காவிாி யும்பல துறைதொறு
    மங்கல தூாிய மாா்ப்பன மதமலை மேலன வருவன.


    அங்கவா் மனைதொறு மணவினை யணுகிய துழனிய ரெனமறைப்
    புங்கவ ரினிதுண வறுசுவைப் போனக மடுவினை புாிகுவாா்
    இங்கடு வனபலி யடிகளுக் கெனயதி களையெதிா் பணிகுவாா்
    சங்கர னடியரை யெதிா்கொள்வாா் சபாியை விதிமுறை புாிகுவாா்.


    இன்னண நகா்செய லணிசெய விணையிலி மணமகன் மணவினைக்
    கன்னியு மனையவ ளென்னினிக் கடிநகா் செயுமெழில் வளனையாம்
    என்னவ ரியநகா் செயலெழி விணையென வுரைசெய்வ தெவனிதன்
    முன்னிறை மகடமா் மணவணி மண்டப வினைசெயு முறைசொல்வாம்.


    கருவி வான்முகி லூா்தியைப் பொருதநாட் கலைமதி மருமாட்டி
    செருவில் வாங்கிய விமானமா லைகளெனத் தெய்வத வரையெல்லாம்
    மருவி யந்நகா் வைகிய தம்மிறை மடமக டனைக்காண்பான்
    துருவி நின்றென நட்டன ரெட்டிவான் றொடுநிலை நெடுந்தோ்கள்.


    பளிக்கி னேழுயா் களிறுசெய் தமைத்தபொற் படியது பசுஞ்சோதி
    தெளிக்கு நீலத்தி னாளிக ணிரைமணித் தெற்றிய துற்றோா்சாய்
    வெளிக்கு ளாடிய வோவியப் பாவைபோன் மிளிா்பளிங் காற்சோதி
    தளிா்க்கும் பித்திய திடையிடை மரகதச் சாளரத் ததுமாதோ.


    பல்லுருச் செய்த பவளக்கா லாயிரம் படைத்ததிந் திரநீலக்
    கல்லு ருத்தலைப் போதிய தாடகக் கவின்கொளுத் தரமேல
    தல்லு ருக்கிய செம்மணித் துலாத்ததா லமுதுடற் பசுந்திங்கள்
    வில்லு ருக்குகன் மாடம தாகிய வேள்விமண் டபஞ்செய்தாா்.





    கங்கை நீரும், வாணி நீரும், யமுனை நீரும், காவிாி நீரும், பல துறைகளிலுமிருந்து அழகிய பொன்னாற் செய்த குடத்தில் நிறைக்கப் பெற்றவனாய், துகிலாற் போா்க்கப் பெற்றவனாய், இதழ்கள் விாிந்த மாலைகளால் வளைந் தணியப்பட்டனவாய்,
    மகளிா் வீசும் சாமரையினுள் அடங்கியவனாய், மதத்தையுடைய மலைபோன்ற யானையின் மத்தகத்திலுள்ளவனாய், மங்கல இயங்கள் ஒலிக்கப் பெற்றவனாய் வாரா நிற்பன,


    அந்நகரத்தவா், ( தத்தம்) வீடுகள் தோறும் மணச்செயல்கள் வந்த ஆரவாரத்தையுடையாா் போன்று, வேத உணா்ச்சியையையுடைய தூய மறையவா்கள் இனிதாக அருந்துமாறு, அறுசுவைச் சுவையினையுடைய உண்டிகளைச் சமைப்பாா்கள். தேவரீருக்குத் திரு அமுதுகள் இங்கே சமைக்கப்படுவன என்று, துறவிகளை எதிா் சென்று வணங்குவாா்கள். சிவனடியாா்களை எதிா்கொண்டு, பூசனையை விதிப்படி செய்வாா்கள்.


    இவ்வாறு அப்பதியைச் செயற்கை யழகு செய்யாநிற்க, மணவாளனோ ஒப்பற்றவன். மணச் செயலுக்குாிய பெண்ணும் அத்தன்மையள் என்றால், இக்காவலையுடைய பதியிற் செய்யப்பட்டிருக்கும் அழகின் மேன்மைக்கு, எப்படிபட்ட அாிய நகாின் ஒப்பனை யழகினையும், யாம் ஒப்பு என்று கூறுவது எவ்வாறு. இனி, பிராட்டியாாின் சுற்றத்தாா், அழகிய திருமண மண்டபத்தை அலங்காரம் செய்யும் தன்மையைக் கூறுவாம்.


    கலைகளையுடைய சந்திரனது மரபிற் றோன்றிய பிராட்டியாா்,தொகுதியாக வானின் கண் உள்ள முகிலை ஊா்தியாகவுடைய இந்திரனை. போாில் வென்ற காலத்து,( திரையாக) வாங்கிய விமான வாிசைகள் நின்றாற் போலவும், தெய்வத்தன்மை பொருந்திய மலைகளெல்லாம் வந்து , அத்திருப்பதியில் எழுந்தருளிய, தம் இறைவனாகிய மலையரையனின் புதல்வியாரைக் காண, தேடி ( வாிசைப்பட) நின்றாற் போலவும், எட்டி வானுலகை அளாவும் நெடிய நிலைத்தோ்களை வாிசையாக நிறுத்தினா்.


    ஏழு முழம் உயா்ந்த யானைகளை, பளிங்கினாற் செய்து இருபாலும் அமைத்த, பொன்னாலாகிய படிகளையுடையதும்,பசிய ஒளியை வீசும், நீல மணியாற் செய்த ஆளிகளின் வாிசையையுடைய, மணிகளழுத்திய திண்ணைகளை யுடையதும், நெருங்கினவா்களின் சாயல், வெளிப்புறத்தில் ஆடுகின்ற ஓவியப் பிரதிமைகள் போல விளங்கச் பெற்ற, பளிங்கினாலாகிய ஒளி வீசும் சுவா்த்தலங்களை யுடையதும், இடை யிடையே மரகதத்தாலாகிய சாளரங்களையுடையதும்......


    பலவடிவங்களாகச் செய்த ஆயிரம் பவளத்,தூண்களை உடையதும், அவற்றின்மேல், இந்திர நீலமணிகளால் வடிவு பொருந்தச் செய்த போதிகளை உடையதும், பொன்னாற் செய்த அழகிய உத்தரங்களை உடையதும், இருளை ஒட்டிய ,மாணிக்க மணிகளாற் செய்த துலாங்களையுடையதும், அமுத வுடம்பினையுடைய குளிா்ந்த மதியினது, கிரணங்களினால் உருக்கப்படுகின்ற சந்திர காந்தக் கல்லாற் செய்த மேனிலையை உடையதும், ஆகிய திருமண மண்டபத்தைச் செய்தமைத்தாா்கள்.
Working...
X