ஶாந்தம் ஸர்வ ஸுலபம் [Facts about Time & Space]
நாம் அமைதி இல்லாமல் தவிக்கும் போது, பெரியவாளின் இந்த அறிவுரை நமக்கு அருமருந்தாக இருக்கும்..
"ஜீவாத்மா தன்னோட நெஜமான ஸ்திதியை தெரிஞ்சுண்டு, பரமாத்மாவோட அத்வைதமா கரைஞ்சு போயி அந்த ப்ரஹ்மமாவே ஆய்டணும்.
அந்த நெலமைக்கு போறதுக்கு உபநிஷத்துகள் சொல்லற உபதேஸ ஸாரம் என்ன?………..
…….."Time and space"…. இந்த ரெண்டு concept-க்கு நடுவுலதான்…. இந்த நடைமுறை ப்ரபஞ்சம் மாட்டிண்டிருக்கு...ன்னு modern science-காராள்ளாம் சொல்றா.
இந்த ரெண்டுலேர்ந்தும் விடுபட்டாத்தான்…. மூலமான ஸத்யத்தை பிடிக்கமுடியும்…ன்னு உபநிஷத் சொல்றது.
இது எப்டி ஸாத்யம்?…..
ஒரு த்ருஷ்டாந்தம் சொல்றேன்………
நமக்குப் போது [பொழுது] போகலேங்கறதுக்காக, எங்கியோ Congo-ல நடக்கற சண்டை ஸமாச்சாரத்தை விழுந்து விழுந்து படிக்கிறோம்.
ஆனா, இன்னும் கிட்டக்க... பாகிஸ்தான்-லயோ,காஷ்மீர்-லயோ சண்டை வந்தா… காங்கோவை விட்டுட்டு, காஷ்மீருக்கு போய்டறோம். பேப்பர்க்காரனே… காங்கோ ந்யூஸை ஒரு மூலைக்கு தள்ளிட்டு, பாகிஸ்தான் ஸமாச்சாரத்தை பெருஸ்ஸாப் போடறான்.
ஸெரி. இன்னும் கிட்டக்க, தமிழ்நாட்டோட திருத்தணியை சேக்கணுங்கற விஷயத்ல, தமிழனுக்கும் தெலுங்கனுக்கும் சண்டை, அடி ஒதை..ன்னா….. நம்ம மண்டைலேர்ந்து, பாகிஸ்தான் ஓடிப் போய்டறது! இந்த ந்யூஸை ரொம்ப உன்னிப்பா கவனிக்கறோம்.
இப்போ…. பக்கத்து தெருவுல ஏதோ கலாட்டான்னா, தமிழன்-தெலுங்கன் சண்டைல interest போய்டறது. [சிரிக்கிறார்]…. ந்யூஸ் பேப்பரைத் தூக்கிப் போட்டுட்டு, தெருச் சண்டையைப் பாக்கப் போய்டறோம்.
போன எடத்ல யாரோ வந்து, 'ஸார், ஒங்காத்து பஸங்கள்ளாம் ஒரே சண்டை..ன்னோ….. இல்லேன்னா…. ஒங்க பத்னியும், அம்மாவும்…..மாமியார், மாட்டுப்பொண் "பயங்கர யுத்தம்"..ன்னு சொல்லிட்டா, ஒடனே, தெருச் சண்டையும் விட்டுட்டு, ஆத்துக்கு ஓட்டமா ஓடி வந்துடறோம்!
[அழகாக சிரிக்கிறார்]
இப்போ…. ஸர்வதேஸ ரீதில பாத்தோம்னா…. Congo war ரொம்ப முக்யமா இருக்கலாம். அதுலேர்ந்து பாகிஸ்தான் சண்டை, திருத்தணி சண்டை, தெருச் சண்டை, வீட்டுச் சண்டை..ன்னு ஒண்ணுலேர்ந்து ஒண்ணு சின்னதாப் போயி…. கடஸீல…. அல்ப விஷயத்ல வந்து நிக்கும்.!
ஆனா… இதுல…. நம்மளோட ஈடுபாடோ… inverse ratio-ல ஜாஸ்தியாப் போய்ண்டிருக்கே!
இது ஏன்?….
சொல்றேன்…….
ஏன்னா…. 'space' அப்டீங்கறதுல… Congo…. நம்ம எடத்துலேந்து…. எங்கியோ…..இருக்கு! கொஞ்சங்கொஞ்சமா கிட்டகிட்ட வந்து…. கடஸீல, நம்ம ஆத்துக்கே வந்துடறோம்.!
நம்மகிட்ட இருக்கற horizon-ம் அதான்!
