சொர்ணகடேஸ்வரர் கோவில், திருநெல்வெணெய்
தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர் திருநெல்வெணெய் (தற்போது நெய்வணை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர் சொர்ணகடேஸ்வரர், வெண்ணையப்பர்
இறைவி பெயர் நீலமலர்க்கன்னி
பதிகம் திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது 1. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் எலவானாசூர் வந்து பின் அங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் எறையூர் வந்தடைந்து அங்கிருந்து பிரியும் பாதையில் வடகுரும்பூர் வழியாக 4 கி.மீ. தொலைவில் உள்ள நெய்வெணையை அடையலாம். எறையூரிலிருந்து நெய்வெணை செல்ல நகரப் பேருந்து உள்ளது. இந்தப் பாதையே நல்ல சாலை.


2. உளுந்தூர்பேட்டையிலிருந்து திருவெண்ணைநல்லூர் செல்லும் சாலை வழியில் இடதுபுறம் ரிஷிவந்தியம் செல்லும் சாலை பிரிகிறது. இவ்வழியே சென்றும் நெய்வணை தலத்தை அடையலாம்.இது ஒரு குறுகிய சாலை. இந்த வழியில் நெய்வணை தலம் உளுந்தூர்பேட்டையிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில்
நெய்வணை கிராமம், கூவாடு அஞ்சல்
வழி எறையூர், உளுந்தூர்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 607201


இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவில் குருக்கள் வீடு அருகிலேயே உள்ளது. ஆலய குருக்களைத் தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஆலய தொடர்புக்கு: கிருஷ்ணமூர்த்தி குருக்கள், கைபேசி: 904778591