Announcement

Collapse
No announcement yet.

letter for varushapthiham- General Format

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • letter for varushapthiham- General Format

    Dear mama

    Adyen Dasan Ranganathan. One of my friend asked me how to write a letter for varushapthiham to inform relatives. Could you please send me a general format to write a letter for the apthiham.


    Thanks for your time and help.


    Regards


    Indalur Ranga

  • #2
    Re: letter for varushapthiham- General Format

    Originally posted by Indalur-ranga View Post
    Dear mama

    Adyen Dasan Ranganathan. One of my friend asked me how to write a letter for varushapthiham to inform relatives. Could you please send me a general format to write a letter for the apthiham.
    ஶ்ரீ:
    பொதுவாக ஆப்தீகத்திற்கு கடிதம் எழுதிக் கூப்பிடுவதில்லை,
    காரணம், ஆப்திகம் என்பது ச்ராத்தம், ச்ராத்தத்தில் கர்த்தாக்கள், சகோதரிகள், மாப்பிள்ளைகள், பேரன் பேத்திகள் ஆகியோர் மட்டுமே கலந்துகொள்ளவார்கள்.
    இவர்களுக்கு எழுதும் கடிதம் (பல வருடங்களுக்கு முன்பு கூட) பார்மலாக இருக்காது.
    அதாவது, போன், ஈமெயில் போன்றவை ப்ரபலமாக இல்லாத காலத்தில் கடிதப்போக்குவரத்து அதிகமாக இருந்தது. அப்போது, மற்ற குடும்ப விஷயங்களை பரிமாரிக்கொண்டு,
    பொண்ணுக்கு அம்மா எழுதும்போது:
    "... .... செப்டம்பர் 17ம் தேதி அப்பாவுக்கு ஆப்திகம் வரது உனக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்,
    மாப்பிள்ளை குழந்தைகளோட வந்து சேர்ந்துடு" என்று இடம் பெற்றிருக்கும்.
    தற்போது, போன், ஈமெயில் வாயிலாக கூப்பிட்டாலே போதுமானது.
    இல்லை கடிதம்தான் போடுவேன் என்று அடம் பிடித்தால் கீழ்கண்டவாறு எழுதலாம்:
    (ஒரு தபால் கார்டில் எழுதும் அளவிற்கு சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது, பிரிண்ட் செய்யாமல் தனித்தனியாக எழுதுவதால் அவரவர் பெயர் உறவைப் பயன்படுத்தி எழுதவும். மாதிரிக்கு தங்கை கணவருக்கு, மைத்துனர் - கர்த்தா எழுதுவதாக எழுதப்பட்டுள்ளது)

    ஶ்ரீ.உப.வே. மாப்பிள்ளை ஸ்வாமிக்கு, உபய குசலம்.
    இப்பவும் அடியேனுடைய தகப்பனாரும், தேவரீருடைய மாமனாருமான லேட் ஶ்ரீ.உ.வே. ......... ஸ்வாமிக்கு 13-09-2012 ல் ஊன ஆப்திகம் தொடங்கி, 14-ஸோதகும்பம், 15-வருஷாப்தீகம், 16 ததீயாராதனம் நடக்கவிருக்கிறது. தேவரீர் அவசியம் குடும்பத்தோடு வந்திருந்து அந்வயிக்க / அநுக்ரஹிக்க வேணுமாய் ப்ரார்த்தித்துக்கொள்கிறேன் / ..கிறோம்.
    வாசிக தோஷ: க்ஷந்தவ்ய:
    வேணும் தாஸன்(கள்)
    பெயர்(கள்)
    தேதி


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X