இப்போ… கொஞ்சம் பார்வையை உள்ளுக்குள்ள திருப்பிண்டுட்டா போறும். உள்ளுக்குள்ள… நம்ம இந்த்ரியங்கள் ஒண்ணுக்கொண்ணு போட்டுக்கற சண்டையை பாக்க ஆரம்பிச்சுட்டோம்னா….. ஆத்துச் சண்டை உள்பட எல்லா ஸமாச்சாரமுமே…… எங்கியோ Congo-ல நடக்கறா மாதிரி ஓடிப் போய்டும்!
இந்த "உள்-சண்டையை" தீத்துண்டு…. ஶாந்தமா இருக்க முயற்சி பண்ணுவோம்.
அந்த ஶாந்தி வந்துடுத்துன்னா….. எடம், வெளி, space எதுவுமே இல்லாமப் போய்டும்…!
தூங்கறப்போ….நமக்கு ஏதாவது தெரியறதோ? ஆனா, ஶாந்தி-ல… ஞானமயமா, அறிவுமயமா, அனுபவமயமா……. எப்பவுமே…இருந்துண்டே இருக்கலாம்.
'Space' இல்லாம இருக்கலாம்!
காலமும் [time ] அப்டித்தான்…!
பத்து வர்ஷத்துக்கு முந்தி அப்பாவோ, அம்மாவோ செத்துப் போனப்போ…. அத்தன…. அழுகை அழுதோமே! இப்போ ஏன்…அந்த அழுகை வரல? செத்துப் போன அன்னிக்கு அழுத அளவு, மறுநா.....கூட அழலியே!
அது ஏன்?
ஸெரி….இது…. ரொம்ப துக்கத்தை குடுக்கற ஸம்பவம்.
அதே மாதிரி, ரொம்ப ஸந்தோஷமான ஸமாச்சாரத்தை எடுத்துண்டா…. போன வர்ஷம், வேலைல ப்ரமோஷன் கெடச்சது, இல்லேன்னா…. ஏதோ லாட்டரி சீட்டு விழுந்ததுன்னு ஆகாஶத்துக்கும்-பூமிக்குமா….எப்டி ஆனந்தக் கூத்தாடினோம்? அதேமாதிரி…. இப்போ ஏன் ஆடத் தோணல?
எடத்லேயே கூட…. கிட்டக்க இருக்கறதுல, நமக்கு attachment ஜாஸ்தி இருக்கறா மாதிரி, காலத்லேயும்…. நமக்கு… கிட்டக்க இருக்கற ஸம்பவங்கள், நம்மளை ஜாஸ்தி பாதிக்கறது.
நாமல்லாம்… எப்பவுமே…. வெளிலேயே பாத்துண்டு இருக்கோம். அப்டி இருக்கச்சேயே, இந்த time-space ரெண்டுமே… நம்மளோட யத்தனம் இல்லாமலேயே…. கொஞ்ச நாள்ல, நம்மளைவிட்டு போறதை பாக்கறோம். இல்லியா?…
அப்போ, "தூங்காமல் தூங்கி"..ன்னு, தாயுமானவர் சொன்ன ஸ்திதிக்குப் போய்ட்டா, நல்ல பூர்ண ப்ரக்ஞையோடேயே…. இந்த time-space ரெண்டுலேர்ந்தும் விடுபட்டு, பேரானந்தமா இருக்கலாம்.
அப்போ…. ஆத்துச் சண்டை மட்டுமில்ல….. நம்மள, யாராவுது, கத்தியால குத்தினாக் கூட…. அது Congo-ல நடக்கற ஸமாச்சாரம் மாதிரிதான் இருக்கும்.
நமக்கு ரொம்பவும் நெருக்கமான….பதி, பத்னி, அம்மா, அப்பா, கொழந்தை, ஸஹோதராள்..ன்னு நம்ம கண்ணு முன்னால செத்துப் போனாக்கூட, அது…ஏதோ… பத்து வர்ஷம் முந்தி, அப்பா… செத்துப் போனா மாதிரிதான் இருக்கும்.
த்வைத அத்வைத வாதங்கள் இருக்கட்டும்….! இப்போ, நமக்கு வேண்டியது "ஶாந்தி"!…."
நம பார்வதீ பதயே
ஹர ஹர மஹாதேவா
ரொம்ப ரொம்ப ஈஸியான, ஆனால் ரொம்ப ரொம்ப கஷ்டமானதாக, நமக்குத் தெரியும் இந்த Time & Space concept-ஐ, பெரியவாளால் மட்டுந்தான், மஹா ஈஸியாக, மஹா ஸிம்பிளாக சொல்ல முடியும். இதைப் படித்ததுமே, ஏதோ ஒரு அமைதி நமக்குள் பரவுவதை கட்டாயம் அனுபவிக்க முடியும். அதை அப்படியே தக்க வைத்துக் கொள்ள, இதை தினமும் படிக்கணும்.
Compiled & penned by Gowri Sukumar

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends