Announcement

Collapse
No announcement yet.

silk saree - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • silk saree - Periyavaa

    silk saree - Periyavaa
    மஹா பெரியவா!
    அதோ நிற்கிறாளே ஒரு மாமி அவா கிட்ட இந்த புடவையை குடு. தீபாவளி தினம். ஒரு குதிரை வண்டிக்காரன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு கையை பிசைந்து கொண்டு நின்றான். என்ன என்று ஜாடையால் கேட்டார்கள் பெரியவா. வேஷ்டி என்று இழுத்தான் வண்டிக்காரன். பெரியவாள் பக்கத்திலிருந்த சிஷ்யரிடம் அவனுக்கு ஒரு வேஷ்டி துண்டு வாங்கி கொடு என்றார்கள். சிஷ்யர் வேஷ்டி துண்டு கொண்டு வந்து குடுத்த பின்னரும் வண்டிக்காரன் நகரவில்லை. சம்சாரத்துக்கு புடவை..... அந்த சமயத்தில் புடவை ஏதும் கையிருப்பில் இல்லை. ஆனால் பெரியவாளோ அவனுக்கு ஒரு புடவை கொண்டு வந்து குடு என்று சிஷ்யனுக்கு ஆக்னையிட்டார்கள். சிஷ்யர் பாடு திண்டாட்டமாக போய்விட்டது. பெரியவாள் தரிசனத்திற்காக பல பேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஒரு அம்மாள் சிஷ்யரின் இக்கட்டைப் புரிந்து கொண்டார். உடனே சற்று தொலைவில் ஒரு மறைவான இடத்துக்கு சென்று தான் கட்டிக்கொண்டிருந்த புது புடவையை அவிழ்த்து விட்டு ஒரு பழைய புடவையை கட்டிக்கொண்டு வந்தார். சிஷ்யர் அந்த புது புடவையையும் சீட்டி ரவிக்கை துண்டையும் வண்டிக்காரனிடம் கொடுத்து அனுப்பிவிட்டார். சற்றைக்கெல்லாம் ஒரு தம்பதி தரிசனத்திற்கு வந்தார்கள். பெண்ணுக்கு கல்யாணம் பெரியவா அனுக்க்ரிஹம் பண்ணனும். கல்யாணப் புடவை காஞ்சிபுரம் கடைத்தெருவில் வாங்கினேளா? ஆமாம் கூரைப் புடவை சம்பந்தி புடவை பந்துக்களுக்கு புடவைன்னு ஏகப்பட்ட புடவைகள். பந்துக்களுக்குன்னு வாங்கியிருக்கிற புடவையில ஒன்னு ஸ்ரீ மடத்துக்கு குடுப்பியோ? தம்பதிக்களுக்கு மகிழ்ச்சி கரை புரண்டது. பெரியவாளே கேட்கிறா... வாங்கினதுலேயே விலை உயர்ந்த புடவை ஒன்றை பெரியவாள் முன்னிலையில் சமர்பித்தார்கள். தொண்டரை கூப்பிட்டு அதோ நிற்கிறாளே ஒரு மாமி அவா கிட்ட இந்த புடவையை குடு.. தீபாவளி புது புடவையை
    வண்டிக்காரனுக்கு குடுத்துட்டு பழசை கட்டிண்டு நிற்கிறா என்றார்கள் பெரியவா. பெரிவாளுக்கு தெரியாதது என்று ஒன்று உண்டோ. பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் ! அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
    காமகோடி தரிசனம் காணக்காணப் புண்ணியம்.
Working...
X