Deepavali a different story


http://m.dailyhunt.in/news/india/tam...ewsid-59324793


*தித்திக்கும் தீபாவளித் திருநாள்... இப்படியும் ஓர் புராணக்கதை!*
வெயிலின் அருமை நிழலில் தெரிவது போல், வெளிச்சத்தின் அருமை இருளில்தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா! அதன் நடுவே குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என விரும்புகிறோம்.


இதேபோன்ற சிக்கல் தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கும் ஏற்பட்டது. அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார். எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என ஸ்ரீமகாவிஷ்ணுவை பிரார்த்தித்தார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார். அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றைக் கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளில் இருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாக உள்ளன. இவை மேலும் மனிதனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார். இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டுமே ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார்.


இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும்.


மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் ஸ்ரீகௌரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் இருந்து அருள்பாலிப்பார்கள்.


இவற்றுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்றார்.
இப்படித்தான் தீபாவளித் திருநாள் தோன்றியது என்றும் புராணக் கதை உண்டு!
* ஆனந்தவேதம்✍🏻 *
*265 -கொண்டாடு . . .*
ராதேக்ருஷ்ணா
புத்தாடை தீபாவளி
கொண்டாடிவிட்டாய் !
பட்டாசு தீபாவளி
கொண்டாடிவிட்டாய் !
பலவித பலகார
தீபாவளி கொண்டாடிவிட்டாய் !
பலரோடு தீபாவளி
கொண்டாடிவிட்டாய் !
இந்த தீபாவளியை
கொஞ்சம் விசேஷமாகக் கொண்டாடு !
இந்த தீபாவளியை
நிறைய நாம ஜபம் செய்து
"நாம சங்கீர்த்தன தீபாவளியாக"
கொண்டாடு . . .
இந்த தீபாவளியை
க்ருஷ்ணனை சரணாகதி செய்து
"சரணாகதி தீபாவளியாக"
கொண்டாடு . . .
இந்த தீபாவளியை
கோபனாக / கோபியாக மாறி
"ப்ருந்தாவன தீபாவளியாக"
கொண்டாடு . . .
இந்த தீபாவளியை
க்ருஷ்ணனிடம் ப்ரார்த்தனை செய்து
"பக்தி தீபாவளியாக"
கொண்டாடு . . .
இந்த தீபாவளியை
அகம்பாவத்தை அழித்து
"ஞான தீபாவளியாக"
கொண்டாடு . . .


இந்த தீபாவளியை
சுயநலத்தை கொன்றுபோட்டு
"வைராக்ய தீபாவளியாக"
கொண்டாடு . . .
இந்த தீபாவளியை
க்ருஷ்ணனோடு ஆடிப்பாடி
"ராச தீபாவளியாக"
கொண்டாடு . . .
இந்த தீபாவளியை
ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டு
"ஸ்ரவண தீபாவளியாக"
கொண்டாடு . . .
இந்த தீபாவளியை
பகவத் கீதையை பாராயணம் செய்து
"கீதா தீபாவளியாக"
கொண்டாடு . . .
இந்த தீபாவளியை
பக்தர்களோடு கூடியிருந்து
"சத்சங்க தீபாவளியாக"
கொண்டாடு . . .
இந்த தீபாவளியை
குருவை ஸ்மரணம் செய்துகொண்டு
"சத்குரு தீபாவளியாக"
கொண்டாடு . . .
இப்படிக் கொண்டாடிப் பார் . . .
உன் இதயத்தில் தீபாவளி தெரியும் . . .
ஆம் . . .
தீபங்கள் வரிசையாக,
உன் இதயத்தில் ஆனந்தத்தைத் தரும் . . .
இதுவரை உடல் தீபாவளி கொண்டாடினாய் . . .
இந்த தீபாவளி
"ஆத்ம தீபாவளியாக"
இருக்கட்டும் . . .
ஆசிர்வாதங்கள் . . .
கொண்டாடு . . .
இந்த தீபாவளி
நிரந்தரமாக இருக்கட்டும் . . .
இது முடியவே வேண்டாம் . . .
இனி
"நித்ய தீபாவளி"
கொண்டாடுவோம் . . .
க்ருஷ்ணனை தினமும்
நினைத்தால்,பாடினால்,தரிசித்தால்
"நித்யமும் தீபாவளிதான்"
தீபாவளியே நீ வாழ்க . . .